சூடான காஃபியை அருந்தினேன்
தலை முடியினை கோதி விட்டேன்
ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன்
ஆழ்மனதும் அனாதையாக இருந்தது
எண்ணங்களின் ஓட்டமும் சீராக இல்லை
அன்றைய தினத்தின் Trending காணொளிகள்
ட்விட்டர் பக்கம் சென்றேன்
நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே தள்ளு முள்ளு
இன்ஸ்டாகிராம் பக்கம் சென்றேன்
Bae Calls Me Chocobar என்றாள் கிளியோபாட்ரா
ஹைக் பக்கம் சென்றேன்
நட்டாஸா உரையாடலுக்கு எதிர்வாதம் செய்தாள்
சரி, இது தான் இன்றைய தலைவிதி என்று
முகப்புத்தகம் வந்து இதை பதிவு செய்தேன்..?
நம் நாவிதழ்கள் இடைபாடுகளிலும்..?..!!
- வா ரயில் விட போலாம் வா 🖤
தனிமையில் இருந்து மீண்டு வர உதவுகிறது
மேஜை மீது இருக்கும் நான்கைந்து புத்தகங்கள்..!!
#வாசிப்பின்அவசியம் 🖤📖
---------------------------------------------------------------
அவள் வசம்
அவள் இடம்
அவள் உடன்
அவள் கூட்டு
என்னை தஞ்சம் புகுத்த நினைக்கிறாள்..? 🖤
-------------------------------------------------------------------
தீஞ்சுவை தீண்டி
நாணம் உடைத்து
நீ என்னுள் பாதியாக
நான் உன்னுள் நாமாக
போற்றுவேன் போற்றுவேன்
மீசை அரும்பும் வயதிலும்
நரை உதிர்க்கும் போதிலும்
தலையில் சுமக்கும் தலைக்கணம் போல்
மறக்காதே கண்மணியே
மனமெங்கும் உன் சந்நிதியே
மறந்தாலும் உன் தேடலுடனே
மடி மீது சாய்கிறேன் உன்னிடமே
நெற்றியின் உச்சி முகர்தலும்
செவ்விதழின் செழிப்பான பள்ளங்களும்
தேம்பாவணியான அவளிடத்தில்
மனம் போற்றும் என் மீனலோட்சனியே..?
- அவளும் அழகு சார்ந்த ரசனைகளும் 🖤
விழி வழியே உன் தேடல்கள்
சுடரும் ஒளிர்ந்தது
உன் பின்னங்கழுத்தின்
காரிகை மொழி பேசும் மோட்சத்தில்..?
#காண்பதெல்லாம்காதலே 🖤
இருள் சூழ்ந்த அவ்வேளையில்
நீ விஜயம் தந்த காதல் கனாவில்
நாம் ஊடல் கொண்ட காலங்கள் யாவும்
சுவர் கண்ணாடியில் பிம்பமாய் எதிர் நோக்கின..?
- மனம் போன போக்கில் உன் வசம்) 🖤
------------------------------------------------------------------------------------------------
காதல் வாழ்வுக்கு வழிவிடும்
காதல் மௌனம் கொல்லும்
காதல் ஏக்கமடையச் செய்யும்
காதல் கவிதைகள் கிறுக்கும்
காதல் முத்தத்தை பருகும்
காதல் ஓருடலில் சங்கமிக்கும்
காதல் தேடல்களை தொடரும்..?
காணத் தவம் கிடைக்குமா என்று
நான் காத்திருந்தது உனக்கான
இந்த கவிதைக்கிறுக்கல்களை
இப்போது இயற்றுவதற்காக..?
ஜன்னல் கம்பிகளின் இடையே
நீ பார்க்கும் திசையில் வருவது யாரோ..?
ஏன்..? எதற்காக இந்த ஏக்கம்..?
மையிட்ட உன் கண்களில்
உதட்டுச்சாயம் பூசப்பட்ட உன் இதழ்களில்
உச்சி வகுடெடுத்த உன் நெற்றியில்
தூரிகை போல் முன்னெடுத்த உன் கூந்தல்களில்
ஆங்காங்கே "Pimples" படிந்த
உன் கன்னம் எனும் மழலையின் வாழ்விடத்தில்
கோபங்களை உள்ளடக்கிய
உன் மெருகேறும் மூக்கின் நுணியில்..?
இளஞ்சிவப்பு நிறத்தில்
நீ அணிந்த புடவை பட்டு ஜரிகை சூழ
உன் அழகிற்கு ஒரு படி மெருகேற்றி
கொடுத்திருக்கிறது பொக்கிஷமாய்..?
காண்போர் மயங்கும் தாரகையே
விழி வைத்து காத்திரு இக்கணம்
வருவான் உனக்கான கள்வன்
உன்னை அள்ளி அணைத்துக்கொள்ள..?
குல்முகர் மலர்களால் ஒரு சேர நெய்யப்பட்ட
மாலையை உன் கழுத்தில் சூடுவான்
மலர் தூவி உன் கரம் தொட்டு வரவேற்பான்
தூய ஒளி சுடர் வீசும் மல்லிகைப்பூவை
உன் உச்சந்தலை முதல் மேகலை அணியும்
இடை வரை சூட்டி விடுவான்
குங்குமத்தின் குளிர்ச்சியை உன் உச்சி வகுடில்
தன் கட்டை விரல் அழுத்தத்தினால் சேர்ப்பான்
இதழ் பரிமாற்றத்தில் அவனுக்கு நிகர்
எவர் என்று கர்வம் கொள்வான்
பெண்மை போற்றும் உன் வெட்கத்தின் வழியே
அழகோவியத்தின் முன்னோடியே
அசந்து போனேன் உன் வசம்
இது நான் கிறுக்கும் உனக்கான முதல் தீண்டல்..?
