Skip to main content

Posts

Showing posts from April 13, 2020

ஆட்டோ டிரைவர் மாணிக்கம்

* சவாரி செய்கிறான் இறப்புக்கும் பிறப்புக்கும் கால நேர அட்டவணையின்றி பொதுவாகவே நம்ம ஊருல ஆட்டோகாரர்கள்னா வண்டிய கொஞ்சம் ராஷ் - டிரைவ் பண்ணுவாங்கன்னு ஒரு பேச்சு அடிபடுது நம்ம மக்கள் மத்தியில அதுவும் இதில் பெரிதும் வாய் மொழிகளை வாங்கி காட்டிக்கொள்வது ஷேர் ஆட்டோக்காரர்கள் மட்டுமே வடிவேல் காமெடி வகையறாவில் சொல்ல வேண்டும் என்றால் நம்ம பங்கு ஆட்டோ டிரைவர்கள், ஆயிரம் வசைப்பாடு வாங்கினாலும் ஆட்டோகாரர்கள் பற்றி நல்ல விஷயம் பேசினால் நிறைய பேசிக்கொண்டே போகலாம், பாட்ஷா படத்துல "நான் ஆட்டோக்காரன்" பாட்டு தான் இவங்களோட "ஆட்டோ கீதம்" - ன்னு சொல்லுற அளவு அந்த டைம்ல அந்த பாட்டு ஹிட் அடிச்சதுக்கு இவங்களும் முக்கிய காரணம் - ன்னு சொல்லலாம், அந்தப்படம் வந்து இருபத்தி ஐந்து வருடம் ஆனாலும் இன்றைக்கும் ஆயுத பூஜை - ன்னா தமிழ்நாடுல இருக்க எல்லா ஆட்டோ ஸ்டாண்ட்லயும் தொடர்ச்சியா ஒரு பத்து தடவை அந்த பாட்டு ஒலி பரப்பாகும், என்ன தான் "ஓலா கேப்" மவுசு அதிகமாக இப்போது இருந்தாலும் நடுத்தர மக்களின் ஒரு மூன்று சக்கர தேர் - ன்னு சொல்லலாம், பிரசவம்,விபத்து,விசேஷம் என நடுத்தர மக்களின் வீட்டில் நட