Skip to main content

ஹாரிஸ் என்னும் 90's kids - களின் தீரா காதலன்..?

90's Kidsகளுக்கு பத்து வயது கடந்து முகத்தில் மீசை துளிர் விடுமா என்று ஏங்கிய பருவம் அது, ரஹ்மான் என்னும் இசைப்புயல் தமிழ்சினிமாவை செங்கோல் கொண்டு ஆட்சி செய்த காலமும் அது தான், பிரஷாந்த் நடிப்பில் வந்த மஜ்னு திரைப்படத்தின் பாடல்கள் மட்டுமே வெளிவந்த தருணம் அது, வானொலி எங்கும் பாடல்கள் பட்டையை கிளப்புகிறது, குல்மோஹர் மலரே பாடல் ஆல்பத்தின் Top Notch - ரஹ்மான் இசை என்று மனதில் பதிந்தது, காலங்கள் கடந்தது..? பிப்ரவரி 2001-இல் கெளதம் மேனன் என்னும் ராஜீவ் மேனனின் சிஷ்யன் இயக்கிய மின்னலே என்னும் படம் திரைக்கு வருகிறது,மின்னலே தீம்,வசீகரா இரண்டு பாடல்களை தங்களின் மொபைலில் ரிங்டோன் வைக்காதவர்கள் இல்லை,ஆல்பம் பட்டி தொட்டி எங்கும் ரீச் ஆனது,படம் வந்து மூன்று நான்கு வருடங்களுக்கு பின்னரும் Mechanical Engineering Student - னா ஒரு Fire வேணாம் என்று துவங்கும் Maddy Maddy BGM கல்லூரி மாணவர்களிடம் ப்ளூடூத் வழியே மாறி மாறி அனுப்பப்பட்டது படமும் மிகப்பெரிய வெற்றி, இசை Harris ஜெயராஜ் என்று இங்கிலீஷ் கலந்த தமிழில் டைட்டில் கார்ட் வரும், அங்கு தொடங்கிய பயணம் ஒரு இசை கலைஞனாய்..?
முதல் படமாக வரவேண்டிய மஜ்னு இரண்டாம் படமாக வந்தது, அதுவும் ஆல்பம் ஹிட்,மூன்றாவது படத்தை சொல்லியே ஆகவேண்டும் 12B, மறைந்த இயக்குனர் ஜீவாவின் முதல் படமாக வந்தது, மிகவும் Intellectual ஆன ஒரு ரொமான்டிக் மூவியில் ஒரு இசையின் நாயகனாக ஹாரிஸ் ஸ்கோர் செய்து இருப்பார் பாடல்கள் முழுவதும்,
சாமுராய்,லேசா லேசா,சாமி,கோவில் என்று அந்த வருடம் வந்த நான்கு படங்களும் ஆல்பம் ஹிட், அது மட்டுமின்றி கமர்சியல் படமான சாமியில் இவர் செய்த பின்னணி இசை படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்தது,
பிறகு வெளிவந்தது காக்க காக்க கெளதம் மேனனின் இரண்டாவது படம், உயிரின் உயிரே பாடல் கல்லூரி இளைஞர்கள் இடையே தினம் தினம் முணுமுணுக்கப்பட்ட பாடல் அன்றைய காலக்கட்டத்தில், பின்னணி இசையும் ஒரு மெருகேறி காணப்படும் ஹாரிஸிடம்,
செல்லமே படத்தின் காதலிக்கும் ஆசை இல்லை பாடல் அன்றைய காதலர்களின் Anthem என்று சொல்லும் அளவிற்கு அப்படி ஒரு Catchy - ஆன Tune, தொட்டி ஜெயா பின்னணி இசையில் மனுஷன் அதகளம் செய்து இருப்பார்,
பிறகு வெளிவந்தது தான் உள்ளம் கேட்குமே, Complete Chartbuster ஆல்பம் என்று அடித்துச்சொல்லலாம்,அதுவும் கிளைமாக்ஸ் ஏர்போர்ட் காட்சியில் வரும் அந்த Classic ரிதமான பின்னணி இசையில் படம் ஒரு இசை இலக்கியத்துடன் பக்கா ரொமாண்டிக் ஆக முடியும்,
ஷங்கர் இயக்கத்தில் வந்த அந்நியன் பாடல்கள்,கஜினியின் சுட்டும் விழி சுடரே என்று நா.முத்துகுமாருடன் இணைந்து ஹாரிஸ் செய்த ஒரு Magical Moments,வேட்டையாடு விளையாடு ஆல்பத்தில் கவிஞை தாமரையின் வரிகளுக்கு மஞ்சள் வெயில் மூலம் பிரகாசிக்க செய்தது,பச்சைக்கிளி முத்துச்சரம் ஆல்பத்தில் கரு கரு விழிகளால் என்று ஒவ்வொரு கல்லூரியின் Culturals-இலும் Band இசையில் முதன்மை பாடலாக அரங்கேற்றியது,காதலர்களின் காதலை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நீ நான் மழை இளையராஜா என்ற பழமொழியை மாற்றி அமைத்த வண்ணம் வந்த உன்னாலே உன்னாலே ஆல்பம்,தாம் தூம் படத்தின் அன்பே என் அன்பே என்ற காதலின் சுவை உணர்த்திய ஆல்பமும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பறந்து வரும் இறகிற்கு கோர்க்கப்பட்ட பின்னணி இசையும் என்று படிப்படியாக தமிழ் சினிமாவில் கால் ஊன்றிய ஹாரிஷின் பொன்னான நாட்கள் அது,
அடுத்த Bucket என்றும் சொல்லும் அளவிற்கு Complete Chartbusters என்று Frame போட்டு படத்தின் பெயர்களை வீட்டின் ஆணியில் மாட்டிக்கொள்ளலாம், மிக சிறப்பான தரமான ஆல்பங்கள் உருவான காலம் அது,
