Skip to main content

Posts

Showing posts from January 6, 2019

அன்பென்ற மழையிலே - ரஹ்மானின் மோட்சம்

கிறிஸ்துவ மதத்தின் தூய்மையான Jesus Christ அவர்களுக்கு ஒரு பாடல் எழுத வேண்டும் அதுவும் படத்தில் வரும் க்ளைமாக்ஸிற்கு முந்தைய காட்சி ஹீரோயின் துறவி வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிறாள் இவ்வுலகத்தில் இருக்கும் பாவப்பட்ட ஜீவ ராசிகளிடம் இருந்து தனித்து விளங்க..? இப்படி ஒரு Content - ஐ யூகித்ததற்கே இயக்குனர் ராஜீவ் மேனனை தலையில் வைத்து கொண்டாடலாம் காலம் கடந்து, தூய்மையான Jesus Christ அவர்களுக்கு ஒரு பாடல் எழுத இங்கு நம்ம கவிப்பேரரசு வைரமுத்து வரவைக்கப்படுகிறார், பாடலுக்கு தகுந்த  Situation - ஜ இயக்குனர் சொல்லி முடித்த உடன் நம் கவிஞரின் மனதில் எண்ண நிலையில் மனம் இருந்தது என்று தெரியவில்லை..? பாடல் முழுவதும் அன்பு என்பது பரந்து விரிந்து கிடக்கும், இன்று 2019 - திலும் எனக்கான தனிமை உணர்வை நான் காதலிப்பதற்கு முக்கிய தருணம் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இந்த பாடல், ஆம் எனக்கு மட்டும் இல்லை  நம்மில் நிறைய பேருக்கு இந்த பாடலின் வரிகளை கேட்டால் நம் தனிமைக்கு ரகுமான் அவர்கள் ஒரு மோட்சம் கொடுத்தது போல் அந்த வரிகள் அனைத்தும் ரகுமானை நம் தனிமையின் கடவுளாக பாவித்த விதம் இருக்கும், அது தான் வைரமுத்து அவர்களின் மே