Skip to main content

Let's Go !!

யாருக்கும் சிறு தீங்கும்
நினைக்காதவன் அவன்

மனதளவிலும் காயப்படுத்தக்கூடாது
என நித்தமும்  நினைப்பவன் அவன்

பணம் பெயர் புகழ் எதற்கும்
ஆசைப்படாத நிராயுதபாணி அவன்

அன்பையும் கருணையையும் மட்டுமே
பிறருக்கு தானம் செய்பவன் அவன்

புள்ளின் நுனியில் இருக்கும் நீர்த்துளிக்கு
கூட துரோகம் விளைவிக்காதவன் அவன்

இசையில் மூழ்கி பாடல்களின் வரிகளுக்கு
தன்னை பொருத்திப்பார்க்கும் ரசிகன் அவன்

தேன் மிட்டாய்கள் வாங்கி கொடுத்து
குழந்தைகளின் சிரிப்பை கவரும் கள்வன் அவன்

ஜோடியாய் சுற்றி திரியும் காதலர்களை
பார்த்து கள்ளங்கபடமில்லா சிரிப்பவன் அவன்

காண்கின்ற யாவையும் எழுத்துக்களாக
உருவம் கொடுக்கும் திறன் உள்ளவன் அவன்

ரோஜாவின் மொட்டுக்களை விட அதன்
முட்களின் மேல் காதல் கொள்பவன் அவன்

அப்பாவின் மிதிவண்டி பெடலை சுற்றி
பார்த்து காலத்தை கடந்து வந்தவன் அவன்

அம்மா குளிப்பாட்டும் சீகைக்காய்
குளியலை நினைத்து பார்ப்பவன் அவன்

உடன் இருந்து குழி பரித்த தோழனையும்
பெரிதாக கண்டுகொள்ளாமல் விட்டவன் அவன்

வறுமையான காலத்தில் உணவளித்த
கல்லூரி நண்பனை போற்றுபவன் அவன்

புத்தக வாசிப்பை நேசிக்கும்
அருமையான தமிழ் வாசிப்பாளன் அவன்

பிறரை எழுதுங்கள் என சொல்லி
வலிக்கு வழி தேடி கொடுக்கும் பயணி அவன்

தனிமையை ரசிக்கும் இரவுகளின்
அழகை சொல்லும் தேவதூதன் அவன்

இவ்வளவு இருந்தும் செய்யாத பாவம்
அவனை ஏன் கழுகு போல் வட்டமிட்டு
சுற்ற வேண்டும்..?

அடுத்த நொடி நிச்சயம் இல்லாத
வாழ்க்கையில் அவன் அடுத்த உயரத்திற்கு
முன்னேற முடியாமல் தடையாய் இருப்பது
செய்யாத பாவங்களும் மனதில் இருக்கும்
ஆறாத காயங்களுமே,

இன்று பிணம் போல் நடமாடுதல்
என்பது  அவன் வாழ்க்கை படலத்தின்
வெறுமைக்கான கோரத்தாண்டவங்கள்,

ஓட்டம் தொடர்ந்துகொண்டு இருக்கிறது
அவனின் இந்த நிலை மாறு(ம்)(மா)(மோ),

காத்திருக்கிறான் காலத்தின் பிடியில்
தன் வலிகளை மறைத்து உங்களில் ஒருவனாக,

: ' ) ❤️

Comments

Popular posts from this blog

The Journey of Solo - Title Poem

ஓம் நமச்சிவாய என்னும் மூலமந்திரத்தின் கருவாய் நீர்,காற்று,நெருப்பு,நிலம்  என்னும் நாற்பகுதிகளை இறைவன் சிவனை வைத்து மையப்படுத்தி இருக்கும் கதைக்களத்தின் ஒரு கவிதை நடை பயணம் இங்கு, " The Journey of Solo - Title Poem |  Bejoy Nambiar  " 1) நீர் - ( World of Shekhar )  அன்பே ஆயிரம் மழைத்துளிகள் என்னை நனைப்பது போல நீ என்னை நனைத்துக்கொள் நதியின் ஆழங்களில் நான் மூச்சு திணறுவது போல நீ என்னை தழுவிக்கொள் கடலின் பேரலைகள் கரையை தீண்டுவது போல நீ என்னை எடுத்துக்கொள் என்னை உன் கரங்களால் அணைத்துக்கொள்ளாதே உன் மனதால் இறுக அணைத்துக்கொள் அன்பின் தனிமையில் உனக்கு மரணம் இல்லை 2) காற்று - ( World of Trilok ) யுகாந்திரங்களின் கோபம் யுகாந்திரங்களின் இறுக்கம் யுகாந்திரங்களின் பொறுமை யுகாந்திரங்களின் தனிமை வந்துவிட்டது எல்லாவற்றின் மீதும் பெரும் புயல் ஒன்று இந்த காற்றை எதிர்த்து நடப்பவர்கள் யார்..? காலத்தின் புயலில் உதிரும் ஆயிரம் ஆயிரம் மலர்களில் ஒரு மலரல்லவா நீ..? அழிவின் தனிமையில் காத்திருக்க உனக்கு நேரமில்லை 3) நெருப்பு - ( World of Shiva ) வன்மத்தின் வனங்கள் பற்றி எரிகின்றன குருதியின

