Skip to main content

நெஞ்சில் மாமழை


தேதி : டிசம்பர் 31, 2022
நேரம் : 21:37 (ரயில்வே நேரப்படி)

சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலின் S3 பெட்டியில் 12 - ஆம் எண் ஸ்லீப்பர் மிடில் பெர்த் சீட்டில் எனக்கான டிக்கெட்டை அன்று நான் புக் செய்திருந்தேன்,
அடுத்த நாள் புது வருடம் பிறக்கிறது என்பதால் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது,
பொதுவாகவே ரயில் பயணங்களில் சந்திக்கும் மனிதர்கள் அனைவரும் ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமான தேடலை நோக்கியே சென்று கொண்டிருப்பர், 
எனக்கான ஸ்லீப்பர் பெர்த்தில் படுக்காமல் காலியாக இருந்த 11 - ஆம் நம்பர் லோ பெர்த் சீட்டின் ஜன்னலை திறந்தவாறு கொஞ்சம் ஆக்சிஜென்னை ஸ்வாசித்துக்கொண்டிருந்தேன் என் விரல்கள் கொண்டு மூடிய முகத்துடன்,

21:40 - ற்கு கிளம்பும் பாண்டியன் எக்ஸ்பிரஸிற்கு சரியாக 21:39 மணி அளவில் என் எதிரே வந்து ஒருவர் அமர்ந்தார் மூச்சு வாங்க கையில் இரண்டு அடுக்குடைய பேக் - உடன்,
அவர் சீட்டில் அமர்ந்தவுடன் தனக்கு
தானே பேசிக்கொண்டிருந்தார்,

நியூ இயர் பிறக்க போறனால
எவ்வளோ டிராபிக் இந்த ரயில்வே ஸ்டேஷன் வரதுக்குள்ள, ஒரு வழியா ட்ரெயின்ன பிடிச்சுட்டேன் ஹ்ம்ம்,

புது வருஷம் பிறக்குறனால ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலையும் மாற்றம் வருதோ இல்லையோ நம்ம தேசத்து மக்கள் அந்த புது வருஷ பிறப்பை ஒரு தாயின் கருவறையில் இருந்து வெளிவரும் குழந்தை போல அதன் வருகையை மிகவும் ஆர்வத்துடனும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் பண்டிகை கால தினமாய் ரொம்பவே ஆரவாரமாக கொண்டாடுறாங்க,

அடுத்த சிறிது நேரத்தில் பச்சை கொடி பறக்க பாண்டியன் எக்ஸ்பிரஸ் மாமதுரையை நோக்கி கிளம்பியது,

அப்பறம் தம்பி நீங்க மதுரைக்கு போறிங்களா..?
இல்ல திருச்சில இறங்கிடுவிங்களா..?

தம்பி..?
தம்பி..?

என் தோள்பட்டையில் அவர் கைகள் இப்போது என்னை சற்று லேசாக உலுக்கியது,

தம்பி..?

அவரை நோக்கி திரும்பினேன்
என் இரு கண்களின் துவாரங்கள் வழியே உள்ளே சென்று பார்த்தால்
குழந்தையின் சிரிப்பை படம் பிடிக்கும் புகைப்பட கலைஞன் போல் அவர் முகம் என் கண்களில் முதல் பார்வையிலேயே பதிந்தது,

என் கண்களில் தேங்கி நிற்கும் கண்ணீர் அவருக்கு என் நிலையை உணர்த்தியிருக்கும், ஏதோ ஒரு தேடலை இவன் நாடுகிறான், ஏதோ ஒரு தனிமையில் இவன் தன்னை அடை காத்து வாழ்கிறான் என்று,

தம்பி என்னப்பா கண்ணுல தண்ணி தேங்கி நிற்குது..? என்ன பா ஆச்சு..?

என்னோட கண்ணீரை துடைக்க உங்க கரங்கள் உதவியா இருந்தாலும் அந்த கண்ணீர் என்னோட விரல்களில் மட்டும் தவழ்ந்து மறைந்து போகட்டும் சார், நீங்க கேட்டதே ரொம்ப ஆறுதலா இருந்துச்சு,

இன்பமோ துன்பமோ அதை நம்ம கிட்ட மட்டுமே வச்சுக்காம மற்றவங்க கிட்ட எப்பவுமே கொஞ்சம் பகிர்ந்துக்கிட்டா நமக்கு அந்த மற்றவங்க கிட்ட இருந்து ஒரு உன்னதமான புதுவித உறவு சிறகு முளைத்து பிற்காலத்தில் நம்முடன் அதன் பயணத்தை தொடரும், உன்னோட சந்தோஷத்துல என்னால பங்கு எடுத்துக்கமுடியாட்டியும் உன்னோட கண்ணீர்ல ஒரு இமையா இருந்து அந்த கண்ணீர் வடிந்தோடும் வழித்தடமாக இருந்துட்டு போறேனே, உன்னோட கையில இருக்க இந்த டைரி உன் கண்ணீர்ல நனஞ்சுட்டு இருக்கத பார்த்தா உன்னோட சின்ன சின்ன சந்தோஷத்தையும் இப்போ உன் கண்ணீருக்கான பெருந்துயருக்கான காரணத்தையும் இது சொல்லும் போலயே, நான் ஒரு புத்தக வாசிப்பாளன் தான் உன்னோட சுக துக்கங்கள என்கூட பகிர்ந்துக்கப்பா உன்னோட இந்த டைரில இருக்க உனக்கான எழுத்துக்கள் மூலமா,

ரயில் பயணங்களில் தான் நாம் இந்த மாதிரியான மனிதர்களை சந்திக்க நமக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்,அப்படி இயற்கையின் விதியால் எனக்கு அமைந்த ஒரு மாமனிதர் தான் இந்த பெயர் தெரியாத என் டைரியில் இருக்கும் எனது கதையை படிக்கப்போகும் என் எதிரே உள்ள இந்த கண்ணாடி அணிந்த சார்,

ஐந்து வருடம் ஆகிவிட்டது நான் கையில் வைத்திருக்கும் இந்த 2017 - ஆம் ஆண்டுக்கான டைரியில் இந்த கதையை நான் எழுதி முடித்து,

நாங்கள் இருவரும் எங்களை அறிமுகம் கூட செய்யாமல் எங்களின் உரையாடல் மௌனத்துடன் அடுத்த தளத்தை நோக்கி நகர்ந்தது இந்த பாண்டியன் எக்ஸ்பிரஸுடன் சேர்ந்து, இப்போது அவர் கையில் தவழ்கிறது என்னுடைய குழந்தை (டைரி),

*
நெஞ்சில் மாமழை என்னும் தலைப்புடன் இக்கதை என்னுடைய டைரியின் வழியே தொடங்குகிறது,

தலைப்பு : நெஞ்சில் மாமழை 
கதைக்கு உயிர் கொடுத்தவர்கள் : 
* ஜோசுவா மேத்யூ 
* அபூர்வா ரகுவரன் (அப்பு)
கதை கரு : அழகான சுவடுகளை கொண்ட முதலும் முடிவும் இல்லாத ஓர் காதல் கதை

தேதி : டிசம்பர் 31,
வருடம் : 2017

அன்றும் நல்ல மழை இடி மின்னலுடன்,
மேத்யூ வீட்டின் மாடியில் இருக்கும்
அவனுடைய அறையின் ஜன்னல்கள்
எப்போதும் பூட்டப்பட்டிருக்கும்,
ஒரு இருள் சூழ்ந்த தனிமை அவனுக்கு மிகவும் பிடிக்கும், மிகவும் தன்மையான வெளிச்சத்தில் பிரகாசிக்கும் ஒரு மஞ்சள் நிற குண்டு பல்பு தான் அவன் வாழ்வுக்கான ப்ரகாஷ ஒளி,அவன் அறையின் பூட்டப்பட்ட ஜன்னலை திறந்து விட்டான்,எப்போதும் பூட்டப்பட்டிருக்கும் அந்த இடை கம்பிகள் இல்லாத
திறந்தவெளி ஜன்னலின் கதவுகளுக்கு அன்று வைகுண்ட ஏகாதசி மோட்சம் கிடைத்தது, ஆங்காங்கே தூசி படிந்து சிலந்தி வலைகளால் ஜன்னல் அலங்கரிக்கப்பட்டு இருந்தது, மழைக்காலம் என்பதால் இடி மிக பெரிய
சப்தத்துடன் ஒலிக்க ஜன்னலின் அருகே தனியே நின்று கொண்டிருந்தான்,

“மழை வேற நிக்காம பெய்யுது இந்த மேத்யூ எங்க போனான்..?” என்று அவன் அம்மா மெர்ஸியின் குரல்,
மேத்யூ..?
மேத்யூ..?
அம்மா இங்க மேல ரூம்ல தான் இருக்கேன்னு மேத்யூவின் பதில்,

