Skip to main content

Posts

Showing posts from January 5, 2019

The Journey of Solo - Title Poem

ஓம் நமச்சிவாய என்னும் மூலமந்திரத்தின் கருவாய் நீர்,காற்று,நெருப்பு,நிலம்  என்னும் நாற்பகுதிகளை இறைவன் சிவனை வைத்து மையப்படுத்தி இருக்கும் கதைக்களத்தின் ஒரு கவிதை நடை பயணம் இங்கு, " The Journey of Solo - Title Poem |  Bejoy Nambiar  " 1) நீர் - ( World of Shekhar )  அன்பே ஆயிரம் மழைத்துளிகள் என்னை நனைப்பது போல நீ என்னை நனைத்துக்கொள் நதியின் ஆழங்களில் நான் மூச்சு திணறுவது போல நீ என்னை தழுவிக்கொள் கடலின் பேரலைகள் கரையை தீண்டுவது போல நீ என்னை எடுத்துக்கொள் என்னை உன் கரங்களால் அணைத்துக்கொள்ளாதே உன் மனதால் இறுக அணைத்துக்கொள் அன்பின் தனிமையில் உனக்கு மரணம் இல்லை 2) காற்று - ( World of Trilok ) யுகாந்திரங்களின் கோபம் யுகாந்திரங்களின் இறுக்கம் யுகாந்திரங்களின் பொறுமை யுகாந்திரங்களின் தனிமை வந்துவிட்டது எல்லாவற்றின் மீதும் பெரும் புயல் ஒன்று இந்த காற்றை எதிர்த்து நடப்பவர்கள் யார்..? காலத்தின் புயலில் உதிரும் ஆயிரம் ஆயிரம் மலர்களில் ஒரு மலரல்லவா நீ..? அழிவின் தனிமையில் காத்திருக்க உனக்கு நேரமில்லை 3) நெருப்பு - ( World of Shiva ) வன்மத்தின் வனங்கள் பற்றி எரிகின்றன குருதியின

Character Sketch of "96 & Pariyerum Perumal"

கதைகள் வேறு களங்கள் வேறு காட்சியின் சூழல் வேறு காட்சியின் அமைப்புகள் வேறு நண்பன் காதலன் ஆகினான் தோழி காதலி ஆகினாள் வெவ்வேறு காட்சிகள் வெவ்வேறு தாக்கங்கள் ஒரு பக்கம் கிராமிய களமும் மறு பக்கம் நகர சப்தங்களும், இரண்டு களங்களிலும் அவள் மொழிந்த அவள் பாவித்த அவள் சார்ந்த அவள் தவித்த அவனுக்கான அவள் சார்ந்த தேடல்களே முன்னிலை படுத்தப்பட்டிருக்கும் காட்சிகளில், இருவரும் கட்டி அணைக்கவில்லை இருவரும் முத்தங்கள் பகிரவில்லை இருவரும் தோள் சாய்ந்து கொள்ளவில்லை இருவரும் கை கோர்த்து பயணிக்கவில்லை இருவரும் சாலைகளை ஒன்றாய் கடக்கவில்லை, கண்கள் பேசியது வார்த்தைகள் தடுமாறியது இதழ் மௌன மொழி புரிந்தது காலங்கள் திசை மாறி இருந்தது காதல் மனசெங்கும் பரவிக்கிடந்தது கண்ணீர்கள் பாற்கடலாய் ததும்பியது பிரிவின் ஒட்டு மொத்த தேடல்களும் அவர்களின் பரிதவிப்பில் துளிர் விட்டது..? This is Love Clean Pure Love..!! ஜானகி தேவி(ஜானு)யும் கே.ராமச்சந்திரன்(ராம்)னும் ஜோதி மகாலக்ஷ்மி(ஜோ)யும் பரியேறும் பெருமாள்(பரியன்)ளும் - 96 | பரியேறும் பெருமாள்  :) )  🖤

