Skip to main content

Posts

Showing posts from February 3, 2019

இன்றே இங்கே மீள்கிறேன்..!!

பைக்கை ஸ்டார்ட் செய்து நண்பனுடன் ஒரு வழியாக தியேட்டருக்கு வந்துவிட்டேன் இருக்கையின் நம்பர் பார்த்து போய் அமர்ந்தோம் ஏதோ ஒரு முனைப்பில் பின் சீட் பக்கம் திரும்பினேன், அது ஒரு Corner Seat..? சட்டென கண்களை மூடினேன் சட சடவென காலம் சில வருடங்கள் முன் சென்றது நெற்றிப்பொட்டில் வட்டங்கள் குடிபெயர்ந்து முன்காலங்களுக்கு என்னை கூட்டிச்சென்றது, ஆம் இது என் இரண்டாம் உலகம், நான் பயணித்த முதல் உலகம் இது அல்ல என் முதல் உலகத்தில் பூக்கள் பூத்து குலுங்கும், மண் வாசனையுடன் மழை செழிப்பாக பெய்யும் குழந்தைகள் என்னை சூழ்ந்து விளையாடுவார்கள் நண்பர்கள் என்னை வட்டம் போட்டு கேளிக்கை செய்வார்கள் காலத்தின் மாற்றங்கள் இங்கு தானே நிகழ்கிறது சொல்கிறேன் எனக்கான முதல் உலகத்தை பற்றி, முதல் உலகம் எனக்கான நண்பர்கள் இரவு நேர அரட்டைகள் பத்து ரூபாய் பானிபூரி. மதுரையின் பரோட்டா சுதந்திரமாய் ஒரு பள்ளி ஆறு மணி ட்யூஷன் சென்டர் யாரிடமும் விட்டுக்கொடுக்காத தங்கை சர்வமும் அவள் மாயம் என்ற பாணியில் அம்மா என் ஆசைகளை நிறைவேற்றி அழகுபார்க்கும் அப்பா மீசை கூட சரியாக முகத்தில் துளிர்விடவில்லை, அப்பாவின்