Skip to main content

Posts

Showing posts from July 29, 2022

நளனும் நந்தினியும்

கொட்டும் பனி விழும் இரவு அது ஆனால் இரவிலும் பகல் போல் ஆட்கள் அவ்வப்போது பயணித்து கொண்டிருக்கும் சென்னை மாநகரத்தின் ஐ.டி கம்பெனிகள் நிறைந்த சாலை அது, அங்கிருக்கும் ஒரு ஐ.டி கம்பெனியில் அன்றைய வேலை நேரம் முடிந்து நளனும்  நந்தினியும் வெளியே வருகின்றனர், நேரம் சரியாக இரண்டு மணி ஏழு நிமிடங்கள்,அடுத்த இரண்டு நாட்கள் வீக்கெண்ட் விடுமுறை என்பதால் எப்போதும் வெள்ளிக்கிழமை இரவுகளில் கொஞ்சம் நேரம் இருவரும் பேசிவிட்டு வழக்கமாக போகும் அங்கே பக்கத்தில் இருக்கும் சரவணன் அண்ணன் டீக்கடைக்கு சென்று விட்டு பல கதைகள் பேசிய பின்னர் தான் வீடு திரும்புவார்கள், சின்ன வயசுல அம்மா கிட்ட திட்டு வாங்கிட்டு வீட்டுல உட்கார்ந்திருக்கப்போ ரோஸ் கலர் கைக்கடிகார ரப்பர் மிட்டாயை நம் கையில் ஒட்டி விட்டு மிட்டாய் வியாபாரம் செய்யும் தாத்தாவை பார்த்ததும் வர சந்தோஷம் தான் நளனுக்கு இருக்கும்,ஐந்து நாட்கள் வேலைல இருந்த பிரஷர் எல்லாம் மறந்து அடுத்த ரெண்டு நாளைக்காக வெள்ளிக்கிழமை இரவுகளிலிருந்தே ஆயத்தம் ஆவான், அன்று வெள்ளிக்கிழமை என்பதால் இருவரும் வெளியில் வந்தவுடன் நந்தினி நளனை பார்த்தாள்,வழக்கமாக பெட்டர்மாக்ஸ் லைட் எரியும் நளனின