Skip to main content

Posts

Showing posts from August 20, 2020

லவ் யூ டாடி !!

அணைகின்ற விளக்கு சுடர் விட்டு எரிவது போல் இறப்பதற்கு முன் அவர் குரலில் கடைசியாக சொன்ன வார்த்தை எந்தன் பெயர் மட்டுமே, நீங்கள் என்னை விட்டு சென்று சரியாக 18 வருடங்கள் ஆகிவிட்டது, தூங்குவோம் என கண்ணை மூடினால் எந்தன் கனவுகளில் உங்கள் உருவம் என் இரவு முழுவதையும் உங்கள் வசப்படுத்திக்கொண்டது, யாரோ ஒரு அப்பா தன் கால் வலிக்க மிதிவண்டியை மிதித்து தன் மகனை சொகுசாக கூட்டிச்செல்லும் போது இன்னும் கொஞ்ச நாள் நான் மழலை வகுப்பில் படித்திருக்கலாமோ என மனம் நாடுகிறது, வெளியூரில் வேலை பார்த்தாலும் சொந்த ஊருக்கு போய் புரோட்டா சாப்பிடும் போதெல்லாம் ஞாயிற்று கிழமை நீங்கள் வாங்கிக்கொடுக்கும் புரோட்டா மட்டுமே கண்களின் முன் வந்து செல்கிறது, கேட்டவை எல்லாம் கிடைத்தது நடுத்தர குடும்பத்தில் பிறந்தும் கூட நான் மட்டுமே தனிக்காட்டு ராஜா நீங்கள் உடன் இருந்த வரை, அன்று நீங்கள் வாங்கிக்கொடுக்கும் எனக்கு பிடித்த 50-50 பிஸ்கட்டுகளின் சுவை இன்றைய தினத்தில் காலாவதி ஆகிவிட்டது போல் அச்சுவையிலிருந்து, ரஜினி படமென்றால் முதல் காட்சி டிக்கெட்டை எப்படியாவது வாங்கி என்னை கூட்டிச்சென்று அவரின் ஸ்டைலை ரசிக்க வைத்தீர்கள் இன்றோ அந்த வி

திம்மு திம்மு | பாடல்

ஒரு பாடல் எப்போ கேட்டாலும் இமையோரம் கண்ணீர் - ன்ற சூழ்நிலைக்கு கூட்டிட்டு போகும்ல அப்படி ஒரு பாட்டு தான் இது, அதுக்கு காரணம் என்னோட ஆசான் நா. முத்துக்குமார் - ன்னு எங்கனாலும் எப்போனாலும் என்னால சொல்ல முடியும், உடம்பெல்லாம் சிலிர்க்கும் இன்னும் எத்தனை வருஷம் கழிச்சு கேட்டாலும்,ரொம்பவே சாஃப்ட் ஆன ஒரு ட்யூன் கொடுத்த ஹாரிஸ் க்கு என் முதல் நன்றி, முத்துக்குமாரின் வரிகளுக்கு ஹாரிஸ் எப்போதும் தன் பாடல்களில் ராகத்திற்கு மெனக்கெடுவார் என்பது தெரிந்தது தான் என்றாலும் இயக்குநர் பிரபு தேவா இந்த படம் கமிட் ஆகும் போதே ஹாரிஸ் தான் என் படத்திற்கு இசை அமைக்க வேண்டும் என வேண்டி கேட்டுக்கொண்டார்,படத்தின் அத்தனை பாடல்களுக்கும் பிளாக்பஸ்டர் என்றாலும் இந்த பாடல் எப்போதும் தனி ஈர்ப்பை எனக்கு கொடுத்துக்கொண்டே இருக்கும், இரவுகள் என்பது பிரிந்து போன காதலனுக்கு துயர் நிறைந்த இருளாக இருக்கின்றது அதே நேரத்தில் பிரிந்து போன காதலியை நினைத்து பக்கம் பக்கமாக "இவன் இரவுகளில் அவள்" என்று கவிதையும் இரவில் தீட்டும் படலமும் ஒரு காதலனின் வாழ்வில் இருக்கின்றது, இந்த இரண்டு சூழ்நிலைகளிலும் இசை ஒரு அங்கமாக அக்காதலனுக

Love You Dada !!