- கிறுக்கல்கள் சூழ் ) 🖤
--------------------------------------------------------------------------------------------
எனக்கான மேனியில் தவழ்ந்தாடும்
மல்லிகைப்பூவிலும் அவள் வாசம் வீசக் கண்டேன்
உன் வாசத்தை நுகருகிறேன் நான்
உன்னை இக்கணம் தேடுகின்றேன் நான்
உன்னுள் முழுதாய் என்னை தந்துவிட்டேன் நான்
உனக்காக என்னை அர்பணித்து விட்டேன் நான்
உன் வருகைக்காக காத்திருக்கிறேன் நான்
உன் முத்தங்கள் வேண்டி உலாவுகின்றேன் நான்
உன் விரல் பிடிக்க இரவு முழுதும் ஆளற்ற சாலையில் தனியே நடக்கிறேன் நான்
உன் குறுஞ்செய்திகளுக்காக ஒவ்வொரு நொடியும்
பச்சை நிறம் எரியும் Messenger சிக்னலை
நோக்கியே என் தேடல்களை
தொடர்ந்து கொண்டு இருக்கிறேன் நான்..?
- அவளும் மல்லிகை சார்ந்த மணமும் 🖤
சூடிய குங்குமத்தில் உச்சி குளிர்ந்தவளின்
முகம் பார்க்கும் கண்ணாடியானது
அழகியலின் பிம்பமாய் எதிரொளித்தது..?
என் நீண்ட கால ஆயுள் வேண்டி
அவள் சுமக்கும் தாரக மந்திரமாய்
இந்நெற்றிக் குங்குமமானது
அவள் உச்சந் தலையின் குளிர்ந்த வகுடில்
செக்கச் சிவந்து நீலகண்டனின்
உச்சியை குளிரச் செய்த
கங்கை போல் பிரதிபலித்தது அவளிடத்தில்..?
- அவளும் அழகியலும்) 🖤
----------------------------------------------------------------------------------------------
அவள் அங்கங்கள் யாவும்
ஒரு படி உஷ்ணம் அதிகமாக தென்பட்டால்
எழுதி வையுங்கள் அழகியல் பெட்டகத்தில்
அது அவள் "அதிகாலை வனப்பு" என்று..?
- அவளும் அதிகாலையும் 🖤
--------------------------------------------------------------------------------------------------------
பணம் பொருள் செல்வம் என்று
எதை கொட்டிக்கொடுத்தாலும்
அன்பு காதல் ஊடல் என்று
எதை வாரி வழங்கினாலும்
எனக்கான இடத்தில் வருபவர் யாராயினும்
எனக்கான இடத்தை ஈடு செய்ய
எத்தனை யுகம் கடந்தாலும்
அவ்விடத்தை நெருங்கி விட முடியாது
ஏன்..? அதன் காரணம்..?
என் காதல் என்ன தெய்வீகக் காதலோ..?
நான் தவறு செய்தவன் தான்
என் காதலில் எந்த ஓர் பிழையும்
உன்னால் காண முடியாது எந்த ஒரு நாளிலும்
என் மடி மீது உன்னை தாங்கியிருக்கிறேன்
தாய்மை கொண்டு உன்னை போற்றியிருக்கிறேன்
உச்சி வகுடில் முத்தத்தினால் முகர்ந்திருக்கிறேன்
அடிப்பாதங்கள் இரண்டையும்
என் உள்ளங்கையில் தாங்கியிருக்கிறேன்
யாவும் நீயே யாதும் நீயே
என்ற மனநிலையில் வாழ்கிறேன்..?
இனி வரும் காலங்களில்
உச்சந்தலையில் யாரோ ஒருவர்
உன்னை வைத்து தாங்கினாலும்
உனக்கு அது காதலை கொடுத்தாலும்
ஈருடல் ஓர் உயிராக இருந்தாலும்
என் தாய்மை கலந்த காதலுக்கு நிகர் ஆக முடியாது
சோகங்கள் மனம் முழுதும் நிறைந்து இருந்தாலும்
என் சோகம் என்னுள் வைத்து
சிரிப்புக்களை விதைக்கிறேன்
நிலையில்லாத இவ்வுலகில்,
உன் சிரிப்புக்களை இழந்திருக்கிறேன்
காதோரம் நீ ஒதுக்கும் ஒற்றை முடியினை
பார்த்து ரசித்த காலங்களை இழந்திருக்கிறேன்
ஈரம் பதிந்த உன் பின்னங்கழுத்தின்
வியர்வை துளியை ரசிக்கும் நேரத்தை
இங்கு நான் இழந்திருக்கிறேன்
வேறு திசையில் நாம் மாறி சென்றாலும்
பிரிந்த வேதனை சுமந்திருந்தேன்,
பல்லாயிரக் கணக்கான எழுத்துக்களில்
இங்கு நான் உன் புகழ் பாடினாலும்
என் காதலை உணர்த்தினாலும்
உன் காதல் ஒரு படி உயர்ந்தே நிற்கும்
ஆனால் இன்று ஏனோ தெரியவில்லை
என் தவிப்புகள் உன்னிடம் சேர மறுக்கிறது
உனக்கான சூழல் வேறு ஒருவருடன் இருப்பதால்..?
நான் எழுத்துக்கள் மூலம் கொட்டித் தீர்க்கிறேன்
நீ ஆழ்மனதிற்குள் ஆழமாய் வைத்திருக்கிறாய்
வித்தியாசம் என்பதோ இந்த ரகம் தான்
ஆனால் உன் குறுஞ்செய்திகளை எதிர்ப்பார்த்தும்
உன் காதலை எதிர்ப்பார்த்தும்
ஆசைக்கு ஏங்கும் மழலை போல் இங்கு நான்..?
