Skip to main content

குடைக்குள் மழை

✨️💚

ரீனா : ஹே ஆர் யூ தேர்..?

விக்ரம் : இருக்கேன் ரீனா, என்ன திடீர்னு மெசேஜ், முக்கியமா எதுவும் சொல்லணுமா..?

ரீனா : ஹே, அதெல்லாம் இல்ல, ஏன் ஒர்க்ல இருக்கியா..?

விக்ரம் : இல்ல, வீட்டுக்கு வந்துட்டேன், Earlier Appointments So, முடிஞ்சு பா!

ரீனா : ஒகே, கொஞ்சம் மனசு சரி இல்ல அதான் உன்கிட்ட பேசலாமேன்னு கால் பண்ணேன்..?

விக்ரம் : என்ன ஆச்சு..? ஆர் யூ ஓகே..?
சொல்லு ரீனா Any Issue..?

ரீனா : ஹே,Just Mood Swing ஒன்லி!
நீ ஃபிரீன்னா சொல்லு Let's Walk Together in Beach! உனக்கு தெரியும்ல எனக்கு பீச் வாக்ன்னா ரொம்ப பிடிக்கும், So நீ ஃபிரீன்னா வர முடியுமா விக்ரம்..?

விக்ரம் : சரி, ஈவினிங் 6 மணிக்கு பீச்ல நம்ம வழக்கமா மீட் பண்ணுற அந்த பட்டர் பன் கடைக்கு வந்துரு ரீனா, நானும் வந்துடுறேன்,

ரீனா : தேங்க்ஸ் விக்ரம்!

விக்ரம் : தேங்க்ஸா..? No More Formalities!
உன்னோட தேங்க்ஸ்ல நான் பூரிச்சு போய்ட்டேன்,சிரிப்பு காட்டாம வா ரீனா!

ரீனா : ஹ்ம்ம் டா!

* இடம் : கடற்கரை
* நேரம் : மாலை 6 மணி

விக்ரம் : ஹே!
என்ன ஆச்சு ரீனா திடீர்னு..?

ரீனா : அதெல்லாம் ஒன்னும் இல்லடா,
Please Give Sometime நானே சொல்லுறேன் போறதுக்குள்ள!

விக்ரம் : Fine! ஹ்ம்ம்,
உனக்கு பட்டர் பன் சொல்லட்டுமா..?

ரீனா : இல்ல விக்ரம், சாப்பிடுற மூட் இல்ல!

விக்ரம் : ஹே, Come On! எப்பவுமே உன்னோட சொந்த விருப்பு வெறுப்புகள இப்படி Foods மேல காட்டாத ரீனா! உனக்கு ரொம்ப பிடிக்கும்ல இந்த பட்டர் பன்,மனசு கனமா இருக்கப்போ பிடிச்ச Foods சாப்பிடுறனால கூட Sometimes U Feel Better பா!

ரீனா : சரி எனக்கும் சேர்த்து சொல்லு,
ஆனா ஒன்னு இல்ல ரெண்டு!

விக்ரம் : தட்ஸ் மை ரீனா! Good...

* (இடி சத்தம் விண்ணை பிளக்கிறது)

விக்ரம் : இதென்ன திடீர்னு மழை வர மாதிரி இருக்கு, கருமேகம் வேற சூழ்ந்துருச்சு, ரீனா சீக்கிரம் சாப்பிடு,Shall We Go Someother Place Like Cafe Nearby ல!

ரீனா : ஏன் விக்ரம்!
மழைல நனைய பிடிக்காத என்ன..?

விக்ரம் : பிடிக்கும் தான்!
பட்,உனக்கு ஓகே னா எனக்கு No Issues,
கொட்டுற மழைல பீச் வாக், இன்னும் சொல்ல போனா அந்த பீச் வாக் பென்குயின் பறவைகள் நடந்து போற மாதிரி ரொம்ப மெதுவா நடந்து போனா அதுல உள்ள Vibe இன்னும் நல்லாருக்கும்,

ரீனா : Your Wish Fulfill பண்ணிடலாம்
வா போவோம்!

