Skip to main content

Posts

Showing posts from April 11, 2021

Chai with Halitha Shameem Akka!

* Chai With Halitha Shameem Akka!  எதிர்பாரா வாய்ப்புகள் எப்போதாவது தான் அமையும்,அப்பறம் நம்ம எதிர்பார்த்து காத்திருந்தாலும் பரிபோன வாய்ப்பு போனது தான்,கிடைக்கும் போது வாய்ப்பை சரியான முறையில் தக்க வைத்துக்கொள்ள வேண்டும், அப்படி ஒரு வாய்ப்பு இயக்குநர் ஹலிதா அக்கா - வை சந்திக்க அரங்கேறியது,அவர்களின் சொந்த ஊரான தாராபுறத்தில் மாலை ஐந்து மணிக்கு தாராபுரம் பழனி பிரிவில் உள்ள சூர்யா பேக்கரியில் சந்திக்கலாம் என்று தனது முகப்புத்தகத்தில் பதிவு செய்திருந்தார், கோடை கால விடுமுறையில் மதிய நேரம் வரும் ஐஸ் வண்டிக்காக ஒரு மணி நேரமாக வீட்டு திண்ணையில் ஐஸ் வண்டி சத்தம் கேட்குதா என எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருக்கும் சிறுவனை போல நானும் மாலை அங்கு சென்று விட வேண்டும் அவர்களை சந்திக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு மட்டுமே மனசுக்குள் ஓடிக்கொண்டிருந்தது,இயக்குநர் அக்காவிற்கு ஒரு மெசேஜ் அனுப்பி வைத்தேன் இன்று மாலை சூர்யா பேக்கரிக்கு உங்களை காண வருகிறேன் என்று, "வாங்க" என்று பதில் ரிப்ளை செய்திருந்தார்கள், கோவையில் இருந்து கிளம்பி போகும் வழியில் காரணம்பேட்டையில் Dhanasekar D  - ஐயும் அழைத்துக்கொண்

கர்ணனின் தாக்குதல்

தாக்குதல் என்றாலே கொலைன்னு இல்ல,அது வன்முறைன்னு கூட சொல்லமுடியாது,இங்கே கன்னத்தில் அறைவது கூட தாக்குதல் தான் !  இந்த சமுதாயமும் சரி நாளைய வருங்கால சமுதாயமும் சரி உன் கன்னத்திலோ உன் பிள்ளை கன்னத்திலோ யாரோ ஒருவன் பளார் என்று ஒரு அறை விட்டால் முதலில் தாக்குதல் வேண்டாம் என்று நீயும் உன் பிள்ளையும் அமைதியாக இருக்கலாம்,ஏன் இரண்டாம் மூன்றாம் தடவையும் கூட,ஆனால் நான்காவது தடவை நீ நிச்சயமாக உன்னை அடித்தவன் கன்னத்தில் ஓங்கி பளார் என்று அறைவாய், இதுவே நிதர்சனம், தற்பாதுகாப்பு, உயிர் பழி கொலைன்னு அந்த அளவு யாரும் இங்க பண்ண சொல்லல,உரிமையை கேட்க கையில் வாள் ஏந்தும் சூழ்நிலை வந்தால் வாள் ஏந்த வேண்டும், நீ இன்று வாள் ஏந்தினால் நாளை உன் சந்ததிகள் நிம்மதியாக படிக்க முடியுமெனில் நிம்மதியாக ஒரு வாழ்க்கை வாழ முடியுமெனில் நீ இன்று வாள் எடுத்தே ஆக வேண்டும், அது உரிமைக்காக என்றாலும் சரி,தற்பாதுகாப்புக்காக என்றாலும் சரி,  உன் உரிமையை மீட்க வேறு வழியின்றி இன்று நீ வாள் எடுத்து போராடுக் கொண்டு இருக்கிறாய், அதே நேரம் நாளை வரப்போகும் உன் பிள்ளைகளுக்கும் தலைமுறைகளுக்கும் தேவையான அடிப்படை கல்விக்கும்,வாழ்க்கை சூழலுக்