Skip to main content

பூ அவிழும் பொழுது..!!

பூ அவிழும் பொழுது..!! 

மூலக்கதை : சிவா செல்லையா 
எழுத்து : திவாகர் மணிமாறன் 

மாயா நீ எனக்கு மனைவியா ஆகி
ஆறு மாசம் ஆச்சு,
அப்பா அம்மா இல்லாத எனக்கு
நீ தான் எல்லாமுமா இருக்க,
துயர் மிகுந்த என் வாழ்க்கைல
முதல் நம்பிக்கை ஒளி நீ தான்
அந்த ஒளிய எனக்குள்ள சுடராவும் ஏத்தி வச்சுருக்க..!

உனக்கானவனா உன் கணவனா
நான் உன்னுள்ளே தொலைய
ஆரம்பிச்சுட்டேன்னு நினைக்கிறேன்.
நீ என்னுள்ளே தொலைந்து
எனக்குள்ள போய் நீ என்னோட
ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டிட்டு இருக்க..!!

அதுல நீ வாசிக்காத
உனக்கு நான் காட்டாத
சில கருப்பு பக்கங்களின்
தூசி படிந்த அடுக்குகளை
நீயே கண்டெடுத்து படிக்கிறதுக்கு
முன்னாடியே நானே இந்த கடற்கரை இரவில்
உனக்கு அத வாசிச்சு காட்டிருறேன்,

எனக்கானவளான நீ என்னபத்தி எல்லாம்
தெரிஞ்சுருக்கணும்னு நினைக்கிறேன்.
இந்த கொள்ளளவு குறையாத
மொத்த காதலையும் ஆயுசுக்கும்
குத்தகைக்கு எடுத்தவள் நீ தான்.
இதுக்கு முன்னாடி இந்த அன்புக்கு
சொந்தமானவள நீ தெரிஞ்சுக்கணும்.
அப்பத்தான் இவனால
இவ்வளவு ஆழமா காதலிக்க முடியுமான்னு
உன்னாலயும் தெரிஞ்சுக்க முடியும்.
அவள பத்தி உன்கிட்ட சொன்னா தான்
அவள விட உன்ன நான்
எவ்ளோ அதிகமா நேசிக்கிறேன்னு
உன்னால புரிஞ்சுக்க முடியும்.

கதையை கேளு..?
கேட்டுட்டு உன் கால்ல ஒட்டிருக்குற
இந்த கடற்கரை மண்ணு மாதிரி
இங்கிருந்து கிளம்பும் போது
அந்த கதையையும் தட்டிவிட்டு முழுசா
எனக்குள்ள வந்துரு சரியா.!!!

நான் ( த்ரிலோக் ) அமுதன், கிருஷ்ணன்
மூணு பேருமே நாங்க ரொம்ப
நெருங்கிய நண்பர்கள்.
என்னோட எல்லா காலகட்டங்களிலும்
எல்லா சுக துக்கங்களிலும்
தோளுக்கு தோளாக இருந்தவாங்க அவங்க.
சந்தோசமா மகிழ்ச்சியா போய்ட்டு இருந்த
எங்க வாழ்க்கையில
இன்னும் மகிழ்ச்சிய வாரி இறைக்க வண்டார்குழலியா நுழைஞ்சா யாத்ரா.!

யாத்ரா..!! யாத்ரா..!!
இன்னும் அந்த பேர கேட்டாலே
அந்த பரவசம் உள்ள
துள்ளிகுதிச்சு ஆடாம இல்ல
அவளை பத்தி சொல்லனும்னா
வேண்டாம்..வேண்டாம்..
அவளை பத்தி சொல்ல நினைச்சாலே
சொல்ற வார்தைக்குள்ள சண்டை வந்துடும்.
உனக்கு தெரிஞ்ச ஒரு அழகான பொண்ண
மனசுல நினைச்சுக்கோ அவ தான் யாத்ரா,

