Skip to main content

Describe About Her Shiva..?..!!

"அவ தான் இருக்கா இன்னும் என் வாழ்க்கைல"

என் ஒவ்வொரு செய்கைகளிளும் ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு நொடி பொழுதிலும்..!

நெடுதூர பேருந்து பயணம் செய்து கொண்டிருந்தேன் பாடலின் வரிகளின் வழியே அடி மனதில் ரணமாய் அமர்ந்து கொண்டாள்

ஒரு காதல் காட்சி பார்க்கும் போது எண்ணத்தில் கடலாய் பேரலைகளை வீசுகிறாள்

காதல் ஜோடிகளை பார்க்கும்போது தனிமையின் வெற்றிடத்தை உணர வைக்கிறாள்

மல்லிகை பூ மண்டியை கடக்கும் பொழுது அதன் நறுமணத்தால் அவள் பொன்னிற கூந்தலின் வாசத்தை சுவாசிக்க வைக்கிறாள்

ஒரு அம்மா தன் குழந்தையை முத்தமிடும் போது அவள் கொடுத்த நெற்றி முத்தத்தின் தாக்கத்தை என்னுள் விதைக்கிறாள்

பத்து பெண்களின் மத்தியில் ஒரு பெண் தன் கூந்தலை முன் எடுத்து காற்றில் அசைய விடுகையில் என்னவளாக அங்கு பிரதிபலித்தாள்

பள்ளிக்கு செல்லமாட்டேன் என்று அடம்பிடிக்கும் குழந்தையை பார்க்கும்போது அவளின் குழந்தை தனமான செய்கைகளை கண்முன் காட்சி படுத்தினாள்

சத்தியம் செய்து கொள்ளும் மனிதர்களை பார்க்கும்போது "நீ இல்லை என்றால் நான் செத்து விடுவேன்" என்று என் தலை மேல் அவள் செய்த சத்தியத்தை என் நெற்றிக்கண்ணில் நிறுத்தினாள்

கடுமையான பேச்சு வாதத்தில் ஈடுபடும் பொழுது அவளிடம் வார்த்தை ஜாலத்தில் தோற்று போன அந்த தருணத்தால் என்னுள் கலந்தாள்

இப்படி எல்லாவற்றிலும் அவளின் தாக்கத்தோடு என்னை அவள் நினைவுகளுடன் ஈடுபடுத்திக்கொண்டு என்னுடைய நாட்களை எண்ணி கொண்டு நகர்கிறேன்.

அன்று காதலர் தினம் – உலகமே காதலர் தினம் கொண்டாடிய தருவாயில் என் நண்பனும் அவனின் மணவாட்டியுடன் காதலர் தினத்தை கொண்டாடிவிட்டு வந்தான்.

விண்ணைதாண்டிவருவாயா படத்தின் சென்ட்ரல் பார்க் காட்சியை REWIND செய்து பார்த்து கொண்டிருந்தேன். என்ன ஆச்சு டா ? இன்னும் நீ அவள மறக்கலயா என்று கேட்டான். சிறிய புன்னகையுடன் “அவள் இறந்தால் தானே மறப்பதற்கு என்றேன்”
நானும் இதுவரை கேட்டதில்லை – நீயும் சொல்லியதில்லை

“Describe Her Shiva” என்றான்.

“Normal Height
Curly இல்லாம நல்ல நீளமான Hair கீழ வர
ஒரு மாதிரி சிரிப்பா இருக்கும் அவ நடக்கும் போது Tortoise தோத்து போயிடும் Funny Walk

நல்ல வாய்ஸ் அவளுக்கு
கெட்ட வார்த்தை பேசினா அவளுக்கு புடிக்காது

Grand இல்லாம Simple சுடிதார் தான் Use பண்ணுவா – அதுவே ஒரு வித்தியாசம் தான்
Bubbly,Simple,Makeup எல்லாம் போடமாட்டா – Very Beautiful – பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கும்
என்ன அவளுக்கு ரொம்ப புடிக்கும், Bike-ல என் கூட நிறைய சுத்திருக்கா.

