Skip to main content

இன்றே இங்கே மீள்கிறேன்..!!

பைக்கை ஸ்டார்ட் செய்து நண்பனுடன்
ஒரு வழியாக தியேட்டருக்கு வந்துவிட்டேன்
இருக்கையின் நம்பர் பார்த்து போய் அமர்ந்தோம்
ஏதோ ஒரு முனைப்பில் பின் சீட் பக்கம் திரும்பினேன்,

அது ஒரு Corner Seat..?
சட்டென கண்களை மூடினேன்
சட சடவென காலம் சில வருடங்கள் முன் சென்றது
நெற்றிப்பொட்டில் வட்டங்கள் குடிபெயர்ந்து
முன்காலங்களுக்கு என்னை கூட்டிச்சென்றது,

ஆம் இது என் இரண்டாம் உலகம்,
நான் பயணித்த முதல் உலகம் இது அல்ல
என் முதல் உலகத்தில் பூக்கள் பூத்து குலுங்கும்,
மண் வாசனையுடன் மழை செழிப்பாக பெய்யும்
குழந்தைகள் என்னை சூழ்ந்து விளையாடுவார்கள்
நண்பர்கள் என்னை வட்டம் போட்டு கேளிக்கை செய்வார்கள்

காலத்தின் மாற்றங்கள் இங்கு தானே நிகழ்கிறது
சொல்கிறேன் எனக்கான முதல் உலகத்தை பற்றி,


முதல் உலகம்

எனக்கான நண்பர்கள்
இரவு நேர அரட்டைகள்
பத்து ரூபாய் பானிபூரி.
மதுரையின் பரோட்டா
சுதந்திரமாய் ஒரு பள்ளி
ஆறு மணி ட்யூஷன் சென்டர்
யாரிடமும் விட்டுக்கொடுக்காத தங்கை
சர்வமும் அவள் மாயம் என்ற பாணியில் அம்மா
என் ஆசைகளை நிறைவேற்றி அழகுபார்க்கும் அப்பா

மீசை கூட சரியாக முகத்தில் துளிர்விடவில்லை,
அப்பாவின் வண்டியை எடுத்துக்கொண்டு
ஏரியா முழுவதும் பந்தாவாய் சுற்றித்திரிந்த காலம்,
பேரன்பு மிக்க பறவை இனம் போல் சிறகு விரித்து
கவலையின்றி பறந்து திரிந்த நாட்கள் அது,

இதற்கு பிறகு யாவரும் அறிந்ததே
நீதானே என் பொன்வசந்தம் படத்தில் சொல்வது போல்,

"அப்பறம் என்ன லவ் தான்..?"

இது அவள் சார்ந்த ஒரு தலை காதலாக தான் தொடங்கும்
ஆம், காதலின்றி வாழ்ந்து கொண்டிருந்தவன் நான்
என்னை தேடி வந்தவள் அவள், இது பெண்மைக்கான உலகம்
என்னை மாற்றிய என் வசப்போக்கில் அடித்தது தான் அவளின் காதல்

படிப்பில் சுமார் என்று சொல்லமுடியாது,
Mathematics - இல் மோசம் என்று சொல்லலாம்,
அந்த அளவுக்கு எனக்குள் ஒரு கொடிய நோயாக
தொற்றிக்கொண்டது தான் Mathematics என்னும் கிருமி,
Algebra,Statistics,Trignometry என்று என் மூளையை கசக்கி பிடித்து
என் ஆசிரியர்களிடம் இருந்து தப்பித்து எப்படியோ
பத்தாம் வகுப்பை கடந்து பதினொன்றாம் வகுப்பில்
என் நண்பர்களை பிரிந்து புது உலகமாக
புதிய மனிதர்கள் சூழ்ந்த வேறு ஒரு பள்ளியில் சேர்ந்தேன்,

நாட்கள் நகர்ந்தன
Computer Science With Maths Group
சனிபகவான் என்னை விட்டாலும்
இந்த Maths என்னை விடாது கருப்பு போல்
விக்ரமாதித்தன் தோள்களில் தொங்கும் வேதாளம் போல்
என்னுடன் பயணம் செய்து கொண்டே வந்தது,