உன் சூழ்நிலையும் புரிகிறது இறுதியாக
மறந்து விடாதே மறுத்து விடாதே
எந்த நிலை சென்றாலும் என் தேடல்கள்
உன்னை தொடரும் என்ற நம்பிக்கையுடன்
இதோ உனக்காக..?
உயிரும் நீயே
உலகமும் நீயே
உணர்வும் நீயே
உண்மையும் நீயே
உத்வேகமும் நீயே
உமையாளும் நீயே
உள்ளமெங்கும் நீயே
- தேடல்களுடன் அவன்..?
#கிறுக்கல்கள்சூழ் 🖤
----------------------------------------------------------------------------------------------------
நீயும் அங்கே
தனிமையின் சூழல்களும்
தவிக்கின்ற தவிப்புகளும்,
மெழுகுவார்த்தியின் சுடர் வெளிச்சத்தில்
ஒர் இரவு நேர விவாதத்தில் நாம் இருவரும்
இதழும் இமையும் ஒன்றிணைந்த புள்ளியில்
உன் ஊடல் சார்ந்த அழைப்புகள் என் வசம்,
கூந்தல் காட்டிற்குள் செல்லும் வழித்தடம் தேடி
உலகின் சமப்பரப்பில் அமையாத
மேடு பள்ளங்களில் இதழ் தடம் பதித்து நான்..?
என் இரவா தேசத்தின் தேம்பாவணி நீ
வா..! என் கருவறைக்குள் சங்கமித்துக் கொள்
நான் சுமக்கிறேன் உன்னை மனம் உருகி..?
- அவள் சார்ந்த தேடல்களின் உச்சம் 🖤
வளைவுகளில் அகப்பட்ட
சிறு துணுக்கு அவள்,
அ-வும் அவள்
ஃ-வும் அவள்
உயிரும் அவள்
மெய்யும் அவள்
உயிர் மெய்யும் அவள்
ஆயுதமும் அவள்
என் மொழிக்கு அழகு சேர்க்கும்
'ழ'கர ஒலிப்பும் அவள்,
தூயவள் அவள்
துணையெங்கும் அவள்
தூணிலும் அவள்
துரும்பிலும் அவள்,
திசையெங்கும் அவள்
திங்களும் அவள்
தியானமும் அவள்
தித்திக்கும் தமிழும் அவள்..?
அவ்வாழ்க்கையில் ஒரு நாள்
அவள் உதிரத்தின் கசிவில்
உண்டாகும் ஓர் உயிருக்கு
நான் மாறுகிறேன்
ஒரு ஜீவனை சுமக்கும்
வலிமை மிக்க கர்ப்பிணித்தாயாய்..? 🖤
அவனின் நெஞ்சாங்கூட்டில்
ஆணியடித்த வண்ணம்
திரைக்கடலின் கரையோரத்தில்..?
அவளின் ஆசைகள்
அவளின் கனவுகள்
அவளின் தன்மைகள்
அவளின் அங்கங்கள்
என ஒவ்வொன்றிற்கும்
சேமிப்பு என்னும் வங்கியாய்
அவனின் இதயக்கூடு,
பறவைகளின் இறகு போல்
வலிமை தாங்கும் சக்தி இல்லாத
மென்மை ரகத்தில் சேர்ந்தவை..?
போதும் திமிரழகியே
திமில் இல்லா காளையை
கட்டுக்குள் கொண்டு வர நினைக்காதே,
இது கர்வம் கொண்ட ஆண் வர்க்கம்
துகில் உறிக்கும் போட்டியில்
வெல்பவர் யார் என்பது
உலகம் அறிந்த நியதியே..?
மணல் திட்டுக்களில் பதிந்த பாதங்கள்
மணவாளனின் இருதய சத்தத்தை கேட்டவுடன்
ஆகச்சிறந்த பெண்மைக்குரிய வெட்கத்தை
கரையினில் விட்டுச் செல்லுமாயின்
அவ்வெட்கத்தை ஆகச் சிறந்த ஆண்மைக்குரிய
சீற்றம் கொண்ட அலைகள்
அதை தன்னுடன் இறுக அணைத்து
தன் வசப்படுத்திக்கொள்ளும்
நிகரில்லா நிலையானது..?
உன் ஆதிக்கமும்
என் கர்வமும் ஒரு சேர
இச்சங்கமத்தில் இணையுமாயின்
அது தான் இவ்வுலகம் போற்றும்
காதல் என்னும் அழகியிலின் பிம்பங்களோ..? 🖤
ஜன்னல் கம்பிகளின் இடையே
கதிரவனின் காலை பிம்பத்தில்
தாகம் தீரா மோகம் அடங்கி
விடிந்தது அத்தலையணை இரவுகள்,
முன்னோக்கி நகர்ந்தால்
காதல் அளவற்று நிற்கிறது
ஊடல் சார்ந்த போதை
தலைக்கேறி திக்குமுக்காட வைத்தது,
சுவாசிக்கும் மூச்சும்
துடிக்கும் இதயமும்
நடுங்கும் கைகளும்
பதறும் கால்களும்
ஒரு ஆண் மகனின் அன்றாடம்
அவன் அன்றாடத்தை
ஒற்றை முத்தத்தில்
அவளுள் அடங்க வைத்து ரசித்தாள்
உச்சியின் குங்குமமும்
உள்ளங்காலின் மெட்டியும்
என்ன தவம் செய்தனவோ
அவனின் காதலை பெறுவதற்கு..?
