Skip to main content

Posts

Showing posts from March 15, 2019

மண்ணும் மனிதமும்

தேகம் சிலிர்க்கும் இளமஞ்சள் வெயிலில் கதிரவன் பொழுது சாயும் நேரம் அது இளங்கதிர் வெளிச்சத்தில் ஊர் முழுக்க மஞ்சள் வண்ண மலர்களை கொட்டி நிரப்பியது போல் அந்த மாலை பொழுது மிக ரம்மியமாக அமைந்தது, காலை வயலுக்கு சென்ற விவசாயிகள் மாலை வேலை முடித்து வீட்டிற்கு திரும்பினர் தங்கள் கை கால்களை சொம்பு தண்ணியில் கழுவியபடி, பள்ளிக்கூடம் முடிந்து ஊரில் இருக்கும் மழலைகள் யாவும் வேற்று உடை மாற்றி அவர் அவர்களுக்கு பிடித்த கபடி, கண்ணாம்பூச்சி போன்ற விளையாட்டுக்களை விளையாடிக்கொண்டிருந்தனர் கூட்டு சேர்த்து, ஊரில் உள்ள பெண்கள் யாவரும் தங்கள் வீட்டில் கடவுளை வழிபட்டு அந்த அட்சய பொன்பாத்திரத்தில் நீர் நிரப்பிக்கொண்டு தங்கள் வீட்டின் விளக்கை ஏற்றிய வண்ணம் வீட்டின் தொலைகாட்சி பெட்டியில் தங்கள் இஷ்ட தெய்வத்தின் பாடல்களை ஒலித்த வண்ணம் அன்றைய இரவு உணவுக்கு வேண்டிய உணவுகளை தயார் செய்ய அதன் வேலைகளை செய்து கொண்டிருந்தனர் அந்த டீ கடையில் சூடான டீயுடன் ஆண்கள் அன்று விவசாயத்தின் விளைச்சல்கள் மற்றும் ஒன்றத்துக்கும் உதவாத இத்துப்போன நம்ம ஊரு அரசியல் கதைகளை பேச