whatsapp ல fantastic 4 னு
தனியா குரூப் ஆரம்பிச்சு பேசுற அளவுக்கு
எங்க நால்வரின் நட்பும் வளந்துருந்துச்சு,
ஆனா எனக்கும் யாத்ரா க்கும் மட்டும்
நட்பை தாண்டி எதோ ஒரு ஈர்ப்பு இருக்குறத
நாங்க கண்டு புடிக்கிறதுக்கு முன்னாடியே அமுதனும் கிருஷ்ணாவும் கண்டு புடிச்சுட்டாங்க
அத அவகிட்ட சொல்லவும் வச்சுட்டாங்க,
ஆமா,ஒரு பொன்மாலை வேலையில
மழை பெய்ஞ்சு ஓய்ந்த சாலையில
அவ முன்னாடி முட்டி போட்டு
ப்ரொபோஸ் பண்ணுனது
இன்னும் அந்த மழை வாசத்தோட
நினைவுல இருக்கு..?
முட்டி போட்டதுல அழுக்கான
என்னோட அந்த பாண்ட்டை இன்னும்
அப்படியே துவைக்காம பாதுகாத்து வச்சுருக்கேன்,

நான் என் காதலை சொன்னப்
அவ முகத்த பார்த்துருக்கணுமே
வெட்கமே வெட்கி போற அளவுக்கான
அப்படி நாணம்,
என்ன அள்ளி அப்டியே அணைச்சுகிட்டா
அந்த அரவணைப்பை அந்த நொடியோடு
அள்ளி இதயத்துல முடிஞ்சு வச்சுக்கிட்டேன்,

எந்த நீர் ஊற்றி வளர்த்தோம் என்று தெரியல
ஆனா எங்க காதல் நல்லா
செழிப்பா வளர்ந்துச்சு
என்னோட சிதறிய சொற்களின்
சிரிப்பும் அவ தான்
என்னோட மகிழ்ச்சியின் மறுபதிப்பும்
அவ தான்னு மாறிப்போச்சு,

மகிழ்ச்சி எந்த அளவுக்கு இருந்துச்சோ
அதே அளவுக்கு அவளை சங்கடபடவும் வச்சுருக்கேன்,காயப் படவும் வச்சுருக்கேன்,
ஆனா இது எதயும் அவ
பெருசா எடுத்துக்க மாட்டா
அதான் அவகிட்ட புடிச்ச விஷயமே..!!

படிப்பையும் முடிச்சேன்
நல்ல வேலைலயும் சேர்ந்தேன்.
அவளை விட்டு வேற ஊர்ல
தொலைவுல வேலை
ஆனா அவ நினைப்பு மட்டும்
எப்போவுமே கூட இருந்ததுனால
அந்த பிரிவு பெருசா தெரியல,
ரெண்டு நாள் சேர்ந்தாப்ல லீவ் வந்தா
உடனே எங்க ஊருக்கு ஓடி வந்துடுவேன்,

ஒவ்வொரு முறையும்
அவளை பாக்கும் போதெல்லாம்
மனசு பௌர்ணமி நிலவை பார்த்து
துள்ளி குதிக்கிற கடல் அலை மாதிரி
துள்ளி விளையாட ஆரம்பிச்சுடும்.
அப்பறம்தான் தெரிஞ்சுச்சு
அவ உண்மையிலுமே கடலிலிருந்து
வானின் தொலைவில் இருக்குற நிலவு தான்,
அதிலிருந்து நெடுந்தொலைவில் இருக்குற
கடல் தான் நான்னு..?

பொருளாதார ரீதியில்
எங்களுக்குள்ள ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் எங்களுக்குள்ள எந்த பாகுபாடும் இருந்ததில்லை
எங்க நண்பர்கள் எங்களுக்கு
எல்லா விதத்துலயும் பக்கபலமா இருந்தாங்க,

எப்போவுமே முதல்ல
பொண்ணு வீட்டுல ஆரம்பிக்கிற கல்யாண பேச்சு
இந்த முறை எங்க வீட்டுல ஆரம்பிச்சுச்சு,
அப்பா அம்மா இல்லாத பையனான
நான் சொந்தபந்தத்தோட
அரவணைப்புலத்தான் வளர்த்தேன்,
என்னோட கல்யாணத்தை
சீக்கிரம் பாக்கணும்கிற
அவங்க ஆசையை என்னால தள்ளி போட முடியல,