அன்று ஒரு விடுமுறை தினம்
தளபதியின் "வேட்டைக்காரன்" ரிலீஸ் ஆன டைம்
என் அண்ணனிடம் இருந்து அழைப்பு
அண்ணன் என்றால் Cousin Brother,
அண்ணன் ஒரு பெண்ணை காதலித்து வருகிறான்
அன்று அந்த பெண் வீட்டிற்கு வந்திருந்தார்
நான் அங்கு சென்றேன் அண்ணனின் அழைப்பை ஏற்று,

அமிர்தம் தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருந்த நேரம், இடைவேளை நேரத்தில் அண்ணன் மொபைலில் ரொம்ப நேரம் பேசிக்கொண்டு இருந்தான்,

டேய் படம் போட்ருவாங்க, யார்ட இவளோ நேரம் பேசுற..? என்று கேட்டேன்
அவங்க உன்கிட்ட தான் பேசணுமாம் என்று மொபைலை என் கையில் கொடுத்தான்

Me : Hello சொல்லுங்க என்றேன்..?,
அவங்க : Hello நீங்க (*) தானே..?
Me : ஆமாம், சொல்லுங்க
அவங்க : உங்க அண்ணன் வீட்டுக்கு வரப்போ
உங்கள அடிக்கடி பாத்துருக்கேன்,நல்லா தெரியும்,
அதான் சும்மா பேசலாம்ன்னு தான்,Anyway We are Friends
என்று முடிந்தது இடைவேளையின் இடையே ஒரு இளைப்பாறல் போல்,

படம் முடிந்து வீட்டுக்கு அண்ணனின் வீட்டுக்கு சென்றோம்
அருகில் பள்ளிவாசலின் அமைதியான அல்லாவின் ஒலிக்கதிர் இடையே
ஒரு அழகான மொட்டை மாடியில் அன்றைய நேர்க்காணல் அமைந்தது
அண்ணனின் காதலி,அண்ணன்,நான் மூவரும் பேசிக்கொண்டிருந்தோம்,

தேவதைகள் மண்ணில் பிறப்பதில்லை என்று எந்த கவிஞன் சொல்லியது
மொட்டைமாடியின் இளந்தென்றல் Atmosphere-இல் அருகாமையில் உள்ள மரங்களின் கிளை நடன ஒலிகள் ரீங்கார இசை அமைக்க ஒரு Surprise Entry ஆக அவளின் வருகை நாங்கள் அரட்டை அடிக்கும் மொட்டை மாடியில்,

அண்ணன் Intro செய்து வைக்கிறான்
அண்ணனின் காதலி அவளிடம் சிரித்து பேசுகிறாள்
நான் சிறு தயக்கத்துடன் அங்கே எனக்குள் மீள்கிறேன்

அண்ணனின் காதலியும் இவளும் தோழிகள் என்பது நான் அறிந்ததே
இவங்க எப்படி இங்க வந்தாங்க..? என்று நான் கேக்க அண்ணன் இந்த மாடியே அவங்க இடம் தான்,நான் குடியிருக்கிற வீட்டின் House Owner பொண்ணு தான் டா இவள் என்று  ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்தான்,

எனக்கும் அவளுக்காமான அன்றைய உரையாடல்கள்
ஹ்ம்ம்,ஒகே.then, என்று மட்டுமே என்னுடைய பக்கத்தில் முடிந்தது,
அவள் மிகவும் Casual ஆக பேசினாள்,

முதலில் இதை சொல்லவேண்டும்
அவள் வீட்டில் அவள் செல்லம்
தான் கேட்டது உடனே கிடைக்கும் ஒரு லக்கி அவள்
மதுரை ஸ்லாங்கில் சொல்லவேண்டும் என்றால் ஏரியால பெரிய கை,
பத்தாம் வகுப்பின் பிறந்த நாளில் அவள் பெண்களுக்கென்று
ஒதுக்கப்பட்ட பிங்க் நிற Honda Pleasure பைக்கை தன் வசம் ஆக்கினாள்,
அவள் வீட்டில் கார் இருந்தது,ஆனால் அவளுகென்று ஒரு கார் இல்லை
என்று பின் நாட்களில் அவளுக்காக ஒரு Private கார் வாங்கிக்கொடுத்த
ஒரு பெரிய மனசுக்காரர் அவளுடைய அப்பா,
சிம்பிளாக சொல்லவேண்டும் என்றால் அவள்
நீதானே என் பொன்வசந்தம் நித்யா குடும்பம் போல் WellUpper Class வகையறா, நான் வருண் கிருஷ்ணன் அளவு Upper Middle Class வகையறா,