*கடற்கரையில் இரு மனங்கள் ஒன்றோடு ஒன்று பெருமழையுடன் பேசிகொண்டிருக்கும் நேரம்..!!!

ரீனா : இன்னக்கி Day, என்ன
ரொம்பவே Down ஆக்கிருச்சு விக்ரம்!

விக்ரம் : ஷேர் பண்ணலாமே!
அதுக்கு தானே இந்த கொட்டுற
மழைல நனைஞ்சுட்டு இருக்கோம்!

ரீனா : நம்ம பேசி ரெண்டு வருஷம் ஆச்சு நினைக்கிறேன்,சின்ன சின்ன ஈகோ, அது அப்படியே பெருசா உருவெடுத்து ரெண்டு வருஷத்த நம்மகிட்ட இருந்து எடுத்துக்குச்சுல,பட் நீயும் போடின்னு போயிட்ட, நானும் போடான்னு போயிட்டேன்,ஆனா பக்கத்து பக்கத்து பிளாட்ல தனியா பேசாம ஒரு Neighbours மாதிரி ரெண்டு வருஷம் ஒரு லைஃப் வாழ்ந்துட்டோம் After நமக்கு Marriage ஆகி மூணு வருஷ Happy லைஃப்க்கு அப்பறம், So 3 Years Happy, 2 Years Just Passing Clouds - ன்னு சொல்லணும், பட் நம்ம செஞ்ச ஒரு நல்ல விஷயம் Divorce அப்ளை பண்ணல, அது நம்ம ரெண்டு வயசு பொண்ணோட லைஃப்க்காக நம்ம பேசிக்கிட்ட Mutual Understanding, எப்போ எல்லாத்தையும் மறந்து ஒரு New life கிடைக்குதோ அன்னக்கி ரெண்டு பேரும் Again ஒரு லைஃப் ஸ்டார்ட் பண்ணனும் & அது அதுவா அந்த மொமெண்ட் நடக்கணும்ன்னு பேசி வச்சிருந்தோம்ல விக்ரம் அந்த மொமெண்ட் இதான்னு நான் நினைக்குறேன்,

விக்ரம் : என்ன ரீனா..?
எதனால இந்த சித்தாந்தம்..?
U Know Very Well, நம்ம ரெண்டு பேர் சைடுலையும் மிஸ்டேக்ஸ் இருந்துச்சு அது நம்ம ரெண்டு பேருக்குமே Mutual ஆவே தெரியும், திடீர்னு இந்த மொமெண்ட் இந்த Change க்கு என்ன காரணம்..?

ரீனா :

லைஃப்ல சில மொமெண்ட்ஸ்க்கு ரீசனே இல்ல விக்ரம், அதுவா மனசுல ஒரு தேடல உண்டு பண்ணும், அந்த தேடலுக்கான விடை கிடைக்குற இடத்துல தானே தேடணும் அதான்!

விக்ரம் :

After Marriage சில வருஷங்களுக்கு பிறகு எல்லாருக்குமே லைஃப்ல Up's & Down's வரும் Same நம்ம லைஃப்லையும், பட் அந்த சண்டை, அந்த குட்டி குட்டி ஈகோ அதெல்லாம் நான் பெருசா மைண்ட்ல ஏத்திக்கவே இல்ல, அதனால தான் நீ இன்னக்கி வர சொன்னோன யோசிக்காம வந்துட்டேன், எப்படியும் ஒரு நாள் இதோ உன் முன்னாடி உன்னோட தேடலுக்கான விடையா இப்படி கொட்டுற மழைல நனைஞ்சுட்டு நிப்பேன்னு I Know ரீனா!

ரீனா :

குடைக்குள் மழையாக
நிக்கிற விக்ரம்,நான் தானே உன் குடை!

விக்ரம் : ஹ்ம்ம்,
பட் மழை இன்னக்கி நிக்காது ரீனா
இன்னக்கி முழுதும் நீ குடையா சேவை செய்யணும் நினைக்கிறேன்!

ரீனா : அதுவும் (மழை)உன் காதல் மாதிரி தான் போல! 