பள்ளத்தின் இடைப்பாடுகளில்
அவன் ரசித்த உலகை
பின்னாளில் அவள்
இரு மேடுகளாய் பிரித்து
தாய்மை கொண்டு
அவன் அளித்த ஜீவனுக்கு
பசி போக்கினாள்,
காதல் அளவற்று கிடக்கிறது
ஊடல் ஒரு சேர நிகழ்கிறது
பெண்மை போற்றும்
ரசனை தான் பஞ்சமோ,
அதை ஆண் ரசிக்கும்
அழகியல் தான் பிம்பமோ..? 🖤
பைக்கின் கர்ப்பிணி வயிற்றை
மூடியவாறு தன் பைக்கினை
முதல் இரண்டு என்ற வரிசையில்
ஐந்தாவது கியரில் செலுத்தினான்..?
விரைந்து சென்ற வண்டி
ஒரு அக்ரஹார தெருவின்
முச்சந்தியில் நின்றது
தேவி அவள் வருகை வேண்டி..?
அவளுக்காக காத்திருந்த இடைவேளியில்
என்னுடைய செலவு என்பது
இரண்டு ரூபாய் கொண்ட
Boomer Bubble Gum இரண்டு மட்டுமே
நான் ஒரு TeeTotaller என்பதால்..?
அக்ரஹார தெருவிலிருந்து
அவள் வருவதால் "OC" என்று
நினைத்து விட வேண்டாம்,
அவள் அவள் தான்
ஆராயும் யுக்திகள் இங்கு கையாளப்படவில்லை..?
சிறையில் அடைக்கப்படாமல்
விடுதலை அளித்த கூந்தலை
காதோரம் ஒதுக்கியவாறு
தூரத்தில் சிறு புன்னகை
இதழசைவில் பிரதிபலித்த வண்ணம்
அவன் முன் வந்து நின்றாள்..?
காதலே நீ என்னோடு வா
ஓர் காலை உலவு என்றவாறு
பைக்கில் தன் அங்கங்கள் சரி செய்து
அவன் பின் அமர்ந்தாள்..?
மென் சிறகு போன்ற கைகளை
அவனுள் அரவணைத்த வண்ணம்
அவன் தோள் சாய்ந்தாள் கோதை அவள்..?
காதுகளில்
Head Phone Insert செய்திருந்த அவள்
இமைகள் மூடி
இன்னிசை உதவியுடன்
பேதை அவள் பின் இருக்கையில்
How Lucky Iam என்ற
மனநிலையுடன் அவன்..?
தேவதை சூழ் நகரமிது போல்..!
அந்த சாலையை
அவர்கள் இருவரும் கடக்கும் வண்ணம்
ஓர் மகளிர் கல்லூரி..?
சாலை முழுவதும்
"தெருவெல்லாம் தேவதைகள்"
என்பன போல் கன்னியர்கள் கூட்டம்..?
ஆண் மனசு அலைபாயும் அல்லவா..?
ரசிப்பது ரசனை
அனுபவித்தல் என்னும் எண்ணமே
ஒரு ஆணுக்கு வினை என்பது
காலம் கற்றுத்தந்த கூற்று..?
இதை உணர்ந்தவன் பகுத்தறிவாளன்
உணராதவன் உடுக்கை இழந்தவன்..?
பைக்கின் பின்னால் இருக்கும்
அவளை மறந்து
அக்கன்னியர் கூட்டத்தின் இடையே
சாலையோர மரத்தடியில்
சினிமா பாணியில்
வெள்ளைப்பூக்கள் உதிர
பாவை (அவளின்) வருகை..?
அவனை மறந்து
அவனுள் வியந்து
அவன் மனம் சிறகடித்து
(அவளை) ரசிக்கும் தருவாயில்
பின்னங்கழுத்தில்
ஒரு செல்ல அடி அவளிடம் இருந்து..!
கவனமாக கேள்!
உன் கூடலும் ஊடலும்
இனிதே - இவ்விடத்தே..!
நாலும் பொருளும் எனுடனே
ரசிக்கும் ரசனையும் என் மனத்துடனே
காமமும் தேடலும் இக்கணமே
தேடலின் பொருளும் நம்முடனே..?
பெண்ணாதிக்க சமூகமே
நீர் வாழ்க உம் புகழ் வாழ்க
என்று நீள் பறை சாற்றி
அங்கிருந்து அவளும் அவனும் கிளம்பினார்கள்..?
அவளும் அவனும்
தமிழும் சுவையும்
கவியும் கலமும்..?
#கிறுக்கல்கள்சூழ் 🖤
பால் நிலவு நோக்கி
திண்ணையில் திகைப்புடன்
சூடிய சுடராய் விடுதலை அளித்தேன்
முடிந்து வைத்த என் கருநிற அருவிக்கு..?
இருள் வானில் வருவான் என்றே
வழி மேல் விழி வைத்து
மலர் சூடா மங்கை நான்
மன்னவனின் வருகை வேண்டி
மனம் நாடும் ஓர் பொழுது..?
பனி விழும் பௌர்ணமி இரவின்
ஊர் அடங்கிய சாம வேளை..?
கோடங்கி உடுக்கின் கூச்சலிடையில்
ஒத்தையடி பாதையில்
அவன் பற்றிய தேடல்களுடன்
ரத்தம் ஒரைய குளிரும் இறுக்க..?
ஆண் கர்வம் அதிகமெனினும்
கனிவாய் நெகிழ்வான் கள்வன்
ஒத்த போர்வையில்
மங்கை என் மலர் மணம் வீச..?
நுகரும் முன்னே
மணம் மாறிவிட்டாய் போல்
மகரந்தம் பொய்த்து
மங்கை என் கனாவில்..?
