Skip to main content

எழுத்துக்களின் அவசியம்

~ 💛 ~

சில பேருக்கு இசை மேல பைத்தியம்
சில பேருக்கு ஓவியம் மேல பைத்தியம்
சில பேருக்கு புத்தகம் மேல பைத்தியம்
சில பேருக்கு காதல் மேல பைத்தியம்
சில பேருக்கு குழந்தைகள் மேல பைத்தியம்

இப்படி நம்மலோட பைத்தியமா
ஒரு சில விஷயங்கள் நம்மை சார்ந்து இருக்கும்
அது நமக்கு ஒரு வித தனிமையை கொடுக்கும்
அந்த தனிமை கொடியதாக இருக்காது

மிகவும் ஆழமான
மிகவும் அழகான
மிகவும் மென்மையான
மிகவும் நம்பகத்தன்மையுள்ள
ஒரு தனிமையாக அத்தனிமை இருக்கும்,

அத்தனிமையை நீங்கள் உணரும்போது
லேசான ஈரப்பதத்துடன் கூடிய
கடற்கரை மணல் போல்
நம் மனசு சாந்தமான நிலையில்
இயந்திரம் போல் சுழலாமல்
ஒரு நிலையில் பக்குவமாய் இருக்கும்,

குல்முகர் மலர் பூத்துக்குலுங்கும்
பூக்களில் வண்டுகள் மகரந்தம் தேடும்
குயில்கள் ரீங்கார இசையினை மீட்டும்
அந்தி நேர தென்றல் காற்று வீசும்
இலையுதிர் காலம் நாழிகையை அழகாக்கும்

இவ்வுலகம் பரந்து விரிந்து கிடக்கிறது
இது நமக்கான தன்னை அறிதல்
இது உங்களை உங்களுக்குள் தேடும் முயற்சி
உங்களின் நாட்டத்தை வெளிக்கொண்டுவாருங்கள்
முடிந்தவரை உங்கள் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை
எழுத்துக்களாக மாற்றுங்கள் நம் தமிழ் மொழியில்

எழுத்துப்பிழை ஆயிரக்கணக்கில் வரும்
வார்த்தை கோர்வைகள் முரண்பாடாக இருக்கும்
செய்யுளும் இலக்கணமும் தேவையில்லை
பேச்சு வழக்கில் வார்த்தைகளை பயன்படுத்துங்கள்

நான் மேலே சொன்னது போல்
எல்லோருக்கும் ஒரு விஷயம் மேல பைத்தியம் இருக்கும்
அப்படி என்னோட பைத்தியம்னு சொல்லணும்னா,

'நிறைய எழுதணும் சார்'

எழுத்துக்கள் தான் ஒருவனின் நிலையை மாற்றும்
எழுத்துக்கள் தான் சுய மீட்டுதல் இன்பம் தரும்
எழுத்துக்கள் தான் வலிகளில் இருந்து மீட்டெடுக்கும்
எழுத்துக்கள் தான் ஒருவனை வெளிக்கொண்டு வரும்

லெட்டர் எழுது
Daily ஒன்னு எழுது
Nothing Like a Nice Letter
பத்து வருஷம் கழிச்சு படிக்க நல்லாருக்கும்

- எழுதுவோம் தமிழில்







Comments

  1. "நிறைய எழுதுங்கள்"
    நீங்க எப்பொழுதும் சொல்றது❣️

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா கௌதம்! நீங்களும் :))

      Delete
  2. Replies
    1. நன்றி !! உங்கள் பெயர்..?

      Delete

Post a Comment