❤️ இரவுக்கு மேல் அப்படி என்ன ஒரு நெருக்கம்..? அப்படி என்ன ஒரு பெருங்காதல்..? இரவு பத்தி சொல்லணும்ன்னா ஓராயிரம் இல்ல ஒரு லட்சம் அதுக்கும் மேல இன்னும் கணக்கில் அடங்காத பதிவுகள் போட்டு இரவு பத்தி எழுதிக்கிட்டே இருக்கலாம்,அந்த அளவு இரவு என்பது ஒரு நிலையானது, நிலையான ஒன்ன தான் மனசு கூட தேடி போகும்,இரவு பற்றிய என்னுடைய புரிதல் இது,சிலருக்கு இதில் மாற்று கருத்து கூட இருக்கலாம்,ஆனால் இரவு எல்லோருக்குமான ஒன்று. பொதுவா இரவானது ரொம்ப தனிமை உணர்வ கொடுக்கும், உலகமே இரவுல அமைதியா இருக்கப்போ மனுஷங்களுக்குள்ள உரையாடல் பெருசா இருக்காது, உரையாடல் குறைந்தவுடன் கிடைக்கும் அமைதி இரவை ஆட்கொள்கிறது, அந்த டைம்ல தான் மனுஷன் தூங்க போறான்,காலைல இருந்து ஆஃபீஸ்ல மேனேஜர்,சக ஊழியர், இன்னும் பல தொழிலில் பலர் என காலை முதல் மாலை வரை பேசுவது தான் நமது மூலதனம்ன்னு சொல்லலாம்,ஆனா இரவு நேரத்துல யாருக்கும் பதில் சொல்ல வேண்டியது இருக்காது, உங்க மனச அமைதி படுத்தலாம், அந்த ஒரு எட்டு மணி நேரம் உங்கள நீங்க ஒரு நிலை படுத்தலாம் லைக் மனசுல கவலையே இருந்தாலும் தூக்கமே வராம சிரமப்பட்டாலும் கண்ண மூடிப்படுத்துடணும், தூக்கம் வருது வரல ஆனா...
❤️ இது என்ன ஜஸ்ட் ஒரு காஃபி தானே..? பட், இது ஒரு ஜஸ்ட் ஒரு காஃபி தானேன்னு என்னால ஈசியா கடந்து போக முடியாது, ஏன்னா,நான் ரொம்ப Down ஆ இருந்தாலோ ரொம்ப சந்தோஷமா இருந்தாலோ ரொம்ப உடஞ்சு போய் இருந்தாலோ எல்லா சூழ்நிலைக்கும் காஃபி என்கூட இருந்துருக்கு லைக் சில பேருக்கு Liquor இருக்க மாதிரி, பொதுவா காஃபி கசக்கும்ன்னு நிறைய பேர் குடிக்கமாட்டாங்க, லைக் விக்ரம் வேதா படத்துல மாதவன் கிட்ட ஒருத்தர் சொல்லுவாரு விண்டேஜ் புல்லட் டுப்பு டுப்பு ன்னு சவுண்டு கேக்கும் சார்ன்னு,மாதவன் எனக்கு அந்த டுப்பு டுப்பு சவுண்ட் தான் வேணும்ன்னு சொல்லுவாரு, That's Exactly Same For Myself too,அந்த கசப்பு தான் எனக்கு தேவைப்படுற ஒன்னு,Coffee Without Sugar or Black Coffee Without Sugar இது ரெண்டோட Flavour லயும் அந்த கசப்பு தன்மை தான் அதோட பீக் ஸ்பெஷல், லைஃப்ல நிறைய கசப்பான அனுபவங்கள கடந்து வரும் போது காஃபில இருக்க கசப்புதன்மைன்றது ஒரு Bitter Sweet ஆ எனக்கு தெரியுது, என்ன பொறுத்தவர பார்ட்டி பண்ணலாமா..? ன்ற ஸ்டேட்மெண்ட் விட காஃபி குடிக்க போலாமா..? ன்றது Sounds Better ன்னு எனக்கு ஃபீல் ஆகும், அதுவும் ஸ்ட்ராங்கான காஃபியோட ஸ்...