சரி,
மழை பேஞ்சுட்டே இருக்கு
அம்மா ஊருக்கு வேற போகணும்,

ஜன்னல் ஓரத்தில் இருந்த கண்ணாடியின் பக்கத்தில் மாட்டியிருந்த தன் பைக்கின் சாவியினை எடுத்துக்கொண்டு கீழே வந்தான்,
வீட்டின் பால்கனியில் அவன் அம்மா வளர்க்கும் ரோஜாப்பூ செடியில் தினமும் வந்து அமர்ந்து மகரந்த சேர்க்கை செய்யும் அந்த கருநீல நிற பட்டாம்பூச்சி அன்றும் வந்திருந்தது மழைக்காலத்தில் பொய்க்காமல்,
பொதுவாகவே பசங்களுக்கு பைக் னா உயிர், அப்படி தான் அவனுக்கும், அவனோட பல வலிகள் மற்றும் சந்தோஷங்களை சுமந்து தினமும் அவனை சரியான பாதையில் இந்த பைக் தான் அழைத்து செல்கிறது,
சின்ன வயசுலயே மேத்யூவின் அப்பா உடல்நிலை சரியின்றி தவறிட்டார்,
அப்பா இல்லாத வீடு அதனால யாரும் ஒரு வார்த்தை தப்பா பேசிடக்கூடாதுன்னு அவங்க அம்மா மெர்ஸி அவனை பார்த்து பார்த்து வளர்த்தாங்க,
மேத்யூ மழை கொஞ்சம் நின்ன மாதிரி இருக்கு, அம்மாவ கொஞ்சம் பஸ் ஸ்டாண்டுல இறக்கி விட்டுறு பா என அவன் அம்மா கேட்க,பிறகு இருவரும் பேருந்து நிலையத்திற்கு வந்தடைந்தார்கள்,
மெர்ஸி அம்மா வர ஒரு வாரம் ஆகும்,
அவங்க ஊர்ல நடக்குற சர்ச் திருவிழாக்கு போறாங்க,
So, இந்த ஒரு வாரம் அம்மா இல்லாத அவங்க வீட்டு டிவிக்கு
"கயல்" "கண்ணான கண்ணே" போன்ற நெடுந்தொடர்களிடமிருந்து கொஞ்சம் விமோட்சம்,
அப்போது மேத்யூவின் கைக்கடிகாரத்தின் அலாரம் ஒலித்தது, கொஞ்சம் ஓய்வு பெற்றிருந்த மழை மீண்டும் தன் சாரல்களை பூமியின் நிலப்பரப்பின் மீது ஈரப்பதம் ஆக்க தொடங்கியது,
சாரல் மழையில் நனைந்துக்கொண்டு வண்டி ஓட்டுவது மேத்யூவிற்கு ரொம்ப பிடிக்கும், மழைக்கால ஜெர்கினுடன் RX 100 - ல் அவன் படித்த கல்லூரிக்கு அருகில் இருக்கும் அந்த Cafeteria -விற்கு வந்தான்,

அந்த Cafeteria - வின் பெயர் "Chai With Soul"
இது தான் மேத்யூ அதிகம் வந்து போகும் இடம்,அவனுக்கு இந்த இடம் மனதுக்கு ரொம்ப நெருக்கமானது என்றே சொல்லலாம்,

வெயிட்டர் : “Sir,” 
மேத்யூ : "ஒரு காஃபி ண்ணா ஸ்டராங்கா” 

சிறிது நேரத்திற்கு பின் அவன் ஆர்டர் செய்த ஸ்டராங் ஆன காஃபி வந்தது,
மழை டைம்ல ஸ்டராங் ஆன காஃபி குடிப்பது போதைக்கணமே மொமெண்ட் தான்,

*
மழையும் மண்ணும்
பூமியும் ஈரப்பதமும்
குளிரும் குழம்பியும்
இந்த நேரத்தில்
அவளுக்கான காத்திருப்பு என்பது
அவனுக்கான சிறந்த பொழுதுகளுள் ஒன்று
அவன் ஆவலுடன் இங்கே
இதோ அவளின் வருகைக்காக
ஒரு தாயின் அரவணைப்பிற்கு
ஏங்கும் பச்சிளம் குழந்தை போல,

மழைக்காலம் என்பதால் அன்று சற்று பனிமூட்டமாக இருந்தது. அந்த காஃபியில் இருந்து வந்த லேசான புகைமூட்டம், அவன் முகத்தில் மேல் படர்ந்து நிற்க, அதை விலக்கிவிட்டு கண்ணாடி கதவை பார்த்தால், உள்ளே நுழைந்தாள் அப்பு என்கிற அபூர்வா,அவனுக்கு பிடித்த அதே ரோஸ் கலர் சுடிதார் மற்றும் பச்சை வண்ணம் விரித்து பசுமையால் போர்த்திய துப்பட்டாவுடன்,
அவன் முகத்திரையின் மீது படர்ந்திருந்த சிறு புகையை அவன் விலக்கி பார்த்த போது எதிரே இருந்த கண்ணாடி கதவின் வாயிலில் ஒளிச்சிற்பம் போல் அங்கு வந்து நின்றாள்,

Yeah!

" அபூர்வா Alias அப்பு " :)

இக்கதையின் தொடக்கமாக 
முழுவதுமாய் ஆட்கொண்டிருப்பவள் 
(மேத்யூவையும் கூட),

மழையும் மண்ணும் சேரும் போது பூமி குளிர்ந்து போகும் இதே இடத்தில் இதே "Chai with Soul" என்கிற இதே டீ ஷாப்பில் இதே போலொரு மழைக்காலத்தில் தான் இவர்கள் இருவருக்குமான முதல் காதல் பிறந்தது இவர்களின் கல்லூரி காலத்தில்".

Fine!!! ரொம்ப நேரமா வாய்ஸ் ஓவர்ல போற மாதிரியே ஃபீல் இருக்குல்ல,
சரி இந்த கதைய உங்களுக்கு சொல்லிட்டு இருக்க நான் தான்
இந்த கதைல வர "ஜோசுவா மேத்யூ",
இனி ஸ்ட்ரயிட் ஃபார்வார்டா போலாம்,

So,இன்ஜினியரிங் முடிச்சுட்டு Core - ல போகாம அப்படியே IT - குள்ள விழுந்த
ஒரு இன்ஜினியரிங் பட்டதாரி தான் நானும்,

என்ன..?
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் எடுக்காம கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிச்ச ஒரு கெளதம் மேனன் சாரோட ரசிகன் என்று சொல்லலாம்,
கொஞ்சம் OCD என்று சொல்லலாம்
OCD என்றவுடன் நீங்கள் நினைப்பது போல் Obsessive compulsive disorder (OCD) இல்லை,OCD - Obsessive "Cinema" Disorder
என்ன மாதிரி ஆளுங்களுக்கு
எங்களது படைப்புகள் மட்டும் தான் இலக்கு We(I) want to Be Creator,அந்த படைப்புகள் எதுவா இருந்தாலும் சரி கிடைக்குற‌ gapல எல்லாம் எங்களுக்கான படைப்புகள்ள‌ தனித்துவமான Creativityய‌ உரம் போட்டு வளர்த்துட்டு இருப்போம், ஆனா எதுலயும் எங்கள மாதிரி ஆளுங்களுக்கு மனசு constantஆ ஒரு நிலையில நிற்காது We Don't Dream rather We Desire புதுசு புதுசா எண்ணங்கள் படைப்புகள்ள எங்க Creativityய போட்டுட்டே இருப்போம்,
"Cinema is a Commerce & Then a Art"
சினிமாவோட தாக்கத்த அனுபவிச்சதுனால வர‌ அனுபவம் வாழ்க்கைய சினிமாவோட connect பண்ணி அதுல வெளிவர‌ சந்தோஷம் is HighOnDope ராஜ போதைன்னு சொல்லுற அளவு,
படங்கள் ரொம்ப விரும்பி பார்ப்பேன்,
அதிலும் பாலு மஹேந்திரா படம் என்றால் கொஞ்சம் பைத்தியம்,கெளதம் மேனன் Fan ஆகிய ஒரு Blueist,யுவன் - ராஜா - ரஹ்மான் என Interlude,Prelude,
Postlude,Bethoven என்று பேசும் அளவிற்கு மிகவும் கம்மியான இசை அறிவு,
IT - யில் வேலை,லிமிடெட் ஆன நண்பர்கள் கூட்டம்,அம்மாவின் சின்ன சின்ன சந்தோஷம் என ஒரே நேர்கோட்டில்
வாழ்க்கை போய்க்கொண்டிருந்த நாட்கள்,
அப்பா இல்லாத பையன் So, கொஞ்சம் அன்புக்கு ஏங்குறவன்,அதே நேரத்துல என்னால முடிந்த அளவு எனக்கு கிடைக்கும் அன்பை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கும் அடிநாத அன்பின் விற்பனையாளன் முற்றிலும் இலவசமாக,

இப்படி வாழ்க்கையோட எந்த ஒரு இறுக்கமான பிடியுமே இல்லாம சுற்றிக்கொண்டிருந்த என்னுடைய தினசரி காலெண்டர் மட்டுமே கிழிக்கும் அர்த்தமில்லா வாழ்வுல அர்த்தமுள்ள ஒரு தீரா காதலை விதைக்க ஒரு விதையாக என் மனதில் உதிர்த்தவள் தான் "அப்பு"

யாரு இந்த அபூர்வா(அப்பு)..?

