Skip to main content

Posts

Showing posts from May 12, 2020

தாரக மங்கைகள்

நீங்க என்ன சாதி..? நீங்க என்ன மதம்..? நீங்க என்ன மொழி பேசுறவங்க..? இந்த கேள்விகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள் செவிலியர்கள், யார் இந்த செவிலியர்கள்..? ஒரு நோயாளிக்கு மருத்துவரின் பரிந்துரையின்படியும் அறிவியல் ரீதியாகவும் அவனுக்கு சிகிச்சை அளித்து அவர்களின் உடல்நலம் சம்பந்தப்பட்ட தேவைகளை கவனிக்கும் கடவுள், கையில் ஊசி எனும் ஆயுதம் எப்போதும் இருக்கும், இது ஒரு சேவை மனப்பான்மை சார்ந்த தொழில், சேவை மனப்பான்மை ஆண்களை விட பெண்களுக்கு எப்போதுமே கருணை ரீதியில் கொஞ்சம் அதிகம், அதனாலோ என்னவோ இந்த சேவை துறையில் பெண்களே அதிகம் தங்களை அர்ப்பணித்து சேவை செய்கின்றனர், கை கால் தூக்க முடியாமலும் உடம்பில் வலு இல்லாமலும் ஒரு நோயாளி மருத்துவமனைக்கு வரமுடியவில்லை என்றாலும் அவர்களின் இல்லத்திற்கே சென்று அவர்களுக்கு தகுந்த மருத்துவ ஆலோசனை கொடுத்து சரியான சிகிச்சை கொடுப்பவர்கள், அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்களுக்கு உதவி செய்வதில் இருந்து நோயாளிகள் மீது காட்டும் அக்கறை வரை, ஒரு கடும் நோய் ஊருக்குள் பரவினாலும் தூக்கம், குடும்பம்,தனது உயிர் என்று எதை பற்றியும் கவலை கொள்ளாமல் பிற உயிர்களுக்காக தங