இங்க நம்ம முழுமைன்னு நினைச்சுட்டு
இருக்குற எதுவுமே முழுமை கிடையாது
ஒரு உதாரணத்துக்கு சொல்லணும்னா
இந்த படத்துக்கான ஒரு கதையை நான்
முழுமையாக எழுதி முடித்து விட்டேன்
அப்படின்னு அந்த இயக்குநர் தான் எழுதி
முடித்த கதைக்கான டைரியை தன்
மேஜையில் வைத்து விட்டு தூங்க சென்றுவிட்டார்,
அடுத்த நாள் காலை அவருக்கு ஒரு ஃபோன்
வருகிறது சில தனிப்பட்ட காரணங்களுக்காக
சொந்த ஊருக்கு வர வேண்டி அந்த ஃபோனில்
தகவல் வருகிறது,கிளம்பும் அவசரத்தில் இவர்
தன்னுடைய கதை எழுதும் டைரியை வீட்டிலேயே
வைத்து விட்டு சென்று விட்டார்,பிறகு ஒரு வாரம்
கழித்து வந்து ஊருக்கு சென்று போன வேலையை
முடித்து விட்டு தன் நண்பர்களுடன் பல
வருடங்களுக்கு பிறகு ஒன்றாக கூடி உட்கார்ந்து
அரட்டை அடித்து பேசி பொழுதை போக்கிய அந்த
ஏழு நாட்கள் தனக்கு கொடுத்த உற்சாகத்துடன்
முழு புத்துணர்ச்சியுடன் தன்னுடைய டைரியை
எடுத்து தான் முழுமை அடைந்தது என்று முடித்து
வைத்த அக்கதையை அடுத்த வாரம் கால்சீட்
கிடைத்திருக்கும் அந்த பெரிய ஹீரோவிற்கு
சொல்லி ஆக வேண்டும் என்ற முனைப்புடன்
ஒரு முறை தான் எழுதிய கதையை வாசிக்கிறார்,
பல இடங்களில் அவர் திரைக்கதையில் செய்த
சின்ன சின்ன தவறுகள்,கதைக்கு ஒத்து போகாத
காட்சிகள் என பல தென்பட்டன,அங்கிருந்து
நிறைய மாற்றங்களை மீண்டும் செய்ய
ஆரம்பித்தார் அக்கதைக்காக நிறைய
அடிப்படை தகவல்களை திரட்டிய வண்ணம்,
இப்படித்தான் நம்ம லைஃப்பும்,நம்ம முழுமைன்னு
நினைக்குற எதுவுமே முழுமை கிடையாது,இன்று
முழுமைன்னு உங்களுக்கு தோணுச்சுனா ஒரு
பத்து வருஷம் கழிச்சு மீண்டும் அதை எடுத்து
பாருங்க,அங்க ஒரு சின்ன தவறு நம்ம சிந்தைக்கு
அறியாமல் நடந்திருக்கும்,
இவ்வளோதாங்க இப்படி முழுமைன்னு வரப்போ
எல்லாருமே Perfection - ஆ இருக்கணும்ன்னு
சில பேர் நினைக்குறாங்க,அது நம்மல படைச்சதா
சொல்லப்படுற கடவுள் கிட்டயே இல்ல,ஏன் கடவுள்
கிட்ட Perfection இல்லன்னு சொல்லுறேன்
பார்க்குறிங்களா,அப்படி Perfection - ஓட
மனிதர்களை படைத்திருந்தால் இங்க
திருநங்கைகளா யாரும் மாறிருக்க மாட்டாங்க,
அப்படி மாறுனவங்கள இந்த சமூதாயம் சில
தவறான கண்ணோட்டத்துல பார்க்காது,
கை கால் சரி வர இயங்க முடியாம,கண்
பார்வையின்றி இப்படி சொல்லிக்கொண்டே
போகலாம்,ஆக நம்மை படைத்ததாக
சொல்லப்படும் அக்கடவுளிடம் கூட Perfection
அதாவது முழுமை என்பது முழுமையாய் இல்லை,
Nobody is Perfect in this World
நீங்க நம்பலேன்னாலும் அதான் நெசம்
இந்த உலகம் முழுமை அற்றது முழுமை பெறாதது,
Comments
Post a Comment