வா அருகில்..?
ஆகாச தூரம் கொட்டிக்கிடக்குது
தொலைதூர வெளிச்சத்தில்
ஆசை பொழிவோம்
ஆழியின் அரவணைப்பில்..?
மலர் சூடி
பாவை நான் அழகு பதுமையாக
தெருக்களில் பயணிக்க
உன் வருகை வேண்டி
நான் கிறுக்கிய பெண் வழி கீற்றுக்கள்..?
#கிறுக்கல்கள்சூழ் 🖤
அவன் ஒத்தையிலே
உலகம் மறந்து
நிராயுத பாணியாய்
ஆளற்ற சாலையில்
திக்கு விஜயம் செய்து வந்தான்
கற்பனை உலகத்தின் அரசனாய்
"இது என்னவனுக்காக
நான் கவி இயற்றும்
ஒரு பெண் வழி தேடல்..?.."
ஆதி முதல் அந்தம் வரை
உச்சி குளிர பறை சாற்றும்
பகுத்தறிவாளன் அவன்..?
நெஞ்சு குழியில்
கவுளி கத்தும் இசையை
என்னுள் உணர வைத்த
உன்னதமானவன் அவன்..?
என் கொட்டம் அடங்க
இதழ் முத்தம் கொடுத்து
சொர்கப்புறம் கூட்டி சென்ற
கொடுங்கோள் அரசன் அவன்..?
சொற்களிலே வித்தகியாய்
சொல்லில் அடங்கா பேரழகியாய்
தமிழ் சொற்களின் பரம்பொருளாய்
என்னை உருவகம் செய்த
ஊர் மெச்சும் கவிஞன் அவன்..?
என் மனதை புனைந்து
ஊடல் பொழுதில்
என்னிடம் இரவல் புரியும்
புகழ்வேந்தன் அவன்..?
அடை காக்கும் கோழியின்
கருவறை தவிப்பு போல்
நான் தவித்த வண்ணம்
சீம்பாலின் வாசம் போன்ற
கண்ணன் அவனின் சிரிப்பலைகளில்
ராதை என் மனம்
துள்ள செய்தவன் அவன்..?
அவன் பற்றிய தேடல்களில்
நாழிகை கடந்து
நாற்பொழுது கடந்து
நான் எண்ணும் வேளையில்
என் நினைவுகளுடன்
அவன் ஒத்தையிலே தனியாய்
ஆளற்ற சாலையில்
முடிசூடா அரசனாய்..?
#கிறுக்கல்கள்சூழ் 🖤
வான் மேகங்கள் வானவில் நிறமான ஏழ் வண்ணத்தினால் ஆன VIBGYOR நிறத்தில் களவு கொண்டு பிண்ணி பிணைந்து இருந்தது,
சிற்றுயிர்கள் ஆங்காங்கே ரீங்காரம் எழுப்பிய வண்ணம் இசை மீட்டிக்கொண்டிருந்தது
இக்கனவு தேசமான இங்கு தான் அவளின் அவன் வாழ்ந்து கொண்டு இருக்கிறான்
தனிமைக்கான தேடலை விரும்பும் அவன் இருள் வாழ்க்கையில் இரவு நேரங்களில் ஓர் பௌர்ணமி நிலவின் வெளிச்சம் தென்படும், அதுவே அவனின் மனம் அமைதியடைய செய்யும் ஒரே ஆறுதலுக்கான இரசாயனம் இல்லா மாற்று மருந்து,
தண்ணீர் கமலம் வாடும் வேளையில் அவன் அவள் அருகினில் இல்லை என்பது தான் அவர்கள் கண்ட பிரிவு என்னும் பிரிவுடைமை,
அவன் பயணிக்கும் கடைசி எல்லையின் முற்று வரை வெண்பனி அவளின் தீரா இதய துடிப்புகள்,
இடையில் சோர்ந்து போகும் தருவாயில்
சிறு புன்னகை பொழிந்து இதழோரம் கதை பேசும் அவளின் இதழ்கள் பற்றிய எண்ண ஓட்டங்கள்
நிலை குலைந்த தொடரி போல் தொடரும்,
அவனின் ஆகச்சிறந்த போதையானது காற்றில் மிதந்து வரும் அவள் மீதான அவளின் வேர்வை துளியின் வாசனையோடு இணைந்த வாசனை திரவியங்கள்,
கற்பனை தேசத்தின் கற்பனை இல்லா களஞ்சியமே
பனி இரவிலும்
முழு மதியிலும்
ஒத்தை அடி பாதையிலும்
ஒரு கொடி நடை அவளோடு அவன் செல்ல வேண்டும்
அவள் பாதங்கள் மண் மீது நடக்க துயர் ஏற்பட்டால்
கற்பனை தேசத்தின் குளிரூட்டப்பட்ட மகிழுந்தில் கூட்டி செல்வான் எப்பாடு பட்டாலும் எந்நிலை சென்றாலும் எவ்வினை நிகழ்ந்தாலும்..?
