Skip to main content

Posts

Showing posts from October 9, 2019

வெந்து தணிந்தது காடு !!

இதுக்கும் உனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல நீ ஒதுங்கி போ சித்து, முடியாதுன்னு சொன்னா இதுல உன்னோட ரியாக்ஷன் என்னவா இருக்கும் ராஜேஷ்..? ஏற்கனவே உனக்கும் எனக்கும் செட் ஆகாது இது என் பிரச்சனை இதுல நீ இடையில வராத சித்து, செட் ஆகாமையே இருக்கட்டும் ஆனா நான் வருவேன் ராஜேஷ், அப்போ நீயா நானான்னு பா** (பாத்துருவோம்) சித்து என்று ராஜேஷ் சொல்லி முடிப்பதற்குள் தாடை திரும்பும் அளவிற்கு அவன் வாயில் ஒரு பஞ்ச் வைத்தான் சித்து, வாயின் ஓரத்தில் ரத்தம் கசிய கீழே விழுந்தான் ராஜேஷ், சித்து தலையில் கனத்துடன் மிகவும் உஷ்ணமாய் இருந்தான், அன்று கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!! அந்த கல்லூரியில் கடைசி ஐந்து ஆண்டுகளாக படித்த எந்த மாணவர்களுக்கும் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை இளங்கலை, முதுகலை என பட்டம் வாங்க முன்னாள் மாணவர்கள் கடைசி ஐந்து வருட பேட்ச் என எல்லோரும் திரண்டு வந்திருந்தனர் கல்லூரிக்கு, ஒரு பக்கம் ஆட்டம் பாட்டம் என்று மாணவர்கள் குதூகலத்தின் உச்சியில் இருந்தனர், இன்னொரு பக்கம் மாணவர்கள் தங்கள் துறைக்கு ஏற்ப தனித்தனியே பட்டங்களை வாங்கிக்க