... வா கோவில் போகலாம் என்றான் நண்பன் போனோம் சாமி கும்பிட்டோம் வா தேவாலயம் செல்வோம் என்றான் இன்னொரு நண்பன் போனோம் இயேசுவின் ஆசீர்வாதம் பெற்றோம் வா மசூதி செல்வோம் என்றான் மற்றொரு நண்பன் போனோம் அவன் மட்டும் தொழுகை செய்தான் எனக்கு அவர்களின் தொழுகை முறை தெரியவில்லை அதனால் ஒரு ஓரமாக மண்டியிட்டு அவர்கள் செய்வதை போல் நானும் செய்து அல்லாவின் அருளை பெற்றோம் நான் மற்றும் மூன்று நண்பர்களும் ஒரு பழமுதிர்சோலையில் அமர்ந்து வெயிலுக்கு இளைப்பாற பழச்சாறு பருகினோம் அக்கடையின் வெளியே ஒரு மூதாட்டி கன்னம் சுருங்கி முன்னொரு காலத்தில் செல்வந்தியாய் வாழ்ந்து கெட்ட ஜமீன் குடும்பத்தில் வாழ்ந்து இன்று வழியின்றி வீதிக்கு வந்த கதையாய் தொங்கிப்போன லோலாக்கு அணியாத காதுகளுடன் தள்ளாடும் வயதிலும் கொய்யாப்பழம் விற்று கொண்டு இருந்தார்கள் ஆனால் பழமுதிர்சோலையில் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்ட பழக்குவியல்களில் ஒன்றாக இருக்கும் கொய்யாப்பழத்தினை நிறைய செல்வந்தரான மனிதர்கள் காரில் வந்து வாங்கி சென்றனர், தெருவோர கடை என்பதால் அந்த மூதாட்டியின் பக்கம் அன்றாட வாழ்க்கை நடத்தும் குடும்பத்தினர் நிறைய மக்கள் க
வாசிப்பை நேசிப்போம்