Skip to main content

Posts

Showing posts from March 7, 2019

பரிணாம வளர்ச்சி மனிதனிடத்தில்..?

பரிணாம வளர்ச்சி என்பது அன்றாடம் சாப்பிடும் உணவு முறையில் இருந்து நாம் சந்திக்கும் மனிதர்களின் குணம் வரையில் ஒவ்வொன்றிலும் தன் பங்கினை பிரதிபலித்துக்கொண்டுதான் இருக்கிறது, நன்மை தீமை என்று பரிணாம வளர்ச்சியை நாம் சமக்கோட்டில் பிரிக்கலாம், ஆனால் அதை அணுகும் முறையையும் அதை ரசிக்கும் முறையையும் நாம் செய்வதில்லை, நன்மை தீமை என்று பாராமல் அதை கொஞ்சம் ரசித்து பார்த்தால் சில அழகான அனுபவங்கள் நமக்கு கிடைக்கும் அத்தகைய சிறு முயற்சி இது, ஏர் உழுதல் என்பது மிகவும் நேர்த்தியான கலைக்கு சமமான ஒரு தொழில், நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தில் ஏர் உழுதல் என்பது தொன்று தொட்டு வந்த ஒரு தொழில், இரு காளை மாடுகளின் பிடரியில் ஏர் கருவியை சுமந்து விவசாயம் செய்த காலம் அன்று, இன்றோ டிராக்டரில் இணைக்கப்பட்ட மின் கருவி மூலம் உழுதல் என்பது விவசாயத்தில் காலத்தின் தன்மைக்கேற்ப அதன் பரிணாம வளர்ச்சியை கால் ஊன்றி இருக்கிறது, அன்றைய காலக்கட்டத்தில் காலை எட்டு மணிக்கு வேலைக்கு வரும் விவசாயிகள் ஒரு தூக்குச்சட்டியில் நேற்று மீதமிருந்த மீன் குழம்பையோ அல்லது தண்ணீர் ஊற்றி வைத்த வடிச்