Skip to main content

The Journey of Solo - Title Poem

ஓம் நமச்சிவாய என்னும் மூலமந்திரத்தின் கருவாய் நீர்,காற்று,நெருப்பு,நிலம் என்னும் நாற்பகுதிகளை இறைவன் சிவனை வைத்து மையப்படுத்தி இருக்கும் கதைக்களத்தின் ஒரு கவிதை நடை பயணம் இங்கு,

" The Journey of Solo - Title Poem | Bejoy Nambiar "

1) நீர் - ( World of Shekhar ) 

அன்பே
ஆயிரம் மழைத்துளிகள் என்னை நனைப்பது போல நீ என்னை நனைத்துக்கொள்
நதியின் ஆழங்களில் நான் மூச்சு திணறுவது போல நீ என்னை தழுவிக்கொள்
கடலின் பேரலைகள் கரையை தீண்டுவது போல நீ என்னை எடுத்துக்கொள்
என்னை உன் கரங்களால் அணைத்துக்கொள்ளாதே
உன் மனதால் இறுக அணைத்துக்கொள்
அன்பின் தனிமையில் உனக்கு மரணம் இல்லை

2) காற்று - ( World of Trilok )

யுகாந்திரங்களின் கோபம்
யுகாந்திரங்களின் இறுக்கம்
யுகாந்திரங்களின் பொறுமை
யுகாந்திரங்களின் தனிமை
வந்துவிட்டது எல்லாவற்றின் மீதும் பெரும் புயல் ஒன்று
இந்த காற்றை எதிர்த்து நடப்பவர்கள் யார்..?
காலத்தின் புயலில் உதிரும்
ஆயிரம் ஆயிரம் மலர்களில் ஒரு மலரல்லவா நீ..?
அழிவின் தனிமையில் காத்திருக்க உனக்கு நேரமில்லை

3) நெருப்பு - ( World of Shiva )

வன்மத்தின் வனங்கள் பற்றி எரிகின்றன
குருதியின் சுவடுகளில் சாம்பல் படுகிறது
குற்றத்தின் தண்டனைகளை தருபவர்கள் யாருமில்லை
பாவத்தின் சுமைகளை பகிர்பவர்கள் எவருமில்லை
வீழ்ச்சியின் தனிமையில் உனக்கு புகழிடமில்லை

4) நிலம் - ( World of Rudra )

என் அன்பே
இந்த நிலத்தின் மீது தான் நம் உடல்கள் தழுவிக்கொண்டன
இந்த நிலத்தின் மீது தான் நம் பிரிவின் சுவடுகள் பதிகின்றன
நான் சூரியன் விழும் திசையில் என் குதிரையை வேகமாய் செலுத்திக்கொண்டு போகிறேன்
தூங்க அஞ்சுகிற இரவுகளில் உன் கண்ணீருடன் நான் உரையாடிக்கொண்டு இருக்கிறேன்
இந்த நாளில் உன்னை கடந்துவிடும் அற்புதம்
எப்படியும் நிகழ்ந்து விடும் தானே
இழப்பின் தனிமையில் நிற்க உனக்கு நிழலில்லை

Comments

Popular posts from this blog

குடைக்குள் மழை

✨️💚 ரீனா : ஹே ஆர் யூ தேர்..? விக்ரம் : இருக்கேன் ரீனா, என்ன திடீர்னு மெசேஜ், முக்கியமா எதுவும் சொல்லணுமா..? ரீனா : ஹே, அதெல்லாம் இல்ல, ஏன் ஒர்க்ல இருக்கியா..? விக்ரம் : இல்ல, வீட்டுக்கு வந்துட்டேன், Earlier Appointments So, முடிஞ்சு பா! ரீனா : ஒகே, கொஞ்சம் மனசு சரி இல்ல அதான் உன்கிட்ட பேசலாமேன்னு கால் பண்ணேன்..? விக்ரம் : என்ன ஆச்சு..? ஆர் யூ ஓகே..? சொல்லு ரீனா Any Issue..? ரீனா : ஹே,Just Mood Swing ஒன்லி! நீ ஃபிரீன்னா சொல்லு Let's Walk Together in Beach! உனக்கு தெரியும்ல எனக்கு பீச் வாக்ன்னா ரொம்ப பிடிக்கும், So நீ ஃபிரீன்னா வர முடியுமா விக்ரம்..? விக்ரம் : சரி, ஈவினிங் 6 மணிக்கு பீச்ல நம்ம வழக்கமா மீட் பண்ணுற அந்த பட்டர் பன் கடைக்கு வந்துரு ரீனா, நானும் வந்துடுறேன், ரீனா : தேங்க்ஸ் விக்ரம்! விக்ரம் : தேங்க்ஸா..? No More Formalities! உன்னோட தேங்க்ஸ்ல நான் பூரிச்சு போய்ட்டேன்,சிரிப்பு காட்டாம வா ரீனா! ரீனா : ஹ்ம்ம் டா! * இடம் : கடற்கரை * நேரம் : மாலை 6 மணி விக்ரம் : ஹே! என்ன ஆச்சு ரீனா திடீர்னு..? ரீனா : அதெல்லாம் ஒன்னும் இல்லடா, Please Give Sometime நானே சொல்லுறேன் போ

Chai with Halitha Shameem Akka!

* Chai With Halitha Shameem Akka!  எதிர்பாரா வாய்ப்புகள் எப்போதாவது தான் அமையும்,அப்பறம் நம்ம எதிர்பார்த்து காத்திருந்தாலும் பரிபோன வாய்ப்பு போனது தான்,கிடைக்கும் போது வாய்ப்பை சரியான முறையில் தக்க வைத்துக்கொள்ள வேண்டும், அப்படி ஒரு வாய்ப்பு இயக்குநர் ஹலிதா அக்கா - வை சந்திக்க அரங்கேறியது,அவர்களின் சொந்த ஊரான தாராபுறத்தில் மாலை ஐந்து மணிக்கு தாராபுரம் பழனி பிரிவில் உள்ள சூர்யா பேக்கரியில் சந்திக்கலாம் என்று தனது முகப்புத்தகத்தில் பதிவு செய்திருந்தார், கோடை கால விடுமுறையில் மதிய நேரம் வரும் ஐஸ் வண்டிக்காக ஒரு மணி நேரமாக வீட்டு திண்ணையில் ஐஸ் வண்டி சத்தம் கேட்குதா என எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருக்கும் சிறுவனை போல நானும் மாலை அங்கு சென்று விட வேண்டும் அவர்களை சந்திக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு மட்டுமே மனசுக்குள் ஓடிக்கொண்டிருந்தது,இயக்குநர் அக்காவிற்கு ஒரு மெசேஜ் அனுப்பி வைத்தேன் இன்று மாலை சூர்யா பேக்கரிக்கு உங்களை காண வருகிறேன் என்று, "வாங்க" என்று பதில் ரிப்ளை செய்திருந்தார்கள், கோவையில் இருந்து கிளம்பி போகும் வழியில் காரணம்பேட்டையில் Dhanasekar D  - ஐயும் அழைத்துக்கொண்