விரல்களின் நுனியில் நாட்கள் நகர்ந்துகொண்டே சென்றது
மணிக்கணக்காக எங்கள் இருவரின் பேச்சுக்களும் மலர்ந்தது
அவளுக்கு என் மீது ஒரு தலை காதல் முன்னிருந்தே,
ஆசைகளை அடக்கத்தெரியாதவள் தானே பெண்
போட்டு உடைத்தாள் அன்று ஒரு நாள்,

Yes, Iam in Love With You, என்று
நான் பதில் மொழி கூறவில்லை
காதலிடம் இருந்து விலகி இருந்தவனிடம் இன்று ஒரு பெண்
தானாக வந்து தன் காதலை என்னிடம் சொல்லுகிறாளே என்ற குழப்பம்,

அண்ணன்,அண்ணனின் காதலி இருவரும் வெளியே செல்லலாம் என்று
ஒரு பிளான் செய்தார்கள்,நாமளும் போவோம் நான் உன்கூட ஒரு Long Travel பண்ணனும் என்று அவள் தீரா ஆசையை முதன்முதலாக தெரிவித்தாள்,
மற்ற பசங்களிடம் இருந்து கொஞ்சம் தனிப்பட்டவன் நான்,

ஆம், சில கோட்பாடுகளை வைத்திருந்தேன்
என்னுடைய பைக்கில் அம்மா,தங்கச்சிக்கு பிறகு
எனக்கான பெண்ணை மட்டுமே பைக்கில் ஏற்ற வேண்டும் என்று,
இவள் என் தோழி தானே, எனக்கானவள் இவள் இல்லை என்று
மனம் சொன்னது,அவளிடம் தெரிவித்தேன்,
ஒருதலை காதல் செய்யும் அவளுக்கு
இது மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது
அழுதாள்,ஏமாற்றத்துடன் வீடு சென்றாள்,

எனக்கான இரண்டு நண்பர்களிடம் நடந்த விஷயங்களை கூறினேன்
உனக்கான பெண் அவள்தான் என்று என்னை வாய் அடைத்தனர்
சில மாதங்களுக்கு பிறகு எனக்குள் ஒரு ஞான உதயம் பிறந்தது போல்
சுற்றும் முற்றும் யோசித்து எனக்குள் இருந்த வெகுளித்தனமான
காதலை அவளிடம் தெரிவித்தேன்,இருவரும் காதலிக்க தொடங்கினோம்,

காதல் தோல்வி அடைந்தால் பசங்க செல்லும்
டாஸ்மார்க்கின் வாசலில் தான் அவளை முதன் முதலாய்
என் பைக்கில் ஏற்றினேன்,என் காதலின் பயணம் அன்று தொடங்கியது,
பிறகு நிறைய Outing-கள் வாரத்திற்கு நாங்கள் ஏழு நாட்கள் மட்டுமே
Outing செல்வோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்,

அதிகாலை 5.30 மணிக்கு டியூஷன் செல்லும் அவளை காண
சூரியன் வாசல் வந்து என்னை எழுப்புவான்
அடித்து புடித்து கிளம்புவேன் அரைகுறையாக,
சில நேரங்களில் டியூஷன் கட் அடித்துவிட்டு
அதிகாலை Outing-உம் மாலை Outing-உம்
 சாத்தியமாகும் அன்றைய காலை மாலை டியூஷன் நாட்களில்,

அந்த பைபாஸ் சாலையில் இருக்கும் Drive Inn Restuarant - உம்
அவளுக்காக அங்கு நான் வாங்கிய Chocolate-டின் Papers-உம்
இறுதியாக அவளை Drop செய்யும் பேருந்து நிறுத்தமும் சொல்லும்
எங்கள் கால் தடம் பதிந்த அந்த வழித்தட காதல் பயணங்களை,

இரண்டு வருடம் சென்றது,
குழந்தை தனமான அவள் கொஞ்சம் Upgrade ஆகி
+2 முடித்து இளமை ததும்ப கல்லூரி செல்லும்
அழகான பொண்ணுன்னு சொன்னா தப்பாயிடும்,
ஒரு Matured Girl ஆக Migrade ஆனாள்,
எனக்கு சூடு போட்டாலும் வராத அவளுக்கு பிடித்த
அதே B.SC MATHEMATICS கோர்ஸ்-ஐ,

