Skip to main content

Posts

Showing posts from May 10, 2020

காதல் | ஊடல்

Yes, நான் உன்ன காதலிக்குறேன் காதல் மட்டுமா..?  ஹ்ம்ம், காதல் மட்டும்ன்னு சொல்லமுடியாது கொஞ்சம் ஊடலுடன்னு சேர்த்து சொல்லலாம், ஊடல் இல்லா காதல் இருக்கா என்ன..? காதல் செஞ்சா நம்ம உடம்புல ஊடுருவும் செல்கள் எல்லாமே நம்மல அறியாமையே ஒரு வித ஹீமோகுளோபின் சேன்ஜஸ நமக்கு பல நேரங்கள்ல கொடுக்கும், லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்ல சில நேரம் இருவருக்கும் உண்டான தேடல் அதிகமா இருக்கும், நீ ஒரு எல்லையின் விளிம்பிலும் நான் ஒரு முற்றத்தின் தொலைவிலும் எதிர் எதிர் திசையில் மாட்டிக்கொண்டோம், நானோ ஒவ்வொரு மணித்துளியும் என் காதல் வழியே உனக்கான சர்ப்ரைஸை கொடுக்க எண்ணினேன், உன் பாதங்கள் சென்ற திசை நோக்கி நான் வந்தேன் உனை தேடி உனை நாடி, உன் இடத்திற்கு வந்த பிறகு நானோ உனக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன், வா, உனக்கான ஒன்று இங்கே காத்துக்கொண்டிருக்கிறது, வானத்தை இதய வடிவில் மடித்து அதன் மீது செக்க சிவந்த சாயமூற்றி அதன் நீல நிறத்தில் கிஃப்ட் பாக் செய்து உன் கையில் கொடுக்க நான் ஆவலுடன் உனக்காக இங்கே வந்துள்ளேன், தேடலை நிறுத்திக்கொண்டு ஊடலின் வழி திளைப்போம் காற்றில் காதல் இதழ்களை வருடட்டும்,

அம்மா

அறம் சொல்லித்தந்து அழகாக எனை படைத்து அன்பில் அரவணைத்து அன்னை - யாகிய அன்பின் தமிழே ஆக்கம் கொடுத்து ஆருயிர் பல தந்து ஆலமர விழுதாய் நின்று ஆலயமாக விளங்கும் கடவுளே இறைவியாய் இருந்து இடம் பொருள் ஏவல் அறிந்து இளங்காற்று என்னுள் வீச இமைக்கா நொடியாய் இருந்தவளே ஈசனின் பார்வதியாக ஈன்றவளாகிய ஸ்தானத்தில் ஈழம் பல உன் வாழ்வில் கண்டு ஈன்றெடுத்த பொற்கொடியாளே உணவும் மருந்தும் தந்து உதிரம் சிந்தி உயிர் கொடுத்து உலக மேடையில் உயர்வு செய்து உண்மையான அன்பை காட்டியவளே ஊக்கங்கள் பல தந்து ஊழல் இல்லா தூய்மையான ஊஞ்சலில் எனை சமநிலையில் சீராட்டி ஊதையை ரசிக்க செய்தவளே எழில் கொஞ்சும் இரவு நேரத்தில் எடை கனமுடைய எனை சுமந்து எக்களிக்க எனக்கு உணவளித்து எதிர்நீச்சல் பல வாழ்வில் அடித்தவளே ஏலேலோ ராகம் பாடி ஏகப்பட்ட இன்னல்களுடன் ஏற்றங்கள் பல இடருடன் கண்டு ஏழு நாட்களும் வாரத்தில் உழைப்பவளே ஐந்தெழுத்து மந்திரமாக ஐம்பூதங்களின் பரப்பில் ஐப்பசி மாத மேன்மை தந்து ஐம்புலன் அடக்கி அகிலம் வென்றவளே ஒற்றை காலில் நின்று ஒரு கை வசம் பார்த்து ஒழுக்கத்தை கற்பித்து ஒளிர்வாக என் வாழ்வில் வந்தவளே ஓசை எ