Skip to main content

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

*❤️

தலைப்பு : 

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் 

ஒரு கதை எங்க முடியுமோ
அங்க தான் இன்னொரு கதையோட
தொடக்கம் ஆரம்பிக்கும்
அப்படி தான் இந்த கதையும்,

உலகத்துல ஒருத்தருக்கு ஏற்படுற
கஷ்டம்,கவலை,ஏமாற்றம்,இழப்பு,
பிரிவு - ன்னு எல்லாத்துக்கும் சேர்த்து
ஒரு பெயர் வச்சா அது தான் என்னோட
பெயர் "கெளதம்", இந்த கெளதம் - ன்ற
பெயருக்கு பின்னாடி வாழ்க்கையோட
மொத்த நிராகரிப்பும் ஒன்னு சேர்ந்து
இருக்கும், அப்படி ஒரு ஜாதகத்தை
கொண்டவன் தான் நான்,

எல்லாரோட வாழ்க்கையிலையும்
வர மாதிரி தான் என்னோட
வாழ்க்கையிலும் முகத்தின் மேல்
தீண்டும் ஒரு பெண்ணின் விரல் போல
காதல் என்னை சற்று அவள் மெல்லிய
விரல்களால் தீண்டி சென்றது,

" தாரா "

இந்த பூமியோட மொத்த அன்பும்
ஒருத்தங்க கிட்ட தான் இருக்கும்
அப்படினா அது தான் என்னோட தாரா,

எத்தனை சண்டை வந்தாலும் சச்சரவுகள்
வந்தாலும் பிரியுற நிலைக்கு எங்க காதல்
போனாலும் ஒவ்வொரு வாட்டியும் இது
இன்னும் முடியல கெளதம், இன்னும்
நம்ம ரொம்ப தூரம் போகணும்
நம்மளோட கால் தடங்கள் இன்னும்
இந்த பூமில ரொம்ப வருஷம் நிலைச்சு
இருக்கணும், உங்க அப்பா சொன்னா
கேப்பேல அப்படி தான் உன்னோட
இந்த தாராவும் - ன்னு ஒவ்வொரு
முறையும் தாரா தான் எங்களோட
காதல தாங்கிப்பிடிக்கிற ஒரு நங்கூரம் -
ன்னு சொல்லலாம்,

ஹ்ம்ம்,
இப்போ ஊட்டி பக்கத்துல இருக்க
கேத்தி - ன்ற குக் கிராமத்தோட
ரயில் நிலையத்துல நான்
உட்கார்ந்து இருக்கேன்,
எந்த ஊருக்கும் போகல
எனக்கு மனசு சரி இல்லேன்னா
என்னோட பைக் எடுத்துட்டு
நான் என்கூட இருக்க யார்கிட்டயும்
சொல்லாம ரொம்ப தூரம் கிளம்பி
போயிருவேன் அப்படி இந்த டைம்
ஊட்டி வந்தேன்,

மூன்றாம் பிறை கிளைமாக்ஸ
ஆசான் பாலு மஹேந்திரா "கேத்தி" -
ரயில் நிலையத்துல அந்த "சீனு - விஜி"
காட்சியை படமாக்கினார்ல
அதே ரயில் நிலையம் தான்,
கேத்தி ரயில் நிலையம்
பெருசா கூட்டம் இல்லாம
கொஞ்சம் Pleasent - ஆ இருக்கும்,
தனிமைய தேடி அதுக்குள்ள
என்ன நான் இணைச்சுக்குவேன்,
அப்படி தான் இன்னைக்கும்,

ஆறு மாதமாக ஸ்விட்ச் ஆஃப்பில்
இருக்கும் என்னுடைய நம்பருக்கு
கால் செய்து ஓய்ந்து போய் கடைசியாக
நான் வேறு நம்பரில் இருந்து அழைத்து
பேசும் என்னுடைய ஒரு நண்பனிடம்
சென்று நான் எங்கே இருக்கிறேன் என்ற
தகவலை அவனோடு சண்டை போட்டு
கேட்டு கடைசியாக இப்போது என்னை
தேடி தாரா வந்து கொண்டிருக்கிறாள்,