என்கூட இருக்கப்ப படம் பாக்க அவளுக்கு புடிக்காது
நான் Kiss பண்ணிருக்கேன் அவள – நிறைய பேசுவா – ஒரு மதுரை வாசம் அப்படியே வீசும் பேச்சுல – அதுக்கே காலி நான்
வெறுமனே கட்டிபுடிச்சு மூணு மணி நேரம் உட்கார்ந்திருக்கேன் – அவ கால தொட்ருக்கேன்"

"அவ பேரு (____________) "

"அவ தான் இருக்கா இன்னும் என் வாழ்கையில - First Love மச்சான் அவ்வளவு ஈஸியா போகாது
ஆனா அவளுக்கு நான் இல்ல

ரொம்ப Childish ஆன Character நம்மளும் அதே மாதிரி பைத்தியமா காதலிக்கணும்-னு ஆசைபடுவா

எனக்கு புடிக்கும்னே அவ கூட நான் இருக்கும் போது Free Hair-ல இருப்பா

பைக்-ல உக்காரும் போது One Side தான் Mostly Prefer பண்ணுவா. என்னுடைய அடம்பிடித்தலின் காரணமாக Double Side-க்கு சம்மதிப்பாள்

DairyMilk கேட்கும் பெண்களின் நடுவே தேன் மிட்டாய்க்கு ஆசைப்படும் மழலை குழந்தை அவள்"

மச்சான் செம்மடா எனக்கே பொறாமையா இருக்குடா – “லவ்-வ லவ் பண்ணி பண்ணி இருக்கியே மச்சான் ! மறுபடியும் உன் வாழ்க்கையில் இந்த காதலர் தினத்தில் அவள் வந்தால் அவள நீ ஏத்துப்பியா ? மாட்டியா மச்சான் என்று கடைசியாக நண்பன் கேட்டான் !

" பிரிந்த காதலியை நினைத்து Feel பண்ணி அவள பத்தி இவளோ Describe பண்ணிருக்கேன் உன்கிட்ட. அவ என்கூட இருந்தப்ப நான் இப்படி எல்லாம் Describe பண்ணது இல்ல. So, “ I Love My Love “
அவளா ? காதலா? என்று ஒரு Option வந்தால் நான் பண்ணின என்னுடைய காதல் தான் மச்சான் எனக்கு பெருசு அவளை ஒப்பிடும் பொழுது. என் காதலுக்கு என்னுடைய சார்பில் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்-னு சொல்லிட்டு போய்டே இருப்பேன்டா"

Comments

Popular posts from this blog

The One - அந்த ஒருவன் 💚

💚 நிராகரிக்கப்பட்ட ஒருவன் புறக்கணிக்கப்பட்ட ஒருவன் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவன் அவமானப்படுத்தப்பட்ட ஒருவன், "வர சொல்லு அந்த ஒருத்தன..?" பல போர் படை இருக்கலாம் எதிர்பார்த்தது இவனத்தான் அந்தொருவன் வந்திருக்கான்டே..!!! "Temba" என்றால் "Hope" என்று பொருள், ஒட்டு மொத்த ஆஃப்ரிக்க மக்களின் நம்பிக்கை ஒளியாகவும் அவர்களின் ஏக்கத்திற்கு விடையாகவும் இந்த "டெம்பா" ஒரு வாழ்வியலை இங்கே புதுப்பித்து இருக்கிறான், எத்தனை அவமானங்கள் தான் 'இந்த ஒருவனுக்கு' நிகழ்ந்திருக்கிறது, உயரம் ரீதியாகவும்,நிற ரீதியாகவும் என இவன் கண்ட அவமானங்கள் அனைத்தையும் தாண்டி இன்று ஒரு இன மக்களையே இன்று இவன் தலை நிமிர செய்திருக்கிறான், எங்க கேங்க்ல ஒரு ரெண்டு பேர் மொரட்டு தனமான தென்னாப்பிரிக்கா ஃபேன்,நானும் என்னோட இன்னொரு முகநூல் நண்பரும் (Anjali Raga Jammy), எப்படி "கொம்பன்" யானைய பார்த்து காடே ஆடி போகுமோ அது மாதிரி நாங்க ரெண்டு பேரும் எங்க தலைவன் டெம்பா பாவுமா - வ "டெம்பன்" ன்னு செல்லமா தான் கூப்பிடுவோம், இந்த டெம்பனின் கைகள் ஒரு ந...

