Skip to main content

அன்பு தானே எல்லாம் !!


...
வா கோவில் போகலாம் என்றான் நண்பன்
போனோம் சாமி கும்பிட்டோம்
வா தேவாலயம் செல்வோம் என்றான் இன்னொரு நண்பன்
போனோம் இயேசுவின் ஆசீர்வாதம் பெற்றோம்
வா மசூதி செல்வோம் என்றான் மற்றொரு நண்பன்
போனோம் அவன் மட்டும் தொழுகை செய்தான் எனக்கு அவர்களின் தொழுகை முறை தெரியவில்லை அதனால் ஒரு ஓரமாக மண்டியிட்டு அவர்கள் செய்வதை போல் நானும் செய்து அல்லாவின் அருளை பெற்றோம்
நான் மற்றும் மூன்று நண்பர்களும் ஒரு பழமுதிர்சோலையில் அமர்ந்து வெயிலுக்கு இளைப்பாற பழச்சாறு பருகினோம்
அக்கடையின் வெளியே ஒரு மூதாட்டி கன்னம் சுருங்கி முன்னொரு  காலத்தில் செல்வந்தியாய் வாழ்ந்து கெட்ட ஜமீன் குடும்பத்தில் வாழ்ந்து இன்று வழியின்றி வீதிக்கு வந்த கதையாய் தொங்கிப்போன லோலாக்கு அணியாத காதுகளுடன் தள்ளாடும் வயதிலும் கொய்யாப்பழம் விற்று கொண்டு இருந்தார்கள்
ஆனால் பழமுதிர்சோலையில் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்ட பழக்குவியல்களில் ஒன்றாக இருக்கும் கொய்யாப்பழத்தினை நிறைய செல்வந்தரான மனிதர்கள் காரில் வந்து வாங்கி சென்றனர்,  தெருவோர கடை என்பதால் அந்த மூதாட்டியின் பக்கம் அன்றாட வாழ்க்கை நடத்தும் குடும்பத்தினர் நிறைய மக்கள் கொய்யாப்பழம் வாங்கி சென்றனர்,
அந்த தள்ளாடும் வயதிலும் கை நீட்டி நிக்காமல் இருக்கும் இந்த மூதாட்டிக்கு விற்பனை சற்று நன்றாகவே இருந்தது, அனைவருக்கும் சுருங்கிய கன்னத்தில் குழி விழும் சிரிப்புடன் பழங்களை விற்று வந்தார்
இதை பார்த்துக்கொண்டிருந்த நான் மட்டும் நான் குடித்துக்கொண்டிருந்த பழச்சாறை பாதியில் வைத்து விட்டு அந்த பாட்டியிடம் சென்று என்னை பற்றி அறிமுகப்படுத்திக்கொண்டேன்
சிறிது நேரம் பேச்சுவழக்கு நீண்டு கொண்டு போனது எனக்கும் அந்த மூதாட்டிக்கும், என் நண்பர்கள் அந்த கடையின் உள்ளே இருந்துக்கொண்டு நான் என்ன செய்கிறேன் என்று என்னை நோட்டம் விட்டுக்கொண்டு இருந்தார்கள்
காலை எட்டு மணிக்கு விற்பனையை தொடங்கிய அந்த மூதாட்டி இப்பொழுது மதியம் இரண்டு மணி ஆகிய நேரத்தில்
தான் கொண்டு வந்த அனைத்து பழங்களையும் விற்று தீர்த்துவிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பும் நேரத்தில் தான் நான் அங்கு சென்று அவர்களிடம் பேச தொடங்கினேன் ஒரு இருபது நிமிடம் எனக்காக நேரத்தை செலவு செய்து என்னுடன் பேசினர், கடைசியாக கண்களில் துளி கண்ணீருடன் அவர்களின் இரண்டு கையையும் என் தலையில் வைத்து என்னை ஆசிர்வாதம் செய்து என்னை அன்போடு வழி அனுப்பி வைத்தார்கள், நானும் என் வீட்டுக்கு ஐம்பது ரூபாய்க்கு கடைசியாக இருந்த பழத்தை வாங்கிக்கொண்டு என் நண்பர்களிடம் சென்றேன்
ஏன் டா அங்க போய் என்ன பேசுன..? அதும் இருபதுநிமிடங்களாக
இந்த பழத்தை இந்த கடையிலேயே வாங்கிருக்கலாமே நல்லா பிரெஷ்ஷா கிடைச்சுருக்கும்ல, எதுக்கு அங்க போய் வெயில்ல உக்காந்து ஐம்பது ரூபாய்க்கு பொறுக்கிட்டு வந்துருக்க இப்போ என்றனர்..?
நீ கும்பிட்டயே உன்னுடைய சிவன் அவரிடம் என்ன பிரார்த்தனை கேட்டு நீ விண்ணப்பம் வச்ச..?
நீ கும்பிட்டயே உன்னுடைய இயேசு அவரிடம் என்ன பிரார்த்தனை கேட்டு நீ விண்ணப்பம் வச்ச..?