எப்படி அவ எனக்குள்ள வந்தா..?

இந்த காதல் எனக்கு எந்த மாதிரியான ஒரு பக்குவமான அனுபவத்தை தந்தது..?

எங்கள் வீட்டிற்கு தினமும் வந்து செல்லும் பட்டாம்பூச்சிக்கும் என் காதலுக்கும் என்ன தொடர்பு இருந்துவிட கூடும்..?

மேத்யூவான என்னுடன் தொடர்ந்து பயணியுங்கள்,

அபூர்வா (அப்பு) என்னோட காலேஜ்க்கு பக்கத்து காலேஜ்,ஷார்ட் & ஸ்வீட்டா சொல்லணும்ன்னா பார்த்த முதல் சந்திப்புல இருந்தே ஒரு ஸ்பார்க் இருந்துச்சு ரெண்டு பேருக்கும், அந்த ஸ்பார்க் Obviously காதலா மாறுச்சு,அப்பு ரொம்ப சிம்பிள் அதே நேரத்துல ரொம்ப சென்சிடிவ் கூட,அவளும் IT - ல தான் வேலை செய்யுறா,இப்படியே போய்கிட்டு இருந்த எங்க லவ்ல அஞ்சு வருஷம் முன்னாடி அதாவது 2017 - ல எங்க ரிலேஷன்ஷிப் குள்ள ஒரு பெரிய ப்ளாஸ்ட் நடந்துச்சு,

மீண்டும் 2017
Same Scenario - Same Tea Shop,

அப்பு :
“சார் என்ன விட்டு காஃபி ஆர்டர் பண்ணி குடிக்கிறீங்க போல..?” 
ஆமா, மழை பெய்ஞ்சுட்டு இருக்கு
நீ வர எப்படியும் லேட் ஆகும் அதான் சரி, நீ வர வரைக்கும் ஏதாவது குடிக்கலாம்ன்னு ஆர்டர் பண்ணி குடிச்சேன், & அதுனால என்ன..? எனக்கு Again ஒரு காஃபி & உனக்கு ஒரு பிளாக் காஃபி ஆர்டர் பண்ணிடலாம்,
நான் ஆர்டர் செய்தவைகள் வந்தன,
அந்த பிளாக் காஃபி கப் பிடிச்சு அவ காஃபி குடிக்கிற அந்த ஸ்டைல்
எனக்கு ரொம்ப பிடிக்கும், என்னமோ பாற்கடல்ல இருந்து அமிர்தத்தை கொடுத்த மாதிரி அந்த பிளாக் காஃபிய ரொம்ப ரசிச்சு குடிப்பா அப்பு, இப்போவும் அப்படி தான் குடிக்குறா,

*
ஒரு பாவை பிளாக் காஃபி அருந்துகிறாள்
நான் அவளை மெய் மறந்து ரசிக்குறேன்
இந்த மழைக்காலத்தின் திகட்டாத பொழுதாய்
இதை விட வேற என்ன இருந்து விட முடியும்..? - ன்னு நான் சொன்னா அப்புவின் பதில் ஒரு சின்ன சிரிப்பு மட்டுமே இருக்கும் கொஞ்சம் Funny - யாக,
அதனாலேயே நான் என் Mind - இல் நினைத்துக்கொள்வேன்,
சில மணி நேர உரையாடலுக்கு பின்,

மேத்யூ : 
“ஹ்ம்ம் !!” 
“சரி I Need to Go Somewhere. 
எங்கையாது போலாமா..
அங்கிருந்து இருவரும் கிளம்பினோம், டீ ஷாப்பின் வெளியே வரும் போது நான் முன் வந்து கதவை திறக்க அப்பு வெளியேறினாள்,
(இது ஒரு ஆணுக்கான குணநலம்)
அப்படி நான் முன் வந்து கதவை திறந்து
அப்பு வெளியேறும் போது அவள் கொஞ்சம் Secured ஆக தன்னை உணர்வாள்,
ஒரு பெண்ணுக்கு இந்த Secured உணர்வை ஒவ்வொரு ஆணும் கொடுத்தாலே Hope என்னும் நான்கெழுத்து மந்திரம் காதலில் பொற்காசு போல் நிறைந்து கிடக்கும் காதலிக்கும் இருவரிடமும்,

இறுதியாக இருவரும் செல்ல முடிவெடுத்தது நூலகம்,அதற்கு முன் அப்பு மேத்யூவிடம் சுஜாதா எழுதிய ஸ்ரீரங்கத்து தேவதைகள் புத்தகத்தை கேட்டிருந்தாள், ஆகையால் மேத்யூ வீட்டிற்கு சென்று அப்புத்தகத்தை எடுத்து விட்டு நூலகம் செல்லலாம் என்று முடிவு செய்தார்கள்,

இருவரும் என் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்,
நான் என் அறையின் மேஜையில் அவள் கேட்ட புத்தகத்தை தேடி கொண்டிருந்தேன்,
இன்று காலை என் அறையில்  ஜன்னல்களை திறந்துவிட்டதால்
அந்த ஜன்னல்களின் வழியே மழைத்துளி சாரலாக விழுந்து கொண்டிருந்தது,

அப்பு :
ரொம்ப நாளைக்கு அப்பறம் இன்னக்கி தான் இந்த ஜன்னல் திறந்துருப்ப போல,
Usual - ஆ ஜன்னல் திறக்கமாட்டேல நீ..?


மேத்யூ : ஆமா, எனக்கு தனிமை பிடிக்கும்
அதோட கொஞ்சம் அமைதியும் வெளிச்சம் இல்லா இருளும் பிடிக்கும்,
இந்த ரூம் தான் என்னோட Hideout - ன்னு கூட சொல்லலாம்
அந்த அளவு என்னோட வாழ்க்கையில நடந்த ஒவ்வொரு அத்தியாயத்தையும்
இந்த ரூம் என்கூட இருந்து பாத்துருக்கு,
அவள் கேட்ட புத்தகத்தை எடுத்துவிட்டு நான் அப்புவை தேடினேன்,
மழை வந்தாலே அவள் ஒரு மழலை போல் தன்னை ஜீவித்துக்கொள்வாள்,


முன் அந்தி சாரலில்
பனிமலராய் அவள் 
இதோ இதே ஜன்னலின் வாயிலே,
அந்த வனப்பு
அது தான் அப்பு 
அந்த ஜன்னல் வெளியே
பொழியும் அச்சாரல் மழைத்துளி
அவளிடம் சமபரப்பாய் இருக்கும்
நெற்றியில் பட்டு, முன்கோபப்படும்
மூக்கின் மேல் தவழ்ந்து,
இதழுடன் உறவாடிக்கொண்டு,
அவள் கழுத்தில் உள்ள தங்க சங்கிலி
டாலரில் இருக்கும் அந்த பாண்டிய
மன்னனின் சின்னமான மீனுக்கு தாகத்தை போக்குகிறது,
இருந்தாலும் பாண்டிய குல வம்சத்து
மீன் மீது எனக்கு அளவு கடந்த
பொறாமை என்று வெளிப்படையாக சொல்லிவிடமுடியாது,
ஆணுக்கே உண்டான சபலத்தில்
இருந்து நான் சட்டென சுதாரித்தேன்,

மேத்யூ :
ஹே! எங்க காணோம்ன்னு பார்த்தா 
சின்ன குழந்தை மாதிரி சாரல் மழையில நனைஞ்சுட்டு இருக்க இங்க..?
அப்பு : மழை வந்தாலே மழலைகளுக்கு கொண்டாட்டம் தானே அதான்!
மேத்யூ : சரிங்க கொழந்த, ரொம்ப நனஞ்சுடாதீங்க,அப்பறம் நாலு நாளைக்கு நாலு Paracetamol Injection - னு
கிளினிக் சைடு பைக் ரெய்டு போக வேண்டியது இருக்கும்,
“சரி.. வா, கிளம்புவோம்" என்று ஈரக்கூந்தலை காற்றில் அசைந்தாட விட்டு
ஒரு Wet Hair பதுமையாக பைக்கில் என்னுடன் நூலகத்திற்கு செல்ல தயார் ஆனாள் அப்பு,

