Skip to main content

சுய தேடல் | Connectivity Between Life of Ram Song

ஒரு தெளிவான சுயம் சார்ந்த தேடலை
நாம் தொடங்கும் போது அதற்கு முன்பு
ஏற்கனவே எங்கேயோ எப்போதோ
ஒரு சுயம் மீட்டெடுத்தல் நிகழ்ந்திருக்கும்

அப்படியான ஒரு நிகழ்வு தான்
லைஃப் ஆஃப் ராமின் பாடலில் நிகழ்ந்திருக்கிறது
தன் சுயத்தினை எங்கயோ தொலைத்து
அதை மீண்டும் கண்டெடுக்க முற்படும் ஒருவன்
என்னவெல்லாம் நினைப்பான் என்பதை
கச்சிதமாய் எழுதியிருக்கிறார்கள்.

பாடல் வரிகள் :

வாழ்வா என் வாழ்வை வாழவே
தாளாமல் மேலே போகிறேன்
தீரா உள் ஊற்றை தீண்டவே
இன்றே இங்கே மீள்கிறேன்
இங்கே இன்றே ஆள்கிறேன்.

இதில்,
தீரா உள் ஊற்றை தீண்டவே என்று
தன் பழைய சுயத்தினை தேடும் போது
இன்றே இங்கே மீள்கிறேன் என மீட்கவும் செய்து
இங்கே இன்றே ஆள்கிறேன் என
தன் சுயத்தினை ஆள ஆரம்பிக்கிறான்,

ஜானு :
ரொம்ப தூரம் போயிட்டியா ராம்..?

ராம் :
உன்ன எங்க விட்டேனோ
அங்கயே தான் நிக்குறேன்,

ஆம்,
அந்த புள்ளியில்
அந்த நேர்க்கோட்டில்
அந்த மூலாதனத்தில் தான்
ராம் இன்னும் நின்று கொண்டு இருக்கிறான்

அவன் திருமணம் செய்யவில்லை
Travel Photographer - ராய் தொலைத்த
தன் தேடலுக்கான வாழ்கையை தொடருகிறான்,

ஒரு சிறு கற்பனை முயற்சி
திரைக்கதையில் சிறிய மாற்றம்
லைஃப் ஆஃப் ஷிவா என்று
என் மனப்போக்கில் நான் உணர்ந்தவை,

அவளை விட்டு அவன் பிரிகிறான்
பணம் ஜாதி போன்ற இடைபாடுகளினால்,
அவனுக்கு திருமணம் நடக்கிறது
சிறிது காலம் தாழ்த்தி சில மாதங்களில்
அவளுக்கும் திருமணம் நடக்கிறது
தன்னை நம்பி வந்த பெண்ணை
மனம் நோகாமல் ஒரு தோழன் போல்
உடனிருந்து கவனித்துக்கொண்டான் அவன்,
அவர்களின் Wave Length Sportive ஆகவும்
இல்லறம் சிறக்கும் படியே அமைந்தது

இவற்றை தவிர அவனை சுற்றிய
அவனின் சில நண்பர்கள் மட்டுமே
அடங்கிய நண்பர்களின் கூட்டம் என்று
வாழா என் வாழ்வை வாழ்கிறேன்
என்ற போக்கில் அவன் வாழ்ந்து வந்தான்

பாடல் வரிகள் :

நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன்
கண்ணாடியாய் பிறந்தே,
காண்கின்ற எல்லாமும் நானாகிறேன்

இதில்,
கண்ணாடியின் பிம்பத்தில்
அவன் காண்கின்ற எல்லாமும்
அவனின் தேடல் சார்ந்த நிமித்தத்தையும்
அவன் உருவத்தையும் மட்டுமே
எதிர் கோணத்தில் பார்க்கிறான்

எது எப்படி இருந்தாலும்
அவன் மனதின் ஆழத்தை உணரும் சக்தி
இங்கு எவருக்கும் இல்லை,
அவன் சிரிப்பின் அசைவுகளுக்கு பின்னிருக்கும்
ஆழ்ந்த துக்கமும் அறியாதோர் பலர் இங்கு,

பாடல் வரிகள் :

வாகாய் வாகாய் வாழ்கிறேன்
பாகாய் பாகாய் ஆகிறேன்

வாகாய் - Living With Comfortness
பாகாய் - உருகுதல்

தன்னை ஒரு Comfort Zone வட்டத்திற்குள் அடைத்து
தான் தொலைத்த ஒன்றை அன்றாடம் நினைத்து
தினம் தினம் மனம் உருகுகிறான் உள்ளுக்குள்,

பாடல் வரிகள் :

ஏதோ ஏகம் எழுதே
ஆஹா ஆழம் தருதே
தாய் போல் வாழும் கனமே
ஆரோ பாடுதே
ஆரோ ஆரிராரிரோ
ஆரோ ஆரிராரிரோ

இதில்,

ஏகம் என்பது தனிமை
கனம் என்பது எடை(சுமை)
தனிமையின் ஆழத்தில்
அவன் தாய் போல் வாழும் கனம்
அவள் மட்டுமே
அவள் காதல் மட்டுமே..?
அவன் தாயும் அவளே
அவள் பாடும் ஆரிராரிரோக்கள்
தனிமையின் தேடல்களில்
இவனுக்கு துயராற்றும் மருந்து,

தொடர்ந்தான்
தொடர்கிறான்
தொடர்ந்து கொண்டே இருக்கிறான்
அவனுக்கனான அவள் சார்ந்த தேடல்களை..?

