Skip to main content

மண்ணும் மனிதமும்

தேகம் சிலிர்க்கும் இளமஞ்சள் வெயிலில்
கதிரவன் பொழுது சாயும் நேரம் அது
இளங்கதிர் வெளிச்சத்தில் ஊர் முழுக்க
மஞ்சள் வண்ண மலர்களை
கொட்டி நிரப்பியது போல்
அந்த மாலை பொழுது மிக ரம்மியமாக அமைந்தது,

காலை வயலுக்கு சென்ற விவசாயிகள்
மாலை வேலை முடித்து வீட்டிற்கு திரும்பினர்
தங்கள் கை கால்களை
சொம்பு தண்ணியில் கழுவியபடி,

பள்ளிக்கூடம் முடிந்து ஊரில் இருக்கும்
மழலைகள் யாவும் வேற்று உடை மாற்றி
அவர் அவர்களுக்கு பிடித்த கபடி,
கண்ணாம்பூச்சி போன்ற விளையாட்டுக்களை
விளையாடிக்கொண்டிருந்தனர் கூட்டு சேர்த்து,

ஊரில் உள்ள பெண்கள் யாவரும்
தங்கள் வீட்டில் கடவுளை வழிபட்டு
அந்த அட்சய பொன்பாத்திரத்தில்
நீர் நிரப்பிக்கொண்டு தங்கள் வீட்டின்
விளக்கை ஏற்றிய வண்ணம்
வீட்டின் தொலைகாட்சி பெட்டியில்
தங்கள் இஷ்ட தெய்வத்தின் பாடல்களை
ஒலித்த வண்ணம் அன்றைய இரவு உணவுக்கு
வேண்டிய உணவுகளை தயார் செய்ய
அதன் வேலைகளை செய்து கொண்டிருந்தனர்

அந்த டீ கடையில் சூடான டீயுடன் ஆண்கள்
அன்று விவசாயத்தின் விளைச்சல்கள்
மற்றும் ஒன்றத்துக்கும் உதவாத இத்துப்போன
நம்ம ஊரு அரசியல் கதைகளை பேசிக்கொண்டிருந்தனர்
கூட்டு சேர்ந்த வண்ணம்

தெருவுக்கு தெரு இருக்கும் கோவில்களில்
சாயங்காலம் ஆறு மணி பூஜை தொடங்கி
அம்மனுக்கு அபிஷேகம் செய்த பாலை
அனைவருக்கும் கொடுத்தனர்,
அந்த பக்கம் ஆஞ்சநேயர் கோவிலில்
உழுந்த வடையும் வெண்ணையும் கொடுத்தனர்,
அதனுடன் இயற்கை மருந்தான
தூய்மையான துளசி நீரை
சிறிதளவு உள்ளங்கையில் ஊற்றிவிட்டு
நெற்றியில் செந்தூரத்தை வைத்து விடுவார்கள்,

அந்த பொன் பாத்திரத்தில் இருக்கும்
துளசி நீரை அப்படியே எடுத்து குடிக்க ஆசை தான்
எல்லோருக்கும் ஆனால் ஆஞ்சநேயர் கோவில் பூசாரி
கொடுக்கமாட்டிராரே என்ன செய்ய..?

பொழுது சாய்ந்தது
ஊரில் இருக்கும் அனைவரும்
சாப்பிட்டு உறங்கும் நேரம் வந்துவிட்டது,
தெரு விளக்கு மட்டுமே அந்த ஊரின் சாலைகளில்
தங்கள் மஞ்சள் வண்ண கதிர்களை
மண்ணில் படர்ந்து சூழ்ந்து கொண்டிருந்தது
ஆங்காங்கே தவளைகளின் சத்தம்
அந்த இரவின் அமைதியில்,

நூறில் இரண்டு வீட்டில் மட்டும்
இளையராஜா பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கிறது
அந்த ராக்கோழி தூங்கும் வேளையிலும்