இந்த Readers Collaboration Library யின் நோக்கம் ஒரு மனிதனுக்கு புத்தக வாசிப்பின் அவசியத்தை பற்றியும் அதில் அவன் பெரும் நன்மைகள் பற்றியும்
அன்றாடம் இங்கே சொற்பொழிவு நிகழ்வுகளை நடத்தி புத்தகம் வாசித்தல்
என்னும் பழக்கத்தின் மூலம் மனிதனுக்கு ஒரு Relief Material என்னும்
மாற்றத்தை கொண்டு வருவது தான்,
நாங்கள் இருவரும் அதிகமாக வந்து செல்லும் இடம் இந்த Readers Collaboration நூலகம் தான்,நாங்கள் இருவரும் எல்லா Stress – களையும் மறந்து தங்களை புத்தகத்திற்க்கென அர்ப்பணித்த உணர்வுடன் தன்னந்தனியே அமர்ந்து தங்களுக்கான தேடலை வாசிப்பின் அவசியம் மூலம் இங்கு சேகரித்து கொண்டு இருப்போம்,
ஆளுக்கொரு புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு இருவரும் தனித்தனியே எதிர் எதிரே நூலகத்தில் அமர்ந்தோம்,
அவள் மனுஷ்ய புத்திரன் எழுதிய "தித்திக்காதே" புத்தகமும்,நான்  எழுதிய மஹாத்ரயாரா எழுதிய "தாயம்" புத்தகமும் எடுத்து படிக்க தொடங்கினோம்,
இந்த மழைக்காலத்திற்கேற்ப Headset - ஐ எடுத்து மொபைலில் "பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்" என்று மழைக்காலத்தின் அவசியத்தை உணர்த்தும் படி பாடலை என் செவியில் ஒலிக்கவிட்டு புத்தகத்தை வாசிக்க தொடங்கினேன்,
வாசிப்பும் இசையும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும்போது இவன் இரண்டில் எதன் மீது தன் கவனத்தை அதிகமாக செலுத்துவான்..? என்று என் செய்கையை முணுமுணுத்து திட்டிக்கொண்டிருந்தாள் அப்பு,
ஒரு நான்கு மணி நேரத்திற்கு மேல் இருவரும் இந்த உலகின் தட்பவெட்பங்களை மறந்து புத்தகத்தின் அடிநாதத்தில் மூழ்கி திளைத்தோம்,
எப்போதும் போன்று அன்றும் வழக்கம் போல புத்தக வாசிப்பு பற்றிய சொற்பொழிவு நூலகத்தின் ஆடிட்டோரியத்தில் மாலை ஆறு மணிக்கு தொடங்கும் என்பது அனைவரும் அறிந்ததே,

ஆனால் ஒரு சின்ன மாற்றம்,
அன்று ஆடிட்டோரியத்திற்கு ஒரு Orchestra பேண்ட் இசைக்குழு வந்திருந்தது,
இசை கருவிகளின் Proper Arrangements Setup வேலைகள் ஆடிட்டோரியத்தில் ஒரு புறம் நடந்து கொண்டு இருந்தது, 

ஹரிஷ் (Orchestra Lead) :
“Hello Everyone Can We Start..?” 
அப்புவுடன் அமர்ந்திருந்த நான் ஆடிட்டோரியம் மீது திடீரென்று
ஏறி நின்று அங்கிருக்கும் ஆடியோ மைக் – கின் முன் நின்று எல்லோரையும் பார்த்து கை தட்டினேன்,

அப்பு வியந்து பார்த்தாள்
ஹே! அங்கு நின்னு ஏன் கை தட்டுற..? 
கீழ இறங்கி வா,
என்ன பண்ணிட்டு இருக்க மேத்யூ நீ..?
என்று பதைபதைப்புடன் கேட்டாள்,
நான் இரண்டாவது முறையாக மீண்டும் மைக்கின் முன் நின்று கை தட்டினேன், 
அங்கிருந்த எல்லோரும் கை தட்ட தொடங்கினார்கள்,எதுவும் புரியாதபடி அப்பு குழப்பமான மனநிலையுடன்
நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்,

*
ஒரு ஒலி
முதல் ஒலி
இந்த கிடார்ல இருந்து
இந்த ஒலி அவ காதுகள்ல கேட்டுட்டே இருக்கணும்,அந்த Orchestra குழுவில் உள்ள Keyboard Player – இன்
இண்ஸ்ட்ருமென்ட்டில் இருந்து இந்த மாலை நேரத்தின் முதல் இசை ஒலித்தது,

மழைக்காலத்துல பூத்துக்குலுங்குற சங்ககாலத்து தளவம் பூ போல,
என் காதலுக்கு அர்த்தம் சேர்த்த என்னுடைய பொற்காலத்தின்
இணையற்ற தேவதை அப்புவுக்காக என் பேனாவில் இருந்து
நாளை அவள் அகவை தினத்திற்காக இதோ நான் எழுதிய அவளுக்கான
அவளுக்கு மட்டுமே பொருந்தும் என் காதலில் திளைத்த வரிகள்,
என்று அனைவர் முன்னும் நான் மைக் - கில் கூறினேன்,

*
Independent Song about Essence of Love,
Boy Dedicates to his Girl.

ஹரிஷ் விரல்களின் ஜாலத்தில், கீபோர்ட்டின் சப்தத்தில்
அந்த பாடல் தொடங்கியது,

*Yes,நான் ஒரு நல்ல சிங்கரும் கூட!

(பாடல் வரிகள்) 
----------------------- 
பேசும்போது இசையாய் 
பழகும் பாடல் வரியாய் 
ரெண்டும் இணைந்த பாடலாக 
உணர்கிறாய் நீ! 
சிரிக்கும்போது முகிலாய் 
முறைக்கும்போது இடியாய் 
ரெண்டும் கலந்த மழையாகப் 
பொழிகிறாய் நீ! 
என் கண்ணீரும் நீ 
என் சந்தோஷம் நீ 
ரெண்டும் இணைந்த 
புது உணர்வைக் கொடுக்கிறாய் நீ! 
காற்றில் உன் வாசம் வீசுதே 
என் நெஞ்சம் உன் பாசம் பேசுதே 
நெஞ்சில் படிந்த நினைவுகள் 
சூறாவளியாய் சுழற்றுதே! 
கடற்கரை ஓரம் ஒதுங்கியே 
தண்ணீருக்கேங்கும் மீன் போலவே 
உன் முகம் பார்க்கத் துடித்திடும் 
என் விழி ரெண்டும் ஏங்குதே! 
உன் விழி தேடியே 
என் உயிர் சிதைகின்றதே 
மனம் வதைகின்றதே.. 
உனைக் காண்பேன் என்று 
காலம் கழிகின்றதே.. 
----

ஒட்டுமொத்த ஆச்சரிய களிப்பின் பிறப்பிடமாக அப்பு மெய் மறந்து நடந்த நிகழ்வுகளை ரசித்துக்கொண்டிருந்தாள் கன்னங்களில் படர்ந்த
பெருங்களிப்பின் கண்ணீரில்,

*
ஆயிரம் பேரை ஒரே மேடையில் சிரிக்க வைப்பவன் கடவுள் என்றால்
காதலியின் ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் அவள் ஆனந்த கண்ணீரையும் சேர்த்து
ஒருவன் அவளுக்கு ஒரு மேடையின் மீது  நின்று ஒரு பாடல் வடிவத்தில்
கொடுத்தால் அவன் கடவுளுக்கும் நிகரானவன்,

This is For You Appu! 
Thank You People 
Thank You Co – Ordinators. 
Thank You Harish & Co. 
And Special Thanks to Readers Collaboration Management என்று
நான் அனைவருக்கும் நன்றி தெரிவித்தேன், 

அடுத்ததாக ஒரு Black Forest Cake – ஐ ஹரிஷ் கொண்டு வந்து
நாலாபுறமும் மெழுகுவர்த்தி சூழ தயார் நிலையில் வைத்தான்,

அப்புவின் கையை பிடித்தபடி
நான் அவளை கேக் வெட்ட அழைத்து வந்தேன்,

நூலகத்தில் இருந்த அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாட
அப்பு தனக்கான கேக் - ஐ வெட்டினாள்,

சந்தோஷத்தின் உச்சத்தில் தன் இதழில் இருந்து
வார்த்தைகள் பொய்த்து தன் நிலை மறந்து என் நெஞ்சாங்கூட்டின் மீது
இலை மீது தவழும் பனித்துளி போல இணைந்து கொண்டாள்,

நான் என் தாய் அரவணைப்பு மூலம் மகிழ்ச்சியில்
அவள் கண்களில் வடிந்த கண்ணீரை துடைத்துவிட்டு,

நான் இருக்கேன்
நான் இருப்பேன்
இந்த கண்ணீரும் சந்தோஷமும் ஒரு சேர என்னால மட்டுமே
உனக்கு கொடுக்க முடியும் அப்பு என்று அவளின் நெற்றியில் முத்தம் கொடுத்தேன்,

