Skip to main content

அவள் !!

தினமும் காலை 6 மணிக்கு எந்திரிந்து
7:45க்கு வீட்டில் இருந்து புறப்பட்டால்
பேருந்து நிலையத்திற்கு நடந்து செல்ல
அரை மணி நேரம் ஆகும்,சரியாக 8:15 - க்கு
பேருந்து நிலையத்திற்கு சென்றவனுடன்
அங்கே இருக்கும் ஒரு இனிப்பு பலகார
கடை வாசலில் கால் வலிக்க அவளின்
வருகைக்காக அவன் தவமிருக்கிறான்,

8:45 - க்கு வரும் அவளுக்காக 8:15 - இல்
இருந்து அவளை ஏற்றி செல்லும்
பேருந்து பக்கத்திலேயே அவன் தன்
காலை காட்சியை தொடங்குகின்றான்,

8:45 - க்கு அவள் வருகிறாள்
அவளுடன் அவள் கல்லூரி சீனியரும்
வருகிறாள்,இவர்கள் இருவரின் காதல்
அந்த சீனியர் பெண்ணுக்கு தெரியாது,
அருகே நடந்து வரும் அந்த சீனியர்
பெண்ணை தாண்டி அவள் பார்வை
இவன் மீது ஒரு நொடி கடந்து செல்கிறது,

பேருந்து கிளம்ப ஐந்து நிமிட
இடைவெளியில் அவ்வப்போது
மூன்று அல்லது நான்கு முறை
அவளின் காந்தவிசை பார்வை
அவனை சாதுர்யமாக ஈர்த்து செல்கிறது,

அவள் பேருந்து சென்றவுடன் தன்
கல்லூரிக்கு செல்லும் பேருந்தின்
ஜன்னலோர சீட்டில் ஏறி அமர்ந்து
யுவன் சங்கர் ராஜா பாடல்களை ஒலிக்க
விட்டு ஹெட்செட்டை காதில் மாட்டுகிறான்,

சாரதி அவர்களின் வரியில் யுவன் பாடிய
பாடல் இவனுக்காக எழுதியது போலவே
தன்னை தானே ஜீவித்துக்கொள்வான்,

பேருந்தின் புழுதியும்
பூக்களாய் மாறுதே
உற்சாகம் மேலும் மேலும் ஏற
மண் ரோடும் மேகமாக மாற,

பாடல்களின் வரியை ரசிக்கும்
தருவாயில்  அவ்வப்போது நடத்துநர்,

சிம்மக்கல் இறங்குறவங்க இறங்குங்க,
எப்பா ஏய் படில  நிக்காம மேல ஏறுங்கப்பா
ஒரு தடவ சொன்னா இந்த காலேஜ் பசங்க
கேக்கவே மாட்டிராங்க ச்சை,

நடத்துநரின் வசை பாடல் கேட்காதவனாய்
அவளை பார்த்த அந்த ஐந்து நிமிடத்தில்
அவள் காதோரம் ஆடிய லோலாக்கு தோடில்
இருந்து காதோரம் அவள் விரல் ஒதுக்கும்
கூந்தல் அடர்த்தி வரை தான் கவனித்த
அனைத்தையும் எண்ணி பெருங்களிப்பில்
அவன் தன்னை ஒரு கவிஞன் போல்
நினைத்துக்க்கண்டு மனதுக்குள்
நா.முத்துக்குமாராக உருவெடுத்து
அவளை பற்றி தன் மனதில்
எழுத்துக்களிலேயே காதல் செய்வான்,

காதோர லோலாக்கு அழகு
கதைக்காத மொழி அழகு
கண்ணில் தினமும் பேசுவது அழகு
கால் கொலுசின் முத்துக்கள் அழகு
காலை வேளையின் சூரியன் அழகு
காத்திருந்து கிளம்பும் பேருந்து அழகு
காந்தக்குரலில் பூ விற்கும் பெண் அழகு
கள்ள விழிகளில் நீ என்னை பார்க்கும்
காட்சி யாவும் என் கண்ணுக்கு பேரழகு,

எம்பது பேர் வரையில் நெருக்கி கொண்டு
செல்லும் அரசு பேருந்தில் எனக்கு மட்டும்
கவிதை தோன்றுவது சிறப்பிக்கத்தக்க
விஷயம் தானே,

காதலில் விழுந்து விட்டால்
அவள் பற்றிய குறிப்பேடுகளையும்
ஆடை ஆவணங்களையும் வைத்தே
கிறுக்கி கிறுக்கி கண்டதை எழுதியாவது
அவன் ஒரு கவிஞன் என தன்னைத்தானே
மெருகேற்றிக்கொள்வான் தானே,

குட்டி பயணத்திற்கு பிறகு
கல்லூரி வந்தடைந்தான்,

காலச்சக்கரம் சுற்றியதில்
மூன்று வருடங்களும் பிரதி ஞாயிரு
மற்றும் விடுமுறை தினங்களை தவிர்த்து
மற்ற அனைத்து காலைப்பொழுதும்
இவ்வாறாகவே அவனுக்கு அமைந்தது
அவள் காதலுடன்,