ஆறு மாசத்துக்கு அப்பறம்
என்னோட மொபைல்ல என்னோட
பழைய நம்பர திரும்பவும் நான்
இப்போ ஆக்டிவ் பண்ணுறேன்,

நம்பர் ஆக்ட்டிவ் ஆன ஐந்தாவது
நிமிடத்தில் அழைப்பு வருகிறது
தாராவிடம் இருந்து,

நான் கால் - ஐ ஒரு மனதுடன்
Attend செய்கிறேன்,

----->

காலம் சற்று பின் நோக்கி நகர்கிறது,

" 6 மாதத்திற்கு முன்பு " 

பெங்களூருல ஒரு Psychiatrist டாக்டர்
அவர் கிளினிக்ல வெயிட் பண்ணிட்டு
இருந்தேன்,

கொஞ்சம் கூட்டமாக
இருந்த கிளினிக்கில்
என்னுடைய டோக்கன் எண் "6"

ஒரு மணி நேரத்திற்கு பிறகு
6th - டோக்கன் கெளதம் உள்ள போகலாம்
- ன்னு அந்த கம்பவுண்டர் கனத்த குரலில்
சொல்ல அவரை முறைத்து பார்த்த படியே
உள்ளே சென்றேன், ஏன் பக்கத்துல தான
இருக்கேன் மெதுவா என்னோட பெயர
கூப்பிடமாட்டாரா, கொஞ்சம் Loud - ஆ
பேசுனா கூட எனக்கு செம்ம டென்ஷன்
ஆகும் இப்படி பல விஷயம் இருக்கு,

டாக்டர் அறைக்குள் சென்றவுடன்
அங்கே இருந்த நான்கு பக்க
சுவர்களையும் சுற்றி முற்றி பார்த்தேன்,

செம்ம ஆர்ட் ஒர்க் செஞ்ச ரூம்ல
நடுவுல அவரோட டேபிள், பேனாக்களும்
பென்சில்களும் ஆங்காங்கே கிடக்காமல்
சரியாக அதன் இருப்பிடத்தில்
வைக்கப்பட்டிருந்தது டாக்டரின்
டேபிளில், பொதுவாகவே டாக்டரின்
அறையில் ஏதோ ஒரு கடவுளின்
உருவ அமைப்பு சிலையோ அல்லது
படமோ இருக்கும் ஆனால்
எந்த கடவுளின் புகைப்படமும்
அந்த அறையில் இல்லை, அவர் Atheist -
ஆ என்றால் அதற்கு என்னிடம் பதிலும்
இல்லை, ஒரே ஒரு அன்னை தெரசா -
வின் படம் மட்டும் மாற்றப்பட்டு இருந்தது
வலது பக்க சுவரில்,

Yes,
சொல்லுங்க உங்க பேரு,

கெளதம் - டாக்டர்,

சொல்லுங்க கெளதம்
எதுக்காக Psychiatrist டாக்டர் - உதவி
உங்களுக்கு இப்போ தேவைப்படுது..?

எனக்கு அது புதுசா இருந்துச்சு
எல்லா டாக்டரும் அவங்க அறை குள்ள
போனான கேக்குற முதல் கேள்வி
சொல்லுங்க உங்களுக்கு என்ன
பிரச்சனை - ன்றது தான்,

So, என்னோட எல்லா பிரச்சனைக்கும்
ஒரு தீர்வு இந்த இடத்துல
கிடைக்கும்ன்னு எனக்கு தோணுச்சு,