சுய தேடல் | Connectivity Between Life of Ram Song

ஒரு தெளிவான சுயம் சார்ந்த தேடலை நாம் தொடங்கும் போது அதற்கு முன்பு ஏற்கனவே எங்கேயோ எப்போதோ ஒரு சுயம் மீட்டெடுத்தல் நிகழ்ந்திருக்கும் அப்படியான ஒரு நிகழ்வு தான் லைஃப் ஆஃப் ராமின் பாடலில் நிகழ்ந்திருக்கிறது தன் சுயத்தினை எங்கயோ தொலைத்து அதை மீண்டும் கண்டெடுக்க முற்படும் ஒருவன் என்னவெல்லாம் நினைப்பான் என்பதை கச்சிதமாய் எழுதியிருக்கிறார்கள். பாடல் வரிகள் : வாழ்வா என் வாழ்வை வாழவே தாளாமல் மேலே போகிறேன் தீரா உள் ஊற்றை தீண்டவே இன்றே இங்கே மீள்கிறேன் இங்கே இன்றே ஆள்கிறேன். இதில், தீரா உள் ஊற்றை தீண்டவே என்று தன் பழைய சுயத்தினை தேடும் போது இன்றே இங்கே மீள்கிறேன் என மீட்கவும் செய்து இங்கே இன்றே ஆள்கிறேன் என தன் சுயத்தினை ஆள ஆரம்பிக்கிறான், ஜானு : ரொம்ப தூரம் போயிட்டியா ராம்..? ராம் : உன்ன எங்க விட்டேனோ அங்கயே தான் நிக்குறேன், ஆம், அந்த புள்ளியில் அந்த நேர்க்கோட்டில் அந்த மூலாதனத்தில் தான் ராம் இன்னும் நின்று கொண்டு இருக்கிறான் அவன் திருமணம் செய்யவில்லை Travel Photographer - ராய் தொலைத்த தன் தேடலுக்கான வாழ்கையை தொடருகிறான், ஒரு சிறு கற்பனை முயற்சி திரைக்கதையில் சிறிய மாற்றம் லைஃப் ஆஃப் ஷிவா என்று

Based on a True Story

பெண் வேண்டாம் பொருள் வேண்டாம் மது வேண்டாம் மந்திரமும் வேண்டாம் புகையிலை வேண்டாம் புண்படுத்தும் எதிரியும் வேண்டாம் புண் பட்ட மனமும் வேண்டாம் ஓர வஞ்சனை பார்க்கும் வஞ்சகனும் வேண்டாம் பொழிவில்லா வைரமும் வேண்டாம் மழையாய் பேச்சில் பொழிபவனும் வேண்டாம் கல் நெஞ்சம் உடையவனும் வேண்டாம் கலங்கரை விளக்கமாய் இருப்பவனும் வேண்டாம் ஏற்றத்தாழ்வு பார்க்கும் அவலநிலை வேண்டாம் "நீ கீழ்" என்று மட்டம் தட்டும் மனிதரும் வேண்டாம் முத்துப்பல் காட்டி சிரிப்பவனும் வேண்டாம் முற்றும் துறந்த ஞானியும் வேண்டாம் பொய்யில் வாழும் பிறவியும் வேண்டாம் தாகத்திற்கு குடிநீர் கொடுக்காதவனும் வேண்டாம் முழுமை பெற்றவனும் வேண்டாம் முதுகில் குத்தும் நண்பனும் வேண்டாம் உலக நியதியும் வேண்டாம் உலக சீர்திருத்தமும் வேண்டாம் உள்ளம் கனிய பேசுபவனும் வேண்டாம் உன்னை போற்றி புகழ்பவனும் வேண்டாம், இவை எதுவும் வேண்டாம் என்றால் எது தான் வேண்டும் இவ்வுலகில்..? எதுவும் வேண்டாம் எதுவும் வேண்டாம் எதுவும் வேண்டாம் ஆனால் வேண்டும்,..? என்ன வேண்டுமா..? ஆம், வேண்டும் சில நிலை சார்ந்தவைகள் வேண்டும் நான் வாழும் இவ்வுலகின் பார்வைக்காக..? பொய்யில்லா மழலை

பூ அவிழும் பொழுது..!!

பூ அவிழும் பொழுது..!!  மூலக்கதை : சிவா செல்லையா  எழுத்து : திவாகர் மணிமாறன்  மாயா நீ எனக்கு மனைவியா ஆகி ஆறு மாசம் ஆச்சு, அப்பா அம்மா இல்லாத எனக்கு நீ தான் எல்லாமுமா இருக்க, துயர் மிகுந்த என் வாழ்க்கைல முதல் நம்பிக்கை ஒளி நீ தான் அந்த ஒளிய எனக்குள்ள சுடராவும் ஏத்தி வச்சுருக்க..! உனக்கானவனா உன் கணவனா நான் உன்னுள்ளே தொலைய ஆரம்பிச்சுட்டேன்னு நினைக்கிறேன். நீ என்னுள்ளே தொலைந்து எனக்குள்ள போய் நீ என்னோட ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டிட்டு இருக்க..!! அதுல நீ வாசிக்காத உனக்கு நான் காட்டாத சில கருப்பு பக்கங்களின் தூசி படிந்த அடுக்குகளை நீயே கண்டெடுத்து படிக்கிறதுக்கு முன்னாடியே நானே இந்த கடற்கரை இரவில் உனக்கு அத வாசிச்சு காட்டிருறேன், எனக்கானவளான நீ என்னபத்தி எல்லாம் தெரிஞ்சுருக்கணும்னு நினைக்கிறேன். இந்த கொள்ளளவு குறையாத மொத்த காதலையும் ஆயுசுக்கும் குத்தகைக்கு எடுத்தவள் நீ தான். இதுக்கு முன்னாடி இந்த அன்புக்கு சொந்தமானவள நீ தெரிஞ்சுக்கணும். அப்பத்தான் இவனால இவ்வளவு ஆழமா காதலிக்க முடியுமான்னு உன்னாலயும் தெரிஞ்சுக்க முடியும். அவள பத்தி உன்கிட்ட சொன்னா தான் அவள விட உன்ன நான் எவ்ளோ அதிகம

