தாக்குதல் என்றாலே கொலைன்னு
இல்ல,அது வன்முறைன்னு கூட
சொல்லமுடியாது,இங்கே கன்னத்தில்
அறைவது கூட தாக்குதல் தான் !
இந்த சமுதாயமும் சரி நாளைய
வருங்கால சமுதாயமும் சரி உன்
கன்னத்திலோ உன் பிள்ளை
கன்னத்திலோ யாரோ ஒருவன்
பளார் என்று ஒரு அறை விட்டால்
முதலில் தாக்குதல் வேண்டாம்
என்று நீயும் உன் பிள்ளையும்
அமைதியாக இருக்கலாம்,ஏன்
இரண்டாம் மூன்றாம் தடவையும்
கூட,ஆனால் நான்காவது தடவை
நீ நிச்சயமாக உன்னை அடித்தவன்
கன்னத்தில் ஓங்கி பளார் என்று
அறைவாய், இதுவே நிதர்சனம்,
தற்பாதுகாப்பு, உயிர் பழி கொலைன்னு
அந்த அளவு யாரும் இங்க பண்ண
சொல்லல,உரிமையை கேட்க கையில்
வாள் ஏந்தும் சூழ்நிலை வந்தால் வாள்
ஏந்த வேண்டும், நீ இன்று வாள்
ஏந்தினால் நாளை உன் சந்ததிகள்
நிம்மதியாக படிக்க முடியுமெனில்
நிம்மதியாக ஒரு வாழ்க்கை வாழ
முடியுமெனில் நீ இன்று வாள் எடுத்தே
ஆக வேண்டும், அது உரிமைக்காக
என்றாலும் சரி,தற்பாதுகாப்புக்காக
என்றாலும் சரி,
உன் உரிமையை மீட்க வேறு
வழியின்றி இன்று நீ வாள் எடுத்து
போராடுக் கொண்டு இருக்கிறாய்,
அதே நேரம் நாளை வரப்போகும்
உன் பிள்ளைகளுக்கும்
தலைமுறைகளுக்கும் தேவையான
அடிப்படை கல்விக்கும்,வாழ்க்கை
சூழலுக்கும் திடமான அத்தியாயத்தை
உருவாக்கி கொடுத்து அதற்கான
பாதையில் சரியான வழியில் அமைத்து
கொடு,அவர்களின் அன்றாட தேவைக்கான
காரணிகள் கிடைத்துவிட்டால் அவர்களின்
தலை நிமிரும்,இருள் படிந்த இரவில்
சிறு நிலா வெளிச்சமாக பிரகாசிக்கும்,
உன்னை ஒருவன் தாக்கும் போது
தற்பாதுகாப்புக்காக திருப்பித் தாக்குவது
வன்முறை அல்ல - அது அறிவார்ந்த
செயல்,இது மால்கம் எக்ஸ் சொன்னது!
Comments
Post a Comment