யாத்ரா வை பத்தி அவங்ககிட்ட சொன்னேன்
பெரிய இடத்து பொண்ணு
நம்ம குடும்பத்துக்கு சரி பட்டுவருமா..?
அவங்க வீட்டுல ஒத்துப்பாங்களானு
பல கேள்விகள்ல துழைச்சாலும்
எப்டியோ பேசி அவங்ககிட்ட
சம்மதத்தை வாங்குனேன்,
அவங்க யாத்ரா வீட்டுல சம்மதத்தை வாங்கு
ரெண்டு வீட்டுக்கும் சம்மதம்னா தான்
கல்யாணத்துக்கு ஒத்துப்போம்
இல்லன்னா நாங்க பாக்குற பொண்ண கட்டிக்கோ,

ஓடி கீடி போய்
கல்யாணம் பண்ணிக்கிற மாதிரிலாம் நினைச்சு
உன்ன வளர்த்தத்துக்கு கலங்கத்தை
கைமாறா கொடுத்துட்டு போயிறாதப்பா
அப்புறம் நீ எங்களை பாக்க முடியாதுனு
எங்க குடும்பத்துல சொன்னதை
என்னால மீற முடியல,

யாத்ரா வீட்டுல சம்மதத்தை வாங்க
பலமுறை அவங்க அப்பாவை சந்திக்கப்போனேன்
ஒரு முறை கூட அவரை பாக்க முடியல
அவர் என்ன பாக்க விரும்பல..?

காதல் விஷயத்துனால யாத்ரா மேல
அவ்ளோ பாசம் வச்சிருந்த அவளோட அப்பா
அவ மேல வெறுப்பை உமிழ ஆரம்பிச்சுட்டாரு
எங்களுக்குள்ள அடிக்கடி சண்டை இதுனால,
அமுதனும் கிருஷ்ணனும்
எவ்ளோ சொல்லியும் ரெண்டு பேரும்
எதையும் கேட்குற நிலைமையில இல்ல,
யாத்ராக்கு நான் அவளை விட
பெட்டர் ஆனா பொண்ண தேடி
போய்ட்டேன்னு எண்ணம்,
எவ்ளோ சொல்லியும் அவளுக்கு
என் நிலமையை புரிய வைக்க முடியல,
அவ நிலைமைய
என்னாலும் புரிஞ்சுக்க முடியல,
அவங்க அப்பா என்ன மதிக்க கூட இல்ல
பல முறை அவங்க வீட்டுக்கு பேச போயும்
அவளும் அவங்க அப்பாவை
தாண்டி வர முற்படல,
நானும் என் குடும்பத்தை விட்டுக்கொடுத்து
அவகூட சேரவும் முடியல,
ஓடி போய் கல்யாணம் பண்ணி
வளர்த்த கிடா மார்ல பாஞ்ச கணக்கா
எங்க குடும்பத்தை நான் காயப்படுத்த விரும்பல,
பெரிய இடத்து பொன்னான
அவளும் ஓடிவந்து அவங்க குடும்பத்துக்கு
கலங்கம் ஏற்பட்டு விடும்னு
அவளும் அதற்க்கு தயாராயில்ல,

ரெண்டு பேருக்கும் சேரணும்னு மனசு இருக்கு
ஆனா அவங்க அவங்க கோட்ட
தாண்டி வர முடியல,குடும்பத்துலயும் ஒத்துக்கல,
எல்லாத்துக்குமே ஒரு முடிவு வருமே
அதே மாதிரி எங்க காதலுக்கும்
ஒரு முடிவு வந்துச்சு ஆமா பிரிவு..?
எல்லாத்துக்குமான பதிலா அமைஞ்சுச்சு
ஆனா நான் இழந்தது காதலை மட்டுமில்ல
என்னோட நண்பர்களையும் தான்.
அவங்களுக்கும் என் தரப்பு புரியல,
யாத்ராவை நான் வேற பொண்ண பார்த்ததும்
கழட்டி விடுற மாதிரி அவங்களும்
நினைச்சுட்டாங்க போல,

