Skip to main content

நிகரில்லாதவள்

அன்று ஊரெங்கும் நல்ல மழை வெளுத்து வாங்கிகொண்டிருந்தது,
பெரு மழைக்கு ஒதுங்குவதற்காக அவள் அங்கே சாலையோரம் இருந்த மரத்தின் அடியில் சென்று நின்று கொண்டாள்,

அவளுக்கு அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் சூழ அவள் ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியை போல் அக்குழந்தைகளுக்கு நடுவில் நின்று அவர்கள் மழையில் செய்யும் சேட்டையை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள்,

இந்த மழை நிற்பதற்குள் இவள் யார்,இவள் பெயர் என்ன, இவள் சார்ந்து இருப்பவைகள் என சின்ன கதையுடன் ஒரு முன்னோட்டம் பார்ப்போம்,

இவளுக்கான அறிமுகம் இல்லாததால் இவளுக்கு இவளாகவே சூடிக்கொண்ட பெயர் இது, ஆம் இவளுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஆசிரமத்தில் தான் வளர்ந்து வருகிறாள்,அங்கிருப்பவர்கள் "குட்டி" என்று கூப்பிடுவார்கள் அதுவே இவளது பெயராகவும் மாறியது,

பின் பள்ளி முடிந்து யாரோ பெயர் தெரியாத ஸ்பான்ஸர்ஷிப் மூலம் கல்லூரி படிப்பை முடித்து நல்ல ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்த பின் தான் இவளுக்கு ஒன்று புரிந்தது, நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள சரியான பெயர் கூட நமக்கு இல்லை என்று,
எதிர்நீச்சல் படத்தில் வருவது போல் தன் அடையாளத்தை இச்சமூகத்தில் பதிக்க முதலில் தன் பெயரை மாற்றினாள்,

தமிழ் மீதிருந்த ஆர்வதினாலும் பாரதியார் கவிதைகள் மீதுள்ள பேரன்பினாலும் தன் பெயரை " நிகரில்லா பாரதி " என்று சூடிக்கொண்டு பெயர் மாற்றத்திற்கான செர்டிபிகேட்டையும் வாங்கினாள்,

அவளுக்கு அவள் பிறந்த தேதி எது என்று தெரியாததால் வருடம் ஒரு முறை அவளே தனது பிறந்தநாளாக ஒரு தேதியை முடிவு செய்து கொண்டு தான் வேலைக்கு சென்ற முதல் வருடத்தில் இருந்து இப்போது தொடர்ச்சியாக மூன்றாம் ஆண்டாக தன் பிறந்தநாள் தேதியான அன்று தன்னை போலவே ஆசிரமத்தில் இருக்கும் காப்பார் அற்ற குழந்தைகளுடன் அன்றைய நாள் முழுவதையும் செலவு செய்வது அவர்களுக்கான மூன்று நேர உணவையும் வாங்கி கொடுத்து அவர்களுடன் அந்த நாளை பாரதி செலவு செய்வாள்,

இப்போது ஆட்டோவில் அவள் சென்று கொண்டிருக்கும் இடம் அந்த ஆசிரமம் தான், ஆசிரமத்தை வந்தடைந்தாள், அவளை பார்த்ததும் அக்குழந்தைகள் இவளை அள்ளி அணைத்துக்கொண்டன,
எப்போதும் உள்ள பிளான் படி அந்த நாள் முழுவதையும் அவர்களுடன் செலவு செய்துவிட்டு இரவு இப்போது தான் தங்கியிருக்கும் கேர்ள்ஸ் ஹாஸ்டலிற்கு கிளம்பினாள்,

அறையின் ஜன்னல் வழியே வெளியே எட்டிப்பார்த்தாள், இரவும் நல்ல மழை தொடர்ந்து கொண்டிருந்தது,தன் லேப்டாப்பை ஆன் செய்தாள்,
முகப்புத்தகத்தின் கணக்கை ஓபன் செய்து அங்கு பதிவு செய்யப்படிருந்த மீம்ஸ்களை பார்த்து அர்த்த ராத்திரியில் சிரித்துக்கொண்டிருந்தாள், மேலும் FM - இல் அப்போது லைவ்வில் போய் கொண்டிருந்த ஒரு டாக் ஷோவை கேட்டுக்கொண்டும் இருந்தாள் பாரதி,