*
என் நெற்றி முத்தத்தில் திளைத்தவள்
இன்னும் கரையை கடக்க மறுக்கிறாள்,

நெற்றி முத்தத்துடன் அவள் கையில் Blue Colour Gift Pack பேப்பரில் 
Packing செய்யப்பட்ட ஒரு பெரிய Gift Box - ன்னை நான் கொடுத்தேன்,

இதை எங்கு எப்போது ஓப்பன் செய்ய வேண்டும் என்று
உனக்கு வாட்ஸாப் SMS இப்போது செய்திருக்கேன்,

இப்போ ஆன்லைன் போய் நீ மெசேஜ் செக் பண்ண வேண்டாம்,

இப்போ இந்த நிமிஷத்த கொண்டாடுவோம் என்றேன்,

& இவன் தான் ஹரிஷ்!
என்னோட கிளாஸ்மேட்
செம்ம மியூசிக் Knowledge உள்ளவன்
என்ன! எனக்கு தான் சொல்லித்தரமாற்றான் என்று
ஹரிஷை அப்பு Intro செய்து வைத்தேன்,

ஆமா! 
இது ஒரு Pre - Planned Event தான் 
அப்பு - ன்ற தேவதூரிகைக்காக,
 
நான்கு மாதமா என்னோட டார்ச்சர் எல்லாம் தாங்கிக்கிட்டு
எனக்காக இந்த பாட்ட முடிச்சு கொடுத்த என் நண்பன் ஹரிஷும்
அவனோட Orchestra குழுவும் அதுவும் இல்லாம பெரிய உதவியா
நான் உதவி கேட்டப்போ எல்லாம் சலிக்காமல் செஞ்சு கொடுத்த
Readers Collaboration Library – கும் கோடி அன்ப கொட்டிக்கொடுத்தாலும்
ஈடாகாது” என்று அப்புவிடம் நான் என் நன்றி உரையாடல்களை சொல்லி முடித்தேன்,

மேத்யூ : 
இந்த நாள் நீ என்கூட இருக்க
இந்த நிமிஷம் இந்த நொடி இது தொடரும்,
*
I Love You Appu 
நீ தான் என்னோட High!

போ !!
எல்லாரும் உனக்கு விஷ் பண்ண வராங்க
போய் அவங்கள கவனி இப்போ,

இந்த லைப்ரரியில் வந்து போகும் பலர் நல்ல நண்பர்கள், புத்தக வாசிப்பு மூலம்
தங்களை இணைத்து கொண்ட நாடோடிகள் என்றே சொல்லலாம்,

அப்பு அங்கிருந்த அனைவரிடமும் நன்கு சிரித்து பேசி
தன் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் பரிசுகளையும் ஒவ்வோரிடமும்
பெற்று கொண்டு இருந்தாள்,

நான் அவளுக்காக ஒரு Dedication பண்ணனும்னு
ஆசையா பண்ணது தான் இந்த Pre - Planned Event,


இன்னைக்கு இந்த Event அவளுக்கு சந்தோஷத்தை கொடுத்திருக்கும் என்று
நான் தூரத்தில் மிகவும் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்த அப்புவை 
பார்த்து சொல்லிக்கொண்டேன், 

*
எல்லோருக்கும் நம்ம கூட எல்லா தருணத்துலையும் உறுதுணையாக இருந்து நம்ம கை பிடிச்சு இது தான் உனக்கான பாதை இதுல முட்கள் நிறைய இருக்கும் ஆனா, என் கை புடிச்சு நடந்து வா,நான் முள் இல்லாத பாதையில உன்ன பத்திரமா கூடிட்டு போறேன்னு சொல்லுவாங்கல..? அப்படி ஒரு மேஜிக்கா
என்னோட வாழ்க்கையில வந்தவ தான் "அப்பு",

Event முடிந்த பிறகு நண்பர்கள் அனைவரும் நீண்ட உரையாடல்களுடன் சாப்பிட்டு முடித்து விட்டு நேரம் போனது தெரியாமல் ஒருவருக்கொருவர்
பேசிக்கொண்டிருந்தோம், பிறகு லைப்ரரி மூடியவுடன் எல்லோரும் அங்கிருந்து கிளம்பினோம்,
மீண்டும் அவளை பைக்கில் ஏற்றிக்கொண்டு என்னுடைய RX 100 – ஐ
ஸ்டார்ட் செய்து மெரினா பீச்சிற்கு சென்றேன்,

அடுத்த நாள் New Year என்பதால்
மெரினா பீச் கலை கட்டி இருந்தது,
வரும் வழியில் பைக் Ride - இன் போது காற்றின் மிகுதியால் தன் கூந்தலை
மெஸ்ஸி பன் கொண்டையாக அள்ளி முடிந்தவள் இப்போது கடற்கரை காற்றில் சாரல் மழையின் காரணமாக கூந்தலின் ஈர்ப்பதத்தால் மெஸ்ஸி பன் கொண்டையை என் முகத்தில் படர்ந்தவாறு தன் விரல்களால் அதற்கு
ஆயுட்கால விடுதலை மோட்சம் அளித்தாள், 
நான் அவள் முன்னே நிற்கிறேன்
நான் அனுப்பிய மெசேஜை அவள் மொபைல் டேட்டா On செய்து
இப்போது வாட்ஸாப்பில் பார்க்கிறாள்,

கடற்கரை காற்றில் நீ தேடிய ஒரு பொக்கிஷம்
உன் கையில் உனக்கு கிடைத்த ஒரு பரிசுபெட்டிக்குள்
தஞ்சம் கொண்டு இருக்கும்,
என்று நான் அவளுக்கு மெசேஜ் அனுப்பி இருந்தேன், பிறகு  நான் கவுண்ட் டவுன் சொல்ல..?

அப்பு : 
நீ கொடுத்த இந்த சந்தோஷம்
இந்த தருணம் இது எனக்கு போதும்
இந்த குட்டி Gift Box - ஆ நான் ஓபன் செய்ய போறது இல்ல, ஓபன் செஞ்சுட்டா அந்த செகண்ட் உள்ள இது தான் இருக்குன்னு தெரிஞ்சு போயிடும்,
ஆனா ஓபன் பண்ணலேன்னா காலத்துக்கும் இதுக்குள்ள நமக்கான ஒரு பொக்கிஷம் பெட்டிக்குள்ள தஞ்சம் கொண்டு இருக்குன்னு நமக்கு நாமே உற்சாக மிகுதி அடைஞ்சுக்கலாம்,
அவிழ்க்கப்படாத முடிச்சுகளுக்கு எப்பவுமே ஸ்வாரஷ்யம் அதிகம் மேத்யூ,
*
மணல் திட்டுக்களில் பதிந்த பாதங்களில்
மணவாளனின் இருதய சத்தத்தை கேட்டவுடன்
ஆகச்சிறந்த பெண்மைக்குரிய வெட்கத்தை
கரையினில் அவள் விட்டுச் செல்லுமாயின் அவ்வெட்கத்தை
ஆகச் சிறந்த ஆண்மைக்குரிய சீற்றம் கொண்ட அலைகள்
அதை தன்னுடன் இறுக அணைத்துக்கொண்டு
தன் வசப்படுத்திக்கொள்வது போல கண்கள் நிறைய கண்ணீருடன்
எனை பார்த்து சிரித்துக்கொண்டே என்னை ஓடி வந்து கட்டி பிடித்தாள்,

புத்தாண்டு தினமும் பிறந்தது வான வேடிக்கைகள் விண்ணை பிளந்தது
மெரினா முழுவதும் மின்னொளியில் ஜொலித்தது,
*
மேத்யூ :
என் இரவா தேசத்தின் தேம்பாவணி நீ
வா என் நெஞ்சுக்குள் சங்கமித்துக் கொள்
நான் சுமக்கிறேன் உன்னை மனம் உருகி.
அப்பு : 
அடை காக்கும் கோழியின் கருவறை தவிப்பு போல் நான் தவித்த வண்ணம் சீம்பாலின் வாசம் போன்று கண்ணன் உன் அரவணைப்பில் ராதை என் மனம் துள்ள செய்தவன் நீ..?
இப்படி இருவரும் கவிதை பாணியில்
உரையாடிக்கொண்டு கட்டிப்பிடித்தனர்,
இப்பொழுதும் அதே சாரல் மழை எங்கள் மீது பொழிகிறது,ஆனால், இப்போது இரவு நேர கருமேகத்தை விட எங்கள் இருவரின் கண்களில் ஆனந்த தாண்டவமாய் சற்று பெருக்கெடுத்தது எழில் கொஞ்சும் அருவியாய் இக்கணம் முதலாய்,

எங்கள் வீட்டில் சுற்றி திரியும் என் உடன் பிறவா சிறகுடையவனான அந்த கருநீல நிற பட்டாம்பூச்சி இப்போது இந்த இடத்தில் எங்கள் இருவருக்கும் பக்கத்தில் என் பைக்கின் கண்ணாடி மீது வந்து அழகாக நின்று எங்கள் இருவரின் மனதிலும் ஆயிரம் ஆயிரம் காலங்கள் இந்த நிகழ்வுகளை மறக்கா வண்ணம் தன்னுடைய வருகையை எங்கள் காதலுடன் கைகோர்த்து பதிவு செய்தது,