* கடற்கரையில் இருவருக்கும் அருகே இருந்த அவிச்ச கடலை வண்டியில் உள்ள வானொலியில் பாடல் ஒலிக்கிறது இளையராஜா இசையில் யேசுதாஸ் மற்றும் உமா ரமணன் குரல்களில்,

---------->

பூபாளம் இசைக்கும்
பூமகள் ஊர்வலம்
பூபாளம் இசைக்கும்
பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே..!!!

---------->

Comments

Popular posts from this blog

The Journey of Solo - Title Poem

ஓம் நமச்சிவாய என்னும் மூலமந்திரத்தின் கருவாய் நீர்,காற்று,நெருப்பு,நிலம்  என்னும் நாற்பகுதிகளை இறைவன் சிவனை வைத்து மையப்படுத்தி இருக்கும் கதைக்களத்தின் ஒரு கவிதை நடை பயணம் இங்கு, " The Journey of Solo - Title Poem |  Bejoy Nambiar  " 1) நீர் - ( World of Shekhar )  அன்பே ஆயிரம் மழைத்துளிகள் என்னை நனைப்பது போல நீ என்னை நனைத்துக்கொள் நதியின் ஆழங்களில் நான் மூச்சு திணறுவது போல நீ என்னை தழுவிக்கொள் கடலின் பேரலைகள் கரையை தீண்டுவது போல நீ என்னை எடுத்துக்கொள் என்னை உன் கரங்களால் அணைத்துக்கொள்ளாதே உன் மனதால் இறுக அணைத்துக்கொள் அன்பின் தனிமையில் உனக்கு மரணம் இல்லை 2) காற்று - ( World of Trilok ) யுகாந்திரங்களின் கோபம் யுகாந்திரங்களின் இறுக்கம் யுகாந்திரங்களின் பொறுமை யுகாந்திரங்களின் தனிமை வந்துவிட்டது எல்லாவற்றின் மீதும் பெரும் புயல் ஒன்று இந்த காற்றை எதிர்த்து நடப்பவர்கள் யார்..? காலத்தின் புயலில் உதிரும் ஆயிரம் ஆயிரம் மலர்களில் ஒரு மலரல்லவா நீ..? அழிவின் தனிமையில் காத்திருக்க உனக்கு நேரமில்லை 3) நெருப்பு - ( World of Shiva ) வன்மத்தின் வனங்கள் பற்றி எரிகின்றன குருதியின

கிறுக்கல்களின் தொகுப்புகள்

வெள்ளிக்காப்பை சுழற்றினேன் சூடான காஃபியை அருந்தினேன் தலை முடியினை கோதி விட்டேன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன் ஆழ்மனதும் அனாதையாக இருந்தது எண்ணங்களின் ஓட்டமும் சீராக இல்லை யூடியுப் பக்கம் சென்றேன் அன்றைய தினத்தின் Trending காணொளிகள் ட்விட்டர் பக்கம் சென்றேன் நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே தள்ளு முள்ளு இன்ஸ்டாகிராம் பக்கம் சென்றேன் Bae Calls Me Chocobar என்றாள் கிளியோபாட்ரா ஹைக் பக்கம் சென்றேன் நட்டாஸா உரையாடலுக்கு எதிர்வாதம் செய்தாள் சரி, இது தான் இன்றைய தலைவிதி என்று முகப்புத்தகம் வந்து இதை பதிவு செய்தேன்..? - A Poem Without a Topic ❤ ---------------------------------------------------------- வாழ்க்கை இப்படியே போயிடுமா சார் என்பதில் தொடங்கி வாழ்க்கை ஒரு வட்டம் என்பதில் பயணித்து இவ்வளோ தான் சார் வாழ்க்கை என்பதில் முடிகிறது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நம்பகத்தன்மை நிறைந்த வாழ்க்கை..? -------------------------------------------------------- இந்த காஃபி ஷாப் சுவர்களின் இடையூறுகள் நம் நாவிதழ்கள் இடைபாடுகளிலும்..?..!! - வா ரயில் விட போலாம் வா  🖤 --