பயணங்கள் தொடரும்..? 🖤
பொதுவாகவே நிலா முற்றம் தெருவோர விளக்கு போல் முத்தமிடும் அவள் வீட்டின் வாயிலில்
ஆம், அவள் பெயர் "சந்திரவதனா"
பெயருக்கு ஏற்றார் போல் மனதிலும் தெளிவான முழுமதி
நிலா முற்றம் முத்தமிடும் வாயிலில் சந்திரவதனா தினமும் மாலை குழந்தைகளுக்கு க்ளாசிக் வகையறையில் நிமிர்ந்த வீணை கொண்டு பாடல் வகுப்பை துவங்குவாள்
அன்றைய வகுப்பு "கண்ணன் - ராதை" இருவருக்கும் உண்டான காதல் மற்றும் பிரிவினை நாட்களை பற்றி எடுத்துரைக்கும் "யமுனை ஆற்றிலே" பாடல்,
அவள் விரல்கள் வீணையை மீட்ட
கண்களில் கண்ணன் வருவான் என்ற தேடல்களுடன்
இதழ்களில் மழலைகளை நோக்கி ஓர் பொய்யா சிரிப்புடன் பாடலை தொடங்கினாள்,
அவள் :
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடு தான் ஆட
பார்வை பூத்திட பாதை பாத்திட பாவை ராதையோ வாட
மழலைகள் :
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடு தான் ஆட
பார்வை பூத்திட பாதை பாத்திட பாவை ராதையோ வாட
அவள் :
இரவும் போனது பகலும் போனது மன்னன் இல்லையே கூட
இளைய கன்னியின் இமைத்திடாத கண் இங்கும் அங்குமே தேட
மழலைகள் :
இரவும் போனது பகலும் போனது மன்னன் இல்லயே கூட
இளைய கன்னியின் இமைத்திடாத கண் இங்கும் அங்குமே தேட
அவள் :
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ
பாவம் ராதா
மழலைகள் :
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடுதான் ஆட
அவள் :
பார்வை பூத்திட பாதை பாத்திட பாவை ராதையோ வாட
அன்றைய பகுதியான பாடல் வகுப்பு முடிந்து மழலைகள் தங்கள் வீடு திரும்பினர்
சந்திரவதனா ஒரு விதமான ஜென் நிலையிலிருந்து இன்னும் வெளிவந்த வண்ணம் இல்லை
இரவுகள் தங்கள் இருளை சூழ
தவளை போன்ற சிறு உயிரினங்கள் தங்கள் ரீங்கார இசைகளை எழுப்ப
தன் அறைக்கு சென்று தாழிட்டாள்
ஆம் !!
அவளும் மனதளவில் ஒரு ராதை தான்
அவளும் ஒரு கண்ணனை ஆயர்பாடியில் தான் தொலைத்த நாட்களை எண்ணி இன்னும் அவன் வருவான் என்ற நம்பிக்கையில் தேடி கொண்டு தான் இருக்கிறாள்
உறக்கம் கண்களில் துளி அளவும் வரவில்லை
தலையணை ஒன்றே அவளின் தற்காலிக ஆறுதல்
ராதை கண்களில் நீர் கசிந்தன
ஆயர்பாடியின் சாலைகள் வெள்ளத்தில் மிதந்தன
இரவும் கடந்தது
பகலும் கடந்தது
பல நாட்களாக..?
என்றோ ஒரு நாள் தனக்கான தனக்கு மட்டுமான கண்ணன் வருவான் என்ற நம்பிக்கையில் இளையக்கன்னியான சந்திரவதனா(ராதை) யமுனை ஆற்றின் படித்துறையில் தன் வீணையுடன் மன்னனுக்காக காத்திருக்கிறாள் விழி எங்கும் தீரா தேடல்களுடன்..?
பயணங்கள் தொடரும்..? 🖤
அவர்களின் உரையாடல்கள் உள்ளம் கனிந்து ஒரு சேர இணைந்தது
அதன் வெளிப்பாடு இருவரும் தங்கள் கருத்துகளை கண்ணோடு கண் நோக்கும் படி பரிமாறிக்கொண்டனர்
ஒரு விலை உயர்ந்த குழம்பிக்கடையின் உள்ளே இருவரும் நுழைகின்றனர் அவன் திறந்துவிட்ட கதவின் வாயிலாக..? (தன் காதலியை அந்த ஆண்
'என் பாதுகாப்பில் நீ' என்று வரவேற்கும் படலம் இங்கே)
இருக்கையில் இருவரும் அமர்ந்து இரு குழம்பிகளை வாங்கி அருந்துகின்றனர் கண்கள் நான்கில் மௌன மொழி புரிதல் என்னும் கூற்றிற்கு ஏற்றார் போல் (அவள் கண் பார்த்து பேசும் ஒரு ஆணின் பேராண்மை இங்கே)
கூந்தல் நெளிவை ஆயிரம் தடவை சரி செய்து அவள் இடது புற காதின் இடைப்பாட்டுக்குள் தஞ்சம் புகுத்தி வைப்பாள்
ஆனால் என்ன பலன்..? அவள் பேச்சை ஒரு போதும் அவளின் நீண்ட முடிகளானது கேட்காமல் கோபம் கொண்டு சிவக்கும் மூஞ்சூர் எலி போன்ற வடிவமைப்பிலான மூக்கின் முன் தடம் புரண்டு விழுகின்றது (அவனின் அவளை அவன் ரசிக்கும் தருவாய் இங்கே)
பின்னொரு காலத்தில் என் மடி மேல் சாய்ந்து இளைப்பாறி கொண்டாள் அவளின் காதல் என்னும் ஆகச்சிறந்த போதையில்
அவளை மடி மீது தாங்கி அவன் கை என்னும் விசிறியை கொண்டு தலை கோதினான் (அவள் தேடிய அன்பு அவனின் விசிறி வாயிலாக உணரப்பட்ட தருணம் இங்கே)
இதெல்லாம் அவன் கனா கண்ட அவளுடனான ஏழேழு ஜென்மம் போற்றும் கானகம் போற்றும் காதல் நாடகங்கள்,
"மணவாளனின் கனவுகள்" என்னும் அவன் எழுதிய புத்தகத்தில் அடங்கிய ஒரு புனைக்கதை இது
கதை முற்று பெரும் தருவாய் யாதெனில்..?