நீ கும்பிட்டயே உன்னுடைய அல்லாஹ் அவரிடம் என்ன பிரார்த்தனை கேட்டு நீ விண்ணப்பம் வச்ச..?
என்று மூவரிடமும் கேட்டேன்..?
பிரார்த்தனையை வெளியில் சொன்னால் கைகூடாது என்றனர்
சிரித்துக்கொண்டேன் அவர்களை பார்த்து..?
சரி இவளோ கேக்குறியே நீ என்ன கும்பிட்ட மூன்று கடவுளிடமும் என்று மூவரும் என்னை கேட்டனர்..?
நான் சாமியே கும்பிடல
நாத்திகன்ன்னு எதையாவது மட்டும் பதிலா சொல்லாத என்று என்னை நோக்கி முட்டு கட்டை வைத்தனர்
சிரித்துக்கொண்டே சொன்னேன்
நான் மூன்று கடவுளையும் தரிசனம் செய்தேன் உங்களை போன்றே
ஒரே பிரார்த்தனை தான் மூன்று கடவுளிடமும் சேர்த்து ஒரே விண்ணப்பமாக வைத்தேன்
உலகம் முழுக்க கோடான கோடி நபர்கள் இந்து,கிறிஸ்து,இஸ்லாம் என்று உங்கள் மூவரிடமும் எண்ணிலடங்கா விண்ணப்பங்களை வைக்கின்றனர், என்னை பொறுத்தவரையில் நீங்கள் உண்மையிலேயே இருந்தாலோ அல்லது ஒளியாக தோன்றினாலோ சரி உங்கள் மூவரிடமும் நான் வைக்கும் விண்ணப்பம் ஒன்று தான்
நான் ஒரு மனிதரிடம் பேசினால் அந்த மனிதருக்கு என்னால் முடிந்தவரை நான் நன்மையை மட்டுமே தர வேண்டும் என்னால் கெட்டவர் எவரும் என் சுற்றுச்சூழலில் இங்கு இருக்கக்கூடாது இது சாத்தியமா என்பது எனக்குத்தெரியவில்லை ஏனெனில் உங்களுக்கு வரும் கோடானகோடி விண்ணப்பங்களில் இதுவும் ஒன்று தான், ஆனால் என் விண்ணப்பம் எந்த நாள் எந்த வருடம் உங்கள் கையில் கிடைத்து அதை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்பது எனக்கு தெரியவில்லை
நான் காலம் தாழ்த்த விரும்பவில்லை என் கண்ணுக்கு தெரிந்த மனிதர்களிடம் அவர்களிடம் நாலு வார்த்தை நல்ல விதமாக பேசி அவர்களின் மகிழ்ச்சியையும் வயதான மூதாட்டியார்கள் என்றால் அவர்களின் ஆசீர்வாதத்தையும் நான் பரிசாக வாங்கி கொள்கிறேன் ஏனென்றால் இப்போதைக்கு என் கண்ணுக்கு தெரிந்த என் நண்பர்களான திரிலோகன்,டேனியல்,ஆப்ரஹாம் என்னும் நீங்கள் தான் இப்போதைக்கு என்னுடைய மூன்று லோகத்து கடவுள்கள், நான் சந்தோஷமாக நேரத்தை செலவிட்டு உங்களையும் சந்தோஷமாக வைத்துக்கொண்டு யாரோ தெரியாத அந்த மூதாட்டியின் நலம் விசாரித்து அவருக்கு ஒரு வியாபாரம் ஏற்படுத்திக்கொடுத்து அவர்களின் ஆசீர்வாதத்தையும் அவருடைய பொக்கிஷமான கண்ணீர் துளிகளையும் என் கையில் தாங்கி நின்று இருக்கிறேன்,
நான் அனுப்பிய விண்ணப்பத்திற்கு கடவுள் என்றோ ஒரு நாள் பதிலளிக்கட்டும் அதுவரை நான் காணும் நான் உரையாடும் நான் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும் என்னை சுற்றியுள்ள இந்த மனிதர்கள் தான் என்னுடைய கடவுள்கள், இங்கே கடவுளின் முகங்களை பார்த்து நேருக்கு நேர் உரையாடல் நடத்த முடிகிறது என்பது யாவருக்கும் கிடைக்காத ஒரு வகை தரிசனம்
வாருங்கள்
கடவுள்களை நேரில் காண்போம்
என்று மூன்று நண்பர்களுடன் அந்த கடையில் இருந்து நான் கிளம்பினேன்
அந்த மூதாட்டி சிந்திய கண்ணீர் துளிகள் படிந்த கைகளை துடைத்துக்கொண்டு உற்சாகத்துடன்,
அருகில் இருந்த டீ கடையின்
ரேடியோ பெட்டியில்
அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு
முடிவே இல்லையடா
மனதின் நீளம் எதுவோ அதுவே
வாழ்வின் நீளமடா
அன்பே சிவம்
அன்பே சிவம் என்போம்
என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது..!! 💛