என் தரப்பு நியாயம் யார்க்கும் புரியல
என்ன மதிக்காத ஒருத்தர்ட்ட
நான் எவ்ளோ தூரம் இறங்கி போறது,
ஓடி போய் கல்யாணம் பண்றதுக்கு
நானும் தயாரா இல்ல அவளும் யாரா இல்ல

ரெண்டு பேருக்கும்
குடும்பம் முக்கியமா தோணுச்சு,
அதுக்குன்னு அவங்க அப்பா சமத்துக்காக
நான் எவ்ளோ நான் காத்திருக்கணும்,
சம்மதம் கிடைக்குற மாதிரினா காத்திருக்கலாம்
அவர் சம்மதம் குடுக்க கூடாதுனு
இருக்குற இடத்துல
எவ்ளோ நாள் காத்திருக்கிறது,
நான் காத்திருக்க தயாரா கூட இருப்பேன்
எங்க குடும்பத்துல
அதுக்கும் தயாரா இல்ல,
எல்லாரும் என்ன விட்டு போய்ட்டாங்க
நான் பெரும் பாவம் பண்ணுன மாதிரி,

இப்போ அவங்க மூணுபேரும்
நல்ல நட்புல தான் இருக்காங்க.
நமக்கு கல்யாணம் ஆனா சில மாசத்துலயே
அவளுக்கும் கல்யாணம் ஆகி
வெளிநாட்டுல செட்டில் ஆகிட்டா,
எங்க Fantastic4 குரூப்லாம் அழிஞ்சு போய்டுச்சு,
எல்லாரும் லெப்ட் ஆகிட்டாங்க
ஒவ்வொரு முறையும்
அவங்க ஞாபகம் வரும் போதெல்லாம்
அந்த பழைய மெசேஜ் எடுத்து
படிச்சு அழுதுக்குவேன்,
நாங்க ஒண்ணா இருந்த
போட்டோஸ் பார்த்து ஏங்கிகொள்வேன்
எனக்கும் அந்த நட்புல
நீடிக்கணும் வாழணும்
சந்தோசமா இருக்கனும்னு ஆசை,
ஒண்ணா சந்தோசமா வாழ்ந்த இடத்தை
தனியா வெறுமையா நின்னு பாக்குற
சோகம் கொடுமையானது
எனக்கு யாத்ரா கூட
பழைய படி காதல்லாம் வேண்டாம்
ஒரு நட்பாச்சும் இருக்கனும்,
ஏன்னா அவ காதலி என்பதை விட
அவ ஒரு நல்ல தோழி,

என்னோட அமுதனும் கிருஷ்ணனோட
தோள் மேல தோள் சாஞ்சு உட்காரணும், மணிக்கணக்குல பேசணும்
செல்லமா அடிச்சுக்கணும்
பழையபடி எங்க காதலுக்கு முன்னாடி
நாங்க இருந்த அந்த பிரென்ஷிப் ஆச்சும்
இருக்கணும் னு தான் ஆசை
ஆனா இப்போ எல்லாமே கைமீறி
கடந்து போச்சு என்று
என் கன்னத்தை கண்ணீர் தீண்டவும்
கடல் அலை என் காலை தீண்டவும்
சரியாக இருந்தது,

இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடியே
உன்கிட்ட சொல்லிடனும் னு நினைச்சேன் மாயா.
எந்த ஒளிவு மறைவும் இல்லாம
வெளிச்சமான வாழ்வை நோக்கி
நம்ம நகரனும்னு நினைச்சேன்,

எந்த கணமும் இல்லாம
உன்னோட வாழ்நாள் முழுசும்
உன்னோட அன்புக்கு
சொந்தமானவனா இருக்கனும் னு நினைச்சேன்,
இதெல்லாம் உன்கிட்ட சொல்லி
அதெல்லாம் இழந்துடுவேனோனு பயம்,