- Life of Ram | Life of Shiva
Connectivity Between Ram & Shiva 🖤

Penned By : Shiva Chelliah 
துணை எழுத்துக்கள் : Dinesh Raman 🙏

Comments

Popular posts from this blog

The One - அந்த ஒருவன் 💚

💚 நிராகரிக்கப்பட்ட ஒருவன் புறக்கணிக்கப்பட்ட ஒருவன் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவன் அவமானப்படுத்தப்பட்ட ஒருவன், "வர சொல்லு அந்த ஒருத்தன..?" பல போர் படை இருக்கலாம் எதிர்பார்த்தது இவனத்தான் அந்தொருவன் வந்திருக்கான்டே..!!! "Temba" என்றால் "Hope" என்று பொருள், ஒட்டு மொத்த ஆஃப்ரிக்க மக்களின் நம்பிக்கை ஒளியாகவும் அவர்களின் ஏக்கத்திற்கு விடையாகவும் இந்த "டெம்பா" ஒரு வாழ்வியலை இங்கே புதுப்பித்து இருக்கிறான், எத்தனை அவமானங்கள் தான் 'இந்த ஒருவனுக்கு' நிகழ்ந்திருக்கிறது, உயரம் ரீதியாகவும்,நிற ரீதியாகவும் என இவன் கண்ட அவமானங்கள் அனைத்தையும் தாண்டி இன்று ஒரு இன மக்களையே இன்று இவன் தலை நிமிர செய்திருக்கிறான், எங்க கேங்க்ல ஒரு ரெண்டு பேர் மொரட்டு தனமான தென்னாப்பிரிக்கா ஃபேன்,நானும் என்னோட இன்னொரு முகநூல் நண்பரும் (Anjali Raga Jammy), எப்படி "கொம்பன்" யானைய பார்த்து காடே ஆடி போகுமோ அது மாதிரி நாங்க ரெண்டு பேரும் எங்க தலைவன் டெம்பா பாவுமா - வ "டெம்பன்" ன்னு செல்லமா தான் கூப்பிடுவோம், இந்த டெம்பனின் கைகள் ஒரு ந...

நிகரில்லாதவள்

அன்று ஊரெங்கும் நல்ல மழை வெளுத்து வாங்கிகொண்டிருந்தது, பெரு மழைக்கு ஒதுங்குவதற்காக அவள் அங்கே சாலையோரம் இருந்த மரத்தின் அடியில் சென்று நின்று கொண்டாள், அவளுக்கு அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் சூழ அவள் ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியை போல் அக்குழந்தைகளுக்கு நடுவில் நின்று அவர்கள் மழையில் செய்யும் சேட்டையை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள், இந்த மழை நிற்பதற்குள் இவள் யார்,இவள் பெயர் என்ன, இவள் சார்ந்து இருப்பவைகள் என சின்ன கதையுடன் ஒரு முன்னோட்டம் பார்ப்போம், இவளுக்கான அறிமுகம் இல்லாததால் இவளுக்கு இவளாகவே சூடிக்கொண்ட பெயர் இது, ஆம் இவளுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஆசிரமத்தில் தான் வளர்ந்து வருகிறாள்,அங்கிருப்பவர்கள் "குட்டி" என்று கூப்பிடுவார்கள் அதுவே இவளது பெயராகவும் மாறியது, பின் பள்ளி முடிந்து யாரோ பெயர் தெரியாத ஸ்பான்ஸர்ஷிப் மூலம் கல்லூரி படிப்பை முடித்து நல்ல ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்த பின் தான் இவளுக்கு ஒன்று புரிந்தது, நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள சரியான பெயர் கூட நமக்கு இல்லை என்று, எதிர்நீச்சல் படத்தில் வருவது போல் தன் அடையாளத்தை இச்சமூகத்தில் பதிக்...

குடைக்குள் மழை

✨️💚 ரீனா : ஹே ஆர் யூ தேர்..? விக்ரம் : இருக்கேன் ரீனா, என்ன திடீர்னு மெசேஜ், முக்கியமா எதுவும் சொல்லணுமா..? ரீனா : ஹே, அதெல்லாம் இல்ல, ஏன் ஒர்க்ல இருக்கியா..? விக்ரம் : இல்ல, வீட்டுக்கு வந்துட்டேன், Earlier Appointments So, முடிஞ்சு பா! ரீனா : ஒகே, கொஞ்சம் மனசு சரி இல்ல அதான் உன்கிட்ட பேசலாமேன்னு கால் பண்ணேன்..? விக்ரம் : என்ன ஆச்சு..? ஆர் யூ ஓகே..? சொல்லு ரீனா Any Issue..? ரீனா : ஹே,Just Mood Swing ஒன்லி! நீ ஃபிரீன்னா சொல்லு Let's Walk Together in Beach! உனக்கு தெரியும்ல எனக்கு பீச் வாக்ன்னா ரொம்ப பிடிக்கும், So நீ ஃபிரீன்னா வர முடியுமா விக்ரம்..? விக்ரம் : சரி, ஈவினிங் 6 மணிக்கு பீச்ல நம்ம வழக்கமா மீட் பண்ணுற அந்த பட்டர் பன் கடைக்கு வந்துரு ரீனா, நானும் வந்துடுறேன், ரீனா : தேங்க்ஸ் விக்ரம்! விக்ரம் : தேங்க்ஸா..? No More Formalities! உன்னோட தேங்க்ஸ்ல நான் பூரிச்சு போய்ட்டேன்,சிரிப்பு காட்டாம வா ரீனா! ரீனா : ஹ்ம்ம் டா! * இடம் : கடற்கரை * நேரம் : மாலை 6 மணி விக்ரம் : ஹே! என்ன ஆச்சு ரீனா திடீர்னு..? ரீனா : அதெல்லாம் ஒன்னும் இல்லடா, Please Give Sometime நானே சொல்லுறேன் போ...