ஊர் சாமக்கோடாங்கிகள் ஆங்காங்கே
ஒவ்வொரு வீட்டின் முன் நின்று
குறி சொல்லிக்கொண்டு வலம் வந்தனர்

வெண்ணிலாவின் வெளிச்சத்தில்
ஊர் முழுக்க இருள் சூழ்ந்து
அந்த இரவை கட்டிபோட்டது சிறுஆர்ப்பாட்டமின்றி

இந்த இரவும் நிலவும்
இந்த மக்களும் மண்ணும்
இந்த பெண்களும் இறைவியும்
இந்த ஆண்களும் உழைப்பும்
இந்த மழலையும் விளையாட்டும்
இந்த ஆஞ்சநேயரும் வடமாலையும்
இந்த அம்மனும் அபிஷேக பாலும்
இந்த சாலையும் மஞ்சள் வண்ண தெருவிளக்கும்

இதில் என்ன இருக்கு..?
மனிதமும் மண்ணும் மட்டுமே

மண்ணும் மக்களும் சேர்ந்ததே அழகு
அதை ரசித்தலில் ஒரு சுகம் உண்டு
அந்த சுகத்தை நீங்கள் உணர்ந்ததால்
தனிமையை கூட காதலிக்கலாம்
எந்த இரவையும் அழகியலுடன் கடக்கலாம்
இந்த மண்ணுடனும்
நம்மை சுற்றியுள்ள மனிதர்களிடமும்

எல்லாவற்றையும் காதலுடன் பாருங்கள்
உங்களை சுற்றி அழகியல் சார்ந்த
விஷயங்கள் நிறைய கொட்டிக்கிடக்கிறது
வந்து உங்கள் இரு கைகளில் அள்ளிக்கொள்ளுங்கள்
ஏனென்றால் இது யாருக்கும் கிடைக்காத
அறிய வகை பொக்கிஷங்களுள் ஒன்று,

 மண்ணும் மனிதமும் வளர்கவே 💛






Comments

Popular posts from this blog

The One - அந்த ஒருவன் 💚

💚 நிராகரிக்கப்பட்ட ஒருவன் புறக்கணிக்கப்பட்ட ஒருவன் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவன் அவமானப்படுத்தப்பட்ட ஒருவன், "வர சொல்லு அந்த ஒருத்தன..?" பல போர் படை இருக்கலாம் எதிர்பார்த்தது இவனத்தான் அந்தொருவன் வந்திருக்கான்டே..!!! "Temba" என்றால் "Hope" என்று பொருள், ஒட்டு மொத்த ஆஃப்ரிக்க மக்களின் நம்பிக்கை ஒளியாகவும் அவர்களின் ஏக்கத்திற்கு விடையாகவும் இந்த "டெம்பா" ஒரு வாழ்வியலை இங்கே புதுப்பித்து இருக்கிறான், எத்தனை அவமானங்கள் தான் 'இந்த ஒருவனுக்கு' நிகழ்ந்திருக்கிறது, உயரம் ரீதியாகவும்,நிற ரீதியாகவும் என இவன் கண்ட அவமானங்கள் அனைத்தையும் தாண்டி இன்று ஒரு இன மக்களையே இன்று இவன் தலை நிமிர செய்திருக்கிறான், எங்க கேங்க்ல ஒரு ரெண்டு பேர் மொரட்டு தனமான தென்னாப்பிரிக்கா ஃபேன்,நானும் என்னோட இன்னொரு முகநூல் நண்பரும் (Anjali Raga Jammy), எப்படி "கொம்பன்" யானைய பார்த்து காடே ஆடி போகுமோ அது மாதிரி நாங்க ரெண்டு பேரும் எங்க தலைவன் டெம்பா பாவுமா - வ "டெம்பன்" ன்னு செல்லமா தான் கூப்பிடுவோம், இந்த டெம்பனின் கைகள் ஒரு ந...