எங்க அப்பா அம்மா
என்ன பாதிலேயே விட்டுட்டு போன மாதிரி,
யாத்ரா என்ன விட்டுட்டு போன மாதிரி,
அமுதனும் கிருஷ்ணாவும்
என்ன விட்டுட்டு போன மாதிரி
நீயும் என்ன பாதிலேயே
அந்த தனிமை தீவுல விட்டுட்டு
போய்டுவியோன்னு பயம்
என்ன கொலையா கொன்னு
என் கழுத்தை நெறிக்க ஆரம்பிச்சுடுச்சு.!

இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னாடி
ஒரு எதிர்பாராத நிகழ்வுல
அமுதன்கிட்ட பேச வேண்டிய நிலை வந்தது,
என் தனிமை நிலைய
அவன்கிட்ட பொருமி தள்ளிட்டேன்,
அந்த பொருமல் அவனுக்கும்
சற்று புரை ஏறிருக்கும் போல..?
என் நிலைய கொஞ்சம் புரிஞ்சுகிட்டான்
யாத்ரா கிட்டயும் கிருஷ்ணா கிட்டயும்
இத பத்தி பேசிருக்கான்,
அத தொடர்ந்து கிருஷ்ணாவும்
என்ன தொடர்பு கொண்டு பேசுனான்
கடைசியாதான் குறிஞ்சி பூ பூத்துச்சு
யாத்ரா கால் பண்ணுனா,
முடிஞ்சத பத்தி ரெண்டு பேரு
பேச விரும்பல,
எங்களுக்குள்ள முரணான வாழ்க்கை
கடந்த காலத்துல இருந்தாலும்
அரண் மாதிரியான வாழ்க்கை
ரெண்டு பேருக்கும் அமைஞ்சுருக்கு,

எங்க காதல் விவகாரங்கள்
அவளின் கணவருக்கு தெரியுமாம்
அவளை புரிந்துகொண்டார்,
அரவணைத்து கொண்டார்
எதையும் பெரிது படுத்தாத
திரைப்படங்களில் மட்டும்
கண்டு வந்த கண்ணிய மனிதர்,
என் தனிமையை
அவங்க எல்லாருக்கும் புரிய வந்துருக்கு

சீக்கிரமே
அனைவரும் சந்திப்போம்னு சொல்லிருக்காங்க,
என் நண்பர்கள்ல
பெரும்பாலானோருக்கு கல்யாணம் ஆகிடுச்சு
இன்னும் ஒருத்தன் மட்டும் தான் இருக்கான்
இவங்க எல்லாருக்கும்
எங்களோட காதல் விவகாரங்கள் தெரியும்,
இவ்ளோ ஏன் யாத்ரா கூட
அவ கணவர்கிட்ட
எங்களை பத்தி சொல்லிட்டா,
நான் இன்னும் உன்கிட்ட அத பத்தி சொல்லல
இதுக்கு மேல நான் உன்கிட்ட
இத மறைச்சா ரொம்ப தப்பாகிடும்
உனக்கும் இது தெரிஞ்சாகணும்,
இத உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு
தயங்கிட்டு இருந்த எனக்கு
இத ஒரு சந்தர்பமா நினைச்சு
உன்கிட்ட சொல்லிட்டேன்,

இவ்வளவு நாளா
இதை உன்கிட்ட சொல்லாம இருந்ததுக்கு
என்ன மன்னிச்சுடு,
எனக்குன்னு இருக்குற எல்லாமே நீ தான்
உன் கைல என்னைய கொடுத்துட்டேன்,
இனி அத தூக்கி எரியுறதும்,
இல்ல உன் உள்ளங்கைக்குள்ள
புதைச்சு வச்சுக்கிறதும் உன் விருப்பம் என்றேன்,

அமைதியா கடலை பார்த்துட்டு
ஒன்னும் சொல்லாம இருந்தா மாயா..?

