இரண்டு வருடங்கள் பின் சென்றால் அன்று ஒரு நாள் வேலை விஷயமாக ஊட்டி வரை செல்ல வேண்டி இருந்தது, அன்றைய காலக்கட்டத்தில் மாதத்தில் ஒரு முறை ஊட்டி சென்று வருவேன், பெரும்பாலும் என்னுடைய பல்சர் 150 பைக் தான் என்னுடைய எல்லா பயணங்களிலும் உறுதுணையாய் உடன் வரும் ஒரு தோழன், வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ..? என்று கண்ணதாசனின் வரிகளுக்கேற்ப ஊட்டியின் மலைப்பாதைகள் முழுதும் Zig Zag வளைவுகளாக மொத்தம் 14 ஹேர்பின் பெண்டுகளுடன் இறைவனால் Gift Pack செய்யப்பட்ட ஒரு Natural Way of Greenish Road என்று சொல்லலாம், Headset மாட்டிக்கொண்டு பாடல் கேட்டுக்கொண்டே பயணம் செய்வது மலைப்பாதைகளில் சுகமானது என்றாலும் ஆபத்தை விலைக்கு வாங்கும் முயற்சி என்ற காரணத்தினால் அந்த பழக்கவழக்கத்தை தவிர்ப்பவன் நான்,அதற்கு பதிலாக எனக்கு பிடித்த பாடலை வாயில் முணங்கிக்கொண்டே பயணிப்பவன் நான், குழந்தை தனமாக இருந்தாலும் அதில் இருக்கும் சுகம் அறியாதோர் பலர், அன்றும் வீட்டிலிருந்து பைக்கை ஸ்டார்ட் செய்தேன், ஊட்டியில் நேற்று பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் வழித்தடங்களில் மண் சரிவு ஆங்...
வாசிப்பை நேசிப்போம்