இரண்டு வருடங்கள் பின் சென்றால் அன்று ஒரு நாள் வேலை விஷயமாக ஊட்டி வரை செல்ல வேண்டி இருந்தது, அன்றைய காலக்கட்டத்தில் மாதத்தில் ஒரு முறை ஊட்டி சென்று வருவேன், பெரும்பாலும் என்னுடைய பல்சர் 150 பைக் தான் என்னுடைய எல்லா பயணங்களிலும் உறுதுணையாய் உடன் வரும் ஒரு தோழன்,
வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ..? என்று கண்ணதாசனின் வரிகளுக்கேற்ப ஊட்டியின் மலைப்பாதைகள் முழுதும் Zig Zag வளைவுகளாக மொத்தம் 14 ஹேர்பின் பெண்டுகளுடன் இறைவனால் Gift Pack செய்யப்பட்ட ஒரு Natural Way of Greenish Road என்று சொல்லலாம், Headset மாட்டிக்கொண்டு பாடல் கேட்டுக்கொண்டே பயணம் செய்வது மலைப்பாதைகளில் சுகமானது என்றாலும் ஆபத்தை விலைக்கு வாங்கும் முயற்சி என்ற காரணத்தினால் அந்த பழக்கவழக்கத்தை தவிர்ப்பவன் நான்,அதற்கு பதிலாக எனக்கு பிடித்த பாடலை வாயில் முணங்கிக்கொண்டே பயணிப்பவன் நான், குழந்தை தனமாக இருந்தாலும் அதில் இருக்கும் சுகம் அறியாதோர் பலர்,
அன்றும் வீட்டிலிருந்து பைக்கை ஸ்டார்ட் செய்தேன், ஊட்டியில் நேற்று பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் வழித்தடங்களில் மண் சரிவு ஆங்காகே ஏற்பட்டும் யானைகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதாலும் மேட்டுப்பாளையம் டூ கோத்தகிரி வழி மலைப்பாதையில் ஊட்டி செல்லும் பேருந்துகள் மாற்றி அனுப்பப்படுகிறது என்று தொலைக்காட்சியின் வாயிலாக வந்தது அன்றைய காலை நேர சூடான செய்தி,
கொஞ்சம் யோசித்து பார்த்தால் மேட்டுப்பாளையம் டூ கோத்தகிரி சாலையும் மலைப்பாதை தானே அங்கும் மலை பெய்திருக்கும் ஆனால் அங்கும் மண் சரிவுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்குமே..? என்று மனதுக்குள் ஒரு சிந்தனை, பிறகு புரிந்தது நானே சிரித்துக்கொண்டேன்,ஆம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் வழித்தடங்கள் வெள்ளைக்காரன் காலத்து சாலை,அன்று அவன் போட்ட சாலையை மறு சீரமைத்து மராமத்து பணி பார்த்து ஆங்காங்கே சாலைகள் முழுவதும் Batch Batch ஆக காணப்படும்,சிறு மழை வந்தாலே சாலைகள் மோசமாக மாறிவிடும் இத்தனைக்கும் அதிகமாக சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் ஒரு மலைகளின் அரசி இந்த ஊரு, இதற்கு Right Opposite ஆக செல்லும் வழித்தடம் தான் மேட்டுப்பாளையம் டூ கோத்தகிரி சாலை வழியே ஊட்டிக்கு செல்வது, என்ன ஒரு 15 கிலோமீட்டர்கள் சுற்றி செல்லவேண்டி இருக்கும்,ஆனால் அந்த மலைப்பாதை மட்டும் எப்படி நன்றாக இருக்கிறது..? அங்குதான் ஒரு ட்விஸ்ட்டு, நம்ம "அம்மா" வந்து கொடநாடு அங்குதானே இருக்கின்றது, நீங்கள் கேட்கலாம் அவங்க Helicopter-ல தானே வந்து போறாங்கன்னு,ஆனா நம்ம ஊரு மந்திரிகள் அவங்கள அங்க போய் சந்திக்கிறதுக்கு சாலை வழியே தானே செல்ல வேண்டும்,அதற்காக எப்போதுமே தயார் நிலையில் இருக்கும் ஒரு ரோடு தான் இந்த சாலை, வடிவேலு சொல்லுவதை போல் ஒரு பான சோற அங்கனயே கொட்டி கொழம்புகள ஊத்தி கொழச்சு அடிக்கலாம்டா ரகம் தான், ஆமா எதுக்கு இப்போ அரசியல் பேசுறோம்..? சாரி பேசுறேன்..? நம்ம கதைக்கு வருவோம்,
ஆனால் அன்று ஊட்டி சென்றே ஆகவேண்டும், சரி என்று பைக்கை ஸ்டார்ட் செய்து பேருந்து நிலையத்தில் நிறுத்திவிட்டு நடத்துநரிடம் டிக்கெட் வாங்கிக்கொண்டு ஜன்னல் சீட்டை பிடித்தேன்,சாரல் மழை ஜன்னல் வழியே சிதறிட அதை தட்டி தட்டி விளையாடிக்கொண்டிருந்தேன் மூன்று வயது மழலை குழந்தை போல், மேட்டுப்பாளையம் தாண்டி கோத்தகிரி சாலை வந்தது,அங்கிருந்து மலைப்பாதை ஆரம்பம், Headset எடுத்து காதில் மாற்றினேன்,
ஜன்னல் சீட்டு
பேருந்து பயணம்
சில்லென்ற சாரல் மழை
அடுத்தது என்ன..?
எப்படியும் நீங்களே யூகித்து இருப்பீர்கள்,

"இசைஞானி இளையராஜா"
ஸ்ரேயா கோஷல் என்னும் ஒரு குரல் வழி இறைவி அப்பொழுது தமிழ் சினிமாவிற்கு வந்த ஒரு பொற்காலம் அது,
பாலு மகேந்திரா என்னும் ஒளி வழி கலைஞனின் பார்வையில் வந்த படத்தில் அந்த பாடல் இடம் பெற்றது,அந்த பாடலின் காணொளியிலும் பாலு மகேந்திரா என்னும் ராட்சசன் Frame by Frame அந்த பாடலின் வரிகளுக்கேற்ப தன்னுடைய Vision-இல் கேமராவில் கவிதையாக செதுக்கி இருப்பார் சிற்பி சிலையை செதுக்குவது போல,
சிற்பி சிலையை செதுக்கியது என்று சொன்னப்பின் எதற்கு யோசனை..? அந்த பாடலை செதுக்கிய சிற்பி என்னுடைய ஆசான் "நா.முத்துக்குமார்" என்னும் பேரன்பின் ஆதி ஊற்றான அவர்தான்,
அன்று முழுவதும் ஊட்டி சென்று மறுபடியும் வீடு திரும்பும் வரையிலும் கிட்டத்தட்ட ஒரு நூறு முறை Repeat Mode - இல் கேட்ட பாடல் அது. இன்னும் எதற்கு யோசனை..? முதலில் Youtube செல்லுங்கள், இந்த பாடலை காணொளியுடன் காணுங்கள்,
Feel the Moment
Feel the Pure Music
Feel the Poetic Lyric
Feel the Cinematography
படம் : ஜூலி கணபதி
பாடல் : எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
- A Music Without a Software ❤
Comments
Post a Comment