Skip to main content

Posts

Showing posts from January 8, 2019

ஹாரிஸ் என்னும் 90's kids - களின் தீரா காதலன்..?

90's Kidsகளுக்கு பத்து வயது கடந்து முகத்தில் மீசை துளிர் விடுமா என்று ஏங்கிய பருவம் அது, ரஹ்மான் என்னும் இசைப்புயல் தமிழ்சினிமாவை செங்கோல் கொண்டு ஆட்சி செய்த காலமும் அது தான், பிரஷாந்த் நடிப்பில் வந்த மஜ்னு திரைப்படத்தின் பாடல்கள் மட்டுமே வெளிவந்த தருணம் அது, வானொலி எங்கும் பாடல்கள் பட்டையை கிளப்புகிறது, குல்மோஹர் மலரே பாடல் ஆல்பத்தின் Top Notch - ரஹ்மான் இசை என்று மனதில் பதிந்தது, காலங்கள் கடந்தது..? பிப்ரவரி 2001-இல் கெளதம் மேனன் என்னும் ராஜீவ் மேனனின் சிஷ்யன் இயக்கிய மின்னலே என்னும் படம் திரைக்கு வருகிறது,மின்னலே தீம்,வசீகரா இரண்டு பாடல்களை தங்களின் மொபைலில் ரிங்டோன் வைக்காதவர்கள் இல்லை,ஆல்பம் பட்டி தொட்டி எங்கும் ரீச் ஆனது,படம் வந்து மூன்று நான்கு வருடங்களுக்கு பின்னரும் Mechanical Engineering Student - னா ஒரு Fire வேணாம் என்று துவங்கும் Maddy Maddy BGM கல்லூரி மாணவர்களிடம் ப்ளூடூத் வழியே மாறி மாறி அனுப்பப்பட்டது படமும் மிகப்பெரிய வெற்றி, இசை Harris ஜெயராஜ் என்று இங்கிலீஷ் கலந்த தமிழில் டைட்டில் கார்ட் வரும், அங்கு தொடங்கிய பயணம் ஒரு இசை கலைஞனாய்..? முதல் படமாக வரவேண்டிய