Skip to main content

Posts

Showing posts from April 5, 2020

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

*❤️ தலைப்பு :  இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்  ஒரு கதை எங்க முடியுமோ அங்க தான் இன்னொரு கதையோட தொடக்கம் ஆரம்பிக்கும் அப்படி தான் இந்த கதையும், உலகத்துல ஒருத்தருக்கு ஏற்படுற கஷ்டம்,கவலை,ஏமாற்றம்,இழப்பு, பிரிவு - ன்னு எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு பெயர் வச்சா அது தான் என்னோட பெயர் "கெளதம்", இந்த கெளதம் - ன்ற பெயருக்கு பின்னாடி வாழ்க்கையோட மொத்த நிராகரிப்பும் ஒன்னு சேர்ந்து இருக்கும், அப்படி ஒரு ஜாதகத்தை கொண்டவன் தான் நான், எல்லாரோட வாழ்க்கையிலையும் வர மாதிரி தான் என்னோட வாழ்க்கையிலும் முகத்தின் மேல் தீண்டும் ஒரு பெண்ணின் விரல் போல காதல் என்னை சற்று அவள் மெல்லிய விரல்களால் தீண்டி சென்றது, " தாரா " இந்த பூமியோட மொத்த அன்பும் ஒருத்தங்க கிட்ட தான் இருக்கும் அப்படினா அது தான் என்னோட தாரா, எத்தனை சண்டை வந்தாலும் சச்சரவுகள் வந்தாலும் பிரியுற நிலைக்கு எங்க காதல் போனாலும் ஒவ்வொரு வாட்டியும் இது இன்னும் முடியல கெளதம், இன்னும் நம்ம ரொம்ப தூரம் போகணும் நம்மளோட கால் தடங்கள் இன்னும் இந்த பூமில ரொம்ப வருஷம் நிலைச்சு இருக்கணும், உங்க அப்பா சொன்னா கேப்பேல அப்படி தான் உன்னோட இ

அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாழ்

*❤️ சிறுகதை : " அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாழ் " காற்றின் வேகம் சற்று அதிகமாக இருந்ததினால் கடல் அலைகள் ஆர்ப்பரித்த வண்ணம் தனது வேகத்தில் கொஞ்சம் வீரியத்துடன் காணப்பட்டது, எப்போதும் பரவலாக கூட்டம் இருக்கும் நாகர்கோவில் அருகில் உள்ள சங்குத்துறை கடற்கரை அன்று ஏனோ வெறிச்சோடி காணப்பட்டது, கடற்கரை முழுவதும் குளிர்ந்த காற்று வீச அருகிலிருந்த தென்னை மரங்களின் கீற்றுகள் யாவும் நடனமாட கருமேகம் வானத்தை சூழ ஒரு பெரிய இடி  பூமியின் மேல் விழுந்தது போல பேரிடியாக விழுந்தது, வீட்டின் முதல் பிள்ளைக்கு இடி என்றால் ஆகாது என்று நம் முன்னோர்கள் சொல்லி கேட்டதுண்டு, விழுந்த பேரிடியின் அதிர்ச்சியில் சற்று திளைத்து சுய நினைவுக்கு வந்தவனாக நான், சிறு தூரலில் ஆரம்பித்த மழை நேரம் எடுக்க எடுக்க பெருமழையாய் பெய்ய தொடங்கியது, ஆளற்ற கடற்கரையில் நான் மட்டும் தனியே பெருமழையில் நனைந்த வண்ணம் அமர்ந்திருக்கிறேன், என் கண்களில் இருந்து சிந்தும் கண்ணீர் இந்த உலகத்திற்கு புலப்படாத வண்ணம் மழை நீரில் சங்கமித்து என் கன்னம் வழியே தழுவி நிலத்தின் மேலே குடி பெயர்ந்தது, மழையில் நனைந்த வண்ணம் என் மனதில் ஒரு கேள்வி