ஹ்ம்ம்,
என்னோட சின்ன வயசுலயே
ஏதோ கருத்து வேறுபாடின் பேருல
எங்க அப்பாவும் அம்மாவும்
பிரிஞ்சுட்டாங்க டாக்டர், அதுக்கப்பறம்
நான் எங்க அப்பா கூட தான் இவ்வளோ
வருஷம் வள்ர்ந்தேன்,அம்மா இன்னொரு
கல்யாணம் பண்ணிட்டு போயிட்டாங்க
அப்போவே,அப்பா அம்மா நினைப்புல
இருந்தாலும் என்கிட்ட இதுவர
சொன்னதில்ல, But எனக்கு எங்க
அம்மா - ன்னா பிடிக்காது சுத்தமா,

எனக்கு என்னமோ தெரியல
சின்ன வயசுல எங்க அம்மா
எங்கள விட்டு போனதுக்கு
அப்பறத்துல இருந்து எனக்கு
ரொம்ப கோபம் வர ஆரம்பிச்சுருச்சு
டாக்டர், சில Situation ல I can't என்னால
முடியவே முடியாது என்ன கண்ட்ரோல்
பண்ணிக்கவே, அந்த கோபத்துல
இருந்து வெளிய வர எனக்கு
கொஞ்சம் தனிமையும்
சரியான நேரமும் தேவைப்படும்,

இப்படி போய்கிட்டு இருந்த என்னோட
வாழ்க்கையில வந்தவ தான் டாக்டர்
"தாரா", பணக்கார பொண்ணு தான்
Costume - ல இருந்து Attitude வர, ஆனா
She Completely Mad With Me டாக்டர்,
ஒரு நாள் அவகூட இருக்கப்போ
எங்க அம்மாவ தெருவுல அந்த
இன்னொரு புருஷன் கூட பார்த்தேன்,
அப்போ அவகிட்ட எல்லாத்தையும்
சொன்னேன், அப்போ ஆரம்பிச்ச
கோபம் அந்த தவிப்பு,நான் இவளோ
நாள் அனுபவிச்ச வலி - ன்னு
எல்லாத்துக்கும் ஒரு மருந்தா தான்
தாரா ஒரு என்கூட இருந்தா,
ஒரு Situation - ல என்ன மீறி
எங்க லவ்ல High ஸ்டாண்டர்ட் போய்
அவள நான் ரொம்ப காயப்படுத்திட்டேன்,
கோபத்துல அவளோட அப்பா கிட்ட சண்ட
போட்டு அவர் வேற மாப்பிளை பாத்து
எண்கேஜ்மெண்ட் ஆகுற அளவு,
அதுக்கு அப்பறமும் என்னோட
கோபத்துனால நான் அவள
ஒரு நெருப்பு போல சுட்டுகிட்டே
இருந்தேன், இதுவரைக்கும்
தண்ணி,புகையிலை - ன்னு
போகாத நான் வீடின்றி தெருவில்
கிடந்த ஒருவரிடம் Stuff - வாங்கி
அதன் சூரபோதையை
என்னுள் ஆக்சிஜெனாக உள்வாங்கி
கொண்டு அவள கொலை பண்ணுற
அளவு ஒரு கேவலமான நிலைக்கு
போயிட்டேன்,ஏதோ சித்தன் போக்கு
சிவன் போக்குன்னு போனவனுக்கு
திடீர்னு மதி உண்டான மாதிரி
ஒரு Fraction of Second - ல
என் Back பாக்கெட்ல இருந்து
நான் எடுத்த கத்தியால அவள
அன்னக்கி கொலை செய்யல
அப்போகூட அவ எனக்கு நாங்க
லவ் பண்ணுன எங்களோட காதல
தான் புரிய வைக்க முயற்சி செஞ்சா,
But அவ சந்தோஷமா இருக்கணும்னா
நான் அவள விட்டு பிரிஞ்சா தான்
என்னோட கோபம்,வலி - ன்னு
எதுமே அவள Affect பண்ணாம
அடுத்து வாழப்போற அவளோட
வாழ்க்கை நல்லாருக்கும் - ன்னு
நெனச்சு நான் விலகி வந்துட்டேன்
டாக்டர்,

இப்போ ஒரு வாரம் ஆச்சு
ஆல்மோஸ்ட் சிம் கூட போன்ல இருந்து
கழட்டிட்டேன், But என்னால இந்த
Situation - ல இருந்து வெளிய வர முடியல
டாக்டர்,