அந்த FM டாக் ஷோவில் தினமும் ஒரு கதை பகிர்ந்து கொள்ளப்படும் அதில் பேசும் வாசகர்களால்,தனிமை விரும்பி என சொல்லப்படும் இன்ட்ரோவெர்ட்ஸ்க்கான ஷோ அது, பகிர்ந்து கொள்ள சுற்றத்தில் யாரும் இல்லாததாலும் தங்கள் மனசில் மிகவும் ஆழமாக பாதித்த சில நிகழ்வுகளையும் அவர்கள் அந்த டாக் ஷோவில் பகிர்ந்து கொள்வார்கள், இந்த ஷோ கேட்காமல் பாரதிக்கு தூக்கம் என்பது வராது, நாட்கள் போக போக ஒரு கட்டத்தில் பாரதிக்கு இந்த ஷோ ரொம்ப அடிக்ட்டாக மாறியது,

கங்கா சந்திரமுகி ரூம்க்கு போனா
கங்கா சந்திரமுகியா நின்னா
கங்கா சந்திரமுகியா தன்ன நினைச்சுக்கிட்டா
கங்கா சந்திரமுகியா மாறிட்டா
இப்படித்தான் சந்திரமுகி கங்காவ அடஞ்சான்னு மனோதத்துவ டாக்டர் சரவணன் சொல்லுற மாதிரி பாரதி அந்த டாக் ஷோவில் வரும் கதாப்பாத்திரமாக தன்னை பாவித்துக்கொண்டாள்,

ஒரு எடுத்துக்காட்டுக்கு இன்று தர்ஷனா எனும் பெண்ணின் கதை அந்த ஷோவில் பகிரப்பட்டால் இன்று இவள் தன்னை தர்ஷனாவாக பாவித்துக்கொள்வாள், தர்ஷனாவின் வாழ்வில் நடந்த அத்தனை இன்னல்களும் தன் வாழ்வில் நடந்ததாக சித்தரித்துகொள்வாள், இப்படியாக தினமும் ஒரு கேரக்டர் பாரதியின் வாழ்வில் வந்து சென்ற வண்ணம் இருந்தது,அந்த கேரக்டர் தான் என்று நினைத்து கொண்டு அவர்களுக்காக கண்ணீர் சிந்தவும் அதீத கவலைப்படவும் ஆரம்பித்தாள் பாரதி,

நாளைடைவில் இது ஒரு மனோதத்துவ நோயாக அவளுக்கு மாறியது, தூக்கம் என்பதையே மறந்தாள்,அந்த டாக் ஷோ கேட்பதை நிறுத்தி விட முடிவு செய்து அதை கேட்காவிட்டாலும் ஏற்கனவே கேட்ட கதைகளை தன் மூளைக்குள் ஓடவிட்டு கொண்டிருந்தாள்,தான் யார், தன் பெற்றோர் யார், தனது ஊர் எது என ஏற்கனவே தன் பிறப்பின் அடையாளம் எதுவும் தெரியாமல் இத்தனை நாட்கள் தன் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ளக்கூட முடியாத ஒரு இன்ட்ரோவெர்ட்டாக இருந்த பாரதிக்கு இப்போது இது கடினமான நாட்கள்,

