Skip to main content

Posts

Showing posts from January 18, 2019

Self Realisation என்னும் வலி போக்கும் மருந்து

குடித்தான் மதுவில் குளித்தான் ஆழியாய் அவன் மனம் ஆர்ப்பரித்தது அலையென தனிமையின் இருள் தாக்கத்தில் விழி இரண்டும் நீர் நிரம்பிய குளங்களாய் ஈரம் காய்ந்து படிந்தன அவன் கன்னங்கள் அவள் முத்தம் வைத்த ஈரச்சுவடுகள் மட்டுமே அவனை ஒரு நிலைப்படுத்தும் அன்றாட மருந்து கடற்கரை மணலில் அவள் பெயரை எழுதினாலும் சீற்றம் கொண்ட அலைகள் அதனை தன் வசம் இழுத்துக்கொண்டு சொந்தம் கொண்டாடுகிறது ஏனோ தெரியவில்லை தனுஷ்கோடி கடலின் எல்லையில் மீன் பிடிக்க சென்ற தந்தை இலங்கை ராணுவத்திடம் சிக்காமல் மீண்டும் நம் கரை வந்து சேருவாரா..? என்று எதிர்ப்பார்த்து பாதங்களில் கடற்கரை மணல் படிந்து காத்திருக்கும் அந்த தந்தையின் மகன் போல, இரவிலும் சரி பகலிலும் சரி வானிலும் சரி மண்ணிலும் சரி மழையிலும் சரி வெயிலிலும் சரி கடலிலும் சரி கரையிலும் சரி அவனுக்கான ஆசைகள் உறுதுணையின்றி தனிமையின் வெற்றிடத்தில் நிற்கிறது..? காலம் என்றோ ஒரு நாள் மாறும் என்று செவிகளில் பாடம் புகட்டினாலும் அவனுக்கான சூழ்நிலை கொண்ட கனாவில் அவன் மட்டுமே அவனின் ஒரே ஆறுதல்..? முயற்சி செய்தான் முயலாமை தவிர்த்தான் முயன்று முயன்று தோற்ற