Skip to main content

Posts

Showing posts from July 7, 2019

Proud to be an Aggressionist

யாருங்க அவர்..? 2003 இறுதி போட்டில ஆஸ்திரேலியா கூட தோற்று போய் உலக கோப்பை வாங்கிக்கொடுக்க முடியாத ஒரு ஆள எதுக்காக தலைல தூக்கி வச்சுட்டு ஆடணும்..? கேட்டா ஒரு Settle ஆன இந்தியன் டீம்க்கு விதை போட்டு மரமாக்குனது அவர் தான்னு வாய் சவுடால் பேசுவிங்க, தூக்கிட்டு போங்கடா உங்க தாத்தாவ (தாதா) என்று நகையாடிய கூட்டம் ஒன்று இருக்கிறது இன்றும், பேசுங்க சார் நீங்க பேசாம யாரு பேசுவாங்க..? பேசிட்டு போங்க. மற்றவர்களுக்கு அவர் எப்படி என்று எனக்கு தெரியாது, என்னை பொறுத்தவரை எனக்கு Inspiration, இங்கு நிறைய பேர் கேட்பார்கள் Inspiration என்று நாம் ஒருவரை சொன்னால் அவர்கள் செய்த எந்த ஒரு விஷயத்தை நீங்கள் பின்பற்றி இருக்கிறீர்கள் அவர்களை Inspiration என்று சொல்லும் அளவிற்கு என்று. அது ஒரு Black & White TV காலம், அன்று அந்த தொலைக்காட்சியில் தான் என் பொழுது போக்கு கிரிக்கெட்டின் மூலம் எனக்குள் ஒரு காட்டுதீ போன்று அவரை பற்றிய விதைகள் என்னுள் விதைக்கப்பட்டு என் குருதி முழுவதும் பரவியது, கிரிக்கெட்டின் மீது அளவு கடந்த பைத்தியம் என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்தது, ஐந்து நாட்கள் நடக்கும் டெஸ்ட்