Skip to main content

Posts

Showing posts from May 26, 2019

Title : "The Tales of Red Roses "

இந்த மண்ணில் அன்புக்கு ஏங்குபவர்கள் அதிகம். அதில் வெகு சிலருக்கு அது அக்ஷய பாத்திரம் போல் கிடைக்கும், சிலருக்கு அந்த அன்பு நமக்கு கிடைக்குமா என்ற ஏக்கத்திலயே ஒரு வித தனிமையை அவர்களுக்கு உருவாக்கும். தேடாமல் கிடைத்து, தேடியும் கிட்டாமல், கிடைத்தும் உதாசீனப்படுத்தி என அன்புக்கு பலமுகங்கள் உண்டு. ரஹ்மான் சொன்ன இந்த கூற்றில் இருந்து நம் கதையை தொடங்குவோம் “All My Life I have had a Choice of Hate and Love. I Chose Love and I am here..!!" Now : (நிகழ்காலம்) அப்பா : ஹலோ மைக்கேல் இப்போதான் உன் நண்பன் சொன்னான் நீ இந்தியா வந்துட்டேன்னு, Are You Alright Micheal..? மைக்கேல் : Daddy ஐ லவ் யூ! நான் உங்கள பாக்கணும் உங்க தோள்ல சாய்ஞ்சு அழுகணும், என்னோட இந்த நாள்ல நீங்க என்கூட இருக்கணும் என்று கண்ணில் நீர் ததும்ப மைக்கேல் அவன் அப்பாவிடம் தன்னுள் அடக்கிவைத்திருந்த கண்ணீர்களை அந்த கடற்கரையின் கரையில் சிந்தினான். அவன் கால் தட சுவடு படிந்த அந்த கடற்கரையின் உப்புக்காற்று வீசும் ஆர்ப்பரிப்பில்லாத இரவு நேர அலைகளில் இருந்து ஒரு இதமான சுமையில்லாத மனமுடைய அமைதியை தன்னுள் உ