*
உன்னை நான் கொஞ்சத்தான்
மடிமேல் துஞ்சத்தான்
தினம் நான் எதிர்பார்க்கும்
திருநாள் வருமோ
பட்டர்பிளை பட்டர்பிளை,

அடுத்த ஒரு வருடத்தில் எங்களின் திருமணம் என் அம்மாவின் சம்மதத்துடன்,
இப்போது அவளோட ஆசை படி எங்களுக்கு ரெண்டு ஆம்பள பசங்க
அதுவும் ரொம்ப சுட்டியான ட்வின் பேபீஸ்,
Actual - ஆ நான் ஒவ்வொரு நொடியும் காதல் என்னும் ஒரு விதமான தன்னிகரில்லா போதைல மூழ்கி திளைத்து திருமணத்தில் முடிந்த எங்களுடைய காதல் கதைதாங்க இது,
*
காதல் செய்வோம்
விவாஹம் காண்போம்
காலமும் நேரமும் கை கூடும் போது,

"நெஞ்சில் மாமழை"
ஆக்கமும் எழுத்தும் : ஜோசுவா மேத்யூ : )
- முற்றும் !! ❤️

தம்பி மேத்யூ உன்னோட சொந்த பெயர் - ரே இப்போ தான் தெரியுது பாரேன், நானும் என்ன அறிமுக படுத்திக்கல பாத்தியா என்னோட பெயர் மஹேந்திரன் பொன்மொழி,

கதை ரொம்ப நல்லா இருந்துச்சுப்பா
எனக்கு 57 வயசு ஆனாலும் உன்னோட இந்த காதல் கதைய படிக்கிறப்போ என்னோட காதல் கதை தான் எனக்கு ஞாபகத்துக்கு வந்தச்சு, ஆனா இந்த நிமிஷம் உன் கண்ணுல நிக்குற கண்ணீரோட அர்த்தம் இந்த டைரியோட பக்கத்துல எழுத்து வடிவுல கொண்டு வர முடியலன்னு என்னால நிச்சயம் சொல்ல முடியும், கண்டிப்பா உன் வாழ்க்கையில ஏதோ ஒரு திருப்புமுனை நடந்துருக்கு உன்னோட கண்ணீரே ஆயிரம் கதை சொல்லுதே, இந்தக்கதை மூலமா உன்னோட சுகமான அனுபவங்கள்ல நானும் கொஞ்சம் மழைத்துளில நனைஞ்ச மல்லிப்பூ மாதிரி என்னோட கடந்த கால காதலை நினைவு படுத்திக்கொண்டேன் எனக்குள்ளேயே, ஆக நீ அடுத்து எழுத்து வடிவுல இல்லாம வாய் வழியே சொல்லப்போகும் இச்சுருக்கமான இக்கதையின் முடிவு தான் இப்போ நீ வாழ்ந்துட்டு இருக்குற இந்த வாழ்க்கைன்னு எனக்கு தோணுது,

மஹேந்திரன் பொன்மொழி
பெயர் நல்லா இருக்கு,

ஹ்ம்ம்,
என்னன்னு சொல்றது சார் நான்,

வழக்கம் போல எல்லா காதல்லையும் நிகழ்ற பிரிவு என்னும் பிரியாவிடைக்கான நேரம் தான் சார் என்னோட காதலுக்கும்,

கதையில வர மாதிரி அப்பு என் வாழ்க்கையில ஒரு தேவதூரிகையா வந்தா,கொஞ்சம் காஃபி கொஞ்சம் டீ அப்பறம் நிறைய காதல் - ன்னு அப்போ அப்போ சின்ன சின்ன சண்டைன்னு நல்லா தான் எங்க காதல் போயிட்டு இருந்துச்சு, அப்போ தான் அவளோட பிறந்தநாளும் வந்துச்சு ஜனவரி 1, அதுக்கு ஒரு பத்து நாள் முன்ன அவ என்ன விட்டு பிரிஞ்சு போயிட்டா,அடுத்த பத்து நாள்ல எங்க அம்மாவும் ஊருக்கு போறதா இருந்தாங்க அதையும் அவளோட பிறந்தநாளுக்கு நான் பிளான் செய்து வைத்திருந்த Event - டையும் சேர்த்து வச்சு அவளுடனான என்னோட பிற்கால திருமண வாழ்க்கையில் அவள் கருவில் உண்டாகும் எங்களின் குழந்தை வர ஒரு கற்பனை காதலாக நான் கிறுக்கி நீங்கள் படித்த இந்த கதை தான் "நெஞ்சில் மாமழை"

என்ன பா மேத்யூ சொல்லுற..?
என்னால நம்பவே முடியல,
அந்த Surprise Event, அவளுக்காக நீ எழுதுன பாட்டு, அந்த கிஃப்ட் பாக்ஸ், உன்னோட காதல்ன்னு எதுமே அந்த பொண்ணு அப்போ தெரிஞ்சுக்காமயே போயிட்டாங்களா..?

ஆமா சார்,
ஒரு வேல பத்து நாளைக்கு முன்ன போகாம பிறந்தநாள் அப்போ என்கூட அவ இருந்திருந்தா May Be நீங்க சொன்ன மாதிரி  Surprise Events, Gift Box, Song & Finally My Love Depth - ன்னு இப்போ அவளுக்கு எல்லாமே தெரிஞ்சுருக்கும், கதையில வர மாதிரி நாங்களும் ஒன்னா சேர்ந்துருப்போம் சார்,

அப்போ அந்தப்பொண்ணு பிறந்தநாளுக்காக "பேசும்போது" - ன்ற பாட்டு..?

நம்ம பிளான் பண்ண Event தான் நடக்கலையே,அவ பிறந்தநாளுக்காக அந்த பாட்டு நான் எழுதி அதை என் நண்பன் ஹரிஷ் மூலமா இசை அமைச்சு ஒரு முழு பாடலாக ரெடி பண்ணி அவ பிறந்தநாளுக்காக வச்சிருந்தேன், இப்பவும் அது காத்துகிட்டு இருக்கு அவளுக்காக,ஒரு வேல லைஃப்ல அவ திரும்பி வரவே இல்லேன்னா அந்த பாட்டு அதோட இளமை காலத்த அந்த காதலோட இந்த புவியில முடிச்சுக்குச்சுன்னு அர்த்தம் சார்,

நீ சொல்லுறது எல்லாமே சரிப்பா
நீங்க ரெண்டு பேரும் காதலிச்சிங்க
ஆனா,எதுக்கு நடக்காத ஒரு விஷயத்தை நடந்த மாதிரி இப்படி ஒரு கற்பனை காட்சி பண்ணி அது நடந்த மாதிரி ஒரு கதை இந்த டைரில எழுதணும்,
உன்னோட ஒரு மன ஆறுதலுக்காகவா
இல்ல, உன்ன விட்டு பிரிஞ்சு போன அந்த பொண்ணு எப்போவது திரும்ப உன்கிட்ட வரும்போது இதை படிக்க சொல்லி அவங்க கிட்ட கொடுக்குறதுக்காகவா ப்பா..?

சிம்பிளா சொல்றேன் சார்,
காதலை விட அதன் மீதான ஞாபகங்களுக்கு உயிர்ப்பு அதிகம்,
அதுலயும் நாம இப்படி ஒரு காதல் வாழ்க்கை வாழ்வோம்னு நம்ம மனசுக்குள்ள ஒரு காதல் கோட்டையே கட்டி வச்சு அதுக்கு கும்பாபிஷேகமே பண்ணுற அளவு கற்பனையோட உச்சத்துக்கு போயிருப்போம், காதலிக்கிற நேரத்துல அந்த கற்பனை உலகின் காதலில் வலியும் அந்த வலி தரும் தனிமையும் தான் இங்கு நிறைய காதல் மூலமா நம்மகிட்ட உயிர் வாழ்ந்துகிட்ட இருக்கு,

& இதெல்லாம் அவளோட Upcoming Birthday - க்கு அந்த வருஷம் நான் பிளான் பண்ணி வச்சிருந்த நிகழ்வுகள் தான், காரணமேதும் சொல்லாம அவ போனதுக்கு அப்பறம் நானும் போடின்னு போயிருக்கலாம் ஆனா, நான் அப்படி போகல, அவ இல்லாத ஒவ்வொரு நொடிப்பொழுதும் என்னோட தனிமையை நான் எனக்குள்ள உணர்ந்துட்டு இருந்தேன்,அதுனால தான் அந்த ஒட்டுமொத்த நிகழ்வுகளையும் காலத்துக்கும் பாதுகாக்குற மாதிரி ஒரு ஸ்கிரிப்ட் பண்ணி அதை ஒரு டைரில "நெஞ்சில் மாமழை" - ன்னு அதுக்கு தகுந்த ஒரு தலைப்பு கொடுத்து அதை கதையாக நான் எனக்காக எழுதி வச்சுக்கிட்டேன் சார்,

கடைசியா இது மட்டும் சொல்லிரு தம்பி என் மனச தேத்திக்குறேன் நான்,
அவங்க எதுக்கு உன்ன விட்டு பிரிஞ்சு போனாங்க..? அந்த காரணம் எதும் உன்னால கண்டுபிடிக்க முடிஞ்சுச்சா..? இல்ல அதுக்கான முயற்சி செஞ்சியா..?

