Skip to main content

Posts

Showing posts from March 31, 2019

தன்னை அறிதல்

ஓவர் நைட் Convo - ல பசங்களுக்கு ஒரு பொண்ணு மேல லவ் வரும் அதுக்கு கவிதை தெரியாது ரசனையா Propose செய்ய தெரியாது கோர்வையா பேசக்கூட தெரியாது மனசு ஒரு நிலையில இருக்காது தட்டித்தடுமாறி அலைபாயும் ஆனா சந்தோஷம் மனசுலயும் முகத்துலயும் நீரோடை போல தவழ்ந்து ஓடும் கண்மூடித்தனமா இருப்பான் அந்த நேரத்துல அவனுக்கு அங்க ஒரு Skill பிறக்கும் அப்போ அவனுக்கு அது தெரியாது அதற்கான தேடல்களையும் அவன் அப்போ தொடரமாட்டான் நாளடைவில் அவள் விட்டு சென்றதும் ஒரு தனிமை உலகத்துக்குள் அடைபடுவான் அடை காத்த கோழி போன்று, தன் தனிமையின் துயரையும் தன் பெருங்காதலையும் சேர்த்து பக்கம் பக்கமாக கவிதைகளையும் புனைக்கதைகளையும் எழுதுவான் அன்று அவன் உடனிருக்கும் நண்பர்கள் யாரென்று தெரியாத மூன்றாம் நபர்கள் கூட அவன் எழுத்துக்களை படித்துவிட்டு அவனை ஊர் மெச்சும் படி போற்றுவர், அன்று தன்னை அறிதல் என்னும் Self Realization வாயிலாக தனக்கு இருந்த Skills - ஐ அவன் உணரும் போது நீலப்போர்வை உடுத்திய தூவானம் தன் அந்திமழை துளிகளை பூமியின் செந்நிற மண்ணில் சங்கமித்து இங்கு உயிர் வாழும் ஜீவன்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும்..!! எழுதுவோம்