Skip to main content

Posts

Showing posts from August 22, 2019

மனிதம் !!

அவன் இன்னும் மாறவே இல்ல அப்படியே தான் இருக்கான்..? தன்னால முடிந்த வரை முடியாது என்பதை இன்னொருவருக்கு சொல்லிவிடக்கூடாது என்பதை அவன் மேலும் மேலும் செய்து கொண்டே இருக்கிறான் அன்று ஒரு நாள் தன்னிடம் இருக்கும் குறைந்த மதிப்பிலான தொகையில் ஒரு தயிர் சாதம் வாங்கி வந்து அந்த வேப்ப மரத்தின் நிழலில் அவன் அமர்ந்த போது ஒரு பதினைந்து வயது சிறுவன் அண்ணன் காலைல இருந்து சாப்பிடல ஏதாவது வாங்கித்தரமுடியுமா..? என்று இவனை பார்த்து கேட்டவுடன் தன் கையில் வைத்திருந்த தயிர் சாதத்தை அவனிடம் கொடுத்து சாப்பிட சொல்லிவிட்டு அருகே  இருந்த தண்ணீர் குழாயில் ஐந்து க்ளாஸ்  தண்ணீரை வயிறு முட்ட குடித்துவிட்டு அந்த சிறுவனிடம் மீண்டும் சென்று அவனுக்கு ஒரு க்ளாஸ் தண்ணீரை கொடுத்துவிட்டு சாப்பாடு போதுமா..?  இல்லை இன்னும் பசி அடங்கவில்லையா என்று கேட்டான், பசி அடங்கவில்லை தான் ஆனால் வயிற்றுக்கு போதும் என்ற மனம் வந்து விட்டது ஏனென்றால் இது எனக்கான உணவு இல்லை என்று அந்த சிறுவன் பதிலளித்தான், இது உனக்கான உணவு இல்லை என்று யார் சொன்னார்..? இந்த உலகில் விதைக்கப்பட்ட உணவு முறைகள் யாவும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும், இ