Yes,
நான் உன்ன காதலிக்குறேன்
காதல் மட்டுமா..? ஹ்ம்ம்,
காதல் மட்டும்ன்னு சொல்லமுடியாது
கொஞ்சம் ஊடலுடன்னு சேர்த்து
சொல்லலாம்,
ஊடல் இல்லா காதல் இருக்கா என்ன..?
காதல் செஞ்சா நம்ம உடம்புல
ஊடுருவும் செல்கள் எல்லாமே
நம்மல அறியாமையே ஒரு வித
ஹீமோகுளோபின் சேன்ஜஸ
நமக்கு பல நேரங்கள்ல கொடுக்கும்,
லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்ல
சில நேரம் இருவருக்கும் உண்டான
தேடல் அதிகமா இருக்கும்,
நீ ஒரு எல்லையின் விளிம்பிலும்
நான் ஒரு முற்றத்தின் தொலைவிலும்
எதிர் எதிர் திசையில்
மாட்டிக்கொண்டோம்,
நானோ ஒவ்வொரு மணித்துளியும் என்
காதல் வழியே உனக்கான சர்ப்ரைஸை
கொடுக்க எண்ணினேன்,
உன் பாதங்கள் சென்ற திசை நோக்கி
நான் வந்தேன் உனை தேடி உனை நாடி,
உன் இடத்திற்கு வந்த பிறகு நானோ
உனக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன்,
வா,
உனக்கான ஒன்று
இங்கே காத்துக்கொண்டிருக்கிறது,
வானத்தை இதய வடிவில் மடித்து
அதன் மீது செக்க சிவந்த சாயமூற்றி
அதன் நீல நிறத்தில் கிஃப்ட் பாக் செய்து
உன் கையில் கொடுக்க நான் ஆவலுடன்
உனக்காக இங்கே வந்துள்ளேன்,
தேடலை நிறுத்திக்கொண்டு
ஊடலின் வழி திளைப்போம்
காற்றில் காதல் இதழ்களை வருடட்டும்,
யாசிக்கிறேன் ஒரு வாசகனாக
வந்து பக்கங்களை நிரப்புவாயாக
இது நீயும் நானும் எழுதும் ஓர் புத்தகம்,
காதலும் ஊடலும்
தமிழும் செய்யுளும்
இலக்கணமும் மாத்திரையும்
நீயும் நானும்,
- காதல் | ஊடல் ❤️
Comments
Post a Comment