கிறுக்கல்களின் தொகுப்புகள்

வெள்ளிக்காப்பை சுழற்றினேன் சூடான காஃபியை அருந்தினேன் தலை முடியினை கோதி விட்டேன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன் ஆழ்மனதும் அனாதையாக இருந்தது எண்ணங்களின் ஓட்டமும் சீராக இல்லை யூடியுப் பக்கம் சென்றேன் அன்றைய தினத்தின் Trending காணொளிகள் ட்விட்டர் பக்கம் சென்றேன் நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே தள்ளு முள்ளு இன்ஸ்டாகிராம் பக்கம் சென்றேன் Bae Calls Me Chocobar என்றாள் கிளியோபாட்ரா ஹைக் பக்கம் சென்றேன் நட்டாஸா உரையாடலுக்கு எதிர்வாதம் செய்தாள் சரி, இது தான் இன்றைய தலைவிதி என்று முகப்புத்தகம் வந்து இதை பதிவு செய்தேன்..? - A Poem Without a Topic ❤ ---------------------------------------------------------- வாழ்க்கை இப்படியே போயிடுமா சார் என்பதில் தொடங்கி வாழ்க்கை ஒரு வட்டம் என்பதில் பயணித்து இவ்வளோ தான் சார் வாழ்க்கை என்பதில் முடிகிறது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நம்பகத்தன்மை நிறைந்த வாழ்க்கை..? -------------------------------------------------------- இந்த காஃபி ஷாப் சுவர்களின் இடையூறுகள் நம் நாவிதழ்கள் இடைபாடுகளிலும்..?..!! - வா ரயில் விட போலாம் வா  🖤 --

Chai with Halitha Shameem Akka!

* Chai With Halitha Shameem Akka!  எதிர்பாரா வாய்ப்புகள் எப்போதாவது தான் அமையும்,அப்பறம் நம்ம எதிர்பார்த்து காத்திருந்தாலும் பரிபோன வாய்ப்பு போனது தான்,கிடைக்கும் போது வாய்ப்பை சரியான முறையில் தக்க வைத்துக்கொள்ள வேண்டும், அப்படி ஒரு வாய்ப்பு இயக்குநர் ஹலிதா அக்கா - வை சந்திக்க அரங்கேறியது,அவர்களின் சொந்த ஊரான தாராபுறத்தில் மாலை ஐந்து மணிக்கு தாராபுரம் பழனி பிரிவில் உள்ள சூர்யா பேக்கரியில் சந்திக்கலாம் என்று தனது முகப்புத்தகத்தில் பதிவு செய்திருந்தார், கோடை கால விடுமுறையில் மதிய நேரம் வரும் ஐஸ் வண்டிக்காக ஒரு மணி நேரமாக வீட்டு திண்ணையில் ஐஸ் வண்டி சத்தம் கேட்குதா என எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருக்கும் சிறுவனை போல நானும் மாலை அங்கு சென்று விட வேண்டும் அவர்களை சந்திக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு மட்டுமே மனசுக்குள் ஓடிக்கொண்டிருந்தது,இயக்குநர் அக்காவிற்கு ஒரு மெசேஜ் அனுப்பி வைத்தேன் இன்று மாலை சூர்யா பேக்கரிக்கு உங்களை காண வருகிறேன் என்று, "வாங்க" என்று பதில் ரிப்ளை செய்திருந்தார்கள், கோவையில் இருந்து கிளம்பி போகும் வழியில் காரணம்பேட்டையில் Dhanasekar D  - ஐயும் அழைத்துக்கொண்