எப்பவுமே தாதாவ பொறுத்தவர எனக்கு எமோஷனல் கனெக்ட் தான், So, இதுவரைக்கும் யார்கிட்டயும் சொல்லாத ஒரு விஷயத்த இங்க எழுதுறேன், இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட என் வாழ்க்கையில் நடந்த ஒரு பேரிடர் சம்பவம், அன்று " ஜூலை 8, 2004 " நான் ஏழாம் வகுப்பு படித்து வந்தேன் அது ஒரு வியாழக்கிழமை தினம், சச்சின் அவுட் ஆனா டிவிய ஆஃப் செய்யுற காலம் அது, ஆனா அப்போவே தாதா அவுட் ஆனா தான் அந்த இடத்தைவிட்டு அழுதுட்டே எந்திருச்சு போவேன் நான், ஒரு வேள அன்னக்கி தாதா பட்டைய கெளப்புனா அன்னக்கி எங்க ஏரியால என்னோட சவுண்ட் தான் அதிகமா இருக்கும், ஒரு கர்வம் இருக்கும் எல்லாரும் சச்சின் சச்சின் ன்னு ஒரு பாதையில போனப்போ நான் மட்டும் தாதா தாதா - ன்னு சுத்திட்டு இருப்பேன் அப்போ, அன்னைக்கும் அப்படி தான், வழக்கம் போல தாதா பிறந்தநாள்ன்னு ஸ்கூல்ல பசங்க கிட்ட அவர பத்தி பேசிட்டு லஞ்ச் பிரேக்ல ஸ்கூல் பக்கத்துல இருக்க நண்பன் வீட்டுல கிரிக்கெட் விளையாண்டுட்டு ஸ்கூல் கிட்ட இருக்க கடையில சாயங்காலம் போடுற சூடான புரோட்டா எல்லாம் தாதா பிறந்தநாள் காக பசங்களுக்கு எல்லாம் டிரீட் வச்சுட்டு ஆடி பாடி கொண்டாடிட்டு இருந்த

அவன் தான் நா.முத்துக்குமார் !!

கதையை வெளியில் தேடாதே உனக்குள் தேடு, - இயக்குநர் பாலு மஹேந்திரா ஒரு படத்திற்கோ அல்லது ஒரு சிறுகதைக்கோ ஒரு கதையை நான் தேர்ந்தெடுத்து எழுதும் போது எனக்கு நடந்த கதைக்கு தான் முதலாக என் கவனம் செல்லும், ஏனெனில் ஒருவனின் வாழ்க்கை என்னும் ஆழிப்பெருங்கடலில் வலை வீசி மீன் சிக்குமா என பார்த்தால் பல வகையான மீன்கள் சிக்கும் மீனவனின் வலைக்குள், சில மீன்கள் விலை மதிக்க முடியாத அளவு உயர் ரகத்தில் இருக்கும், பல மீன்கள் தவிர்க்க முடியாத சேதாரமாக வலைக்குள் வந்து சிக்கியிருக்கும்,இன்னும் சில மீன்கள் இருக்கும் அது தான் ஒருவனின் தேடல்,வலி,பிரிவு போன்றவற்றை எல்லாம் உள்ளடக்கிய மீன்,அது தான் நமக்கு கதை எழுத உதவும், பாலு மஹேந்திராவை ரசிக்கும் ஒரு ரசிகன் நான்,நானே அவருடைய கருத்துக்கு ஒரு மீன் இனத்தை வைத்து ஒருவனின் வாழ்க்கையை எடுத்துக்காட்டாக சொல்லும் போது நான்கு வருடம் அவருடன் பணியாற்றி அவர் கைகளில் தவழ்ந்து அவருடைய எல்லாமுமாய் உடன் இருந்த ஒருவர் எந்த அளவு முறையான எடுத்துக்காட்டை சொல்லி நாம் வாசிப்பதற்காக எத்தனை பாடல்களையும் கதைகளையும் சினிமாவில் எழுதியிருப்பார், எழுத்தாளர் கார்த்திக் நேத்தா ஒரு நேர்காணலில் கூ

அவள் !!