எல்லாமுமா தாரா தான் தெரியுறா
Even, இப்போ உங்க அறை குள்ள
நுழைந்தோன பிங்க் - நிற ரூம் Decoration
- அவளுக்கு பிடித்த கலர் கூட பிங்க் தான்,
அப்பறம் வெளிய என்னோட டோக்கன்
நம்பர் "6" - அவளோட ராசியான
எண்ணும் கூட, அப்பறம் வெளிய நிக்குற
என் பைக் - பக்கத்துல நிக்குற அந்த
சிகப்பு கலர் கார் - (அவளோட காரும் சிகப்பு தான்),

இப்படி என்னோட எந்த தொடர்பும்
அவளுக்கு இருக்கக்கூடாதுன்னு
நான் அவளோட சந்தோஷத்துக்காக
விலகிட்டாலும் இப்படி சின்ன சின்ன
Resembles மூலமா அடுத்து நடக்கப்போற
என்னோட வாழ்க்கை பற்றிய பயம் தான்
சார் அதிகமிருக்கு, அப்பறம் நான்
இல்லாத தாரா - வோட வாழ்க்கையும்
நினைச்சு கூட,

டாக்டர் :

சரி, கெளதம்
இது தானே உங்க Reason
ஓகே, I'll Give You d Solution,

தனிமையில உங்களுக்கு
ரொம்ப பிடிச்ச விஷயம் என்ன கெளதம்..?

ஹ்ம்ம், Long Ride, Books,
& Some Good Music டாக்டர்

அவ்ளோதான்,
இது தான் உங்களுக்கான மருந்து
உங்க வலிக்கு Painkiller Tablets,Stress
டேப்லெட் - ன்னு கொடுத்து உங்கள
Back to நார்மல் ஸ்டேஜ்க்கு கொண்டு வர
நினைச்சாலும் அது கடைசில தோல்வில
தான் முடியும்,

ஒருத்தங்க மீதான அதீத அன்பின்
வெளிப்பாடுனால நம்ம அவங்கள
ஒரு ஸ்டேஜ்ல காயப்படுத்துறோம்,
ஒன்னு அவங்க நம்மல விட்டு
போயிருவாங்க, இல்ல ஐந்தறிவு
கொண்ட நாய் போல
நம்மளயே சுத்தி சுத்தி வருவாங்க
நம்ம தான் அவங்களோட
எல்லாமேன்னு, இதுல கூட நாய்
வச்சு ஒப்பிடுகிறேன்ன்னு
தப்பா நினைச்சுக்காதீங்க,
அதுவும் ஒரு உயிரினம் தான்
என்ன நம்மல விட ஒரு அறிவு கம்மி,
ஆனா சிந்திக்கிறதுல நம்மல விட
பவர் அதிகம் நாய்களுக்கு,
So, நீங்க காயப்படுத்தும் போதெல்லாம்
உங்களையே சுத்தி சுத்தி வந்த "தாரா"
தான் உங்களோட சிரிப்பு,துக்கம்,துயரம்,
தொல்லை,மகிழ்ச்சி,பேரன்பு,மருந்து -
ன்னு எல்லாமுமே,

ஒரு ஆறு மாசம் எதையும்
நினைக்காம எங்கயாவது போங்க,
கையில கொஞ்சம் புக் எடுத்துட்டு,
அப்படியே உங்களுக்கு பிடிச்ச
இசையுடன்,

*
இசை
புத்தகம்
பயணம்
தாரா

இது தான் உங்களோட The Life Giver!

அந்த ஆறு மாசத்தோட முடிவுல உங்க
தாரா உங்கள தேடி வருவாங்க கெளதம்,

தேங்க்ஸ் டாக்டர்,
நாளைக்கே கிளம்புறேன்
& உங்க Consulting Fees..?