அவன் பார்வையில்
என்ற டைரியில் இருந்து : ) ' ❤️

Comments

Popular posts from this blog

The One - அந்த ஒருவன் 💚

💚 நிராகரிக்கப்பட்ட ஒருவன் புறக்கணிக்கப்பட்ட ஒருவன் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவன் அவமானப்படுத்தப்பட்ட ஒருவன், "வர சொல்லு அந்த ஒருத்தன..?" பல போர் படை இருக்கலாம் எதிர்பார்த்தது இவனத்தான் அந்தொருவன் வந்திருக்கான்டே..!!! "Temba" என்றால் "Hope" என்று பொருள், ஒட்டு மொத்த ஆஃப்ரிக்க மக்களின் நம்பிக்கை ஒளியாகவும் அவர்களின் ஏக்கத்திற்கு விடையாகவும் இந்த "டெம்பா" ஒரு வாழ்வியலை இங்கே புதுப்பித்து இருக்கிறான், எத்தனை அவமானங்கள் தான் 'இந்த ஒருவனுக்கு' நிகழ்ந்திருக்கிறது, உயரம் ரீதியாகவும்,நிற ரீதியாகவும் என இவன் கண்ட அவமானங்கள் அனைத்தையும் தாண்டி இன்று ஒரு இன மக்களையே இன்று இவன் தலை நிமிர செய்திருக்கிறான், எங்க கேங்க்ல ஒரு ரெண்டு பேர் மொரட்டு தனமான தென்னாப்பிரிக்கா ஃபேன்,நானும் என்னோட இன்னொரு முகநூல் நண்பரும் (Anjali Raga Jammy), எப்படி "கொம்பன்" யானைய பார்த்து காடே ஆடி போகுமோ அது மாதிரி நாங்க ரெண்டு பேரும் எங்க தலைவன் டெம்பா பாவுமா - வ "டெம்பன்" ன்னு செல்லமா தான் கூப்பிடுவோம், இந்த டெம்பனின் கைகள் ஒரு ந...

நிகரில்லாதவள்

அன்று ஊரெங்கும் நல்ல மழை வெளுத்து வாங்கிகொண்டிருந்தது, பெரு மழைக்கு ஒதுங்குவதற்காக அவள் அங்கே சாலையோரம் இருந்த மரத்தின் அடியில் சென்று நின்று கொண்டாள், அவளுக்கு அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் சூழ அவள் ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியை போல் அக்குழந்தைகளுக்கு நடுவில் நின்று அவர்கள் மழையில் செய்யும் சேட்டையை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள், இந்த மழை நிற்பதற்குள் இவள் யார்,இவள் பெயர் என்ன, இவள் சார்ந்து இருப்பவைகள் என சின்ன கதையுடன் ஒரு முன்னோட்டம் பார்ப்போம், இவளுக்கான அறிமுகம் இல்லாததால் இவளுக்கு இவளாகவே சூடிக்கொண்ட பெயர் இது, ஆம் இவளுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஆசிரமத்தில் தான் வளர்ந்து வருகிறாள்,அங்கிருப்பவர்கள் "குட்டி" என்று கூப்பிடுவார்கள் அதுவே இவளது பெயராகவும் மாறியது, பின் பள்ளி முடிந்து யாரோ பெயர் தெரியாத ஸ்பான்ஸர்ஷிப் மூலம் கல்லூரி படிப்பை முடித்து நல்ல ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்த பின் தான் இவளுக்கு ஒன்று புரிந்தது, நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள சரியான பெயர் கூட நமக்கு இல்லை என்று, எதிர்நீச்சல் படத்தில் வருவது போல் தன் அடையாளத்தை இச்சமூகத்தில் பதிக்...

குடைக்குள் மழை

✨️💚 ரீனா : ஹே ஆர் யூ தேர்..? விக்ரம் : இருக்கேன் ரீனா, என்ன திடீர்னு மெசேஜ், முக்கியமா எதுவும் சொல்லணுமா..? ரீனா : ஹே, அதெல்லாம் இல்ல, ஏன் ஒர்க்ல இருக்கியா..? விக்ரம் : இல்ல, வீட்டுக்கு வந்துட்டேன், Earlier Appointments So, முடிஞ்சு பா! ரீனா : ஒகே, கொஞ்சம் மனசு சரி இல்ல அதான் உன்கிட்ட பேசலாமேன்னு கால் பண்ணேன்..? விக்ரம் : என்ன ஆச்சு..? ஆர் யூ ஓகே..? சொல்லு ரீனா Any Issue..? ரீனா : ஹே,Just Mood Swing ஒன்லி! நீ ஃபிரீன்னா சொல்லு Let's Walk Together in Beach! உனக்கு தெரியும்ல எனக்கு பீச் வாக்ன்னா ரொம்ப பிடிக்கும், So நீ ஃபிரீன்னா வர முடியுமா விக்ரம்..? விக்ரம் : சரி, ஈவினிங் 6 மணிக்கு பீச்ல நம்ம வழக்கமா மீட் பண்ணுற அந்த பட்டர் பன் கடைக்கு வந்துரு ரீனா, நானும் வந்துடுறேன், ரீனா : தேங்க்ஸ் விக்ரம்! விக்ரம் : தேங்க்ஸா..? No More Formalities! உன்னோட தேங்க்ஸ்ல நான் பூரிச்சு போய்ட்டேன்,சிரிப்பு காட்டாம வா ரீனா! ரீனா : ஹ்ம்ம் டா! * இடம் : கடற்கரை * நேரம் : மாலை 6 மணி விக்ரம் : ஹே! என்ன ஆச்சு ரீனா திடீர்னு..? ரீனா : அதெல்லாம் ஒன்னும் இல்லடா, Please Give Sometime நானே சொல்லுறேன் போ...