அவள் கண்ணோரம்
கண்ணீர் துளிக்கான வித்துக்கள் தெரிந்தது,

மௌனத்தை கலைத்து பேச தொடங்கினாள்
இவ்ளோ நாள்ல நீ என்ன புரிஞ்சுக்கிட்டது
அவ்ளோ தான்ல..?

எப்படி நான்
உன்ன விட்டு போய்டுவேன் நினைச்ச,
அவ்ளோ கல் நெஞ்சகாரியா நான்..?

உனக்கான எல்லாமும் நான்தான்னு சொல்றியே..!!

அப்போ எனக்கான எல்லாமும் நீதான் னு
உனக்கு புரியாம போச்சுல.!
அவ்ளோ தான் நீ என் மேல வச்ச நம்பிக்கையா..?

நீ புரிஞ்சுகிட்ட என்னோட அன்பு
அவ்ளோ தானா என்று
அவள் பங்குக்கு என்னை
நம்பிக்கை வார்த்தைகளால் வறுத்தெடுத்தாள்,

கோவமும் அழகு தான் என்று
அவளைஅன்று பாக்கும் போது
தான் தெரிஞ்சுகிட்டேன்..! அழகி.!!!

அவளை சமாதானப்படுத்தி
என்னவளை என்னோடு
இறுக அணைத்துக்கொண்டேன்,

"நான் கொடுத்து வச்சவ..என்றாள்..!!!

என்ன என்பது போல பார்த்தேன்..?

நான் கொடுத்து வச்சவ ..!!
இவ்ளோ உண்மையான ஒருத்தரை அடையுறதுக்கு,
நீங்க நினைச்சா
இத என்கிட்ட சொல்லாமலே இருந்திருக்கலாம்ல
எல்லாமே சொல்லிட்டு இதுக்கு மேல
நீ மட்டும் தான் இருக்க போறான்னு
சொல்ற புருசனை அடைஞ்சதுக்கு
நான் கொடுத்துதான் வச்சிருக்கணும்னு,
கண்ணோரம் சிறு கண்ணீர் துளியோடு
என் தோளில் சாய்ந்தாள் மாயா,

அந்த கண்ணீர் துளி
என் சட்டையில் படிந்து
அவள் காதலை கூறியது
இதுக்கு மேல அன்பு வைக்க
எவள் கிடைத்து விட போகிறாள்
கொடுத்து வைத்தது அவள் அல்ல நான் தான்,
அவள் தோளை என் தோளோடு அணைத்துக்கொண்டேன்,
கடற்கரை காற்று
அலையோடு சேர்ந்து ராக கீதம் பாடியது,
எங்கள் கால்களை உரசி சென்ற
அலை கடலுக்கு கரையே சொந்தம்
நிலவு அல்ல என்பதை
என் கால் தொட்டு சொல்லி சென்றது,
ஆம் என்னோட கரையும் இவளே
என் கலங்கரை விளக்கும் இவளே.!!

எங்கள் கதையை
கடற்கரை மணலை போல
அங்கேயே தட்டிவிட்டு வந்து விட்டோம்
அவள் முழுசாய்
என்னுள் தஞ்ஜம் அடைந்து விட்டாள்,

அதன் பிறகு அவள் அதை பற்றி
என்னிடம் எதுவும் கேட்கவில்லை,

சில நாட்கள் கடந்தது..?

என் பிறந்தநாள் இரவு
மாயா என்னை
எங்கள் வீட்டு மொட்டைமாடிக்கு
அழைத்து சென்றாள்,
ஏதோ பிறந்தநாள் surprise
என்றெண்ணி சென்றேன்.

மணி எத்தனை என்றாள்,
12 என்றேன்
கரெக்ட் ஆ எத்தனை என்றாள்,
11:58 என்றேன்
அப்போ இன்னும் இரண்டு நிமிடங்கள்
இருக்கு என்றாள்,
என்ன பர்த்டே கிப்ட்டா..?
எங்க கைல ஒண்ணுமே காணோம்
எங்க ஒளிச்சு வச்சுருக்க என்றேன்.
கிப்ட் உன்கிட்ட தான் இருக்கு,என்று
அவள் 8.7..6..5...4..என்று
Coundown ஸ்டார்ட் செய்தாள்
மணி 12 ஆகியது,

ஹாப்பி பர்த்டே என்றாள்.
முகமலர்ச்சியோடு
தேங்க்ஸ் டி பொண்டாட்டி என்று
அவளை முத்தமிட்டேன்,
எங்க கிப்ட் என்றேன்..!