நான் பார்த்தத்துலயே ரொம்ப Interesting
ஆன Patient நீங்க, எல்லாரும் Psychiatrist
டாக்டர் கிட்ட வரப்போ காய்ச்சலுக்கு
மாத்திரை, மருந்து - ன்னு சாப்பிட்டு சரி
செய்யுற மாதிரி Psychological -
பிரச்சனை முழுவதையும் மாத்திரை,
மருந்துல குணப்படுத்திடலாம்ன்னு
நினைக்குறாங்க, அவங்களுக்கு புரியல
அவங்க கையிலேயே தங்களோட
பிரச்சனை - காண Solution இருக்குன்னு,

Fees வேணாம் - ன்னு சொல்லமாட்டேன்
Because - நான் Free - யா டிரீட்மென்ட்
கொடுத்தா எல்லாமே ஈஸியா கிடைச்ச
மாதிரி இருக்கும், Psychiatrist - அ
பொறுத்தவரை நாங்க பேசுற ஸ்பீச் தான்
உங்களுக்கான எங்களோட டிரீட்மெண்ட்,

Consulting Fees 700 வெளிய
Pay பண்ணிட்டு போங்க கெளதம்,

தேங்க்ஸ் டாக்டர்,

*
" இன்று - கேத்தி ரயில் நிலையம் "

தாரா கேத்திக்கு வந்து
கொண்டிருக்கிறாள் என்று
காலையிலேயே நண்பன் கூறிவிட்டான்,

என் நம்பர் ஆக்ட்டிவ் ஆன
ஐந்தாவது நிமிடத்தில் அழைப்பு
வருகிறது தாராவிடம் இருந்து,

நான் கால் - ஐ ஒரு மனதுடன்
Attend செய்கிறேன்,

எதிர் முனையில் எனை ஈர்க்கும்
தாராவின் காந்தக்குரல்,

கெளதம்..?

- முற்றும் !!

*
அவள் கண்ணீர்துளியின்
சூடு தாளாமல்
ஒளிவேக்கத்தில் மீண்டும் சுழன்று
நிகழ்காலத்தில் நின்றது பூமி,

- வைரமுத்து | போதிமரத்தில் பாதி மரம்

Thanks to Ranjit Jeyakodi Anna For IRIR!

- Scribbles by
Yours Shiva Chelliah : ) "

Comments

Popular posts from this blog

The Journey of Solo - Title Poem

ஓம் நமச்சிவாய என்னும் மூலமந்திரத்தின் கருவாய் நீர்,காற்று,நெருப்பு,நிலம்  என்னும் நாற்பகுதிகளை இறைவன் சிவனை வைத்து மையப்படுத்தி இருக்கும் கதைக்களத்தின் ஒரு கவிதை நடை பயணம் இங்கு, " The Journey of Solo - Title Poem |  Bejoy Nambiar  " 1) நீர் - ( World of Shekhar )  அன்பே ஆயிரம் மழைத்துளிகள் என்னை நனைப்பது போல நீ என்னை நனைத்துக்கொள் நதியின் ஆழங்களில் நான் மூச்சு திணறுவது போல நீ என்னை தழுவிக்கொள் கடலின் பேரலைகள் கரையை தீண்டுவது போல நீ என்னை எடுத்துக்கொள் என்னை உன் கரங்களால் அணைத்துக்கொள்ளாதே உன் மனதால் இறுக அணைத்துக்கொள் அன்பின் தனிமையில் உனக்கு மரணம் இல்லை 2) காற்று - ( World of Trilok ) யுகாந்திரங்களின் கோபம் யுகாந்திரங்களின் இறுக்கம் யுகாந்திரங்களின் பொறுமை யுகாந்திரங்களின் தனிமை வந்துவிட்டது எல்லாவற்றின் மீதும் பெரும் புயல் ஒன்று இந்த காற்றை எதிர்த்து நடப்பவர்கள் யார்..? காலத்தின் புயலில் உதிரும் ஆயிரம் ஆயிரம் மலர்களில் ஒரு மலரல்லவா நீ..? அழிவின் தனிமையில் காத்திருக்க உனக்கு நேரமில்லை 3) நெருப்பு - ( World of Shiva ) வன்மத்தின் வனங்கள் பற்றி எரிகின்றன குருதியின