நாட்கள் மாதங்கள் ஆனது, இதிலிருந்து மீள அவளுக்கு நல்ல தூக்கம் மட்டுமே தேவைப்பட்டது,அதற்கான முயற்சியில் இறங்கினாள், ஒரு அலெக்சா ஒன்றை அமேசானில் ஆர்டர் செய்து வாங்கினாள், அதனுடன் தினமும் பேசி தனது Instructions களை சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக தனது லிவ்விங் ஸ்டைலை மாற்றினாள், டாக் ஷோ கேட்பதற்கு பதில் இரவு நேரத்தில் வடிவேல் காமெடிகளை யூடுயூப்பில் பிளே செய்து சிரித்துக்கொண்டிருந்தாள்,அதிகாலை நேரம் யோகாவும் இரவு தூங்கும் நேரத்திற்கு முன் புத்தகம் வாசிப்பதையும் அந்த நாளில் நடந்த நிகழ்வுகளை தனது Blogsite - இல் எழுதுவதையும் தொடர்ந்து வழக்கமாக செய்து வந்தாள்,இது போக ஒரு மனோதத்துவ நிபுணரிடம் மெடிக்கல் கவுன்சிலிங்கும் போய் வந்தாள், இன்ட்ரோவெர்ட்டில் இருந்து அவள் மாறவில்லை, தன்னை சார்ந்த Atmosphere ஐ மட்டும் கொஞ்சம் மாற்றி அமைத்தாள், இத்தனை வருடங்களாக அவளுக்கு வராத தூக்கம் இப்போது நன்றாக வருகிறது, பாரதி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாள்,

தனிமைல இருக்கவங்களுக்கும் சரி, பொதுவாக யாரா இருந்தாலும் சரி தூக்கம் ரொம்ப முக்கியம் ஒருத்தங்க லைஃப்ல, ஆனா இந்த ராத்திரி நேரம் 
இந்த மனசு இருக்கே கண்டதையும் நினைச்சு ஒரு தேடலோடையே நம்மள சுத்த விட்டு நம்ம மைண்ட்க்குள்ள ஒரு தாழ்வு மனப்பான்மை நிலைய ஆகட்டிவேட் பண்ணி விடுகிறது,எல்லாருக்குமே அந்த தாழ்வு மனப்பான்மை ராத்திரிகளில் வந்து தான் போகும் ஆனா இந்த நிகரில்லா பாரதிக்கு அவள் பெயருக்கேற்றார் போல் யாருக்குமே நடக்காத வண்ணம் தனக்கு மட்டுமே நடக்கும் படியான இப்படி ஒரு மனோதத்துவ பிரச்சனை வந்து சென்று விட்டது, அவள் இப்போது அதிலிருந்து மீண்டு தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டாள்,

ஹ்ம்ம்,பாரதியை பற்றி பேசி முடித்த பின்பும் மழை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது, சரி நம்ம அந்த ஹலோ FM 106.4 வச்சு கேப்போம்,

இந்த Pleasent ஆன நைட் டைம்ல நம்ம டாக் ஷோ நேயர்களுக்காக இப்போது இளையராஜாவின் இசையில் "மறுபடியும்" திரைப்படத்தில் இருந்து "எல்லோரும் சொல்லும் பாட்டு" பாடல் இதோ உங்களுக்காக,

நிகரில்லா பாரதி - நிகரில்லா வெளிச்சம்!


Comments

Popular posts from this blog

The Journey of Solo - Title Poem

ஓம் நமச்சிவாய என்னும் மூலமந்திரத்தின் கருவாய் நீர்,காற்று,நெருப்பு,நிலம்  என்னும் நாற்பகுதிகளை இறைவன் சிவனை வைத்து மையப்படுத்தி இருக்கும் கதைக்களத்தின் ஒரு கவிதை நடை பயணம் இங்கு, " The Journey of Solo - Title Poem |  Bejoy Nambiar  " 1) நீர் - ( World of Shekhar )  அன்பே ஆயிரம் மழைத்துளிகள் என்னை நனைப்பது போல நீ என்னை நனைத்துக்கொள் நதியின் ஆழங்களில் நான் மூச்சு திணறுவது போல நீ என்னை தழுவிக்கொள் கடலின் பேரலைகள் கரையை தீண்டுவது போல நீ என்னை எடுத்துக்கொள் என்னை உன் கரங்களால் அணைத்துக்கொள்ளாதே உன் மனதால் இறுக அணைத்துக்கொள் அன்பின் தனிமையில் உனக்கு மரணம் இல்லை 2) காற்று - ( World of Trilok ) யுகாந்திரங்களின் கோபம் யுகாந்திரங்களின் இறுக்கம் யுகாந்திரங்களின் பொறுமை யுகாந்திரங்களின் தனிமை வந்துவிட்டது எல்லாவற்றின் மீதும் பெரும் புயல் ஒன்று இந்த காற்றை எதிர்த்து நடப்பவர்கள் யார்..? காலத்தின் புயலில் உதிரும் ஆயிரம் ஆயிரம் மலர்களில் ஒரு மலரல்லவா நீ..? அழிவின் தனிமையில் காத்திருக்க உனக்கு நேரமில்லை 3) நெருப்பு - ( World of Shiva ) வன்மத்தின் வனங்கள் பற்றி எரிகின்றன குருதியின

