*💚 " சதையை மீறும் மூன்றாம் பாலினம் " மயக்கம் என்ன படத்துல செல்வராகவன் ஒரு அழகான வசனம் எழுதியிருப்பாரு, கிரியேட்டிவிட்டி சார் கிரியேட்டிவிட்டி கடவுள் கொடுக்கணும், - ன்னு அது மாதிரி தான் பரதநாட்டியம் ஆடுறவங்க ஒவ்வொரு அசைவுலையும் அபிநயம் பிடிப்பாங்க அது ஒரு கலை - ல சேரும், அந்த கலை எல்லாருக்கும் ஈஸியா வந்துறாது,ஒவ்வொரு அசைவுலையும் அபிநயம் பிடிச்சு ஒரு நாள் ஆயிரம் பேர் மத்தியில அரங்கேற்றம் பண்ணுனா தான் அவங்க கலைக்கு பெருமை, ஆனா அவங்களோட அபிநயம் பிடிக்குற உடல் மொழி அவங்களோட எல்லா செயல்களிலும் அட்டை பூச்சி போல அவங்க கூடயே ஒட்டிக்கிரும்,அவர்கள் தில்லை அம்பல நடராஜன் வழியில் வந்த ஒரு ஈசனின் சீடர்கள் போன்றவர்கள் அதே போலத்தான், நம்ம கூட ஒருத்தன் படிப்பான் பிறப்பாலோ அல்லது மரபு வழில ஏற்படுற மாற்றத்தாலையோ அவனோட உடல் மொழியில சில மாற்றங்கள் ஏற்படும், ஆனா அவனோட விஷயத்துல அவன் தெளிவா இருப்பான் தனக்கு எது தேவைன்னு அவனுக்கு தெரியும், நிறைய கேலியும் கிண்டலும் தினம் தினம் பார்த்து ஒரு நாள் வாழ்க்கை வெறுப்பாக அவனுக்கு மாறும், * இங்க பாருடா "9" வந்துட்டா...
வாசிப்பை நேசிப்போம்