தினமும் காலை 6 மணிக்கு எந்திரிந்து 7:45க்கு வீட்டில் இருந்து புறப்பட்டால் பேருந்து நிலையத்திற்கு நடந்து செல்ல அரை மணி நேரம் ஆகும்,சரியாக 8:15 - க்கு பேருந்து நிலையத்திற்கு சென்றவனுடன் அங்கே இருக்கும் ஒரு இனிப்பு பலகார கடை வாசலில் கால் வலிக்க அவளின் வருகைக்காக அவன் தவமிருக்கிறான், 8:45 - க்கு வரும் அவளுக்காக 8:15 - இல் இருந்து அவளை ஏற்றி செல்லும் பேருந்து பக்கத்திலேயே அவன் தன் காலை காட்சியை தொடங்குகின்றான், 8:45 - க்கு அவள் வருகிறாள் அவளுடன் அவள் கல்லூரி சீனியரும் வருகிறாள்,இவர்கள் இருவரின் காதல் அந்த சீனியர் பெண்ணுக்கு தெரியாது, அருகே நடந்து வரும் அந்த சீனியர் பெண்ணை தாண்டி அவள் பார்வை இவன் மீது ஒரு நொடி கடந்து செல்கிறது, பேருந்து கிளம்ப ஐந்து நிமிட இடைவெளியில் அவ்வப்போது மூன்று அல்லது நான்கு முறை அவளின் காந்தவிசை பார்வை அவனை சாதுர்யமாக ஈர்த்து செல்கிறது, அவள் பேருந்து சென்றவுடன் தன் கல்லூரிக்கு செல்லும் பேருந்தின் ஜன்னலோர சீட்டில் ஏறி அமர்ந்து யுவன் சங்கர் ராஜா பாடல்களை ஒலிக்க விட்டு ஹெட்செட்டை காதில் மாட்டுகிறான், சாரதி அவர்களின் வரியில் யுவன் பாடிய பாடல் இவனுக்காக எழுதியது போலவே தன்

Let's Go !!

யாருக்கும் சிறு தீங்கும் நினைக்காதவன் அவன் மனதளவிலும் காயப்படுத்தக்கூடாது என நித்தமும்  நினைப்பவன் அவன் பணம் பெயர் புகழ் எதற்கும் ஆசைப்படாத நிராயுதபாணி அவன் அன்பையும் கருணையையும் மட்டுமே பிறருக்கு தானம் செய்பவன் அவன் புள்ளின் நுனியில் இருக்கும் நீர்த்துளிக்கு கூட துரோகம் விளைவிக்காதவன் அவன் இசையில் மூழ்கி பாடல்களின் வரிகளுக்கு தன்னை பொருத்திப்பார்க்கும் ரசிகன் அவன் தேன் மிட்டாய்கள் வாங்கி கொடுத்து குழந்தைகளின் சிரிப்பை கவரும் கள்வன் அவன் ஜோடியாய் சுற்றி திரியும் காதலர்களை பார்த்து கள்ளங்கபடமில்லா சிரிப்பவன் அவன் காண்கின்ற யாவையும் எழுத்துக்களாக உருவம் கொடுக்கும் திறன் உள்ளவன் அவன் ரோஜாவின் மொட்டுக்களை விட அதன் முட்களின் மேல் காதல் கொள்பவன் அவன் அப்பாவின் மிதிவண்டி பெடலை சுற்றி பார்த்து காலத்தை கடந்து வந்தவன் அவன் அம்மா குளிப்பாட்டும் சீகைக்காய் குளியலை நினைத்து பார்ப்பவன் அவன் உடன் இருந்து குழி பரித்த தோழனையும் பெரிதாக கண்டுகொள்ளாமல் விட்டவன் அவன் வறுமையான காலத்தில் உணவளித்த கல்லூரி நண்பனை போற்றுபவன் அவன் புத்தக வாசிப்பை நேசிக்கும் அருமையான தமிழ் வாசிப்பாளன் அவன் பிறரை எழுதுங்கள் என சொ

Final Ride of Dil Bechara !!