நிகரில்லாதவள்

அன்று ஊரெங்கும் நல்ல மழை வெளுத்து வாங்கிகொண்டிருந்தது, பெரு மழைக்கு ஒதுங்குவதற்காக அவள் அங்கே சாலையோரம் இருந்த மரத்தின் அடியில் சென்று நின்று கொண்டாள், அவளுக்கு அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் சூழ அவள் ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியை போல் அக்குழந்தைகளுக்கு நடுவில் நின்று அவர்கள் மழையில் செய்யும் சேட்டையை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள், இந்த மழை நிற்பதற்குள் இவள் யார்,இவள் பெயர் என்ன, இவள் சார்ந்து இருப்பவைகள் என சின்ன கதையுடன் ஒரு முன்னோட்டம் பார்ப்போம், இவளுக்கான அறிமுகம் இல்லாததால் இவளுக்கு இவளாகவே சூடிக்கொண்ட பெயர் இது, ஆம் இவளுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஆசிரமத்தில் தான் வளர்ந்து வருகிறாள்,அங்கிருப்பவர்கள் "குட்டி" என்று கூப்பிடுவார்கள் அதுவே இவளது பெயராகவும் மாறியது, பின் பள்ளி முடிந்து யாரோ பெயர் தெரியாத ஸ்பான்ஸர்ஷிப் மூலம் கல்லூரி படிப்பை முடித்து நல்ல ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்த பின் தான் இவளுக்கு ஒன்று புரிந்தது, நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள சரியான பெயர் கூட நமக்கு இல்லை என்று, எதிர்நீச்சல் படத்தில் வருவது போல் தன் அடையாளத்தை இச்சமூகத்தில் பதிக்...

குடைக்குள் மழை

✨️💚 ரீனா : ஹே ஆர் யூ தேர்..? விக்ரம் : இருக்கேன் ரீனா, என்ன திடீர்னு மெசேஜ், முக்கியமா எதுவும் சொல்லணுமா..? ரீனா : ஹே, அதெல்லாம் இல்ல, ஏன் ஒர்க்ல இருக்கியா..? விக்ரம் : இல்ல, வீட்டுக்கு வந்துட்டேன், Earlier Appointments So, முடிஞ்சு பா! ரீனா : ஒகே, கொஞ்சம் மனசு சரி இல்ல அதான் உன்கிட்ட பேசலாமேன்னு கால் பண்ணேன்..? விக்ரம் : என்ன ஆச்சு..? ஆர் யூ ஓகே..? சொல்லு ரீனா Any Issue..? ரீனா : ஹே,Just Mood Swing ஒன்லி! நீ ஃபிரீன்னா சொல்லு Let's Walk Together in Beach! உனக்கு தெரியும்ல எனக்கு பீச் வாக்ன்னா ரொம்ப பிடிக்கும், So நீ ஃபிரீன்னா வர முடியுமா விக்ரம்..? விக்ரம் : சரி, ஈவினிங் 6 மணிக்கு பீச்ல நம்ம வழக்கமா மீட் பண்ணுற அந்த பட்டர் பன் கடைக்கு வந்துரு ரீனா, நானும் வந்துடுறேன், ரீனா : தேங்க்ஸ் விக்ரம்! விக்ரம் : தேங்க்ஸா..? No More Formalities! உன்னோட தேங்க்ஸ்ல நான் பூரிச்சு போய்ட்டேன்,சிரிப்பு காட்டாம வா ரீனா! ரீனா : ஹ்ம்ம் டா! * இடம் : கடற்கரை * நேரம் : மாலை 6 மணி விக்ரம் : ஹே! என்ன ஆச்சு ரீனா திடீர்னு..? ரீனா : அதெல்லாம் ஒன்னும் இல்லடா, Please Give Sometime நானே சொல்லுறேன் போ...