வாரணம் ஆயிரம்,அயன்,ஆதவன்,எங்கேயும் காதல்,கோ,ஏழாம் அறிவு,நண்பன்,ஒரு கல் ஒரு கண்ணாடி,மாற்றான்,துப்பாக்கி என்று அத்தனையும் காலம் கடந்து ஹாரிஷின் பெயர் சொல்லும் காட்டுத்தீ போல் அனைத்து ஏரியாக்களிலும் சிதறவிட்ட ஆல்பம் என்று நிச்சயமாக சொல்லலாம்,துப்பாக்கி பின்னணி இசை இப்பொழுது வரை தளபதி விஜய்க்கு வந்த Top BGM-களில் ஒன்று,
இரண்டாம் உலகம்,என்றென்றும் புன்னகை,யான்,இது கதிர்வேலன் காதல் என்று ஹாரிஷின் கொடி அரைக்கம்பத்தில் பறந்த போது வந்த படம் தான் என்னை அறிந்தால், BGM சொதப்பிடுவாறு Form Out என்று பேசிய வாய் அனைத்தும் மூடும் அளவிற்கு அமைந்தது முதலில் வந்த Teaser BGM, பிதாமகன் சூர்யா சொல்வது போல் "உருட்டு அப்படி" அதே படத்தின் ஆல்பமும் விக்டர் BGM-மும் Extra Ordinary Level of Composition என்று சொல்லும் அளவிற்கு அன்றைய வருடத்தின் பெஸ்ட் என்று அடித்துச்சொல்லலாம்,பிறகு மீண்டும் கொஞ்சம் சரிவான காலங்கள், ஒரே மாதரியான Tune-கள் என்று கேளிக்கைகள் அவரை சுற்றி,பெரிதாக பேசப்படவில்லை கடைசியாக வந்த எந்த ஆல்பமும்,
Underrated BGM'S என்று சொல்லப்படும் அளவிற்கு இரண்டு காட்சிகளை ஹாரிஸ் அவர்களுக்கு மிகைப்படுத்தி சொல்லலாம்,
முதல் காட்சி :
Simran Proposing Scene : 12B
ஒரு விசில் கலந்த பின்னணி இசை சிம்ரன் வரும் காட்சிகள் முழுவதும் படமெங்கும் Travel ஆகும்,பூவே வாய் பேசும் போது பாடலிலும் முதன்மையான இசையாக அதுவே தனியாக தெரியும், அதிலும் அந்த இசைக்கோர்வையின் சப்தங்கள் அதை மட்டும் தனியே பதிவிறக்கம் செய்து உள்ளங்கையில் வைத்து காலம் முழுவதும் அந்த இசையை கொடுத்த ஹாரிஷை தாங்கலாம்,
இரண்டாம் காட்சி :
Shyam Farewell Speech Scene : உள்ளம் கேட்குமே
மெளனமாக ஆரம்பித்து பயணம் செய்யும் அந்த இசை அப்படியே ஒரு Peak அடித்து Horror ரகம் போல் ஒரு இசை நாதத்தின் உச்ச எல்லையில் முடியும்,அந்த இசையில் ஷ்யாம் சொல்லவரும் விஷயத்தை இசை வடிவில் ஒரு ரசிகனுக்கு Convey செய்யும் இசை மொழியை அழகியலாக நமக்கு கொடுத்தவர் ஹாரிஸ்,அந்த இசை முடிந்ததும் தொடங்கும் "ஓ மனமே" பாடலில் ஒட்டு மொத்த அழுகையும் நம் கண்களில் கண்ணீராக வெளிவரும் இன்று கேட்டாலும்,
பிறகு ஒரு பாடலாசிரியராக எங்கேயும் காதல் படத்தில் வரும் "குளு குளு வெண்பனி போல" பாடல் எழுதியதும் ஹாரிஸ் தான் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்,அது அந்த நேரத்தில் ப்ளூடூத்களில் சுற்றித்திரிந்த ரிங்கடோன்களில் ஒன்று,
ஒரு பாடகராக இன்னும் அவர் பாடல் மட்டும் பாடவில்லை என்று தான் நினைக்கிறேன், குரல் வளம் இல்லாத நடிகர்கள் கூட பாடல் பாடும் இந்த காலத்தில் ஹாரிஸ் என்பவர் ஏன் பாடவில்லை என்பது கேள்விக்குறி தான்..? இன்டெர்வியூக்களில் அவரின் குரலை நான் கேட்டிருக்கிறேன்,மிகவும் ஈரப்பதமான மணல் போன்று லேசாக இருக்கும்,
Software இல்லாத காலங்களில் கொடிகட்டி பறந்தது ராஜா சார் என்றாலும் Software காலத்தில் இசை மாறிய பிறகு Sound Clarity என்பது இசையமைப்பாளர்களுக்கு ஒரு சவாலாக இருந்தது, அன்றிலிருந்து இன்று வரை As a Sound Engineer-ஆக ஹாரிஸ் இசையில் இருக்கும் அந்த Crystal Clear Sound இன்று வரை வேறு எந்த இசையமைப்பாளர்களும் கொடுத்தது இல்லை என்று கற்பூரம் மேல் அடித்துக்கூட சத்தியம் செய்யலாம்,
வரணும்
பழைய பன்னீர் செல்வமாய் திரும்பி வரணும்,
90's Kids-களின் ஒரு தீரா காதலனாக..?
Such a Quality Content of Well Made Music as a Programmer
Thank You Very Much Sir For Your Music Journey With Us \m/
Special Mention :
Underrated BGM Part Idealogy : Balu Mahendran