நான் +2 முடித்தவுடன் ஒரு இன்ஜினியரிங் Course ஒன்று
ஒரு அகாடமியில் கடவுளின் இருப்பிடமான Gods Own Country
கேரளாவில் தங்கி படித்து முடித்தேன்,படித்து முடித்த கையுடன்
துபாயில் எனக்கான வேலை ரெடி ஆனது,

அந்த நேரம் என்னுடைய பிறந்தநாளும் வந்தது,
நண்பனுடைய Shift Desire வெள்ளை நிற காரில் நண்பன்,
நண்பனின் காதலி,நான்,இவள் நான்கு பேரும் குழந்தைகள்
அமளி துமளி செய்து விளையாடிக்கொண்டிருக்கும்
அந்த சாலையோர பூங்காவின் அமைதி சூழ
இரவு ஒன்பது மணிக்கு நடுரோட்டில் கேக் வெட்டி
ஒவ்வொருவர் மீதும் வீசி என்னுடைய பிறந்தநாளை
துபாய் செல்வதற்கு முன் மிகவும் சந்தோஷமாக
அவளுடன் Time Spend செய்து கொண்டாடினேன்,

பாலைவனங்களும் அடுக்கு மாடி கட்டிடங்களும் நிறைந்த
சூரியன் உக்கிரமாய் தன் நிலையில் இருந்து மாறா
வெப்பத்தை உமிழும் துபாய் நகரத்தில்
என்னுடைய வேலை நாட்களை தொடர்ந்தேன்,
தனிமை உருவெடுத்தது, எனக்கான ஒரே ஆறுதல்
என்னுடைய குடும்பமும்,இவளும் மட்டுமே,
என் வீட்டிற்க்கு நான் போன் பண்ணி பேசுறேனோ இல்லையோ
இவளுக்கு போன் பண்ணி பேசலேனா அன்றைக்கு முழுதும்
முகத்தில் ஒரு தனிமையின் கொடுமை சூழ்ந்து இருக்கும்,
என் அம்மா முகத்திற்கு பதில் என்னுடைய இரவுகள் முழுதும்
இவள் முகம் ஆட்கொண்டது,
என் குடும்பத்தை பிரிந்து குடும்ப சூழ்நிலைக்காக
எங்கள் Middle Class ரகம் மாற நான் உழைத்தாலும்
என்னுடைய கஷ்டங்களை ஒரு போதும் அவளிடம் காமிக்கமாட்டேன்,
அவள் Well Rich என்பதால் ஒரு தாழ்வு மனப்பான்மை
எனக்குள் எப்போதும் இருக்கும்,

NEP-ல நீ ஏன் வருண் உன் Family,அண்ணா,தம்பி பத்தி எல்லாம்
எதுமே சொல்லல என்று நித்யா கேக்கும் போது வருண் சொல்வான்
"பசங்க தான் முட்டாப்பசங்கன்னு தெரியுமே" அந்த மாதிரி தான் எனக்கும்,

ஒரு வருடம் பிறகு இரண்டு மாத விடுமுறையில் மதுரை வந்தேன்
இரண்டு மாதங்கள் தீரா காதல்களும் பைக் Outingகளும் மட்டுமே
அவளுடனான என் நேரங்கள் என் நண்பர்கள்,குடும்பம் என்று அனைவரையும் மறந்து அவளுடன் மட்டுமே நாட்களையும் துபாயில் இருந்து கொண்டு வந்த காசுகளையும் செலவிட்டேன் பாரி வள்ளல் பரம்பரை போல்,

ஜூன் மாதம் வரும் என் பிறந்தநாளுக்கு
மே மாதம் மறுபடியும் துபாய் கிளம்பும் எனக்காக
அவள் ஒரு ரெட் கலர் Branded Shirt,Wallet,Watch என்று Gift செய்தாள்,

மேலும் ஒரு வருடம் பாலைவனமாக அதே தனிமை காட்டில்
துபாய் வாழ்க்கையில் மறுபடியும் நுழைந்தேன்,
காலேஜ் Final Year செல்லும் அவளுக்கு Engagement,
எங்கள் வீட்டில் வந்து பேசு என்று அவள் சொல்லுகிறாள்,

மீண்டும் மதுரை,
இந்த முறை என் வாழ்க்கைகாக..?

