Skip to main content

Posts

Showing posts from April 12, 2020

உழைப்புக்கேற்ற ஊதியம்

*💚 " உழைப்புக்கேற்ற ஊதியம் " பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய வயதில் எத்தனையோ இளம்பிஞ்சுகள் தன் எடைக்கு அதிகமான பொருட்களை தூக்கிக்கொண்டும்,என்ன தான் அரசு குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அனுமதிக்கக்கூடாது என்று சட்டம் போட்டிருந்தாலும் நிறைய காய்கறி, பழ கமிஷன் மண்டிகளிலும், உணவிடங்களில் இலை எடுப்பதற்கும்,எச்சி டேபிள் துடைப்பதற்கும் இங்கு நிறைய சிறுவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள், சில பிஞ்சுகள் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே பகுதி நேர வேலை பார்த்து அம்மா அப்பாவின் உதவியை எதிர்பார்க்காமல் தனது படிப்புக்கு தேவையான நோட்டு புத்தகங்களையும் பேனா பென்சில்களையும் தாங்களே வாங்கிக்கொள்கின்றனர், உழைப்பு தான் இங்க ஒவ்வொருத்தருக்கும் சோறு போடுது,உட்கார்ந்து வேலை வாங்கும் முதலாளித்துவத்தில் இருப்பவனும் ஒரு காலத்தில் அடிமட்ட தொழிலாளி தான், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்ன..? அப்படி தான் இந்த சிறுவனும், தனக்கான தேவைகளை பூர்த்தி செய்ய ஐந்து வயதில் இருந்தே தன் உழைப்புக்கான முதலீட்டை தொடங்கிவிட்டான், ஆக ஐந்தில் இவன் வளைந்து விட்டான், ஐம்பதில் இவன் பேரும் புகழும் பெ

குடை ராட்டினக்காரன்

*💚 " குடை ராட்டினக்காரன் " பண்டிகை காலமோ கோவில் திருவிழாவோ நிகழ்ந்தால் மட்டுமே இவர் வேலை முடிந்து செல்லும் போது தன் பிள்ளைகளுக்கு அரிசி முறுக்கோ இல்லை தேன் மிட்டாய்களோ வாங்கி செல்ல முடியும், அதுவும் நகரத்தில் இவரது பொழப்பு என்பது மிகவும் ஏக்கமான மனநிலை தான், 90 - களில் குடை ராட்டினத்துக்கு இருந்த மவுசு இப்போது அவர் அவர் தங்கள் பிள்ளைகளை மொபைல் விளையாட்டிற்குள் புகுத்தி விட்டதால் இந்த குடை ராட்டினக்காரன் நகரப்புறத்தையே தன் தொழிலுக்காக இழந்து நிற்கிறான், கால்களில் செருப்பின்றி கதிரவனின் தாக்கத்திலும் நிலவின் தன்மையிலும் எத்தனை நாள் தன் பிழைப்புக்கான வண்டியுடன் இவன் எத்தனை கிராமங்கள் சென்று இருப்பான் எத்தனை விதமான மனிதர்களை சந்தித்து இருப்பான் தன் அனுபவத்தில், கிராமங்களில் கோவில் திருவிழாக்கள், பொங்கல் போன்ற பண்டிகை காலத்தில் மட்டுமே இவன் குழந்தைக்கும் துணைவிக்கும் ஒரு இரண்டு வேளை சோறுடன் திண்பண்டங்கள் கிடைக்கிறது அதுவும் இவன் ஒரு வேளை உணவை மட்டுமே சாப்பிட்டு தெருக்களில் உறங்குவதால் மட்டுமே, இந்த பண்டிகையும் கோவில் திருவிழாக்களும் இல்லாத நாட்களில் நாடோடியாக திரியும் இந்த குடை ர