Comments

Popular posts from this blog

The Journey of Solo - Title Poem

ஓம் நமச்சிவாய என்னும் மூலமந்திரத்தின் கருவாய் நீர்,காற்று,நெருப்பு,நிலம்  என்னும் நாற்பகுதிகளை இறைவன் சிவனை வைத்து மையப்படுத்தி இருக்கும் கதைக்களத்தின் ஒரு கவிதை நடை பயணம் இங்கு, " The Journey of Solo - Title Poem |  Bejoy Nambiar  " 1) நீர் - ( World of Shekhar )  அன்பே ஆயிரம் மழைத்துளிகள் என்னை நனைப்பது போல நீ என்னை நனைத்துக்கொள் நதியின் ஆழங்களில் நான் மூச்சு திணறுவது போல நீ என்னை தழுவிக்கொள் கடலின் பேரலைகள் கரையை தீண்டுவது போல நீ என்னை எடுத்துக்கொள் என்னை உன் கரங்களால் அணைத்துக்கொள்ளாதே உன் மனதால் இறுக அணைத்துக்கொள் அன்பின் தனிமையில் உனக்கு மரணம் இல்லை 2) காற்று - ( World of Trilok ) யுகாந்திரங்களின் கோபம் யுகாந்திரங்களின் இறுக்கம் யுகாந்திரங்களின் பொறுமை யுகாந்திரங்களின் தனிமை வந்துவிட்டது எல்லாவற்றின் மீதும் பெரும் புயல் ஒன்று இந்த காற்றை எதிர்த்து நடப்பவர்கள் யார்..? காலத்தின் புயலில் உதிரும் ஆயிரம் ஆயிரம் மலர்களில் ஒரு மலரல்லவா நீ..? அழிவின் தனிமையில் காத்திருக்க உனக்கு நேரமில்லை 3) நெருப்பு - ( World of Shiva ) வன்மத்தின் வனங்கள் பற்றி எரிகின்றன குருதியின