Comments

Popular posts from this blog

The Journey of Solo - Title Poem

ஓம் நமச்சிவாய என்னும் மூலமந்திரத்தின் கருவாய் நீர்,காற்று,நெருப்பு,நிலம்  என்னும் நாற்பகுதிகளை இறைவன் சிவனை வைத்து மையப்படுத்தி இருக்கும் கதைக்களத்தின் ஒரு கவிதை நடை பயணம் இங்கு, " The Journey of Solo - Title Poem |  Bejoy Nambiar  " 1) நீர் - ( World of Shekhar )  அன்பே ஆயிரம் மழைத்துளிகள் என்னை நனைப்பது போல நீ என்னை நனைத்துக்கொள் நதியின் ஆழங்களில் நான் மூச்சு திணறுவது போல நீ என்னை தழுவிக்கொள் கடலின் பேரலைகள் கரையை தீண்டுவது போல நீ என்னை எடுத்துக்கொள் என்னை உன் கரங்களால் அணைத்துக்கொள்ளாதே உன் மனதால் இறுக அணைத்துக்கொள் அன்பின் தனிமையில் உனக்கு மரணம் இல்லை 2) காற்று - ( World of Trilok ) யுகாந்திரங்களின் கோபம் யுகாந்திரங்களின் இறுக்கம் யுகாந்திரங்களின் பொறுமை யுகாந்திரங்களின் தனிமை வந்துவிட்டது எல்லாவற்றின் மீதும் பெரும் புயல் ஒன்று இந்த காற்றை எதிர்த்து நடப்பவர்கள் யார்..? காலத்தின் புயலில் உதிரும் ஆயிரம் ஆயிரம் மலர்களில் ஒரு மலரல்லவா நீ..? அழிவின் தனிமையில் காத்திருக்க உனக்கு நேரமில்லை 3) நெருப்பு - ( World of Shiva ) வன்மத்தின் வனங்கள் பற்றி எரிகின்றன குருதியின

