Skip to main content

Posts

Showing posts from November 12, 2021

முழுமை

இங்க நம்ம முழுமைன்னு நினைச்சுட்டு இருக்குற எதுவுமே முழுமை கிடையாது ஒரு உதாரணத்துக்கு சொல்லணும்னா இந்த படத்துக்கான ஒரு கதையை நான் முழுமையாக எழுதி முடித்து விட்டேன் அப்படின்னு அந்த இயக்குநர் தான் எழுதி முடித்த கதைக்கான டைரியை தன் மேஜையில் வைத்து விட்டு தூங்க சென்றுவிட்டார், அடுத்த நாள் காலை அவருக்கு ஒரு ஃபோன் வருகிறது சில தனிப்பட்ட காரணங்களுக்காக சொந்த ஊருக்கு வர வேண்டி அந்த ஃபோனில் தகவல் வருகிறது,கிளம்பும் அவசரத்தில் இவர் தன்னுடைய கதை எழுதும் டைரியை வீட்டிலேயே வைத்து விட்டு சென்று விட்டார்,பிறகு ஒரு வாரம் கழித்து வந்து ஊருக்கு சென்று போன வேலையை முடித்து விட்டு தன் நண்பர்களுடன் பல வருடங்களுக்கு பிறகு ஒன்றாக கூடி உட்கார்ந்து அரட்டை அடித்து பேசி பொழுதை போக்கிய அந்த ஏழு நாட்கள் தனக்கு கொடுத்த உற்சாகத்துடன் முழு புத்துணர்ச்சியுடன் தன்னுடைய டைரியை எடுத்து தான் முழுமை அடைந்தது என்று முடித்து வைத்த அக்கதையை அடுத்த வாரம் கால்சீட் கிடைத்திருக்கும் அந்த பெரிய ஹீரோவிற்கு சொல்லி ஆக வேண்டும் என்ற முனைப்புடன் ஒரு முறை தான் எழுதிய கதையை வாசிக்கிறார், பல இடங்களில் அவர் திரைக்கதையில் செய்த சின்ன சின்ன தவ