Skip to main content

Posts

Showing posts from May 21, 2020

வலியும் வழியும்

கார்த்திக் நேத்தா - வின் ஃபேமஸான வரியில் இருந்து நம்ம ரைட்அப்பை ஆரம்பிப்போம் * வாகாய் வாகாய் வாழ்கிறேன் பாகாய் பாகாய் ஆகிறேன் * வாகாய் - Living With Comfortness பாகாய் - உருகுதல் தன்னை ஒரு Comfort Zone வட்டத்திற்குள் அடைத்து தான் தொலைத்த ஒன்றை அன்றாடம் நினைத்து தினம் தினம் மனம் உருகுகிறான் உள்ளுக்குள், அதீத அன்பில் திளைத்து காதல் எனும் ஆழிப்பெருங்கடலில் நீந்தி பின் பிரிவு எனும் கரை வந்து சேர்ந்த பின் ஒருவனின் நிலை எப்படி மாறுகிறது என்பதை பார்ப்போம், பிரிவோ வலியோ சம்மந்தப்பட்ட பதிவுகள் எழுதவேணாம் என்று முடிவு செய்து பெரிதாக எழுதாம இருந்தேன் ஏனென்றால் மனதளவில் எனக்கும் சில நேரம் கடந்து வந்த பிளாக் டேஸ் நினைவுக்கு வந்து செல்வதால், இப்போ இந்த ரைட்அப் கூட என் நண்பன் Prakash Veera - காக தான் எழுதுறேன், மச்சான்,மாமா - ன்னு கூப்பிடுற பசங்க மத்தியில டார்லிங்க சுருக்கி "டார்லூ" - ன்னு கூப்புடுற அளவு ஒரு பாண்ட் எங்க ரெண்டு பேருக்குள்ள, நான்கு வருஷமா பழக்கம்ன்னு சொல்லலாம் ஆனா இதுவரைக்கும் நேர்ல சந்திக்கிற வாய்ப்பு எங்களுக்கு இப்போ வர அமையல, ஆனா அவன பத்தி எனக்கு தெரியும் அவனுக்குள்ள இருக்

" டீ " | " காதல் "

தேக்கமான ஜென் மனநிலை என்ன செய்வதென புரியவில்லை தலை சுற்றுகிறது குழப்பத்திலே நானோ குறுகிய மன நிலையில், அன்று விரல்களில் நீ அகப்பட்டாய் என் உணர்வுக்கு மரியாதை தந்தாய் என் உதடுகளை சில நேரம் சுட்டாய் பெரிதான காயமாய் தெரியவில்லை, மூட்ஸ்விங்க்கான நிவாரணியாய் வந்தாய் பல நேரம் புத்துணர்ச்சியை தந்தாய் சக தோழன் போல் பயணம் செய்தாய் என் இதழ்களில் சிரிப்பை விதைத்தாய், மழையிலும் நீ வந்தாய் வெயிலிலும் துணை நின்றாய் குளிரிலும் குதூகலம் அடைய செய்தாய் இலையுதிர் மாலையிலும் சுகம் தந்தாய், நிறைய வலிகளை பார்த்தவன் என் வலிகளில் உடன் நின்றாய் நீயே அர்த்தமுள்ள உயிரானாய் நித்தம் என் குருதியில் கலந்தாய், அந்தி மாலை நேரமோ அதிகாலை பொழுதோ அக்னி வெயில் சுடும் பகலோ அடர்ந்த இருள் படர்ந்த இரவோ ஒரு கோப்பை உனை நான் கையில் ஏந்தினால் தான் அன்றைய நாள் எனக்கு வசந்த நாள், Picture Credits : Prashanth Devaraj #WorldTeaDay | #TeaForLife ❤️