வித்யாசாகர் எனும் சேமிப்பு காதலன்

இளஞ்சூரியனின் கதிர்கள் பூமியில் விழுந்த காலை வேளையில் ரோஜா பூ ஒன்று அந்த தோட்டது செடியில் மலர்ந்து இருந்தது, மொட்டுக்கள் விரிந்து பூத்திருந்த ரோஜாப்பூவை அவள்(பாமா) தலையில் சூடினாள், அதிகாலை குளியல் முடித்து விட்டு 80's பெண்களின் கலாச்சாரமான ஜாக்கெட் அணியா சேலையுடன் பெண்களுக்கே உரிமை கொண்ட ஈரக்கூந்தலில் அந்த ரோஜாப்பூவை அவள் தலையில் சூடினாள், அந்த பக்கமாக நடந்து வந்த அவன்(வித்யாசாகர்) அவள் மலர் சூடும் அழகில் முருகனால் சூரசம்ஹாரம் செய்யப்பட்ட சூரபத்மன் போல் அவள் முன் வீழ்ந்தான் தன் மூக்குக்கண்ணாடியை சரி செய்த படி, மேலும் சில தோட்டது மலர்களை அவள் பறித்துக்கொண்டிருக்க அவளை மிரட்டும் வண்ணம் குழந்தை போன்ற செல்ல பாவனைகளுடன் தோட்டத்தினுள் வித்யாசாகர் ஓடி வந்து எல்லா பூவையும் பறிச்சுடுவ போலயே, உன்ன யாரு பூ பறிக்க சொன்னா..? நான் எல்லாத்தையும் எண்ணி எண்ணி வச்சுருக்கேன் மஞ்சள் -ல பத்து சிகப்பு - ல ஏழு என்று ஆண்களுக்கே உரிய செல்ல கோபத்தை அவளிடம் வழிமொழிகிறான் வித்யாசாகர் பூவ எல்லாம் எதுக்கு எண்ணுறிங்க என்று பாமா அவனிடம் கேட்கிறாள்..? ஏன் எண்ணுறேனா..? எண்ணலேனா கண்ட கழுதயெல்லாம் பறிச்

கிறுக்கல்களின் தொகுப்புகள்

வெள்ளிக்காப்பை சுழற்றினேன் சூடான காஃபியை அருந்தினேன் தலை முடியினை கோதி விட்டேன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன் ஆழ்மனதும் அனாதையாக இருந்தது எண்ணங்களின் ஓட்டமும் சீராக இல்லை யூடியுப் பக்கம் சென்றேன் அன்றைய தினத்தின் Trending காணொளிகள் ட்விட்டர் பக்கம் சென்றேன் நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே தள்ளு முள்ளு இன்ஸ்டாகிராம் பக்கம் சென்றேன் Bae Calls Me Chocobar என்றாள் கிளியோபாட்ரா ஹைக் பக்கம் சென்றேன் நட்டாஸா உரையாடலுக்கு எதிர்வாதம் செய்தாள் சரி, இது தான் இன்றைய தலைவிதி என்று முகப்புத்தகம் வந்து இதை பதிவு செய்தேன்..? - A Poem Without a Topic ❤ ---------------------------------------------------------- வாழ்க்கை இப்படியே போயிடுமா சார் என்பதில் தொடங்கி வாழ்க்கை ஒரு வட்டம் என்பதில் பயணித்து இவ்வளோ தான் சார் வாழ்க்கை என்பதில் முடிகிறது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நம்பகத்தன்மை நிறைந்த வாழ்க்கை..? -------------------------------------------------------- இந்த காஃபி ஷாப் சுவர்களின் இடையூறுகள் நம் நாவிதழ்கள் இடைபாடுகளிலும்..?..!! - வா ரயில் விட போலாம் வா  🖤 --