இருவரும் வேறு வேறு திசை நோக்கி சென்றனர்
காலத்தின் கட்டாயத்தில் பிரிக்கப்பட்ட இருவரின் மன நிலைப்பாடும் ஒரே நேர்கோட்டில் அமையப்பெற்றவை போல்
"பூங்காற்றே நீ வீசாதே
நான்தானிங்கே விசிறி" என்று காற்றிற்கு கூட சொந்தம் கொண்டாட முடியாத படி அவளை தன் அரவணைப்பின்(விசிறி) மூலம் மூச்சுக்காற்றில் கலந்த வண்ணம் தினம் தினம் கனாவில் கண் இமைக்காமல் நொடி பொழுதும் காத்துக்கொண்டிருந்தான் அவளின் அவன்
பயணங்கள் தொடரும்..? | விசிறி
இந்த நிலத்தின் மீது தான் நம் சிநேஹம் உருவகம் கண்டது
இந்த நிலத்தின் மீது தான் நம் முதல் சந்திப்பு
அரங்கேறியது
இந்த நிலத்தின் மீது தான் நம் முதல் காதல் அன்போடு மலர்ந்தது
இந்த நிலத்தின் மீது தான் நம் முத்தங்கள் முக்தி நிலை பெற்றது
இந்த நிலத்தின் மீது தான் நம் பிரிவு விழியோரத்தில் கடலாக அலை பாய்ந்தது
நான் செல்கிறேன் எனக்கான தேடலை தேடி
வழி நெடுவிலும் தெருவோர கடைகள்
உன் பெயர் சுமந்த விளம்பர பலகையுடன்
நிழலாடும் உன் ஞாபகங்கள் என் நெஞ்சில்
சிரித்துக்கொண்டேன் என்னுளே என் மனப்போக்கில்
போ என்னும் சொல்லிலும் வா என்ற புரிதலை உண்டு செய்தவள் நீ
ஆதலால் தான் என்னவோ நாம் பிரிந்து விட்ட போதிலும் வருவாய் என்ற தீரா நம்பிக்கையுடன் நான்
("வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்" -
இது ஆண்டாள் கண்ட கனவு )
ஆயிரம் முத்தங்கள்
ஆயிரம் வாத்தியங்கள்
இதற்க்கிடையே ரீங்கார ஒலிகளின் ஓசையும்
உன்னை சூழ்ந்து வரும்
என் எதிர் நீ வரும் வேளையில்
தூய்மை பெற்ற ஆண்டாள் கனவின் மறு உருவம் இந்த நிலத்தில் நாம் உதிர்த்த எண்ணில் அடங்கா லோகம் போற்றும் நம் காதல்
வான் மேகங்கள் வெட்கப்படும்
வருணன் நாம் சங்கமித்த இந்நிலத்தை முத்தமிடுவான்
உயிர்கள் மண் வாசனை நுகருவார்கள்
மழலைகள் கூத்தாட்டம் போட்டு மகிழ்வர்
இந்த அற்புதங்கள் அனைத்தும் நிகழ்ந்தே தீரும்
என்றோ ஒரு பிறவியில் நாம் இணையும் அந்நாளில்
மறக்காதே கண்மணி
மாநிலம் போற்றும் படி வாழ்ந்தோம் ஒரு நொடி
இன்னல்கள் விலகும்
இன்பங்கள் உன்னை வந்து சேரும்
இக்கலியுலகின் அத்தியாயத்தின் படி
அரசியே நல்வாழ்வு நினைக்கும் என் மனம்
உடல் உயிர் உன் மனம்
(பயணங்கள் தொடரும்..?)
✨️❤️
தொலை தூர உறவில்
காதல் வயப்பட்டவர்கள்
இப்பிரபஞ்சத்தின் சபிக்கப்பட்ட ஜீவ ராசிகள்..!!!
----------------------------------
~
வறண்ட நிலம் என
தூக்கிவீசப்பட்ட நான்
யாரோ ஒருவரின் மனதில்
வானம் பார்த்த பூமியாய்
இருந்து விட்டு போகிறேன்.
-------------------------------------------
❤️
அமைதியின் போர்வைக்குள்
இரவுகள் இருப்பதால் இங்கு
நிறைய பேர் இரவுகளை தங்களது
Comfort Zone ஆக பார்க்கிறார்கள்..!!!
')
----------->
❤️
காதலாக இருக்கும் வரை நல்லது
அது எப்போது ஆகப்பெருங்காதல்
ஆகிறதோ அங்கு தான் வலியும்
வேதனையும் அதிகமாக மாறுகிறது,
விளைவு..?..!!!
அவள் காதல் செய்தாள்,
நான் ஆகப்பெருங்காதல் செய்தேன்!
-------------->
❤️
எதற்காக இத்தனை எழுத்துக்கள்..?
சிலர் நான் சொல்லுவதை கேட்டால்
சிரிப்பார்கள்,சிலர் நான் சொல்லுவதை
கேட்டால் கேளிக்கை செய்வார்கள்,
இன்னும் சிலர் நான் சொல்லுவதை
கேட்டு என் மீது கருணைப்படுவார்கள்,
எதற்காக இத்தனை பேரிடம் சென்று
நான் இவற்றையெல்லாம் சொல்ல
வேண்டும் என்று எடுக்கப்பட்ட முடிவு
தான் என் எழுத்துக்கள்,
மகிழ்ச்சியோ துன்பமோ அது
என்னுடனும் என் எழுத்துக்களுடன்
மட்டுமே இருந்துவிட்டு போகட்டும்,
"நான்" என்பதே கடல் அலைகளை
போன்ற ஒரு சுழற்சி முறை தானே.