கிறுக்கல்களின் தொகுப்புகள்

வெள்ளிக்காப்பை சுழற்றினேன் சூடான காஃபியை அருந்தினேன் தலை முடியினை கோதி விட்டேன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன் ஆழ்மனதும் அனாதையாக இருந்தது எண்ணங்களின் ஓட்டமும் சீராக இல்லை யூடியுப் பக்கம் சென்றேன் அன்றைய தினத்தின் Trending காணொளிகள் ட்விட்டர் பக்கம் சென்றேன் நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே தள்ளு முள்ளு இன்ஸ்டாகிராம் பக்கம் சென்றேன் Bae Calls Me Chocobar என்றாள் கிளியோபாட்ரா ஹைக் பக்கம் சென்றேன் நட்டாஸா உரையாடலுக்கு எதிர்வாதம் செய்தாள் சரி, இது தான் இன்றைய தலைவிதி என்று முகப்புத்தகம் வந்து இதை பதிவு செய்தேன்..? - A Poem Without a Topic ❤ ---------------------------------------------------------- வாழ்க்கை இப்படியே போயிடுமா சார் என்பதில் தொடங்கி வாழ்க்கை ஒரு வட்டம் என்பதில் பயணித்து இவ்வளோ தான் சார் வாழ்க்கை என்பதில் முடிகிறது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நம்பகத்தன்மை நிறைந்த வாழ்க்கை..? -------------------------------------------------------- இந்த காஃபி ஷாப் சுவர்களின் இடையூறுகள் நம் நாவிதழ்கள் இடைபாடுகளிலும்..?..!! - வா ரயில் விட போலாம் வா  🖤 --

குடைக்குள் மழை

✨️💚 ரீனா : ஹே ஆர் யூ தேர்..? விக்ரம் : இருக்கேன் ரீனா, என்ன திடீர்னு மெசேஜ், முக்கியமா எதுவும் சொல்லணுமா..? ரீனா : ஹே, அதெல்லாம் இல்ல, ஏன் ஒர்க்ல இருக்கியா..? விக்ரம் : இல்ல, வீட்டுக்கு வந்துட்டேன், Earlier Appointments So, முடிஞ்சு பா! ரீனா : ஒகே, கொஞ்சம் மனசு சரி இல்ல அதான் உன்கிட்ட பேசலாமேன்னு கால் பண்ணேன்..? விக்ரம் : என்ன ஆச்சு..? ஆர் யூ ஓகே..? சொல்லு ரீனா Any Issue..? ரீனா : ஹே,Just Mood Swing ஒன்லி! நீ ஃபிரீன்னா சொல்லு Let's Walk Together in Beach! உனக்கு தெரியும்ல எனக்கு பீச் வாக்ன்னா ரொம்ப பிடிக்கும், So நீ ஃபிரீன்னா வர முடியுமா விக்ரம்..? விக்ரம் : சரி, ஈவினிங் 6 மணிக்கு பீச்ல நம்ம வழக்கமா மீட் பண்ணுற அந்த பட்டர் பன் கடைக்கு வந்துரு ரீனா, நானும் வந்துடுறேன், ரீனா : தேங்க்ஸ் விக்ரம்! விக்ரம் : தேங்க்ஸா..? No More Formalities! உன்னோட தேங்க்ஸ்ல நான் பூரிச்சு போய்ட்டேன்,சிரிப்பு காட்டாம வா ரீனா! ரீனா : ஹ்ம்ம் டா! * இடம் : கடற்கரை * நேரம் : மாலை 6 மணி விக்ரம் : ஹே! என்ன ஆச்சு ரீனா திடீர்னு..? ரீனா : அதெல்லாம் ஒன்னும் இல்லடா, Please Give Sometime நானே சொல்லுறேன் போ