கிறுக்கல்களின் தொகுப்புகள்

வெள்ளிக்காப்பை சுழற்றினேன் சூடான காஃபியை அருந்தினேன் தலை முடியினை கோதி விட்டேன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன் ஆழ்மனதும் அனாதையாக இருந்தது எண்ணங்களின் ஓட்டமும் சீராக இல்லை யூடியுப் பக்கம் சென்றேன் அன்றைய தினத்தின் Trending காணொளிகள் ட்விட்டர் பக்கம் சென்றேன் நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே தள்ளு முள்ளு இன்ஸ்டாகிராம் பக்கம் சென்றேன் Bae Calls Me Chocobar என்றாள் கிளியோபாட்ரா ஹைக் பக்கம் சென்றேன் நட்டாஸா உரையாடலுக்கு எதிர்வாதம் செய்தாள் சரி, இது தான் இன்றைய தலைவிதி என்று முகப்புத்தகம் வந்து இதை பதிவு செய்தேன்..? - A Poem Without a Topic ❤ ---------------------------------------------------------- வாழ்க்கை இப்படியே போயிடுமா சார் என்பதில் தொடங்கி வாழ்க்கை ஒரு வட்டம் என்பதில் பயணித்து இவ்வளோ தான் சார் வாழ்க்கை என்பதில் முடிகிறது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நம்பகத்தன்மை நிறைந்த வாழ்க்கை..? -------------------------------------------------------- இந்த காஃபி ஷாப் சுவர்களின் இடையூறுகள் நம் நாவிதழ்கள் இடைபாடுகளிலும்..?..!! - வா ரயில் விட போலாம் வா  🖤 --

குடைக்குள் மழை

✨️💚 ரீனா : ஹே ஆர் யூ தேர்..? விக்ரம் : இருக்கேன் ரீனா, என்ன திடீர்னு மெசேஜ், முக்கியமா எதுவும் சொல்லணுமா..? ரீனா : ஹே, அதெல்லாம் இல்ல, ஏன் ஒர்க்ல இருக்கியா..? விக்ரம் : இல்ல, வீட்டுக்கு வந்துட்டேன், Earlier Appointments So, முடிஞ்சு பா! ரீனா : ஒகே, கொஞ்சம் மனசு சரி இல்ல அதான் உன்கிட்ட பேசலாமேன்னு கால் பண்ணேன்..? விக்ரம் : என்ன ஆச்சு..? ஆர் யூ ஓகே..? சொல்லு ரீனா Any Issue..? ரீனா : ஹே,Just Mood Swing ஒன்லி! நீ ஃபிரீன்னா சொல்லு Let's Walk Together in Beach! உனக்கு தெரியும்ல எனக்கு பீச் வாக்ன்னா ரொம்ப பிடிக்கும், So நீ ஃபிரீன்னா வர முடியுமா விக்ரம்..? விக்ரம் : சரி, ஈவினிங் 6 மணிக்கு பீச்ல நம்ம வழக்கமா மீட் பண்ணுற அந்த பட்டர் பன் கடைக்கு வந்துரு ரீனா, நானும் வந்துடுறேன், ரீனா : தேங்க்ஸ் விக்ரம்! விக்ரம் : தேங்க்ஸா..? No More Formalities! உன்னோட தேங்க்ஸ்ல நான் பூரிச்சு போய்ட்டேன்,சிரிப்பு காட்டாம வா ரீனா! ரீனா : ஹ்ம்ம் டா! * இடம் : கடற்கரை * நேரம் : மாலை 6 மணி விக்ரம் : ஹே! என்ன ஆச்சு ரீனா திடீர்னு..? ரீனா : அதெல்லாம் ஒன்னும் இல்லடா, Please Give Sometime நானே சொல்லுறேன் போ