கேள்விக்கு பதில் தெரியலன்னு சொல்லலாம், ஆனா, எனக்கு கேள்வியே புரியலையே சார், இப்போ வரைக்கும் அவ எதுக்கு என்ன விட்டு பிரிஞ்சு போனான்னு தான் என்ன நானே கேள்வி
கேட்டுட்டு இருக்கேன்,பலன் இல்லாத நிறைய முயற்சிகளையும் சேர்த்து, ஆனா, நான் கேக்குற கேள்வி எப்போதுமே எனக்கு புரியாத கேள்வியா மட்டுமே இருக்கு சார்,

ஹ்ம்ம்!
என்ன காரணம் என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சு பிரிஞ்சு போற காதல் நடுவுல
எதுவுமே தெரியாமயே நம்ம காதலும் நம்மள காதலிச்ச பொண்ணும் நம்ம கைய விட்டு போறப்போ அது தர வலிய அவளோ ஈஸியா சொல்லிட முடியாதுல,
அதுவும் உன் கதையோட கிளைமாக்ஸ் காட்சியில் வரும் கற்பனையான கல்யாணமும் அதன் வழியாக வந்த ட்வின் பாய் பேபீஸிற்கும் பின்னால் காதலின் வலியை சுமந்து கொண்டு தினம் தினம் சந்திக்கும் மனிதர்கள் அனைவரிடமும் சிரித்து பேசும் ஒரு இழந்த காதலின் ஆத்மா இன்றும் வாழ்ந்து கொண்டு தான் மேத்யூ இருக்கிறது,

தம்பி, லவ் யூ பா
இந்த உலகமே அன்புல தான் இயங்கிட்டு இருக்கு,ஒவ்வொருத்தரும் நம்ம மேல அன்பு செலுத்த ஒருத்தங்க இல்லையான்னு தான் ரொம்பவே ஏங்கிட்டு இருக்காங்க,அந்த வகையில நான் சந்திச்ச ஒரு பேரன்புக்காரன் நீ,

எதுனாலும் ஷேர் பண்ணுப்பா எப்போனாலும் எல்லோரும் நல்லா இருப்போம் இந்த வயசு பசங்க காதல்ல கூட வெண்மை நிறம் கொண்ட தூய்மை இருக்கத்தானே செய்யுது ஹ்ம்ம்,

அவர் கண்ணாடியை கழட்டி விட்டு அவர் கண்ணில் வடிந்த எனக்கு சொந்தமான இரண்டு சொட்டு கண்ணீரை துடைத்துக்கொண்டே அவர் ஊரான திருச்சி வந்ததும் தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு அவரின் விசிட்டிங் கார்டை எனக்கு கொடுத்து விட்டு Keep in Touch My Son,Happy New Year - ப்பா இந்த வருஷம் உனக்கு நல்லாருக்கும் என்று சொல்லிவிட்டு கிளம்பினார்,

*
இந்த முடிவ நிறைய பேர் நம்பமாட்டாங்க அது எப்படி ஒருத்தங்க காரணமே சொல்லாம விட்டுட்டு போவாங்கன்னு, ஆனா அப்படி ஒரு விஷயம் ஒருத்தன் வாழ்க்கையில நடக்குறப்போ அவன் மன ரீதியா சந்திக்கிற கஷ்டங்கள், பொது இடங்கள்ல அவன் நடத்துகிற விதம்ன்னு எல்லாத்துலையும் Psychological - ஆ ஒரு மாற்றம் வரும், அதுல இருந்து அவன் வெளி வர ரொம்ப கஷ்டப்படுவான், இப்போ கூட நான் நினைச்சா என் காதலி "அப்பு" இருக்க இடம் கண்டுபிடிச்சு அவகிட்ட போய் காரணம் கேக்க முடியும், ஆனா நான் அது மாதிரி பண்ணல,அதுக்காக நான் முயற்சி செய்யாமையும் இல்ல, அவள் பிரிந்து போன இரண்டு வருடத்தில் பல முறை என் Mailbox - இல் Save செய்து வைத்திருந்த Draft மெசேஜ் களையும், என்ன காரணம் என்று மட்டும் சொல்லிவிட்டு தொலைதூரமா கூட போயிடுங்க என்று மரியாதை நிமித்தமாகவும் கேட்டு பார்த்து விட்டேன், என்னுடைய குறுஞ்செய்திகளுக்கும் மெயிலுக்கும் ஒரு ரோபோட் ஆக இருந்தால் கூட Communication அவசியம் என்ற முறையில் Unwanted Message என்று ரிப்ளையாவது செய்திருக்கக்கூடும், ஆனா அவகிட்ட இருந்து எனக்கு எந்த பதிலும் வரல,அவ என்ன விட்டு தொலை தூரம் சென்று அந்த நொடி என்னோட வாழ்க்கைல கரைகின்ற நொடிகளாயிடுச்சு,

Because தெரிஞ்சோ தெரியாமையோ
என்றோ ஒரு நாள் நான் ஏதோ ஒரு பாவம் செய்திருக்கக்கூடும் என் சிந்தைக்கு அறியாமல், அது எந்த பிறவி எந்த ஜென்மம் என்பது எனக்கு தெரியவில்லை, அந்த பாவங்கள் முழுதும் என்னுடன் போகட்டும்,
இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும்
அந்த பாவங்களின் பலனை நான் மட்டுமே அனுபவித்துக்கொள்கிறேன்,
என்னுடன் இருந்த உனக்கு என்னாலும் என் பாவங்களாலும் ஒரு சின்ன துயரம் கூட வந்துவிடக்கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கின்றேன்,

இன்றைக்கு இந்த "நெஞ்சில் மாமழை" - ன்ற என்னோட டைரில இருக்க இந்த காதல் கதை நீ எனக்கு தந்தது, நீ இல்லேனா இப்படி ஒரு கதை இப்படி ஒரு Writing Style – ல என்னால எழுதிருக்க முடியுமான்னு எனக்கு தெரியல,

Anyway
Thank You Appu!

உன்னால தான் இந்த கதையே
உனக்காக தான் இந்த கதையே,

இந்த உலகத்தோட எந்த ஒரு துரும்புல நீ இருந்தாலும் உன் மனசுக்கு பிடிச்ச மாதிரி நீ சந்தோஷமா இருக்கணும் எல்லோர் ஆசிர்வாதத்துடணும்,

ரயிலின் வெளியே பயணத்தை அழகாக்கும் சாரல் மழை இப்போது பெய்கிறது,

ரயிலில் விற்கும் மிதமான பாலில் அதிகமான நீர் கலந்த சூடான டீ - யை குடித்தவாறு மழையை ரசித்து கொண்டிருந்தேன்,

என் சொந்த ஊர் மதுரை ஒரு வாரம் முன்னதாகவே அம்மாவை ஊருக்கு அனுப்பிவிட்டு இப்போது நான் ஐந்து நாள் விடுமுறையில் ஊருக்கு சென்று கொண்டிருக்கிறேன்,

ரயில் இப்போது மணப்பாறை ரயில் நிலையத்தில் நிற்கிறது அங்கு Platform - இல் இருக்கும் ஒரு உணவகத்தில் ஏ.ஆர். ரஹ்மானின் "மெல்லிசையே" பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது,

*
எத்தனை இரவு
உனக்காக விழித்திருந்தேன்
உறங்காமல் தவித்திருந்தேன்
விண்மீன்கள் எரித்திருந்தேன்

எத்தனை நிலவை
உனக்காக வெறுத்திருந்தேன்
உயிர் சுமந்து பொறுத்திருந்தேன்
உன்னை கண்டு உயிர் தெளிந்தேன்,

எனக்கு பிடிச்ச இந்த பாட்டோட மெதப்புல அதிகாலை ஊருக்கு வந்து சேர்ந்துட்டேன்,அன்று மாலை எனக்கு ஒரு போன் கால் வந்தது ஒரு புது எண்ணில் இருந்து,

எதிரில் பெண்ணின் குரல்,

மேத்யூ,உன்னோட பாட்டு அழகா இருக்கு
உன் கதையும் அழகா இருக்கு, உன்னோட காதல் அதைவிட அழகு,உன்னுடைய சித்தாந்தம் ரொம்பவே பேரன்புல நிறைஞ்சு கிடக்கு, உன் Blog - ல பெர்சனல் கதை எழுதுனா அதை Draft - ல போடாம Publish பண்ணுன்னா நான் மட்டும் இல்ல உன் Blog தெரிஞ்ச யாருன்னாலும் படிக்கலாம், நீ எழுதி Perform பண்ண அந்த பாட்டையும் கூட கேக்கலாம் லிங்க் கோட அதுல இருக்கு,
நான் வரேன் உனக்காக!
காரணமே இல்லாத இந்த பிரிவு
உனக்கு புரிய வரும் மிக விரைவில்.

