❤️ பார்க்கும் எல்லாவற்றையும் எளிமையாக பார்க்க பழகு, நீ எளிமையாக இருக்கும் போது கிடைத்த அனுபவங்களும் அலாதி இன்பமும் நீ கோடி ருபாய்க்கு அதிபதி ஆனாலும் மீண்டும் கிடைக்காது, ஆடம்பரம் தவறு என்று சொல்லவில்லை,ஆனால் எளிமை உனது மேன்மைக்கான அடையாளம், எளிமை பல நேரங்களில் பலம்,பலவீனம் என இரண்டு விதத்திலும் பிரதிபலிக்கும், அது காண்போரின் மனநிலையே, எளிமைக்கான குரல் கூட தென்னகமெங்கும் இன்னும் பறையிசையாக எட்டுத்திக்கும் ஒலித்து கொண்டு தான் இருக்கிறது, எளிமையாக இரு எளிமையாக பழகு எளிமையாக எழுது அவ்வளவு ஏன்..? உனக்கான காதலை கூட எளிமையாக காதலித்து பார், இங்கு படைக்கப்பட்ட எல்லாமும் உனக்கானது!
வாசிப்பை நேசிப்போம்