நான் துபாயில் வேலை செய்த இத்தனை வருட Salary Slip - ஐயும் எடுத்துக்கொண்டு அவள் அம்மாவிடம் பேச அவள் வீட்டுக்கு செல்கிறேன்
நான் அவள் வீட்டிற்கு சென்றது அவளுக்கு தெரியாது அன்று,
அவள் அம்மாவிடம் எல்லாவற்றையும் பொறுமையாக எடுத்துரைத்தேன்
எங்கள் குடும்பம்',காதல்,என்னுடைய வேலை,என்னை பற்றி என்று,

இறுதியாக அவள் அம்மா கூறியது,

இல்ல பா இது செட் ஆகாது
உங்க ஸ்டேடஸ் வேற - எங்க ஸ்டேடஸ் வேற
1 Lakh Salary Per Month வேண்டும் எங்களுக்கு வரப்போற மாப்பிளைக்கு
எங்களுக்காக ஒரு உதவி பண்ணு,
அவளே உன்ன விட்டு போணும்,
நீ இங்க வந்தது கூட அவளுக்கு தெரியக்கூடாது
எங்க Range வேற நீ கெளம்பு என்று மனசங்கடப்படுத்தி அனுப்பினார்,

அவள் வீட்டுக்கு சென்றதும்
அவள் அம்மாவிடம் நடந்த உரையாடல்களையும்
நான் அவளிடம் சொல்லவில்லை
மூடி மறைத்தேன் அவள் அம்மாவுக்காக,

நாட்கள் நீரோடையாய் கடந்தது
நான் துபாய் செல்லாமல் மதுரையில் தான் இருந்தேன்,
திடீரென்று ஒரு மெசேஜ் வாட்ஸ்அப் ஆரம்பித்த அன்றைய காலக்கட்டத்தில்

எனக்கு Engagement முடிந்துவிட்டது
சவுதி ல வேலை செய்யுறார் மாப்பிள்ளை என்ற Text - உம்
அவள் Engagement போட்டோ With Attached - உம்
அவள் முகத்தில் சிரிப்பு இல்லை துளி கூட,

She : இனிமே இது சரிப்பட்டுவராது Bye ன்னு!
Me : ... (3 Dots)

பதினைந்து நாட்கள் கடந்தது
அன்று மதுரை கட்ராபாளையத்தில் சந்தனகூடு திருவிழா நடந்தது
நண்பனும் நானும் பைக்கில் அங்கு சென்று இருந்தோம்
எனக்கு எதிரே ஒரு பைக்கில் மூன்று பேர் வருகின்றனர்,

ஆம்,
அவள்,அவள் அம்மா, ஒரு குட்டி பாப்பா.

அதே Nikaaf (புர்க்கா)  அணிந்த  உடையில்
என்னை ஈர்க்கும் அந்த கண்கள் மட்டுமே தெரியும் ஆடையில்
அவளை அறியாமலே எதிரே பைக்கில் வந்த
என்னை நோக்கி கை அசைத்தாள்
நான் அவள் தான் என்று Guess செய்துவிட்டேன்
என்னை மறந்து நானும் கை அசைத்தேன்,
இரு துருவம் எதிர் எதிரே கடப்பது போன்று
இருவரும் அங்கிருந்து கடந்து சென்றோம்,

சிறிது நேரம் கழித்து ஒரு மெசேஜ் வாட்ஸ்அப்பில்
அதே அவளின் பழைய மொபைல் நம்பரில் இருந்து,

She : Hi - Fine..?
Me : Hi - Hmm..Fine
She : Feb 3th Enakku Marriage
Me : ... (3 Dots)

She :

இப்போகூட வாய் தொறக்கமாட்டேல நீ
எனக்கு கல்யாணம் னு உனக்கு ஞாபகம் இருக்குல்ல,.
உன்னோட சந்தோஷத்த மட்டுமே தான நீ பாக்குற
நம்ம காதலுக்காக நீ எதுமே பண்ணல
உன்ன சுத்தி இருக்கவங்க அப்பறம் உன் சந்தோசம்
இது தானே உனக்கு முக்கியமா பட்டுச்சு Okay Bye என்று
அந்த Conversation - ஐ அவளே ஆரம்பித்து அவளே முடித்தாள்
என்னுடைய மூன்று Dots Reply - யுடன்,