')
---------->
ஒருத்தர் கிட்ட நீங்க Comfort ஆ இருக்க
முடியுதுன்னா உங்க லைஃப்போட
"Go to Person" நிச்சயமா அவங்க தான்,
Because அந்த Comfort எல்லார்கிட்டையும்
நமக்கு வந்துறாதுல,இதத்தான் "Beauty of Relationship" ன்னு சொல்லுறாங்க.
----------->
💙
இந்த பாட்டு உனக்கு பிடிக்கும்ல,
இந்த படம் உனக்கு பிடிக்கும்ல,
Just இப்போ தான் எதற்சையா
டிவில பார்த்தேன் உன் ஞாபகம் வந்தது
அதான் உன்கிட்ட சொல்லலாம்ன்னு
உடனே உனக்கு மெசேஜ் பண்ணேன்,
எத்தனை பேரு இப்படி ஒரு உறவ
இங்க சம்பாதிச்சுருப்பிங்கன்னு
தெரியாது,ஆனா அப்படி ஒருத்தங்க
இருந்தா "You are Really Blessed One",
Simple,நீங்க Really Blessed One ஆ
இல்லாட்டி கூட உங்களுக்கு
பிடிச்சவங்களுக்கு நீங்க அது
மாதிரி இருக்க முயற்சி செய்யுங்க,
May Be Later,உங்களுக்கும்
அது Reflect ஆக High Chances இருக்கு,
- எல்லாம் ஒரு Hope தான் ')
--------->
💚🌻
முடிந்தால் உங்களை பற்றி
சிந்திப்பவர்களை காசு பணம் போல் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள்,
புத்தகத்தின் எழுத்தானது எத்தனை
வருடங்கள் கழித்து படித்தாலும் அதன்
தன்மை எப்படி நமக்குள் ஒரு உன்னத
உணர்வை ஏற்படுத்துகிறதோ அதை
போல் நீங்கள் சேர்த்து வைத்தவர்கள்
உங்களை ஏதோ ஒரு வகையில் பரவசம்
அடைய செய்துகொண்டே இருப்பார்கள்.
!!!!!
------------->
📌
சாலையில் கீழே கிடக்கும்
கல் என்பது கடிக்க வரும் நாயின் மீதும்
எறியப்படலாம்,அதே நேரத்தில் தீண்டாமை
தலை தூக்கும் போது அடக்குமுறைக்கு
எதிராக சமூகத்தின் மீதும் எறியப்படலாம்
ஆக மொத்தம் நிச்சயமாக எறியப்படும்.
------------------>
🌻
இயல்பாக இருக்கிறேன் என்றான்
ஆனால் அவன் கண்கள் இயல்பாக
இல்லை,ஆனாலும் எங்கள் முன்னே
விழுந்து விழுந்து சிரிக்கிறான் எங்களின்
சந்திப்பின் போது,
சந்திப்பின் முடிவில் அவர் அவர் இடத்தை
நோக்கி புறப்படும் போது மீண்டும் பழைய
நிலைக்கு அவன் திரும்பி விடுவான்
அல்லவா என்பது மட்டும் தான் அவன்
கண்களை பார்க்கும் போது என் மனதில்
கேள்வியாக மீண்டும் மீண்டும்
கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
----------->
🌻
கொஞ்சம் காஃபி
சுற்றி சில நண்பர்கள்
அங்கே நிகழும் அரட்டை,
காயப்பட்ட நான் என்னை
மீண்டும் புதுப்பித்துக்கொள்ள
இவைகளும் இவர்களுமே
போதுமானதாக இருக்கிறார்கள்.
------------->
🌻
காதல் சில நேரம் நம்மை தேடியும் வரும்,
சில நேரம் நாம் அதை தேடியும் செல்வோம்,
ஆனால் எதுவாக ஆயினும் அது காதல்
அவ்வளவு தான்,
அது நம்மை தேடி வரும் போதும் சரி,
நாம் அதை தேடி செல்லும் போதும் சரி
அதன் ஆரம்பமும் முடிவும் ஒருவனுக்கு
எப்படி வேண்டுமானாலும் எழுதப்பட்டு
இருக்கலாம்,
அது ஒருவனின் ஜாதகத்தையோ
அல்லது தலை எழுத்தை வைத்தோ
எழுதப்பட்டது அல்ல,அந்த காதலில்
அவனது பாதை ஒரு இடத்தில் முடியும்
அது எங்கே முடிவாக போகிறது
என்பதை சார்ந்தே அது இருக்கும்,
அந்த பாதை முடியும் இடத்தில் தான்
அந்த காதல் அவனுக்கு எப்படி
அமைந்தது என்கிற வரையறுக்கப்படாத
உண்மை அவனுக்கு ஒரு நாள் புரிய வரும்,
அந்த காதல் உன்னை அன்பாக பார்த்துக்கொள்ளும்,சில நேரங்களில் புன்னகையின் மிகுதிக்கு உன்னை கொண்டு செல்லும்,இன்னும் சில நேரம் கண்ணீரில் உன்னை முழுவதுமாக மூழ்கடிக்கும்,
So,Depends Upon the End ன்னு சொல்லலாம்,
இங்க எல்லாத்துக்கும் ஒரு முடிவு இருக்கு
அந்த முடிவு உன்னோட காதல்ல உனக்கு
எப்படி அமையப்போகுதுன்ற சக்கரத்துல
தான் இங்க எல்லாமே இயங்கிட்டு இருக்கு.
என்னுடைய ஆராய்ச்சியின் முடிவில்
ஒருவனின் வாழ்வில் காதல் இதுவே.
!!!!!
-------------->
Comments
Post a Comment