வாட்சப் குள் போக சொன்னாள் அங்கே.........!!!

Fantastic4 என்று ஒரு குரூப்
அமுதனால் கிரியேட் செய்யப்பட்டு
அதில் நான் add செய்யப்பட்டிருந்தேன்
என்னை தொடர்ந்து
கிருஷ்ணனும்,யாத்ராவும் add செய்யட்டு
'' Happy Birthday Trilok .!!
Say,Thanks To ur Wife"..என்று
அமுதன் type பண்ணிருந்தான்,

நான் ஆனந்தம் தளும்பும் கண்களுடன்
மாயாவை நிமிர்ந்து பார்த்தேன்
அவள் தான் எனக்காக
இதையெல்லாம் ஏற்பாடு செய்திருக்கிறாள்
என்று உணர்ந்து கொண்டேன்,

நீ தானே சொன்ன
உனக்குள்ள நான் முழுசா போய்ட்டேன்னு,
அப்போ உன்னோட மனநிலைய
என்னால புரிஞ்சுக்க முடியாதா
என்று கண்ணடித்தாள் மாயா,

அவளை அள்ளி அணைத்துக்கொண்டேன்
உச்சி முகர்ந்து கொண்டேன்
என் வாழ்வின்
இத்தனை கஷ்டங்களை இறைவன் கொடுத்தது
இவளை இந்த அரும்பெருட்கொடையை
வழங்கத்தான் என்று உணர்ந்து கொண்டேன்,

குரூப்பில் இன்னொரு மெசேஜ் யாத்ரா தான்
" இனி இது Fantastic4 அல்ல..Fantastic5"
என்று மெஸேஜ் இட்டு குரூப் பெயரை மாற்றினாள்,

அதில் ஐந்தாம் நபராய்
'மாயா Add செய்யப்பட்டாள்'.!!

எழுத்து : Diwahar Manimaran
மூலக்கதை : Shiva Chelliah

Comments

Popular posts from this blog

The Journey of Solo - Title Poem

ஓம் நமச்சிவாய என்னும் மூலமந்திரத்தின் கருவாய் நீர்,காற்று,நெருப்பு,நிலம்  என்னும் நாற்பகுதிகளை இறைவன் சிவனை வைத்து மையப்படுத்தி இருக்கும் கதைக்களத்தின் ஒரு கவிதை நடை பயணம் இங்கு, " The Journey of Solo - Title Poem |  Bejoy Nambiar  " 1) நீர் - ( World of Shekhar )  அன்பே ஆயிரம் மழைத்துளிகள் என்னை நனைப்பது போல நீ என்னை நனைத்துக்கொள் நதியின் ஆழங்களில் நான் மூச்சு திணறுவது போல நீ என்னை தழுவிக்கொள் கடலின் பேரலைகள் கரையை தீண்டுவது போல நீ என்னை எடுத்துக்கொள் என்னை உன் கரங்களால் அணைத்துக்கொள்ளாதே உன் மனதால் இறுக அணைத்துக்கொள் அன்பின் தனிமையில் உனக்கு மரணம் இல்லை 2) காற்று - ( World of Trilok ) யுகாந்திரங்களின் கோபம் யுகாந்திரங்களின் இறுக்கம் யுகாந்திரங்களின் பொறுமை யுகாந்திரங்களின் தனிமை வந்துவிட்டது எல்லாவற்றின் மீதும் பெரும் புயல் ஒன்று இந்த காற்றை எதிர்த்து நடப்பவர்கள் யார்..? காலத்தின் புயலில் உதிரும் ஆயிரம் ஆயிரம் மலர்களில் ஒரு மலரல்லவா நீ..? அழிவின் தனிமையில் காத்திருக்க உனக்கு நேரமில்லை 3) நெருப்பு - ( World of Shiva ) வன்மத்தின் வனங்கள் பற்றி எரிகின்றன குருதியின

