Skip to main content

Posts

Showing posts from July 30, 2022

நிகரில்லாதவள்

அன்று ஊரெங்கும் நல்ல மழை வெளுத்து வாங்கிகொண்டிருந்தது, பெரு மழைக்கு ஒதுங்குவதற்காக அவள் அங்கே சாலையோரம் இருந்த மரத்தின் அடியில் சென்று நின்று கொண்டாள், அவளுக்கு அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் சூழ அவள் ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியை போல் அக்குழந்தைகளுக்கு நடுவில் நின்று அவர்கள் மழையில் செய்யும் சேட்டையை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள், இந்த மழை நிற்பதற்குள் இவள் யார்,இவள் பெயர் என்ன, இவள் சார்ந்து இருப்பவைகள் என சின்ன கதையுடன் ஒரு முன்னோட்டம் பார்ப்போம், இவளுக்கான அறிமுகம் இல்லாததால் இவளுக்கு இவளாகவே சூடிக்கொண்ட பெயர் இது, ஆம் இவளுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஆசிரமத்தில் தான் வளர்ந்து வருகிறாள்,அங்கிருப்பவர்கள் "குட்டி" என்று கூப்பிடுவார்கள் அதுவே இவளது பெயராகவும் மாறியது, பின் பள்ளி முடிந்து யாரோ பெயர் தெரியாத ஸ்பான்ஸர்ஷிப் மூலம் கல்லூரி படிப்பை முடித்து நல்ல ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்த பின் தான் இவளுக்கு ஒன்று புரிந்தது, நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள சரியான பெயர் கூட நமக்கு இல்லை என்று, எதிர்நீச்சல் படத்தில் வருவது போல் தன் அடையாளத்தை இச்சமூகத்தில் பதிக்