Skip to main content

Posts

Showing posts from November 8, 2019

கரைகின்ற நொடிகளில்..!! ❤️

* இடரினில் தளர்ந்து இமைக்கா நொடியாய் உதிரம் வடிய நிற்கின்றேன்..!! என் மனதில் தோன்றும் சில விஷயங்கள் என் யூகத்திற்கு ஏற்றார் போல் நிச்சயம் எப்படியோ நடந்துவிடக்கூடும் பல நேரங்களில், அன்றைக்கு ஒரு நாள் இலையுதிர் காலத்தின் நல்ல மாலை மங்கும் வேளையில் நான் தனியே அந்த தேசிய நெடுஞ்சாலையில் என்னுடைய பைக்கில் வந்து கொண்டிருந்தேன், ஏதோ என் உள்மனம் சொன்னது இன்று ஏதோ சில தடைகள் நீ வீடு சென்றடையுமுன் உனக்காக காத்துக்கொண்டு இருக்கிறது என்று, சாலையோரம் இருந்த ஒரு ATM இயந்திரத்திற்கு சென்றேன், எனக்கு தேவை 500 ருபாய், கார்டினை இயந்திரத்திற்குள் சொருகி ரகசிய எண்ணை பதிவிட்டு என்னுடைய பணத்திற்கு நான் காத்துக்கொண்டிருக்கையில் "2000 Rs Notes Only Available" - ன்னு Screen ல Display ஆகுது, இன்னொரு ATM சென்றேன் மேலே சொன்ன அதே Process இப்பொழுது "Unable to Dispense Cash", மூன்றாவது முறை இப்போது, "என் கவனமின்மையால் "Incorrect Pin", நான்காவது முறை கார்டினை சொருகினேன், இந்த முறை "Exceeding the Day Limit", இதற்கு முன்னால் இந்த நாளில் நான் இரண்டு முறை