Finally, ஜோசுவா மேத்யூவின் வாய்ஸ் ஓவரில் அவன் எழுதி இயக்கிய இப்படம் முடிவுக்கு வருகிறது,

ஒரு படத்தினால் பிரிந்த உறவு
இணையுமானால் அப்படத்துக்கு
வடிவம் கொடுத்தவர்கள் இறைபாலர்கள்.

- A Film by Joshua Mathew ❤️

படத்தின் Final Output - ஐ தனியே அமர்ந்து பார்த்து அழுகிறான்,சிரிக்கிறான்,இதோ இந்த இயக்குனர் ஜோசுவா மேத்யூ,

மேத்யூ மைண்ட் வாய்ஸ் :

So, Finally
இது தாங்க பசங்க
இப்படியும் சில பசங்க நம்ம ஊர்ல இருக்காங்க என்ன மாதிரி அதிகமா காதலிச்சுட்டு கடைசியில அந்த காதல்
இல்லேன்னு தெரிஞ்சப்பறம் அந்த பொண்ணுக்கு தன்னால எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னு அவங்க நிழல் கூட அவங்களோட காதலி மேல படக்கூடாதுன்னு அவங்க வாழ்க்கைய விட்டே ஒதுங்கி இருப்பாங்க தன்னோட வலியையும் மறைத்துக்கொண்டு,

படத்திற்காக ஒரு சின்ன Happy Ending, படத்துல வர மாதிரி உண்மையாவே அன்னக்கி சாயங்காலம் அப்பு கால் செஞ்சுருந்தா லைஃப்பும் Happy Ending - ல முடிஞ்சுருக்குமோ என்னவோ ஹ்ம்ம்!


குறள் : 1158

இன்னா தினன்இல்லூர் வாழ்தல் அதனினும்
இன்னா தினியார்ப் பிரிவு

பொருள் :
நம்மை உணர்ந்து அன்பு காட்டுபவர் இல்லாத ஊரில் வாழ்வது துன்பமானது
அதைக் காட்டிலும் துன்பமானது இனிய காத(லியை)லரைப் பிரிந்து வாழ்வது,

இவ்வளவு நேரம் நீங்கள் படித்த இந்தக்கதை முழுவதும் எங்கோ யாரோ ஒருவர் மூலம் கேட்ட ஒரு முடிவில்லா காதல் கதைக்கு என் கற்பனையில் ஒரு வடிவம் கொடுத்து எழுதியுள்ளேன்,

Pesumpothu Song Link :

https://youtu.be/1ZpfbCyOgjo

Song Lyric Credits :
SUDARSHAN SUNIL

With Love
SHIVA CHELLIAH 🦋❤️








































































































Comments

Popular posts from this blog

The Journey of Solo - Title Poem

ஓம் நமச்சிவாய என்னும் மூலமந்திரத்தின் கருவாய் நீர்,காற்று,நெருப்பு,நிலம்  என்னும் நாற்பகுதிகளை இறைவன் சிவனை வைத்து மையப்படுத்தி இருக்கும் கதைக்களத்தின் ஒரு கவிதை நடை பயணம் இங்கு, " The Journey of Solo - Title Poem |  Bejoy Nambiar  " 1) நீர் - ( World of Shekhar )  அன்பே ஆயிரம் மழைத்துளிகள் என்னை நனைப்பது போல நீ என்னை நனைத்துக்கொள் நதியின் ஆழங்களில் நான் மூச்சு திணறுவது போல நீ என்னை தழுவிக்கொள் கடலின் பேரலைகள் கரையை தீண்டுவது போல நீ என்னை எடுத்துக்கொள் என்னை உன் கரங்களால் அணைத்துக்கொள்ளாதே உன் மனதால் இறுக அணைத்துக்கொள் அன்பின் தனிமையில் உனக்கு மரணம் இல்லை 2) காற்று - ( World of Trilok ) யுகாந்திரங்களின் கோபம் யுகாந்திரங்களின் இறுக்கம் யுகாந்திரங்களின் பொறுமை யுகாந்திரங்களின் தனிமை வந்துவிட்டது எல்லாவற்றின் மீதும் பெரும் புயல் ஒன்று இந்த காற்றை எதிர்த்து நடப்பவர்கள் யார்..? காலத்தின் புயலில் உதிரும் ஆயிரம் ஆயிரம் மலர்களில் ஒரு மலரல்லவா நீ..? அழிவின் தனிமையில் காத்திருக்க உனக்கு நேரமில்லை 3) நெருப்பு - ( World of Shiva ) வன்மத்தின் வனங்கள் பற்றி எரிகின்றன குருதியின

கிறுக்கல்களின் தொகுப்புகள்

வெள்ளிக்காப்பை சுழற்றினேன் சூடான காஃபியை அருந்தினேன் தலை முடியினை கோதி விட்டேன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன் ஆழ்மனதும் அனாதையாக இருந்தது எண்ணங்களின் ஓட்டமும் சீராக இல்லை யூடியுப் பக்கம் சென்றேன் அன்றைய தினத்தின் Trending காணொளிகள் ட்விட்டர் பக்கம் சென்றேன் நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே தள்ளு முள்ளு இன்ஸ்டாகிராம் பக்கம் சென்றேன் Bae Calls Me Chocobar என்றாள் கிளியோபாட்ரா ஹைக் பக்கம் சென்றேன் நட்டாஸா உரையாடலுக்கு எதிர்வாதம் செய்தாள் சரி, இது தான் இன்றைய தலைவிதி என்று முகப்புத்தகம் வந்து இதை பதிவு செய்தேன்..? - A Poem Without a Topic ❤ ---------------------------------------------------------- வாழ்க்கை இப்படியே போயிடுமா சார் என்பதில் தொடங்கி வாழ்க்கை ஒரு வட்டம் என்பதில் பயணித்து இவ்வளோ தான் சார் வாழ்க்கை என்பதில் முடிகிறது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நம்பகத்தன்மை நிறைந்த வாழ்க்கை..? -------------------------------------------------------- இந்த காஃபி ஷாப் சுவர்களின் இடையூறுகள் நம் நாவிதழ்கள் இடைபாடுகளிலும்..?..!! - வா ரயில் விட போலாம் வா  🖤 --

குடைக்குள் மழை

✨️💚 ரீனா : ஹே ஆர் யூ தேர்..? விக்ரம் : இருக்கேன் ரீனா, என்ன திடீர்னு மெசேஜ், முக்கியமா எதுவும் சொல்லணுமா..? ரீனா : ஹே, அதெல்லாம் இல்ல, ஏன் ஒர்க்ல இருக்கியா..? விக்ரம் : இல்ல, வீட்டுக்கு வந்துட்டேன், Earlier Appointments So, முடிஞ்சு பா! ரீனா : ஒகே, கொஞ்சம் மனசு சரி இல்ல அதான் உன்கிட்ட பேசலாமேன்னு கால் பண்ணேன்..? விக்ரம் : என்ன ஆச்சு..? ஆர் யூ ஓகே..? சொல்லு ரீனா Any Issue..? ரீனா : ஹே,Just Mood Swing ஒன்லி! நீ ஃபிரீன்னா சொல்லு Let's Walk Together in Beach! உனக்கு தெரியும்ல எனக்கு பீச் வாக்ன்னா ரொம்ப பிடிக்கும், So நீ ஃபிரீன்னா வர முடியுமா விக்ரம்..? விக்ரம் : சரி, ஈவினிங் 6 மணிக்கு பீச்ல நம்ம வழக்கமா மீட் பண்ணுற அந்த பட்டர் பன் கடைக்கு வந்துரு ரீனா, நானும் வந்துடுறேன், ரீனா : தேங்க்ஸ் விக்ரம்! விக்ரம் : தேங்க்ஸா..? No More Formalities! உன்னோட தேங்க்ஸ்ல நான் பூரிச்சு போய்ட்டேன்,சிரிப்பு காட்டாம வா ரீனா! ரீனா : ஹ்ம்ம் டா! * இடம் : கடற்கரை * நேரம் : மாலை 6 மணி விக்ரம் : ஹே! என்ன ஆச்சு ரீனா திடீர்னு..? ரீனா : அதெல்லாம் ஒன்னும் இல்லடா, Please Give Sometime நானே சொல்லுறேன் போ