நிகரில்லாதவள்

அன்று ஊரெங்கும் நல்ல மழை வெளுத்து வாங்கிகொண்டிருந்தது, பெரு மழைக்கு ஒதுங்குவதற்காக அவள் அங்கே சாலையோரம் இருந்த மரத்தின் அடியில் சென்று நின்று கொண்டாள், அவளுக்கு அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் சூழ அவள் ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியை போல் அக்குழந்தைகளுக்கு நடுவில் நின்று அவர்கள் மழையில் செய்யும் சேட்டையை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள், இந்த மழை நிற்பதற்குள் இவள் யார்,இவள் பெயர் என்ன, இவள் சார்ந்து இருப்பவைகள் என சின்ன கதையுடன் ஒரு முன்னோட்டம் பார்ப்போம், இவளுக்கான அறிமுகம் இல்லாததால் இவளுக்கு இவளாகவே சூடிக்கொண்ட பெயர் இது, ஆம் இவளுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஆசிரமத்தில் தான் வளர்ந்து வருகிறாள்,அங்கிருப்பவர்கள் "குட்டி" என்று கூப்பிடுவார்கள் அதுவே இவளது பெயராகவும் மாறியது, பின் பள்ளி முடிந்து யாரோ பெயர் தெரியாத ஸ்பான்ஸர்ஷிப் மூலம் கல்லூரி படிப்பை முடித்து நல்ல ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்த பின் தான் இவளுக்கு ஒன்று புரிந்தது, நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள சரியான பெயர் கூட நமக்கு இல்லை என்று, எதிர்நீச்சல் படத்தில் வருவது போல் தன் அடையாளத்தை இச்சமூகத்தில் பதிக்...

குடைக்குள் மழை

✨️💚 ரீனா : ஹே ஆர் யூ தேர்..? விக்ரம் : இருக்கேன் ரீனா, என்ன திடீர்னு மெசேஜ், முக்கியமா எதுவும் சொல்லணுமா..? ரீனா : ஹே, அதெல்லாம் இல்ல, ஏன் ஒர்க்ல இருக்கியா..? விக்ரம் : இல்ல, வீட்டுக்கு வந்துட்டேன், Earlier Appointments So, முடிஞ்சு பா! ரீனா : ஒகே, கொஞ்சம் மனசு சரி இல்ல அதான் உன்கிட்ட பேசலாமேன்னு கால் பண்ணேன்..? விக்ரம் : என்ன ஆச்சு..? ஆர் யூ ஓகே..? சொல்லு ரீனா Any Issue..? ரீனா : ஹே,Just Mood Swing ஒன்லி! நீ ஃபிரீன்னா சொல்லு Let's Walk Together in Beach! உனக்கு தெரியும்ல எனக்கு பீச் வாக்ன்னா ரொம்ப பிடிக்கும், So நீ ஃபிரீன்னா வர முடியுமா விக்ரம்..? விக்ரம் : சரி, ஈவினிங் 6 மணிக்கு பீச்ல நம்ம வழக்கமா மீட் பண்ணுற அந்த பட்டர் பன் கடைக்கு வந்துரு ரீனா, நானும் வந்துடுறேன், ரீனா : தேங்க்ஸ் விக்ரம்! விக்ரம் : தேங்க்ஸா..? No More Formalities! உன்னோட தேங்க்ஸ்ல நான் பூரிச்சு போய்ட்டேன்,சிரிப்பு காட்டாம வா ரீனா! ரீனா : ஹ்ம்ம் டா! * இடம் : கடற்கரை * நேரம் : மாலை 6 மணி விக்ரம் : ஹே! என்ன ஆச்சு ரீனா திடீர்னு..? ரீனா : அதெல்லாம் ஒன்னும் இல்லடா, Please Give Sometime நானே சொல்லுறேன் போ...