Starting to Ending வர Scene by Scene எழுதிருக்கேன், படம் பார்த்தவர்கள் மட்டும் படிக்கவும், Manny - க்கு Osteosarcoma Jagdhish Pandey - க்கு Glaucoma Kizie Basu - க்கு Thyroid Cancer நம்ம தலைவர் ரஜினிகாந்த் சிவாஜி படத்துல சொன்ன வசனம் தான், சாகுற நாள் தெரிஞ்சு போச்சுன்னா வாழுற நாள் நரகமாகிடும், So,இருக்க மிச்சமான நாட்கள்ல ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுகிட்டு அவங்க உறவுக்கு உள்ள இருக்க சின்ன சின்ன அழகியல் சார்ந்த ரசனையுடைய விஷயங்களை வாழ்ந்து பாத்துட்டாலே ஒரு மோட்சம் கிடைச்சுரும், ஓ, அப்போ இது தான் கடவுள் நமக்கு வழி காமித்த கடைசி ஒளி போல் என்று, நீங்க ரொம்ப விரும்புன ஒருத்தங்க இப்போ உயிரோட இல்லன்னு நீங்க உணரும் போது அந்த நொடி உங்க முகத்துல ஒரு சிரிப்பு வருமா..? வரும் !! அவங்க உங்க கண்ணுக்கு முன்னாடி உங்ககூட இருந்த அழகான நாட்கள பிரதிபலிச்சு உங்களுக்கு காட்டும் போது, கள்ளங்கபடமில்லா சிரிப்புடன் கண்களில் சிறு துளி கண்ணீருடன் இழந்தவரின் நினைப்பு உங்களுக்கு வருமாயின், முதன் முதலாக எதர்ச்சையாக நாங்கள் சந்தித்தோம் அவனின் Irritate செய்யும் சிரிப்புடன், பிறகு நாம் இணைந்து கை கோர்த்து நடனமாடினோம் என் சம்

Parotta With Sunday !!

என்னால முடியவே முடியாதுன்னு உலகம் ஒரு விஷயத்த என்கிட்ட இருந்து ஒதுக்கிவைக்குறப்போ அது எனக்கு கிடைக்க நான் முயற்சி செஞ்சுட்டே தான் இருப்பேன் கடைசி வரைக்கும் என்ன ஆனாலும், அவளோ ஈஸியா எதும் கிடைச்சுடாதுல அப்படி கிடைச்சுட்டா அதோட மதிப்பு நமக்கு எப்பவும் தெரியாமையே போயிடும், So, I Won't Give up Sir !! முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் முயற்சியானது ஒருவனது செல்வத்தை வளர்க்கும்,முயற்சி செய்யாமல் இருத்தல் ஒருவனை வறுமையில் சேர்த்துவிடும், தோற்றாலும் முயற்சி செய்தே தோற்பேன் ஒரு வேலை சிறு வெற்றி என்பது எனக்கு அரிதாக நித்தம் கிடைக்குமாயின்..? ஆனாலும் முயற்சி தொடரும்..!! : ' ) ❤️

My Aspects | God

கட்டுப்படுத்த முடியாத கட்டுக்கடங்காகோபம் கூட சாந்த நிலை அடைகிறது கண்ணீர் விட்டு அழும் போது..!!

Idealogy About " Muni " !!

என்ன வேண்டும் என்பதெல்லாம் அவனுக்கு தெரியும் அவனை மிஞ்சி எதுவும் இல்லை இவனுக்கு புரியும், இப்படி கடவுளின் நிலை அடைய முயற்சி செய்யும் ஒருவனின் தன்மையை குறிப்பிடும் படி கடவுள் பற்றிய புரிதல் இது தான் கடவுள் என்பவன் இவ்வாறு தான் நமக்குள் பிரதிபலிக்கிறான் என்று கடவுள் சார்ந்த வரிகளில் தான் பாடல் அமைந்திருக்கும், அன்பு பொழியும் நெஞ்சின் உறவு கடவுள் ஆகுமே - என்று ஒருவரிடம் அன்பு செய்தாலே போதும் நம்முடன் இருப்போருக்கு நம் உறவு கூட ஒரு கடவுள் போலத்தான் தெரியும் என்பதை கூட பாடலின் ஒரு வரியில் சொல்லி இருப்பார்கள், வேண்டியதை தருபவரும் அவன் தான் அன்றோ வேண்டவைத்து பார்ப்பதுவும் அவன் தான் அன்றோ, என கடவுள் பற்றிய தெளிவான விஷயத்தை இந்த வரியில் சொல்லியிருப்பார்கள், நமக்கு ஒரு விஷயம் வெற்றிகரமாக நடக்க வேண்டும்,செய்யும் தொழில் சிறப்பாக நடக்க வேண்டும்,பண வரவு அதிகரிக்க வேண்டும் என தினந்தோறும் வீட்டின் பூஜை அறையிலும் கோவில்களுக்கும் சென்று கடவுளிடம் தங்கள் வேண்டுதலை கூறி பிரார்த்தனை செய்கிறோம்,அதே நேரத்தில் நமக்கான தேவை என்பது கடவுளாகிய அவனுக்கு தெரிந்து இருந்தாலும் அதை நீ மனம் உருகி என்னை வணங்கி உனது தேவை

Dream Big !!