இறுதிகட்ட நாள் வந்தது,
February 3 - Most Important Day
மதுரையில் அவள் திருமணம் நடக்கிறது
மஹாலுக்கு வெளியே நானும் என் நண்பனும்,

மஹாலுக்கு வெளியே கட்டப்பட்டிருக்கும் Speaker - இல்
உள்ளே நடக்கும் உரையாடல்கள் ஒலிக்கிறது,

மதகுருமார்கள் : இருவருக்கும் திருமணத்தில் சம்மதமா..?

She : சம்மதம்
She's He : சம்மதம்

இரு வீட்டாரின் சம்மதத்துடன்
இத்திருமணம் இப்போது நடைபெற போகிறது
என்று மதகுருமார்கள் கூறுகிறார்,

சாஸ்திர சம்ரதாயங்களுடன் திருமணம் முடிந்தது
அருகில் இருந்த நண்பனின் முகத்தை பார்த்து சிரித்தேன்,

~ :)) ~

அந்த சிரிப்பில் அவள் இல்லை
அந்த சிரிப்பில் காதல் இல்லை
அந்த சிரிப்பில் சந்தோசம் இல்லை
அந்த சிரிப்பில் நான் நானாக இல்லை

வலிகள் நிறைந்த சிரிப்பு அது
கண்களில் நீர் கடலாக ததும்பியது
முதல் உலகத்தை விட்டு விடை பெறுகிறேன்
பைக்கை ஸ்டார்ட் செய்தேன்

வெகுநாட்கள் கடந்தது
முடிவில்லா பாதைகள் அன்று
என்னுடைய இரண்டாம் உலகத்தை வந்து அடைந்தது..?

இரண்டாம் உலகம்

பைக்கை ஸ்டார்ட் செய்து நண்பனுடன்
ஒரு வழியாக தியேட்டருக்கு வந்துவிட்டேன்
இருக்கையின் நம்பர் பார்த்து போய் அமர்ந்தோம்
ஏதோ ஒரு முனைப்பில் பின் சீட் பக்கம் திரும்பினேன்,

அது ஒரு Corner Seat..?
சட்டென கண்களை மூடினேன்
மீண்டும் திறந்து பார்த்தேன்

ஆம்,
அவள் தான் அமர்ந்திருந்தாள்
அவளுக்கான அவருடன்..?..!!

மூன்றாம் உலகத்தை தேடி
மீண்டும் என் பயணத்தை தொடங்குகிறேன்..?


- தொடரும் 💛


References :

* நீதானே என் பொன்வசந்தம் - GVM
* The Life of Ram | 96 - கார்த்திக் நேத்தா










Comments

Popular posts from this blog

The Journey of Solo - Title Poem

ஓம் நமச்சிவாய என்னும் மூலமந்திரத்தின் கருவாய் நீர்,காற்று,நெருப்பு,நிலம்  என்னும் நாற்பகுதிகளை இறைவன் சிவனை வைத்து மையப்படுத்தி இருக்கும் கதைக்களத்தின் ஒரு கவிதை நடை பயணம் இங்கு, " The Journey of Solo - Title Poem |  Bejoy Nambiar  " 1) நீர் - ( World of Shekhar )  அன்பே ஆயிரம் மழைத்துளிகள் என்னை நனைப்பது போல நீ என்னை நனைத்துக்கொள் நதியின் ஆழங்களில் நான் மூச்சு திணறுவது போல நீ என்னை தழுவிக்கொள் கடலின் பேரலைகள் கரையை தீண்டுவது போல நீ என்னை எடுத்துக்கொள் என்னை உன் கரங்களால் அணைத்துக்கொள்ளாதே உன் மனதால் இறுக அணைத்துக்கொள் அன்பின் தனிமையில் உனக்கு மரணம் இல்லை 2) காற்று - ( World of Trilok ) யுகாந்திரங்களின் கோபம் யுகாந்திரங்களின் இறுக்கம் யுகாந்திரங்களின் பொறுமை யுகாந்திரங்களின் தனிமை வந்துவிட்டது எல்லாவற்றின் மீதும் பெரும் புயல் ஒன்று இந்த காற்றை எதிர்த்து நடப்பவர்கள் யார்..? காலத்தின் புயலில் உதிரும் ஆயிரம் ஆயிரம் மலர்களில் ஒரு மலரல்லவா நீ..? அழிவின் தனிமையில் காத்திருக்க உனக்கு நேரமில்லை 3) நெருப்பு - ( World of Shiva ) வன்மத்தின் வனங்கள் பற்றி எரிகின்றன குருதியின