கிறுக்கல்களின் தொகுப்புகள்

வெள்ளிக்காப்பை சுழற்றினேன் சூடான காஃபியை அருந்தினேன் தலை முடியினை கோதி விட்டேன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன் ஆழ்மனதும் அனாதையாக இருந்தது எண்ணங்களின் ஓட்டமும் சீராக இல்லை யூடியுப் பக்கம் சென்றேன் அன்றைய தினத்தின் Trending காணொளிகள் ட்விட்டர் பக்கம் சென்றேன் நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே தள்ளு முள்ளு இன்ஸ்டாகிராம் பக்கம் சென்றேன் Bae Calls Me Chocobar என்றாள் கிளியோபாட்ரா ஹைக் பக்கம் சென்றேன் நட்டாஸா உரையாடலுக்கு எதிர்வாதம் செய்தாள் சரி, இது தான் இன்றைய தலைவிதி என்று முகப்புத்தகம் வந்து இதை பதிவு செய்தேன்..? - A Poem Without a Topic ❤ ---------------------------------------------------------- வாழ்க்கை இப்படியே போயிடுமா சார் என்பதில் தொடங்கி வாழ்க்கை ஒரு வட்டம் என்பதில் பயணித்து இவ்வளோ தான் சார் வாழ்க்கை என்பதில் முடிகிறது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நம்பகத்தன்மை நிறைந்த வாழ்க்கை..? -------------------------------------------------------- இந்த காஃபி ஷாப் சுவர்களின் இடையூறுகள் நம் நாவிதழ்கள் இடைபாடுகளிலும்..?..!! - வா ரயில் விட போலாம் வா  🖤 --

குடைக்குள் மழை

✨️💚 ரீனா : ஹே ஆர் யூ தேர்..? விக்ரம் : இருக்கேன் ரீனா, என்ன திடீர்னு மெசேஜ், முக்கியமா எதுவும் சொல்லணுமா..? ரீனா : ஹே, அதெல்லாம் இல்ல, ஏன் ஒர்க்ல இருக்கியா..? விக்ரம் : இல்ல, வீட்டுக்கு வந்துட்டேன், Earlier Appointments So, முடிஞ்சு பா! ரீனா : ஒகே, கொஞ்சம் மனசு சரி இல்ல அதான் உன்கிட்ட பேசலாமேன்னு கால் பண்ணேன்..? விக்ரம் : என்ன ஆச்சு..? ஆர் யூ ஓகே..? சொல்லு ரீனா Any Issue..? ரீனா : ஹே,Just Mood Swing ஒன்லி! நீ ஃபிரீன்னா சொல்லு Let's Walk Together in Beach! உனக்கு தெரியும்ல எனக்கு பீச் வாக்ன்னா ரொம்ப பிடிக்கும், So நீ ஃபிரீன்னா வர முடியுமா விக்ரம்..? விக்ரம் : சரி, ஈவினிங் 6 மணிக்கு பீச்ல நம்ம வழக்கமா மீட் பண்ணுற அந்த பட்டர் பன் கடைக்கு வந்துரு ரீனா, நானும் வந்துடுறேன், ரீனா : தேங்க்ஸ் விக்ரம்! விக்ரம் : தேங்க்ஸா..? No More Formalities! உன்னோட தேங்க்ஸ்ல நான் பூரிச்சு போய்ட்டேன்,சிரிப்பு காட்டாம வா ரீனா! ரீனா : ஹ்ம்ம் டா! * இடம் : கடற்கரை * நேரம் : மாலை 6 மணி விக்ரம் : ஹே! என்ன ஆச்சு ரீனா திடீர்னு..? ரீனா : அதெல்லாம் ஒன்னும் இல்லடா, Please Give Sometime நானே சொல்லுறேன் போ