கிறுக்கல்களின் தொகுப்புகள்

வெள்ளிக்காப்பை சுழற்றினேன் சூடான காஃபியை அருந்தினேன் தலை முடியினை கோதி விட்டேன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன் ஆழ்மனதும் அனாதையாக இருந்தது எண்ணங்களின் ஓட்டமும் சீராக இல்லை யூடியுப் பக்கம் சென்றேன் அன்றைய தினத்தின் Trending காணொளிகள் ட்விட்டர் பக்கம் சென்றேன் நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே தள்ளு முள்ளு இன்ஸ்டாகிராம் பக்கம் சென்றேன் Bae Calls Me Chocobar என்றாள் கிளியோபாட்ரா ஹைக் பக்கம் சென்றேன் நட்டாஸா உரையாடலுக்கு எதிர்வாதம் செய்தாள் சரி, இது தான் இன்றைய தலைவிதி என்று முகப்புத்தகம் வந்து இதை பதிவு செய்தேன்..? - A Poem Without a Topic ❤ ---------------------------------------------------------- வாழ்க்கை இப்படியே போயிடுமா சார் என்பதில் தொடங்கி வாழ்க்கை ஒரு வட்டம் என்பதில் பயணித்து இவ்வளோ தான் சார் வாழ்க்கை என்பதில் முடிகிறது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நம்பகத்தன்மை நிறைந்த வாழ்க்கை..? -------------------------------------------------------- இந்த காஃபி ஷாப் சுவர்களின் இடையூறுகள் நம் நாவிதழ்கள் இடைபாடுகளிலும்..?..!! - வா ரயில் விட போலாம் வா  🖤 --

குடைக்குள் மழை

✨️💚 ரீனா : ஹே ஆர் யூ தேர்..? விக்ரம் : இருக்கேன் ரீனா, என்ன திடீர்னு மெசேஜ், முக்கியமா எதுவும் சொல்லணுமா..? ரீனா : ஹே, அதெல்லாம் இல்ல, ஏன் ஒர்க்ல இருக்கியா..? விக்ரம் : இல்ல, வீட்டுக்கு வந்துட்டேன், Earlier Appointments So, முடிஞ்சு பா! ரீனா : ஒகே, கொஞ்சம் மனசு சரி இல்ல அதான் உன்கிட்ட பேசலாமேன்னு கால் பண்ணேன்..? விக்ரம் : என்ன ஆச்சு..? ஆர் யூ ஓகே..? சொல்லு ரீனா Any Issue..? ரீனா : ஹே,Just Mood Swing ஒன்லி! நீ ஃபிரீன்னா சொல்லு Let's Walk Together in Beach! உனக்கு தெரியும்ல எனக்கு பீச் வாக்ன்னா ரொம்ப பிடிக்கும், So நீ ஃபிரீன்னா வர முடியுமா விக்ரம்..? விக்ரம் : சரி, ஈவினிங் 6 மணிக்கு பீச்ல நம்ம வழக்கமா மீட் பண்ணுற அந்த பட்டர் பன் கடைக்கு வந்துரு ரீனா, நானும் வந்துடுறேன், ரீனா : தேங்க்ஸ் விக்ரம்! விக்ரம் : தேங்க்ஸா..? No More Formalities! உன்னோட தேங்க்ஸ்ல நான் பூரிச்சு போய்ட்டேன்,சிரிப்பு காட்டாம வா ரீனா! ரீனா : ஹ்ம்ம் டா! * இடம் : கடற்கரை * நேரம் : மாலை 6 மணி விக்ரம் : ஹே! என்ன ஆச்சு ரீனா திடீர்னு..? ரீனா : அதெல்லாம் ஒன்னும் இல்லடா, Please Give Sometime நானே சொல்லுறேன் போ