கிறுக்கல்களின் தொகுப்புகள்

வெள்ளிக்காப்பை சுழற்றினேன் சூடான காஃபியை அருந்தினேன் தலை முடியினை கோதி விட்டேன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன் ஆழ்மனதும் அனாதையாக இருந்தது எண்ணங்களின் ஓட்டமும் சீராக இல்லை யூடியுப் பக்கம் சென்றேன் அன்றைய தினத்தின் Trending காணொளிகள் ட்விட்டர் பக்கம் சென்றேன் நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே தள்ளு முள்ளு இன்ஸ்டாகிராம் பக்கம் சென்றேன் Bae Calls Me Chocobar என்றாள் கிளியோபாட்ரா ஹைக் பக்கம் சென்றேன் நட்டாஸா உரையாடலுக்கு எதிர்வாதம் செய்தாள் சரி, இது தான் இன்றைய தலைவிதி என்று முகப்புத்தகம் வந்து இதை பதிவு செய்தேன்..? - A Poem Without a Topic ❤ ---------------------------------------------------------- வாழ்க்கை இப்படியே போயிடுமா சார் என்பதில் தொடங்கி வாழ்க்கை ஒரு வட்டம் என்பதில் பயணித்து இவ்வளோ தான் சார் வாழ்க்கை என்பதில் முடிகிறது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நம்பகத்தன்மை நிறைந்த வாழ்க்கை..? -------------------------------------------------------- இந்த காஃபி ஷாப் சுவர்களின் இடையூறுகள் நம் நாவிதழ்கள் இடைபாடுகளிலும்..?..!! - வா ரயில் விட போலாம் வா  🖤 --

குடைக்குள் மழை

✨️💚 ரீனா : ஹே ஆர் யூ தேர்..? விக்ரம் : இருக்கேன் ரீனா, என்ன திடீர்னு மெசேஜ், முக்கியமா எதுவும் சொல்லணுமா..? ரீனா : ஹே, அதெல்லாம் இல்ல, ஏன் ஒர்க்ல இருக்கியா..? விக்ரம் : இல்ல, வீட்டுக்கு வந்துட்டேன், Earlier Appointments So, முடிஞ்சு பா! ரீனா : ஒகே, கொஞ்சம் மனசு சரி இல்ல அதான் உன்கிட்ட பேசலாமேன்னு கால் பண்ணேன்..? விக்ரம் : என்ன ஆச்சு..? ஆர் யூ ஓகே..? சொல்லு ரீனா Any Issue..? ரீனா : ஹே,Just Mood Swing ஒன்லி! நீ ஃபிரீன்னா சொல்லு Let's Walk Together in Beach! உனக்கு தெரியும்ல எனக்கு பீச் வாக்ன்னா ரொம்ப பிடிக்கும், So நீ ஃபிரீன்னா வர முடியுமா விக்ரம்..? விக்ரம் : சரி, ஈவினிங் 6 மணிக்கு பீச்ல நம்ம வழக்கமா மீட் பண்ணுற அந்த பட்டர் பன் கடைக்கு வந்துரு ரீனா, நானும் வந்துடுறேன், ரீனா : தேங்க்ஸ் விக்ரம்! விக்ரம் : தேங்க்ஸா..? No More Formalities! உன்னோட தேங்க்ஸ்ல நான் பூரிச்சு போய்ட்டேன்,சிரிப்பு காட்டாம வா ரீனா! ரீனா : ஹ்ம்ம் டா! * இடம் : கடற்கரை * நேரம் : மாலை 6 மணி விக்ரம் : ஹே! என்ன ஆச்சு ரீனா திடீர்னு..? ரீனா : அதெல்லாம் ஒன்னும் இல்லடா, Please Give Sometime நானே சொல்லுறேன் போ