என் அளவு இங்க யாருமே ஆசைப்படமாட்டாங்கன்னு என்னால உறுதியா சொல்ல முடியும், ஏன்னா என்னோட ஆசைகளும் நான் காணும் கனவுகளும் அப்படி ஆனா இங்க ஆசைப்படுற எல்லாமே கிடைச்சுட்டா அவன அதிர்ஷ்டசாலின்னு சொல்லுவோம், அதிர்ஷ்டசாலிகள் ரொம்பவே கம்மின்னு நினைக்குறேன் என்ன சுத்தி,அதே நேரத்துல அதிர்ஷ்டசாலி ஆகணும்னு நான் ஒரு போதும் ஆசைப்படல, கோடிக்கணக்குல கனவு காணும் போது ஒன்னு ரெண்டு கனவாவது நிறைவேறும் என்ற சாதாரண மனுஷனுக்கு இருக்கும் ஒரு நப்பாசை தான் எனக்கும், ஆசைப்படுவது எப்போதும் அதிகமாக இருக்கும் போது வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் என்றேனும் ஒரு நாள் ஆசைப்பட்டது நடந்து விடாதா என்ற ஆவலுக்கு தான் மனசு ஏங்கி தவிக்கிறது, பெருசா ஆசைப்படுறப்போ அதை நிறைவேற்ற நான் இன்னும் சரியான பாதைக்கு இயக்கப்படலன்னு தான் இப்போ வர எல்லா விஷயத்துலயும் தோத்துட்டே இருக்கேன்னு நினைக்குறேன்,  என்ன போல நிறைய பேர் இருப்பாங்க ஆனா,நான் உங்க எல்லாருக்கும் ஸ்பெஷல், : ' ) 🤐❤️

கடவுள் பற்றிய புரிதல்

கடவுள பத்தி எல்லாருக்கும் ஒவ்வொரு புரிதல் இருக்கும் என்னோட புரிதல்ல இருந்து ஒன்னு சொல்றேன், எய்ன்ஸ்டன்க்கு கடவுள் நம்பிக்கை இருக்கா இல்லையான்னு கேட்டப்போ அவர் ஒரு கேள்வி கேட்டாரு..? ஒரு பொருள உருவாக்குனவர நாம என்னனு சொல்றோம்..? " CREATOR " அதே மாதிரி Creation - ன்னு ஒன்னு இருந்தா Creator - ன்னு ஒருத்தர் இருப்பார்ல அதான் என்ன பொறுத்தவரைக்கும் கடவுள்ன்னு சொன்னாராம், அதே நேரத்துல இந்த Galaxy - ன்றது ஒரு Created அதை Create செஞ்சது கடவுள்,எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்குன்னு சொல்லிருப்பாரு, அவர் சொன்ன மாதிரி நாமலும் இந்த மாதிரி வழில தான் ஆன்மீகத்த கொண்டு போகனுமே தவிர மூட நம்பிக்கை மூலமா அல்ல, சில பேரு சிவனை சிந்தையில் வைனு சொல்றாங்க அவர் நெற்றிக்கண் போல, அதே நேரத்துல யோகால சொல்லுவாங்க ஒரு விஷயத்தை நீங்க உன்னிப்பா யோசிக்கும் போது உங்கள் கருத்தை இரு கண்கள் நடுவில் வைக்கும் போது ஒரு அமைதி தோன்றும் மனம் தெளிவடையும் இதைத்தான் Deep Breathe in Breathe Out Meditation - ன்னு சொல்லுறாங்க, அப்போ இவங்க சொல்ற மாதிரி இந்த அமைதிக்கும் கடவுளுக்கும் ஒரு பந்தம் இருக்கு சரி தானே..? அறிவியில் ரீதியா E