கிறுக்கல்களின் தொகுப்புகள்

வெள்ளிக்காப்பை சுழற்றினேன் சூடான காஃபியை அருந்தினேன் தலை முடியினை கோதி விட்டேன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன் ஆழ்மனதும் அனாதையாக இருந்தது எண்ணங்களின் ஓட்டமும் சீராக இல்லை யூடியுப் பக்கம் சென்றேன் அன்றைய தினத்தின் Trending காணொளிகள் ட்விட்டர் பக்கம் சென்றேன் நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே தள்ளு முள்ளு இன்ஸ்டாகிராம் பக்கம் சென்றேன் Bae Calls Me Chocobar என்றாள் கிளியோபாட்ரா ஹைக் பக்கம் சென்றேன் நட்டாஸா உரையாடலுக்கு எதிர்வாதம் செய்தாள் சரி, இது தான் இன்றைய தலைவிதி என்று முகப்புத்தகம் வந்து இதை பதிவு செய்தேன்..? - A Poem Without a Topic ❤ ---------------------------------------------------------- வாழ்க்கை இப்படியே போயிடுமா சார் என்பதில் தொடங்கி வாழ்க்கை ஒரு வட்டம் என்பதில் பயணித்து இவ்வளோ தான் சார் வாழ்க்கை என்பதில் முடிகிறது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நம்பகத்தன்மை நிறைந்த வாழ்க்கை..? -------------------------------------------------------- இந்த காஃபி ஷாப் சுவர்களின் இடையூறுகள் நம் நாவிதழ்கள் இடைபாடுகளிலும்..?..!! - வா ரயில் விட போலாம் வா  🖤 --

குடைக்குள் மழை

✨️💚 ரீனா : ஹே ஆர் யூ தேர்..? விக்ரம் : இருக்கேன் ரீனா, என்ன திடீர்னு மெசேஜ், முக்கியமா எதுவும் சொல்லணுமா..? ரீனா : ஹே, அதெல்லாம் இல்ல, ஏன் ஒர்க்ல இருக்கியா..? விக்ரம் : இல்ல, வீட்டுக்கு வந்துட்டேன், Earlier Appointments So, முடிஞ்சு பா! ரீனா : ஒகே, கொஞ்சம் மனசு சரி இல்ல அதான் உன்கிட்ட பேசலாமேன்னு கால் பண்ணேன்..? விக்ரம் : என்ன ஆச்சு..? ஆர் யூ ஓகே..? சொல்லு ரீனா Any Issue..? ரீனா : ஹே,Just Mood Swing ஒன்லி! நீ ஃபிரீன்னா சொல்லு Let's Walk Together in Beach! உனக்கு தெரியும்ல எனக்கு பீச் வாக்ன்னா ரொம்ப பிடிக்கும், So நீ ஃபிரீன்னா வர முடியுமா விக்ரம்..? விக்ரம் : சரி, ஈவினிங் 6 மணிக்கு பீச்ல நம்ம வழக்கமா மீட் பண்ணுற அந்த பட்டர் பன் கடைக்கு வந்துரு ரீனா, நானும் வந்துடுறேன், ரீனா : தேங்க்ஸ் விக்ரம்! விக்ரம் : தேங்க்ஸா..? No More Formalities! உன்னோட தேங்க்ஸ்ல நான் பூரிச்சு போய்ட்டேன்,சிரிப்பு காட்டாம வா ரீனா! ரீனா : ஹ்ம்ம் டா! * இடம் : கடற்கரை * நேரம் : மாலை 6 மணி விக்ரம் : ஹே! என்ன ஆச்சு ரீனா திடீர்னு..? ரீனா : அதெல்லாம் ஒன்னும் இல்லடா, Please Give Sometime நானே சொல்லுறேன் போ