~ 💛 ~ சில பேருக்கு இசை மேல பைத்தியம் சில பேருக்கு ஓவியம் மேல பைத்தியம் சில பேருக்கு புத்தகம் மேல பைத்தியம் சில பேருக்கு காதல் மேல பைத்தியம் சில பேருக்கு குழந்தைகள் மேல பைத்தியம் இப்படி நம்மலோட பைத்தியமா ஒரு சில விஷயங்கள் நம்மை சார்ந்து இருக்கும் அது நமக்கு ஒரு வித தனிமையை கொடுக்கும் அந்த தனிமை கொடியதாக இருக்காது மிகவும் ஆழமான மிகவும் அழகான மிகவும் மென்மையான மிகவும் நம்பகத்தன்மையுள்ள ஒரு தனிமையாக அத்தனிமை இருக்கும், அத்தனிமையை நீங்கள் உணரும்போது லேசான ஈரப்பதத்துடன் கூடிய கடற்கரை மணல் போல் நம் மனசு சாந்தமான நிலையில் இயந்திரம் போல் சுழலாமல் ஒரு நிலையில் பக்குவமாய் இருக்கும், குல்முகர் மலர் பூத்துக்குலுங்கும் பூக்களில் வண்டுகள் மகரந்தம் தேடும் குயில்கள் ரீங்கார இசையினை மீட்டும் அந்தி நேர தென்றல் காற்று வீசும் இலையுதிர் காலம் நாழிகையை அழகாக்கும் இவ்வுலகம் பரந்து விரிந்து கிடக்கிறது இது நமக்கான தன்னை அறிதல் இது உங்களை உங்களுக்குள் தேடும் முயற்சி உங்களின் நாட்டத்தை வெளிக்கொண்டுவாருங்கள் முடிந்தவரை உங்கள் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை எழுத்துக்களாக ம...